அன்பெழில் Profile picture
May 14 19 tweets 5 min read Twitter logo Read on Twitter
#திருப்பருப்பதம் - #ஸ்ரீசைலம்_மல்லிகார்ச்சுனேசுவரர்_கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரின் பாடல் பெற்ற தலமாகும். மல்லிகார்ஜுன சுவாமிக்காக ஆந்திர மாநிலத்தின் நந்தியால் மாவட்டத்தில் நல்லமலைக் குன்றில், கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது இக்கோவில். ஸ்ரீசைலம் என்றும் அழைக்கப் Image
படுகிறது. சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர்.
சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி, தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்துக் கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன் என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னைக் காண வர முடியாது என்று உத்தரவும் Image
பிறப்பித்தார். நந்தி தவம் செய்த #நந்தியால் என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்தான். பர்வதன் கடும் தவம் செய்து சிவபெருமான் பாதம் எப்போதும் தன் மீது இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். ஆதன் படிப் பர்வதனை ஒரு மலையாக ஆக்கி ஸ்ரீ பர்வதம் என்னும் Image
பெயரிட்டு தாம் சிவலிங்கமாக அம்மலையின் மீது அமர்ந்து எழுந்தருளினார். ஆந்த ஸ்ரீ பர்வதமே நாளடைவில் ஸ்ரீசைலம் என வழங்கலாயிற்று. சைலம் என்றால் மலை எனப் பொருள்படும். மற்றும் ஒரு சிவபக்தை நகஸ்ரீ என்பவள் தவமிருந்து இத்தலம் தனது பெயரால் வழங்கப்பட வேண்டுமென சிவபெருமானிடம் வரம் பெற்றாள்.
நகஸ்ரீ என்பது ஸ்ரீ நகம் என மாறி தற்போது ஸ்ரீசைலம் என மருவி வழங்குகிறது. சிலாதமுனிவர் தவம் செய்தமையால் இம்மலை சிலாத முனி மலை எனப்பெயர் பெற்று நாளடைவில் ஸ்ரீ சைலம் எனப் பெயர் மருவிவிட்டது எனவும் கூறப்படுகிறது. மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு
கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனைப் பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் “மல்லிகார்ஜுனர்” எனப்படுகிறார். பிரதோஷத்தன்று நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து
விடலாம் என்பதில் சந்தேகமில்லை. அவரது அவதாரத் தலமான ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் மலைப்பகுதியில் உள்ளது. ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இங்குள்ள மல்லிகார்ஜுனருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம். சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால், நந்தி
அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அத்துடன் அம்மனின் 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. ஸ்ரீசைலம் மகாபாரதத்திலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்த புராணத்தில் சிறீசைல காண்டம் எனும் அத்தியாயம் ஒன்று உண்டு. இது இக்கோயில் மிகப் பழங்காலத்திலேயே Image
தோன்றியதற்குச் சான்றாக அமைகிறது. பொ.யு. 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தநாயன்மார்கள் இக்கோயிலைப் பாடியுள்ளனர். #ஆதிசங்கரர் இங்கு வந்து #சிவானந்தலகரி என்னும் சமஸ்கிருத நூலை இயற்றியுள்ளார். இக்கோயிலின் வடக்கு கோபுரத்தையும், தியான மண்டபத்தையும் நிர்மாணித்தவர் சத்ரபதி சிவாஜி. தன் Image
படைவீரர்களுடன் போருக்குப் புறப்பட்ட அவன் இந்தக் கோயிலுக்கு வந்தபோது இறைவனின் பேரருளில் நனைந்து, ஆழ்ந்து அங்கேயே தங்கிவிட்டான். அவன் படைகள் முன்னால் போய் விட்டன. போர்க்குணத்தை முற்றிலும் இழந்த அவன் அங்கேயே தங்கிவிடவும்  தீர்மானித்தான். ஆனால், அவனுடைய அரசப்பணிக்கு எந்தத் தொய்வும்
வந்துவிடக் கூடாது என்பதற்காக பிரம்மராம்பாளே பவானி தேவியாக அவன் கனவில் தோன்றி ஒரு வாளையும் கொடுத்து அவனை ஆசிர்வதித்துப் போருக்கு அனுப்பி வைத்து வெற்றியும் காணவைத்தாள். இன்றளவும் அவள் கொடுத்த வாள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. நாலாபுறமும் கோபுரங்கள் உள்ளன. கிழக்கு கோபுரம் கிருஷ்ண
தேவராயரால் கட்டப்பட்டதாக கூறப்படுவதால் இந்த கோபுரத்திற்கு கிருஷ்ணதேவராயர் கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது. மல்லிகர்ஜுனர் அமைந்துள்ள கருவறைக்கு மேல் உள்ள கோபுரமானது காக்கத்திய மன்னர் கணபதியின் சகோதரி மைலம்மா என்பவரால் கட்டப்பட்டதாக கல்வெட்டு குறிப்பு உள்ளது. பொன் வேய்ந்த விமானம்.
இந்த கோயில் கோட்டைச்சுவர் மிக பலம் வாய்ந்ததாக இருக்கும் வகையில் 2121 அடி நீளத்தில், 20 அடி உயரத்துடன் கோட்டை சுவர் திருச்சுற்று மதில்களை கொண்டுள்ளது. இந்த சுவரில் பல புராண, வரலாறுகளை குறிக்கும் வகையில் சிலைகள், புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. இந்த கோயிலில் பூஜைகள் Image
வீரசைவ காரணாகம விதிமுறைப்படி நட்சந்து வருகின்றது. இன்றும் வீர சைவர்களின் கட்டுப்பாட்டில் இந்த கோயில் உள்ளது. தினமும் நடக்கும் நித்ய நைவேத்ய பூஜையின் போது, விருத கக்பத்தின் அடிப்படையில் இங்கு அமைந்துள்ள மகா நந்திக்கு நைவேத்யம் கிடையாது. செவ்வாய் கிழமைகளிலும், பிரதோஷம், சிவராத்திரி Image
தினத்தில் மட்டும் தான் இந்த மகா நந்திக்கு ஊரவைத்த முக்கடலையை ஒரு மஞ்சள் துணியில் வைத்து அதை நந்தியின் வாயோடு கட்டிவைப்பது காலம் காலமாக நடந்து வருகின்ற ஐதீகமாகும். குழந்தை பாக்கிய இல்லாமல் வாடும் தம்பதியர் இந்த கோயிலுக்கு வந்து வணங்கி செல்ல புத்திர சந்தானம் உண்டாகும். வேலை
வாய்ப்பு இல்லாதவர்கள் சன்னா எனும் முக்கடலையை வாங்கி தேவஸ்தான நிர்வாகத்தில் கொடுப்பார்கள். இதனை நந்திக்கு வ்ருத கல்ப முறையில் நைவேத்தியமாக பிரசாதமாக படைப்பார்கள். இன்னொரு அதிசயம், இந்தக் கோயிலைச் சுற்றியுள்ள காடுகளில் ஹனுமந்தபீரம் என்றவகை மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் இலைகள்
வித்தியாசமான தோற்றம் கொண்டிருக்கின்றன. ஆமாம், இலையின் இரு பகுதிகளிலும் ஆஞ்சநேயர் உருவம் காணப்படுகிறது! இந்த இலை கிடைக்கப் பெறுபவர்கள் அதைக் கொண்டுவந்து தம் வீட்டு பூஜையறையிலோ அல்லது பீரோவிலோ வைத்துப் போற்றிப் பாதுகாக்கிறார்கள். சென்று தரிசிப்போம்.
ஹரஹர சங்கர சிவ சிவ சங்கர Image
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 16
#ஸ்ரீமுருகப்பெருமானின்_ஆறுபடைவீட்டுச்_சிறப்புகள்
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய 6 தீப்பொறிகள் ஒன்றிணைந்து ஆறுமுகனாய் உருவானதை புராணம் சொல்கிறது. உலகம் உய்வதற்காக பரம்பொருளான சிவபெருமானால் தோற்றுவிக்கப் பட்ட அவதாரமே ஆறுமுகப் பெருமான். கருணையே வடிவான 6 திருமுகங்களை, Image
12 கரங்களை தாங்கி அருள் பாலித்து அடியவர்களை காக்கும் கலியுகக் கடவுள் அவர். #முருகு எனும் சொல் அழகு, இளமை, தெய்வ நலம், மணம் ஆகிய பொருள்களைக் குறிக்கும். முருகு என்னும் திருப்பெயரோடு அன் விகுதி சேர்த்து #முருகன் என்னும் திருப்பெயர் சூட்டிப் போற்றி வழிபடுகிறோம். சூரபத்மன் என்னும்
அசுரன் பலகாலம் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவமிருந்தான். தவத்தின் வலிமையால் சிவபெருமானிடம் 108 யுகங்கள் வாழும் ஆயுளும், 1008 அண்டங்களை ஆளும் அதிகாரத்தையும், சிங்க வாகனமும், இந்திர ஞானத்தேரும், அழியாத வஜ்ஜிர தேகமும், சிவனது சக்தியினாலன்றி வேறு எந்தச் சக்தியினாலும் அழிக்க முடியாத
Read 16 tweets
May 16
#மகாபெரியவா
கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

பெரியவாளைத் தவிர, வேறு தெய்வமே இல்லை என்று, உறுதியாய் நம்பியவர் மீளா அடிமை என்னும் பிரதோஷம் மாமா. அப்படிப்பட்டவர், ஒரு நாள் தன் அலுவலகத்தில் யாரோ வைத்தீஸ்வரன் கோயிலைப் பற்றி Image
பேசிக் கொண்டிருந்ததில் மனதில் லேசான சலனம். தானும் அக்கோயிலுக்குப் போகவேண்டும் என்கிற ஆசை மனதினுள். தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் அக்கோவிலுக்குப் போனவர்தான்.அவரது தந்தையின் பெயரும் வைத்தியநாத சர்மா. அதனால் தன்னை வைத்தீஸ்வரர் அழைக்கிறார் என்கிற நினைப்புடன், வீட்டீற்கு வந்து தன்
துணைவியாருடன் இதைப் பற்றிப் பேசுகிறார். துணைவியார், திடீரென எதிர்கேள்வி கேட்டார். "பெரியவாளே சாட்சாத் பரமேஸ்வரராய் இருக்கார்னு சொல்வீர் களே. இப்போது ஏது இன்னொரு தெய்வத்தைப் பார்க்கணும்னு சொல்றேளே?"--உண்மை உறைத்தது. மீளா அடிமை ஆடித்தான் போனார். தான் ஏதோ ஒரு பெரிய தவறு செய்து
Read 6 tweets
May 16
#MahaPeriyava
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Chief Justice M.M.Ismail used to go to Kanchi, pay his obeisance to Sri Maha Periyava and discuss with Him for hours about spiritual matters of both Hinduism and Islam. On one such occasion, it was Image
getting late for Periyava to do His daily rituals and an attendant informed Him about it very politely.

Periyava then said, “We must give prasadam to the Judge!”

Everyone was taken aback. ‘What were they to give? He might not accept it’ was the thought in their minds. Periyava
then called an attendant to come close to Him and whispered something in his ears. The attendant went inside and returned with a ‘velli pezhai’ (small silver container). Again everyone thought, “No, that can’t be the prasad. There must be something inside it!” And they were
Read 5 tweets
May 15
#அபார_ஏகாதசி
இதனை அசலா ஏகாதசி என்றும் வழங்குவர். அபரா என்றால் அபாரமான, அளவில்லாத என்று பொருள். இந்த அபரா ஏகாதசி விரதமானது அனைத்து விதமான பாவங்களையும் அழிப்பதுடன் அளவில்லாத செல்வத்தையும் அளிக்கக்கூடியது என்கின்றன புராணங்கள். இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர Image
மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்து உரைக்கிறார்.
"ஒ யுதிஷ்டிரா! அபரா ஏகாதசி விரதம்
மக்கள் அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும்.
இது மற்ற அனைத்து விரதங்களை விட ஸ்ரேஷ்டமானதும், உத்தமமானதும் ஆகும். இந்நாளில் அனைவரும் பக்தியுடன் பகவான் மகா விஷ்ணுவை ஓங்கி
உலகளந்த உத்தமனாகிய திரிவிக்ரமனாக வணங்க வேண்டும்.
இந்த ஏகாதசி விரதம் ஒருவர் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிப்பதோடு, அவருக்கு அளவில்லா செல்வத்தை வாரி வழங்குவதால் இது
இப்பெயர் பெற்றது. மேலும் இவ்விரதத்தை நம்பிக்கையோடு கடைபிடிப்பவர்கள் மக்களிடத்தில் பெரும் பேரும், புகழும் பெறுவர்.
Read 15 tweets
May 15
#MahaPeriyava

"Acharya's Call"- invaluable speeches given by His Holiness Sri Sri Sri Chandrasekharendra Saraswathi Mahaswamiji
December 7, 1957

All of us should strive to acquire Jnana. It is only then that we shall be able to endure any kind of suffering. No man can escape Image
suffering in some form or other. Each of us has his or her share of suffering. We may think that a wealthy person, or a highly placed in life, is free from cares and anxieties, and, so thinking may covet that wealth or that status in the belief that we can thereby get rid of our
worries. But if you ask those persons, they will unburden to you their tale of woes. In fact, every man thinks that his suffering is the greatest, even as he thinks that he is the most handsome or the most wise. No person dares to express the latter two feelings openly; but each
Read 23 tweets
May 15
#மகாபெரியவா
ஒரு முறை ஒரு கோடீஸ்வரர் குடும்பத்தோடு வந்து காஞ்சியில் மஹா சுவாமியை வணங்கிவிட்டு தங்கள் குறைகள் நீங்கிட வழி கூறுமாறு வேண்டினர். சில நிமிட மௌனத்திற்குப் பின் ஆச்சாரியார்.

“அன்றாடமும் அதிகாலையில் வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது உண்டா " என்று கேட்டார்.

பணக்காரக் Image
குடும்பத்தினருக்கு, ஒரு நொடி சப்பென்று போய்விட்டது. தங்களின் செல்வத்திற்கு மதிப்பு அளித்து,
'ஒரு கோயிலுக்கு குடமுழுக்கு செய்' 'ஆயிரக்கனக்கானவர்க்கு அன்னதானம் செய்' என்று பெரிய அளவில் தான் எதாவது கூறுவார் என்று நினைத்து இருந்தனர். இருந்தாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு,
'செய்யப்படுகிறது' என்றனர்.

ஆச்சரியார் அதோடு விடுவதாக இல்லை. “யாரால் செய்யப் படுகிறது?” என்று வினவினார்.

இது கூடத் தெரியவில்லையா என்ற தொனியில் 'வேலைக்காரி தான்' என்றாள் தனவானின் மனைவி.

மஹா ஸ்வாமிகள் பொறுமை இழக்கவில்லை. நிதானமாக, “பூமி பூஜை செய்த புண்ணியம் வேலைக்காரியை அடைந்து
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(