அன்பெழில் Profile picture
May 6 11 tweets 5 min read Twitter logo Read on Twitter
#அஷ்ட_புஷ்பங்கள்
இறைவனுக்குச் சூடத் தகுதியான புஷ்பங்கள் பற்றி ஆகமங்களும் புஷ்பவிதி என்ற நூலும் விவரமாகச் சொல்லி இருக்கின்றன. இன்ன இன்ன புஷ்பங்களை சுவாமிக்குச் சார்த்த வேண்டிய காலம் பற்றியும் கூட சொல்லியிருப்பதைக் காணலாம். தோஷமில்லாத, அதாவது பூச்சி அரிக்காத, எச்சம் இடப்படாத
விடியல் காலையில் பறிக்கப்பட்ட புஷ்பங்களால் பூஜை செய்வது விசேஷமாகச் சொல்லப் பட்டுள்ளது. இதைத்தான் "நன் மாமலர்" என்று ஞானசம்பந்தர் பாடுகிறார். இறைவன் சிவபெருமான் பூஜைக்கு ஏற்றதாகச் சொல்லப்படும் அஷ்ட புஷ்பங்கள் புன்னை, சண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம், அரளி, நீலோத்பலம்,
தாமரை ஆகியவை.

#புன்னை
இம்மரம் கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகிறது. மயிலாப்பூரில் புன்னை மரத்தின் நீழலில் கபாலீச்வரர் வீற்றிருப்பதை , "மட்டிட்ட புன்னையங்கானல்" என்று துவங்கியபடி பதிகம் பாடுகிறார் சம்பந்தர். இக்கோயிலில் புன்னை மரம் ஸ்தல விருக்ஷமாக இருக்கிறது. பசுமையான இலைகளையும், ImageImage
வெள்ளை நிறம் கொண்ட பூக்களையும் கொண்டது இம்மரம். இதில் கோடைக் காலத்தில் பூக்கள் அதிகமாக இருக்கும்.

#சண்பகம்
வாசனை மிக்க இம்மலர்கள் சித்திரை முதல் புரட்டாசி வரை பூக்கக் கூடியவை. இம்மரத்தின் இலைகளும் பசுமையாக இருக்கும். செண்பகவல்லி என்று அம்பாளுக்கும், செண்பகாரன்யேச்வரர் என்று Image
சுவாமிக்கும் பெயர்கள் வழங்குவதைப் பார்க்கலாம்.

#பாதிரி
நீண்ட மலர்களைக் கொண்ட பாதிரி மரம் உயரமாக வளரும். இம் மலர்கள் வாசனையானவை. இதனைத் தல விருட்சமாகக் கொண்ட தலம் திருப்பாதிரிப்புலியூர் ஆகும்.

#வெள்ளெருக்கு
வெள்ளெருக்கும் பாம்பும் சுவாமியின் ஜடையில் விளங்குவதை, "வெள்ளெருக்கு Image
அரவம் விரவும் சடை" என்று அப்பர் தேவாரம் குறிப்பிடுகிறது. முதலில் சிறிய செடியாக விளங்கி, சிறிய மரமாகவும் வெள்ளெருக்கு வளர்ச்சி பெறுகிறது. வெண்மை நிறம் கொண்ட இம்மலர்கள் ஆண்டின் பல மாதங்களில் பூக்கக் கூடியவை. எருக்கத்தம்புலியூர் என்ற சிவ தலத்தில் இம்மரம் விருட்சமாக விளங்குகிறது. Image
#நந்தியாவர்தம்
நந்தியாவட்டை என்று பேச்சு வழக்கில் சொல்லப்படுவது. வருடம் முழுவதும் பூக்கக்கூடியது. வெள்ளை நிறம் கொண்ட இம்மலர்களை மாலையாகவும் அர்ச்சனைக்கும் பயன்படுத்துவர்.

#அரளி
இதுவும் மாலைகளில் பயன்படுத்தப் படுவது. அர்ச்சனைக்கும் பயன் படுத்துவர். அநேகமாக ஆண்டு முழுவதும் ImageImage
பூப்பதால் நந்தவனங்கள் மற்றும் வீடுகளில் இச்செடியை வளர்க்கிறார்கள்.

#நீலோத்பலம்
நீர்நிலைகளில் வளரக்கூடியது. இதைக் குவளை என்றும் சொல்வர். கண்களுக்கு இதை உதாரணம் காட்டுவார்கள். "குவளைக்கண்ணி " என்று அம்பாளைத் திருவாசகம் குறிப்பிடுகிறது. திருவாரூரில் அம்பாளுக்கு, நீலோத்பலாம்பிகை Image
என்று பெயர்.

#தாமரை
தாமரையில் மகாலட்சுமி வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன. இத்தாமரை மலர் குளங்களிலும், நீர் நிலைகளிலும் வளர்வதைக் காணலாம். ஆயிரம் தாமரை மலர்களால் திருவீழிமிழலையில் மகாவிஷ்ணு சிவ பூஜை செய்து சக்கரம் பெற்றதாக அந்த ஊர்ப்புராணம் சொல்கிறது. அதற்காகவே பஞ்சாக்ஷர Image
சஹஸ்ரநாமம் சொல்லி அர்ச்சனை செய்தாராம் விஷ்ணு.

ஊமத்தை, மந்தாரை, மகிழம்பூ போன்ற புஷ்பங்களையும் இறைவன் சிவபெருமான் ஏற்றுக் கொள்கிறார். இருப்பினும், மேலே சொன்ன அஷ்ட புஷ்பங்களே மிகவும் உயர்வாகக் கூறப்படுகின்றன. இந்த "எட்டு நாண்மலர் " கொண்டு இறைவனது பாதார விந்தங்களுக்கு அர்ச்சித்தால்
எல்லாப் பாவங்களும் நீங்கும் என்று அப்பர் தேவாரம் நமக்கு உணர்த்துகிறது.
Taken from Shivarpanam blog.
ஸர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 7
இசைத்தமிழ் நீ செய்த அரும் சாதனை..
#திருவிளையாடல் படப் பாடல் இது.
சிவலிங்கம் சாட்சி சொன்ன கதையும் பொய்யோ -
மாமன்
திருச்சபை வழக்குரைத்த முறையும் பொய்யோ?
பாடலின் இடையில் வரும் வரிகள் இவை.
பாடலை எழுதியவர் #கவியரசர்_கண்ணதாசன்.
இந்த ஓர் வரிக்குப் பின்னால் அரிய புராண நிகழ்வு உள்ளது. Image
காவிரிபூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் அரதன குப்தன் மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு மதுரையிலேயே வாழ்ந்து வந்தான். காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த அவன் தங்கைக்கும் அவள் கணவருக்கும் தங்கள் மகள் ரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனத்துக்குள் ஆசை.
எதிர்பாராமல் ஒரு நாள் அரதன குப்தனின் தங்கையும் அவள் கணவரும் இறந்துவிட்டதாக தகவல் வர
உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிபூம்பட்டினம் சென்று அவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு விட்டு திரும்பும்போது தாய் தகப்பனை இழந்து நின்ற ரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான்
Read 13 tweets
May 6
#பக்தவத்சலபெருமாள்_திருக்கோவில் #திருக்கண்ணமங்கை திருவாரூர்

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. ஒரு தலத்திற்கு இருக்க வேண்டிய விமானம், ஆரண்யம், மண்டபம், தீர்த்தம், க்ஷேத்ரம், நதி, நகரம் என்ற 7 லட்சணங்களும் அமைய பெற்றதால், #ஸப்த_புண்_ஷேத்திரம் #ஸப்தாம்ரு_ஷேத்ரம் என்ற பெயர் Image
பெற்ற தலம் இது. பாற்கடலை கடைந்தபோது, அதிலிருந்து கற்பக விருட்சம், காமதேனு ஆகியவை தோன்றின. இறுதியில் மகாலெட்சுமி வெளிப்பட்டாள். முதலில் அவள் பெருமாளின் அழகிய தோற்றத்தைக் கண்டாள். அதை மனதில் நிறுத்தி இத்தலம் வந்து பெருமாளை அடைய தவம் இருந்தாள். திருமகள் தவம் இருக்கும் விஷயம் அறிந்த Image
பெருமாள் தனது மெய்க்காவலரான விஷ்வக்சேனரிடம் முகூர்த்த நாள் குறித்து தர சொன்னார். பின் லட்சுமிக்கு காட்சி தந்து, முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ பெருமாள் இங்கு வந்து லட்சுமியை திருமணம் செய்தார். பெருமாள் தன் பாற்கடலை விட்டு வெளியே வந்து இங்கிருந்த லட்சுமியை திருமணம் செய்ததால் Image
Read 13 tweets
May 6
#மகாபெரியவா
சொன்னவர்-தஞ்சாவூர் ஸந்தான ராமன்.
தொகுப்பாளர்- டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

தஞ்சாவூருக்கு அருகிலுள்ள நல்லிச்சேரி கிராமம். அங்கே வாழ்ந்தவர் சாம்பசிவ ஸ்ரௌதிகள். பூர்ணமாக அத்யயனம் செய்தவர். அந்திய காலத்தில் அவர் சன்னியாச ஆசிரமம் வாங்கிக் கொண்டார். Image
அவருக்கு ஒரே பிள்ளை. அவரும் பூர்ணமாக அத்யயனம் பண்ணினவர். அவருக்கு இதயம் மிகவும் பலஹீனம். சேர்ந்தாற்போல் 5 நிமிடம் வேத பாராயணம் சொல்ல முடியாது. பார்ப்பவர்களுக்கும் பயமா இருக்கும். இதனால் அவரை இதர வைதிகர்கள் காரியங்களுக்குக் கூப்பிடுவதில்லை. தாயாரும் அவரும் கஷ்ட ஜீவனம். கணீரென்ற
குரலில் வேதம் சொல்லும் போது ஆனந்தமாக இருக்கும். என்ன செய்வது? திடீரென்று பிராணன் போய் விட்டால் என்ன செய்வது? என்று "போதும்" என்று சொல்லி விடுவேன். முடிந்தவரை ஸகாயம் செய்து வந்தேன். ஒருநாள் காலை, அவருடைய வயதான தாயாருடன் என்னிடம் வந்தார். (கட்டுரையாளர் சந்தானராமனிடம் வந்தார்) “நான்
Read 16 tweets
May 6
#MahaPeriyava
Author: SriMatham Balu Mama, Kanchipuram
Source: Maha Periyaval - Darisana Anubhavangal Vol. 1
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/

The elephant trumpeted in terror at midnight. The disciples were fast asleep. Nobody got up. The elephant Image
has excessive fear towards small animals such as the rat, frog or sparrow. Thinking that some rat or frog would have dropped in at that night time, Periyava got up silently and went to the elephant shed. A big cobra with its hood fully spread was swaying there in front of the
elephant. Periyava forthwith woke up the shishyas. They arrived carrying sticks. "Don't beat the snake. Just light a lamp of sesame oil, and it will go away."

When a sesame oil lamp was lit and placed there as advised, the naga snake that was with its full hood till then crawed
Read 6 tweets
May 5
#மகாபெரியவா அருள்வாக்கு

குழந்தை குறும்பு செய்தால் பெற்றவர்கள் கட்டிப் போடுகிறார்கள். நம்மிடம் ஆசை என்னும் குறும்பு இருப்பதால் நம்மை இறைவன் கட்டிப் போடுகிறான்.

எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் உண்மையாக இருப்பவனை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். உண்மையாக மகிழ்ச்சியாக Image
இருப்பவன் இறைவன் மட்டுமே.

நம் சொந்த கஷ்டத்திற்கு நடுவில் சமூக சேவையெல்லாம் தேவையா என்ற எண்ணம் கூடாது. சேவை செய்வதால் சொந்தக் கஷ்டத்தை மறக்க வழி உண்டாகும்.

நெருப்பில் விட்ட நெய் தீயை அணைக்காமல் மேலும் வளர்க்கவே செய்யும். அதுபோல மனத்தில் எழும் ஆசையும் மேலும் வளரவே செய்கிறது.
தர்மவழியில் நடப்பவனை பிராணிகள் கூட ஆதரிக்கும். அதர்ம வழியில் நடப்பவனுக்கு உலகமே எதிரி தான்.

நம்முடைய துன்பத்தையே நாம் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். நம்மை விட துன்பப்படுபவர்கள் எத்தனையோ பேர் உலகில் இருக்கிறார்கள்.

யார்மீதும் கோப்பட நமக்கு தகுதி இல்லை. ஏனென்றால், உலகில் தப்பே
Read 4 tweets
May 5
#மகாபெரியவா
சொன்னவர்-ஓர் அன்பர்
தொகுப்பாளர்-கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்ரீ பெரியவாள் ஹைதராபாத் ஏ.ஸி.ஸி. சிமெண்ட் ஆலையினுடைய காக்னா நதிக்கரையிலுள்ள பம்பிங் ஸ்டேஷனில் தங்கியிருந்தார்கள். அந்தப் பிரதேசம் பழைய ஹைதராபாத் சமஸ்தானத்தைச் சேர்ந்தது. இப்போது கர்நாடகா. Image
அங்கிருந்து 1 கி.மீ தூரத்தில் பீம்சேனப்பா கிட்டப்பா என்பவருடைய தோட்டம் இருக்கிறது. அவர் நவாப் ஆட்சியின் போது ரஸாக்கர்களுடைய அட்டூழியத்தை எதிர்த்து வெற்றி கண்டவர். அவர் தன்னுடைய இடத்திற்குப் பெரியவாள் வரவேண்டும் என்று அழைத்ததற்கு இணங்க ஒரு நாள் அங்கு சென்றார்கள். அன்று மத்தியான
வேளையில் ஒரு முஸ்லிம் அன்பர் தரிசனத்திற்கு வந்தார். அவரிடம் ஸ்ரீ பெரியவாள், "உன் மனைவி காலையிலேயே பழங்களுடன் வந்து தரிசனம் செய்து கொண்டு போனாளே?" என்றதும் அவருக்கு ஆச்சர்யம். அவர் சொன்னார், "நான் ஒரு கடையில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறேன், காலையில் ரிக்‌ஷாவைப் பிடித்துக்
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(