கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள் பாலிக்கும்
கேடிலியப்பரை வழிபாடு செய்தால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும்.
1
தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து திருப்பாற் கடலைக் கடைந்தபோது உண்டான அமிர்தத் துளி ஒன்று இரண்டாகச் சிதறி விழுந்தது.
2
அவற்றில் ஒன்று இந்தியாவின் வடக்கே விழுந்து ‘வட பத்ரி காரண்யம்’ ஆயிற்று. மற்றொரு துளி தென் இந்தியாவில் தமிழகத்தில் விழுந்து இலந்தை வனமாகி ‘தென் பத்ரி காரண்யம்’ ஆயிற்று.
3
‘பத்ரி’ என்றால் ‘இலந்தை’ என்று பொருள். எனவே தான் இலந்தை மரங்கள் மிகுந்து காணப்பட்ட இத் தலம், தென் பத்ரி காரண்யம் என்று அழைக்கப்பட்டது. இலந்தை மரமும் இத்தல
விருட்சமாயிற்று.
4
முருகப்பெருமான், தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். ‘அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது?’ என்று தனது தந்தையான சிவபெரு மானைக் கேட்டார்.
5
அதற்கு ஈசன், ‘பூவுலகில் தட்சிண பத்ரி ஆரண்யம் என்று போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில் சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள் பாலிக்கும் என்னை, நவலிங்க பூஜை செய்து வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும்' என்று கூறி அருளினார்.
6
அவரது அருளாணைப்படியே இத்தலத்திற்கு வந்த முருகப் பெருமான், தன் வேலால் பூமியைப் பிளந்து தீர்த்தம் உண்டாக்கினார்.
7
பின்னர் இந்தக் கீழ்வேளூரின் எட்டுத் திசைகளிலும் உள்ள கோவில் கடம்பனூர், ஆழியூர், இளங் கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்ல மங்கலம், பட்டமங்கலம், சொட்டால் வண்ணம், ஒதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் நவலிங்கங் களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
8
பின்னர் கீழ்வேளூரில் எழுந்தருளி யுள்ள சுயம்பு மூர்த்தியாகிய கேடிலியப்பரை சரவணப் பொய்கையில் நீராடி வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார். அப்போது வீரஹத்திகளான மாயைகள், முருகப்பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர்.
9
உடனே சாந்த சொரூபியான சுந்தர குஜாம்பிகை, பத்ரகாளி யாகத் திருவுருவம் கொண்டு, வடதிசை நோக்கி பத்து திருக் கரங்களுடன் நான்கு திசைகள் மற்றும் ஐந்து புறங் களிலிருந்தும் குமரனுக்கு இடையூறு வராமல் காத்து நின்றார். இதனால் இத்தல அன்னைக்கு ‘அஞ்சு வட்டத்தம்மன்’ என்ற திருநாமமும் உண்டு.
10
குமரன் தவக் கோலத் திலேயே இங்கு காட்சி தருகிறார்.
கோச்செங்கட் சோழன் கட்டிய அநேக மாடக் கோவில்களில், கீழ்வேளூர் ஆலயமும் ஒன்றாகும். ஊர் நடுவில் கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயம் ஒரு பெரிய கோவில். கோவிலின் ராஜகோபுரம் ஏழு நிலைகளுடன் கிழக்கு நோக்கி
காட்சியளிக்கிறது.
11
கோபுரத்திற்கு எதிரில் முருகப் பெருமான் உண்டாக்கியதாக கூறப்படும் சரவண தீர்த்தம் உள்ளது. கோவிலின் உள்ளே வசந்த மண்டபம் காணப் படுகிறது. இத்தலத்தின் மூலவரான கேடிலியப்பர் சுயம்புத் திருமேனியுடன் பெரிய ஆவுடையார், மெல்லிய பாணத்துடன் லிங்க உருவில் காட்சி தருகிறார்.
12
அடுத்து அம்பிகை சுந்தரகுஜாம்பிகையின் சன்னிதி தெற்கு நோக்கி உள்ளது. குபேரனுக்கும் இத்தலத்தில் தனி சன்னிதி இருப்பது
ஒரு சிறப்பம்சமாகும்.
13
முருகப்பெருமானின் பூஜைக்கும், தவத்துக்கும் கெடுதல் உண்டாகாதவாறு காவல்புரிந்த அஞ்சு வட்டத்து அம்மையின் சன்னிதி முதல் பிரகாரத்தில் முருகன் சன்னிதிக்கு முன்னால் தனியே வட பக்கத்தில் இருக்கிறது. இவற்றைத் தவிர பஞ்சபூத லிங்கங்களும் தனிச்சன்னிதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.
14
இத்தல முக்குறுணி விநாயகப் பெருமான் (சுந்தர விநாயகர்) மிகவும் சக்தி வாய்ந்தவர்.
இறைவனின் திருப்பெயர் கேடிலியப்பர். இந்தப் பெயர் திருநாவுக்கரசரின் ‘ஆளான அடியவர்க்கு அன்பன் தன்னை...’ என்று தொடங்கும் இவ்வூர்த் திருத்தாண்டகத்துள் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.
15
பாடல் தோறும் ‘கீழ்வேளூர் இறைவன் கேடிலியை நாடுபவர்கள் தன் வாழ்வில் கேடில்லாமல் இருப்பர்’ என்று அப்பர் சுவாமிகள் கூறுகிறார்.
16
கீழ்வேளூர் ஒரு திருப்புகழ் வைப்புத் தலம். இங்குள்ள முருகப் பெருமான், பாலசுப்பிர மணியராய் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வடக்கு நோக்கி பிரம்மச்சாரி கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.
17
திருச்செந்தூர் முருகன், இத்தல முருகன் இருவரின்
திருமேனிகளும் ஒரே சிற்பியால் செய்யப்பட்டதாகும்.
18
தன்னை நாடி வருபவர்களுக்கு சகல தோஷங் களையும் போக்கி கேடில்லா வளமான வாழ்வைத் தரும் கேடிலியப்பரும், வேண்டு வோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் அன்னை சுந்தர குஜாம்பிகையும்
19
அருளாட்சி புரியும் கீழ்வேளூர் தலத்திற்கு வாழ்நாளில் ஒருமுறையாவது சென்று தரிசித்து சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.
20
திருவாரூரி லிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்து வழியில் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் இருந்து கீழ்வேளூர் செல்ல நகரப் பேருந்துகளும் உள்ளன.
21
நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சிக்கல் தலத்தை அடுத்து இத்தலம் உள்ளது. 🙏
அழகர் ஆற்றில் இறங்குவது ஏன்? 10 நாள் விழாவின் சுவாரஸ்யங்கள்!!!
எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள்.
திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும்.
பொதுவாக மது என அறியப்பட்ட எத்தனால் அடங்கிய குடிவகை மதுபானம் என அழைக்கப்படுகிறது. வேதியியல் வரைவிலக்கணத்தின் படி மது என்பதில் வேறு சேர்வைகளும் அடங்குகின்றன. மதுபானங்கள் பொதுவாக பியர் வகைகள்,
வைன் வகைகள், வடி பானங்கள் என மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
எத்தனால் உளத்தூண்டல் மருந்தாகும் (psychoactive drug) இது மூளைத்திறன் மயக்க மருந்தாக செயற்படுகிறது. கூடுதலான நாடுகள் மதுபான உற்பத்தி, விற்பனை, உட்கொள்ளல் தொடர்பான விதிமுறைகளை கையாண்டு வருகின்றன.
மதுபானம் உலகின் கூடுதலான நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டும் உட்கொள்ளப்பட்டும் வருகின்றது. மதுபானங்களை உட்கொள்ளல் சில கலாச்சாரங்களில் சமூக நிகழ்வுகளில் முக்கிய அம்சமாக காணப்படுகிறது.
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட, மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவரான, தமிழ்நாட்டில் புகழ்பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில்
தனிக் கோயிலாக அமைந்த
யம தர்மனின் கணக்கரான
சித்ரகுப்தசுவாமி
கர்ணகிஅம்பிகை
1
திருக்கோயில் வரலாறு:
பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்கள் குறித்த முழு விபரங்களையும் பதிவு செய்துவைப்பது சித்திரகுப்தன் என புராணங்கள் வாயிலாகவும், பல திரைப் படங்களிலும் நாம் கண்டிருப்போம். சித்திரகுப்தன் எமதர்ம ராஜனின் கணக்குப்பிள்ளையாவார்.
2
உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில், காஞ்சிபுரம் நெல்லுக்காரர் தெருவில் அமைந்துள்ள சித்ரகுப்தர் கோயில், கோயில்களில் வித்யாசமான கோவிலாகும். இக்கோயில் சித்திரகுப்தரின் அரிய கோயிலாக விளங்குகிறது.
''#நான்'' என்பது அகந்தை மிகையாகக் கொண்டது. அங்கே அன்பு இருக்காது. உண்மை நிலவாது. "நான், எனது” என்னும் உணர்வுகள் நம்மை ஆட்டிப் படைக்கும் தன்மை கொண்டது...
அது உங்களை மற்றவர்களிடமிருந்து பிரித்துத் தனிமைப்படுத்தும் எண்ணத்தை தோற்றுவிக்கக் கூடியது...
நான்!, என்று உச்சரிக்கும் போது நீங்கள் அனைவரையும் விட்டு விலகிச் செல்கின்றீர்கள். அது ஆணவத்தின் ஆரம்பம்...
ஆற்றங்கரை ஓரத்தில் ஓங்கி வளர்ந்து இருந்தது ஒரு அரச மரம், அந்த மரம் மிகவும் உயரமாகவும், மிகுந்த வலிமையுடனும் இருந்தது. ஆனால்!, அதற்கு 'தான்' என்ற அகந்தை அதிகம்...