#திருப்பட்டூர்_காசி_விஸ்வநாதர்_ஆலயம் #வியாக்ரபாதமுனிவர்
இங்கு பூஜை செய்து ஜீவ சமாதி அடைந்தவர் வியாக்ரபாதர் என்னும் புலிக்கால் முனிவர். குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தான். அது போலே முழு தெய்வ சிந்தனையுடனும், அர்ப்பணிப்புடனும் முறைப்படி பூஜை செய்யப்படும் கோவில்களில்,
தெய்வ சக்தி அதிகமாக வெளிப்படும் கோவில்களில் தான் பெரும்பலான சித்தர்கள், முனிவர்கள் ஜீவ சமாதி அடைய தேர்ந்தெடுத்து சமாதி நிலையை அடைகிறார்கள். சித்தர்கள், முனிவர்கள் சமாதி அடைந்த இடத்திலுள்ள ஆலயங்களில் தெய்வ சக்தியுடன், சித்தர்கள், முனிவர்கள் வீரியசக்தியும் சேர்ந்து செயல்படும். அந்த
ஸ்தல இறைவன் நம் ஜாதகப்படி நமக்கு அனுகூலமான பலனை தரும் தெய்வமாக இருந்தால் அந்த ஸ்தலங்களில் நாம் பரிபூரண நம்பிக்கையுடன் வணங்கும் போது நம் வேண்டுதல்கள் விரைவாக நிறைவேறும். இதற்கு உதாரணமாக கொங்கணவ சித்தர் ஜீவசமாதி அடைந்த திருப்பதி திருமலை, புலிக்கால் முனிவர் சித்தர் ஜீவசமாதி அடைந்த
திருப்பட்டூர் காசி விஸ்வநாதர் ஆலயம், இடைக்காட்டு சித்தர் சமாதி உள்ள திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உட்பட பல கோவில்களை கூறலாம். புலிக்கால் முனிவர் மத்யந்தனர் என்பவரின் மகனும் சிறந்த சிவ பக்தரும் ஆவார். இவருடைய இயற்பெயர் மழன் என்பதாகும். பின்னாளில் இவர் சிவபெருமானால்
வியாக்ரபாதர் என்று அழைக்கப்பட்டார். மழன் தன் தந்தையிடமே வேதங்களைக் கற்றுக் கொண்டார். ஒரு நாள் மழன் தன் தந்தையிடம், மனிதனாகப் பிறந்தவர்கள் தவம் செய்வதன் மூலமாக தெய்வத்தை அடைய முடியுமா என கேட்டார். அதற்கு, "தவம் செய்வதன் மூலம் சொர்கத்தை அடையலாம். பாவ செயல்கள் செய்யாமல், சிவவழிபாடு
செய்பவர்களே மறுபிறவி இல்லாத உயர்ந்த நிலையையும், தெய்வத்தையும் அடைவார்கள்" என தந்தை கூறினார். அதன் பிறகு சிவவழிபாட்டில் அதிக தீவிரம் காட்டிய மழனை கண்ட முனிவர்கள் பலரும் அவரை மழமுனிவர் என அழைக்கத் துவங்கினர். தனது சிவவழிபாட்டுப் பயணமாக பல ஊர்களுக்குச் சென்று வழிபட்ட மழமுனிவர்
தில்லைவனம் என்ற பகுதிக்கு வந்த போது அந்த வனத்தில் ஓர் அழகிய சிவலிங்கம் இருப்பதைப் பார்த்து, அங்கேயே தங்கி சிவவழிபாடு செய்து வந்தார். அங்கு உயர்ந்த மரங்களில் இருந்த மலர்களை சிவபூஜைக்குப் பறிக்க முற்படும் போது, அனுபவம் இல்லாத காரணத்தால் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு மலர்கள் ரத்தக்கறை
படிந்து பூஜைக்கு பயனற்றவை ஆயின. பெரும்பாலான பூக்களில் தேனீக்கள் தேனை உறிஞ்சி விட்டன. தேன் இல்லாத பூக்களை இறைவனுக்கு சமர்ப்பிக்க விரும்பாததால், பூக்களில் தேனீக்கள் தேனை உறிஞ்சும் முன்பு இரவிலேயே பூக்களை பறிக்க முடிவு செய்து, அதற்கு வசதியாக இரவு இருட்டிலும் தெளிவாகப் பார்க்கும்
கண்பார்வையையும், பூப்பறிக்க, மரமேற வசதியாக கூர்மையான நகங்களுடன் வலுவான புலிக்கால்களையும் தனக்குத் தருமாறு சிவபெருமானிடம் வேண்டி பெற்றார். வியாக்ரபாதர் என சிவ பெருமானால் பெயரும் சூட்டப்பெற்றார். சமஸ்கிருதத்தில் வியக்கரம் என்பது தமிழில் புலி என்று பொருள். தமிழில் புலிக்கால்
முனிவர் என அழைக்கப் பட்டார். தன் வழிபாட்டை மேலும் சிறப்பாக செய்ய நினைத்த அவர், #துர்வாச_முனிவரிடம் சீடராகச் சேர்ந்து, சிவவழிபாடு, விஷ்ணு வழிபாடு, அம்பாள் வழிபாடு, பிரம்மன் வழிபாடு உட்பட பல்வேறு தெய்வ வழிபாட்டு முறைகளையும் கற்றுத் தேர்ந்து, திருப்பிடவூர் என்ற தலத்தில் அருள்
பாலித்து வந்த காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதரை பூஜித்து வந்தார். ஒரு முறை இத்தலத்தில் இருந்த நீர்நிலை வறண்டு போனது. இதனால் இறைவனை அபிஷேகம் செய்ய நீரின்றி தவித்தார். கயிலாயத்தில் இருந்து வெள்ளை யானையில் நீர் எடுத்து வந்து திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச்
சென்று அபிஷேகித்து வழிபடுவது இந்திரனின் தினசரி வழக்கம். அந்த வழக்கப்படி கயிலாயத்து நீருடன் வான் வழியாக இந்திரனின் ஐராவதம் சென்று கொண்டிருப்பதைப் பார்த்த அவர், அதனிடம் இறைவனுக்கு அபிஷேகம் செய்ய சிறிது நீர் தரும்படி கேட்டார். ஜம்புகேஸ்வரருக்குக் கொண்டு செல்லும் நீரை தர முடியாது என
மறுத்து விட்டு சென்று விட்டது. இதனால் முனிவருக்குக் கோபம் தலைக்கேறியது. தனது புலிக்கால் நகங்களால் தரையைத் தோண்டினார். உடனே கங்கை கீழே இறங்கி வந்தது. ஊற்று உற்பத்தியாகி தண்ணீர் பெருகியது. அந்த நீரைக் கொண்டு முனிவர் சிவபூஜையைச் செய்தார். அந்த நீர் ஊற்று திருக்குளமாக மாறி, அதுவே
#புலிபாய்ச்சி_தீர்த்தம் என்று தற்போது அழைக்கப் படுகிறது. முனிவரிடம் தர்க்கத்தில் ஈடுபட்டதால் ஐராவதம் திருவானைக்காவலுக்கு தாமதமாக வந்தது. தாமதத்திற்கு என்ன காரணம் என்று ஜம்புகேஸ்வரர் வினவ, முனிவர் தண்ணீர் கேட்ட விவரத்தையும், தான் அவருக்கு தண்ணீர் தர மறுத்த விவரத்தையும் இறைவனிடம்
கூறியது. உடனே முனிவருக்கு தண்ணீர் கொடுத்து விட்டு வரும்படி ஜம்புகேஸ்வரர் பணிக்க, அது மீண்டும் திருப்பிடவூர் திரும்பி, தீர்த்தம் எடுத்துக் கொள்ளும்படி முனிவரிடம் கூறியது. ஆனால், கோபத்துடன் இருந்த முனிவர் ‘வேண்டாம்’ என மறுத்து விட்டார். எனவே, யானை தன்னிடமிருந்த தீர்த்தத்தைக்
கொண்டு தானே சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது என ஸ்தல புராணம் கூறுகிறது. இவ்வாலயத்தில் மனநிலை சரியில்லாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், நவக்கிரக தோஷம் இருப்பவர்கள் புலிபாய்ச்சி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் தோஷங்கள் விலகி, வேண்டிய வரம்
கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த ஊரின் புராணப் பெயர் #திருப்பிடவூர். ஆனால் அதுவே காலப்போக்கில் #திருப்பட்டூர் என்று மாறி விட்டது. ஆலயம் பல நூற்றாண்டுகளைக் கடந்தது. பழமையான இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தென்முகமாகவும் ஆலயத்தின் உள்ளே செல்லலாம்.
இறைவன் காசிவிஸ்வநாதர். இறைவி காசிவிசாலாட்சி அம்மன். ஆலயத்திற்கு தென்முகமாக நுழையும் போது முதலில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து வியாக்கரபாத முனிவரின் ஜீவசமாதி உள்ளது. அதைக் கடந்து உள்ளே சென்றால், நேர் எதிரே அம்மன் சன்னிதியும், இடதுபுறம் இறைவன் சன்னிதியும் அமைந்து
இருக்கின்றன. வியாக்ரபாதரின் ஜீவ சமாதி, காசி விசாலாட்சி, காசிவிஸ்வநாதர்
கிழக்கில் புலிபாய்ச்சி தீர்த்தம் என அழைக்கப்படும் திருக்குளம் உள்ளது. எனவே ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், அதிக அளவில் தெற்கு வாசலையே பயன் படுத்துகின்றனர். கிழக்குப் பக்கம் இறைவன் சன்னிதிக்கு எதிரே பிரகாரத்தில்
நந்தியும் பலிபீடமும் உள்ளன. இறைவனின் கருவறைக் கோட்டத்தில் தெற்கே வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. நவக்கிரகங்களின் அதிபதியான சூரியன் தினசரி இங்குள்ள சிவனை
வழிபடுவதால் இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் சன்னதி கிடையாது. ஆலயத்தின் கிழக்கே உள்ள புலிபாய்ச்சி தீர்த்தம் மிகவும் பிரசித்தமானது. இந்த புலிபாய்ச்சித் தீர்த்தம் கங்கைக்கு இணையாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் புலிக்கால் முனிவரைப்போல #பதஞ்சலி முனிவரும் இறைவனிடம் ஐக்கியமானதாக ஐதீகம்.
இந்த ஆலயத்தின் சுற்றுப்புற மதில் சுவர்களில் தற்காலத்தில் பார்க்க முடியாத மகரமீன், அன்னப் பறவைகள், டயனோசர் மற்றும் விதவிதமான பாம்பு இனங்கள் சுதை வடிவத்தில் காணப்படுவது வியப்பிற்குரியது. இந்த ஆலயத்தின் உட்பிரகாரம் ஓங்கார (ஓம்) வடிவத்தில் ஆலயத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பதாக
அமைந்துள்ளது. இங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் வழக்கமான விசேஷ நாட்கள் தவிர, மாத பௌர்ணமிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாத பௌர்ணமி நாட்களில் சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பவுர்ணமியில் ஆலய கிரிவலமும் நடைபெறுகிறது. ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேகம்
நடைபெறும். இங்குள்ள வியாக்ரபாத முனிவரின் ஜீவசமாதியின் முன் நின்று தியானம் மற்றும் பிரார்த்தனை செய்தால் உடல் உபாதைகள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். திருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் என்ற சிற்றூரில் இருந்து மேற்கே 4 கிமீ தொலைவில்
திருப்பட்டூர் தலம் உள்ளது. திருப்பட்டூர் பிரம்மா கோவிலிலிருந்து 2 கிமீ தொலைவில் திருப்பட்டூர் காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இங்கு தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. இந்த ஆலயம் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். புலிக்கால்
முனிவர் தனது கால் நகத்தால் கீறி உருவாக்கிய ஆலய திருக்குளமான 'புலிபாய்ச்சி தீர்த்தம்' தற்போது கண்ணீர் வர வைப்பதாக உள்ளது. கோவில் நிர்வாகமும், பக்தர்களும் புலிபாய்ச்சி தீர்த்தத் குளத்தை சீர்படுத்தி நீர் நிரப்பினால் நன்றாக இருக்கும்.
திருச்சிற்றம்பலம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஸ்ரீமுருகப்பெருமானின்_ஆறுபடைவீட்டுச்_சிறப்புகள்
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய 6 தீப்பொறிகள் ஒன்றிணைந்து ஆறுமுகனாய் உருவானதை புராணம் சொல்கிறது. உலகம் உய்வதற்காக பரம்பொருளான சிவபெருமானால் தோற்றுவிக்கப் பட்ட அவதாரமே ஆறுமுகப் பெருமான். கருணையே வடிவான 6 திருமுகங்களை,
12 கரங்களை தாங்கி அருள் பாலித்து அடியவர்களை காக்கும் கலியுகக் கடவுள் அவர். #முருகு எனும் சொல் அழகு, இளமை, தெய்வ நலம், மணம் ஆகிய பொருள்களைக் குறிக்கும். முருகு என்னும் திருப்பெயரோடு அன் விகுதி சேர்த்து #முருகன் என்னும் திருப்பெயர் சூட்டிப் போற்றி வழிபடுகிறோம். சூரபத்மன் என்னும்
அசுரன் பலகாலம் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவமிருந்தான். தவத்தின் வலிமையால் சிவபெருமானிடம் 108 யுகங்கள் வாழும் ஆயுளும், 1008 அண்டங்களை ஆளும் அதிகாரத்தையும், சிங்க வாகனமும், இந்திர ஞானத்தேரும், அழியாத வஜ்ஜிர தேகமும், சிவனது சக்தியினாலன்றி வேறு எந்தச் சக்தியினாலும் அழிக்க முடியாத
பெரியவாளைத் தவிர, வேறு தெய்வமே இல்லை என்று, உறுதியாய் நம்பியவர் மீளா அடிமை என்னும் பிரதோஷம் மாமா. அப்படிப்பட்டவர், ஒரு நாள் தன் அலுவலகத்தில் யாரோ வைத்தீஸ்வரன் கோயிலைப் பற்றி
பேசிக் கொண்டிருந்ததில் மனதில் லேசான சலனம். தானும் அக்கோயிலுக்குப் போகவேண்டும் என்கிற ஆசை மனதினுள். தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் அக்கோவிலுக்குப் போனவர்தான்.அவரது தந்தையின் பெயரும் வைத்தியநாத சர்மா. அதனால் தன்னை வைத்தீஸ்வரர் அழைக்கிறார் என்கிற நினைப்புடன், வீட்டீற்கு வந்து தன்
துணைவியாருடன் இதைப் பற்றிப் பேசுகிறார். துணைவியார், திடீரென எதிர்கேள்வி கேட்டார். "பெரியவாளே சாட்சாத் பரமேஸ்வரராய் இருக்கார்னு சொல்வீர் களே. இப்போது ஏது இன்னொரு தெய்வத்தைப் பார்க்கணும்னு சொல்றேளே?"--உண்மை உறைத்தது. மீளா அடிமை ஆடித்தான் போனார். தான் ஏதோ ஒரு பெரிய தவறு செய்து
#MahaPeriyava
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
Chief Justice M.M.Ismail used to go to Kanchi, pay his obeisance to Sri Maha Periyava and discuss with Him for hours about spiritual matters of both Hinduism and Islam. On one such occasion, it was
getting late for Periyava to do His daily rituals and an attendant informed Him about it very politely.
Periyava then said, “We must give prasadam to the Judge!”
Everyone was taken aback. ‘What were they to give? He might not accept it’ was the thought in their minds. Periyava
then called an attendant to come close to Him and whispered something in his ears. The attendant went inside and returned with a ‘velli pezhai’ (small silver container). Again everyone thought, “No, that can’t be the prasad. There must be something inside it!” And they were
#அபார_ஏகாதசி
இதனை அசலா ஏகாதசி என்றும் வழங்குவர். அபரா என்றால் அபாரமான, அளவில்லாத என்று பொருள். இந்த அபரா ஏகாதசி விரதமானது அனைத்து விதமான பாவங்களையும் அழிப்பதுடன் அளவில்லாத செல்வத்தையும் அளிக்கக்கூடியது என்கின்றன புராணங்கள். இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர
மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்து உரைக்கிறார்.
"ஒ யுதிஷ்டிரா! அபரா ஏகாதசி விரதம்
மக்கள் அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும்.
இது மற்ற அனைத்து விரதங்களை விட ஸ்ரேஷ்டமானதும், உத்தமமானதும் ஆகும். இந்நாளில் அனைவரும் பக்தியுடன் பகவான் மகா விஷ்ணுவை ஓங்கி
உலகளந்த உத்தமனாகிய திரிவிக்ரமனாக வணங்க வேண்டும்.
இந்த ஏகாதசி விரதம் ஒருவர் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிப்பதோடு, அவருக்கு அளவில்லா செல்வத்தை வாரி வழங்குவதால் இது
இப்பெயர் பெற்றது. மேலும் இவ்விரதத்தை நம்பிக்கையோடு கடைபிடிப்பவர்கள் மக்களிடத்தில் பெரும் பேரும், புகழும் பெறுவர்.
"Acharya's Call"- invaluable speeches given by His Holiness Sri Sri Sri Chandrasekharendra Saraswathi Mahaswamiji
December 7, 1957
All of us should strive to acquire Jnana. It is only then that we shall be able to endure any kind of suffering. No man can escape
suffering in some form or other. Each of us has his or her share of suffering. We may think that a wealthy person, or a highly placed in life, is free from cares and anxieties, and, so thinking may covet that wealth or that status in the belief that we can thereby get rid of our
worries. But if you ask those persons, they will unburden to you their tale of woes. In fact, every man thinks that his suffering is the greatest, even as he thinks that he is the most handsome or the most wise. No person dares to express the latter two feelings openly; but each
#மகாபெரியவா
ஒரு முறை ஒரு கோடீஸ்வரர் குடும்பத்தோடு வந்து காஞ்சியில் மஹா சுவாமியை வணங்கிவிட்டு தங்கள் குறைகள் நீங்கிட வழி கூறுமாறு வேண்டினர். சில நிமிட மௌனத்திற்குப் பின் ஆச்சாரியார்.
“அன்றாடமும் அதிகாலையில் வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது உண்டா " என்று கேட்டார்.
பணக்காரக்
குடும்பத்தினருக்கு, ஒரு நொடி சப்பென்று போய்விட்டது. தங்களின் செல்வத்திற்கு மதிப்பு அளித்து,
'ஒரு கோயிலுக்கு குடமுழுக்கு செய்' 'ஆயிரக்கனக்கானவர்க்கு அன்னதானம் செய்' என்று பெரிய அளவில் தான் எதாவது கூறுவார் என்று நினைத்து இருந்தனர். இருந்தாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு,
'செய்யப்படுகிறது' என்றனர்.
ஆச்சரியார் அதோடு விடுவதாக இல்லை. “யாரால் செய்யப் படுகிறது?” என்று வினவினார்.
இது கூடத் தெரியவில்லையா என்ற தொனியில் 'வேலைக்காரி தான்' என்றாள் தனவானின் மனைவி.
மஹா ஸ்வாமிகள் பொறுமை இழக்கவில்லை. நிதானமாக, “பூமி பூஜை செய்த புண்ணியம் வேலைக்காரியை அடைந்து