#அபார_ஏகாதசி
இதனை அசலா ஏகாதசி என்றும் வழங்குவர். அபரா என்றால் அபாரமான, அளவில்லாத என்று பொருள். இந்த அபரா ஏகாதசி விரதமானது அனைத்து விதமான பாவங்களையும் அழிப்பதுடன் அளவில்லாத செல்வத்தையும் அளிக்கக்கூடியது என்கின்றன புராணங்கள். இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர
மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்து உரைக்கிறார்.
"ஒ யுதிஷ்டிரா! அபரா ஏகாதசி விரதம்
மக்கள் அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும்.
இது மற்ற அனைத்து விரதங்களை விட ஸ்ரேஷ்டமானதும், உத்தமமானதும் ஆகும். இந்நாளில் அனைவரும் பக்தியுடன் பகவான் மகா விஷ்ணுவை ஓங்கி
உலகளந்த உத்தமனாகிய திரிவிக்ரமனாக வணங்க வேண்டும்.
இந்த ஏகாதசி விரதம் ஒருவர் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிப்பதோடு, அவருக்கு அளவில்லா செல்வத்தை வாரி வழங்குவதால் இது
இப்பெயர் பெற்றது. மேலும் இவ்விரதத்தை நம்பிக்கையோடு கடைபிடிப்பவர்கள் மக்களிடத்தில் பெரும் பேரும், புகழும் பெறுவர்.
அதோடு இந்த அபரா ஏகாதசி விரத பிரபாவத்தால் பிரம்மஹத்தி, பிறரை நிந்திப்பது, போரில் புறமுதுகிடுதல், குரு நிந்தனை, பிசாச பிறவி, பொய் சாட்சி கூறுதல், ஸ்திரீ கமனம், போலி மருத்துவம் செய்தல், போலி ஜோதிடம் கூறுதல் போன்ற பாவங்களிலிருந்து விடுதலை அளிப்பதோடு அவர்களுக்கு சுவர்க்கப் ப்ராப்தியை
அளிக்க வல்லது. 3 புஷ்கரங்களில் நீராடுதல், கார்த்திகை மாத புனித நீராடல், கங்கையில் பிண்ட தானம் செய்தல், பத்ரிகாஸ்ரமத்தில் தங்குதல், இறைவன் கேதாரநாதரை தரிசித்து வணங்குதல் இவற்றால் கிடைக்கும் புண்ணியத்தினை இந்த அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடை பிடிப்பதால் ஒருவர் அடைய முடியும்
குரு பகவான் கோட்சாரத்தில் இருக்கும் வேளையில் கோமதி நதியில் நீராடுதல், ஈசனை சிவராத்திரி புண்ணிய நாளில் வாரணாசி நகரில் வணங்கி வழிபடுதல், கிரகண காலத்தில் குருக்ஷேத்திரத்தில் புனித நீராடி, கஜ தானம், ஸ்வர்ண தானம் செய்தல், சினைப்பசுவினை ஸ்வர்ணம் மற்றும் பூமி தானத்தோடு செய்வதால் அடையும்
புண்ணிய பலன்கள் அனைத்தும் இந்த அபரா ஏகாதசி விரதத்தை விதிப் பூர்வமாக கடைபிடிப்பதால் ஒருவர் அடைய முடியும். ஒ யுதிஷ்டிரா! இந்த விரத மகாத்மியத்தை விளக்கும் கதையினை உனக்கு கூறுகிறேன் கவனமாகக் கேள்! என்று கூறத் தொடங்கினார். முன்னொரு காலத்தில் மஹித்வஜன் என்னுமொரு அரசன் தன்னுடைய நகரை
நல்ல முறையில் அரசாண்டு வந்தான்.
அவனுக்கு வஜ்ரத்வஜன் என்றொரு சகோதரன் இருந்தான். அவன் மிகவும் கொடூர குணம் கொண்டவனாகவும், நாத்திகனாகவும் விளங்கினான். ஒரு நாள் வஜ்ரதவஜன், தனது சகோதரன் மீது பொறாமை கொண்டு, இரவில் அவன் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவனைக் கொன்று ஊரில் உள்ளதொரு அரச
மரத்தின் அடியில் புதைத்து விட்டான்.
பின்னர் அவன் அரசாட்சியைக் கைப்பற்றினான். அபமிருத்யுவின் காரணமாக மஹித்வஜன், ஆவியாக அந்த மரத்தையே சுற்றி அலைந்தான்.
அந்த வழியாகப் போவோர், வருவோர் அனைவரையும் தொல்லை செய்து துன்புறுத்தினான். ஒரு நாள் அவ்வழியே வந்த தௌமிய மகரிஷி, மரத்தில் தொங்கிக்
கொண்டிருந்த மஹித்வஜனின் ஆன்மாவினைக் கண்டார். அவருடைய தவ பலத்தால் அவனுடைய பிரேத ஜன்மாவிற்கான காரணத்தினை அறிந்தார். அதன் பின்பு அவர் அந்த ஆன்மாவினை அழைத்து அதற்கு தகுந்த புத்திமதிகளைக் கூறி
அதனை நல்வழிபடுத்தினார். அதனைக் கேட்டு மனம் திருந்திய அந்த ஆவி,
இத்தகு கொடிய பிரேத
ஜன்மாவிலிருந்து விடுதலை அடைய அவரிடம் மார்க்கம் வேண்டி நின்றது.
அதனைக் கேட்ட தௌமிய மகரிஷி, அதற்கு அபரா ஏகாதசியின் விதி முறைகள், மகாத்மியம் ஆகியவற்றை கூறி அதனை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தினார். அதன்படி, மஹித்வஜன் இவ்விரதத்தை கடைபிடித்து அவனுடைய பிரேத ஜென்மம் நீங்கி நன்னிலையை
அடைந்தான். இந்த அபரா ஏகாதசி விரதமானது பாப விருட்சத்தினை வெட்டி வீழ்த்தும் கோடரியைப் போன்றதாகும். அஞ்ஞானம் மற்றும் பாவத்தினால் இருண்டிருக்கும்
உலகத்தினில் ஒளி வீசும் சூரியனைப் போன்றதாகும். எனவே ஓ யுதிஷ்டிரா, தனது கர்மவினை பாவங்களைக் கண்டு அஞ்சுபவர் அனைவரும் இந்த விரதத்தை
கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
மேலும் இந்த விரதத்தை கடை பிடிக்காத ஒருவர், ஒரு மகா சமுத்திரத்தில் தோன்றும் பல நீர்குமிழிகள் போன்று ஜனன-மரண சக்கரத்தில் சிக்கி, மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறந்து கொண்டே இருப்பார்கள். எனவே இந்த அபரா ஏகாதசி விரதத்தினை பக்தி சிரத்தையுடன் கடை
பிடித்து இறைவன் திரிவிக்ரமனை வணங்கி வழிபடுவதால் பாவ வினைகள் அனைத்தும் அழிந்து, இறுதியில் வைகுந்தத்தை அடைவர் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் கூறி முடித்தார். எனவே நாம் அனைவரும் பெறுதற்கரிய இந்த மனித தேகத்தை இறைவனை வணங்கி வழிபட பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லை
எனில் நம்முடைய வாழ்கை அர்த்தம் அற்றதாகி விடும். மேலும் எவரொருவர் இந்த நன்னாளில் இவ்விரத மஹாத்மியத்தை சொல்கிறாரோ கேட்கிறாரோ படிக்கிறாரோ அவரும் அவருடைய அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபட்டு புதுவாழ்வு பெறுவர் என்று பிரம்மாண்ட புராணம் குறிப்பிடுகிறது.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#Meaningful_Hindu_Practices
On auspicious occasions, we prefer giving a gift in the envelope that is never like Rs.100, 500 or 1000, but is always Rs.101, 501 or 1001 so on. Why do we add that extra one rupee? There are four age-old reasons for doing that.
1 Zero signifies an
end, while One signifies a new beginning. That extra one rupee ensures that the receiver does not come across a zero.
2 Mathematically, the numbers 100, 500 and 1000 are divisible, but the numbers 101, 501 and 1001 are indivisible. we want our good wishes and blessings to remain
indivisible.
3 The added one rupee is a symbol of continuity, ahead of the basic amount. It strengthens the bond between the giver and the receiver. It simply means, "our good relationship will continue".
4 However, the added rupee must be a coin, and never a one rupee note. A
மந்திரங்களில் சக்தியில்லை என்று யாருக்காவது சந்தேகம் இருந்தால் படம் எடுத்தாடும் பாம்பு முன்பாக மந்திரத்தை உச்சரித்து பார்த்து சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ளலாம். பயப்பட வேண்டாம், மந்திரம் சொல்ல
தெரிந்தவரை சொல்ல விட்டு நாம் தள்ளி நின்று இதைப் பார்க்கலாம்.
2. மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு.
வாணவேடிக்கை பட்டாசுகளுக்குள் இருக்கும் மருந்து, அந்த வெடியை வானத்துக்கு தூக்கிச் சென்று வண்ண கோலங்கள் காண்பிக்கிறது. மருந்தின் சக்தியை தெரிந்து கொள்ள வாண-வேடிக்கையை பாருங்கள்
என்பது இதன் பொருள்.
3. சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு.
ஜோதிட சாஸ்திரத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, பஞ்சாகத்தில் முன்கூட்டியே பவுர்ணமி, அமாவாசை, கிரகண காலகட்டங்கள், நட்சத்திர சுழற்சி போன்றவை இடம் பெற்று இருப்பதைப் பார்த்து வியப்பு அடைந்திருப்பர். எனவே ஜோதிடம் பொய்
#ஸ்ரீமுருகப்பெருமானின்_ஆறுபடைவீட்டுச்_சிறப்புகள்
சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய 6 தீப்பொறிகள் ஒன்றிணைந்து ஆறுமுகனாய் உருவானதை புராணம் சொல்கிறது. உலகம் உய்வதற்காக பரம்பொருளான சிவபெருமானால் தோற்றுவிக்கப் பட்ட அவதாரமே ஆறுமுகப் பெருமான். கருணையே வடிவான 6 திருமுகங்களை,
12 கரங்களை தாங்கி அருள் பாலித்து அடியவர்களை காக்கும் கலியுகக் கடவுள் அவர். #முருகு எனும் சொல் அழகு, இளமை, தெய்வ நலம், மணம் ஆகிய பொருள்களைக் குறிக்கும். முருகு என்னும் திருப்பெயரோடு அன் விகுதி சேர்த்து #முருகன் என்னும் திருப்பெயர் சூட்டிப் போற்றி வழிபடுகிறோம். சூரபத்மன் என்னும்
அசுரன் பலகாலம் சிவபெருமானை நோக்கிக் கடுமையான தவமிருந்தான். தவத்தின் வலிமையால் சிவபெருமானிடம் 108 யுகங்கள் வாழும் ஆயுளும், 1008 அண்டங்களை ஆளும் அதிகாரத்தையும், சிங்க வாகனமும், இந்திர ஞானத்தேரும், அழியாத வஜ்ஜிர தேகமும், சிவனது சக்தியினாலன்றி வேறு எந்தச் சக்தியினாலும் அழிக்க முடியாத
பெரியவாளைத் தவிர, வேறு தெய்வமே இல்லை என்று, உறுதியாய் நம்பியவர் மீளா அடிமை என்னும் பிரதோஷம் மாமா. அப்படிப்பட்டவர், ஒரு நாள் தன் அலுவலகத்தில் யாரோ வைத்தீஸ்வரன் கோயிலைப் பற்றி
பேசிக் கொண்டிருந்ததில் மனதில் லேசான சலனம். தானும் அக்கோயிலுக்குப் போகவேண்டும் என்கிற ஆசை மனதினுள். தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் அக்கோவிலுக்குப் போனவர்தான்.அவரது தந்தையின் பெயரும் வைத்தியநாத சர்மா. அதனால் தன்னை வைத்தீஸ்வரர் அழைக்கிறார் என்கிற நினைப்புடன், வீட்டீற்கு வந்து தன்
துணைவியாருடன் இதைப் பற்றிப் பேசுகிறார். துணைவியார், திடீரென எதிர்கேள்வி கேட்டார். "பெரியவாளே சாட்சாத் பரமேஸ்வரராய் இருக்கார்னு சொல்வீர் களே. இப்போது ஏது இன்னொரு தெய்வத்தைப் பார்க்கணும்னு சொல்றேளே?"--உண்மை உறைத்தது. மீளா அடிமை ஆடித்தான் போனார். தான் ஏதோ ஒரு பெரிய தவறு செய்து
#MahaPeriyava
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
Chief Justice M.M.Ismail used to go to Kanchi, pay his obeisance to Sri Maha Periyava and discuss with Him for hours about spiritual matters of both Hinduism and Islam. On one such occasion, it was
getting late for Periyava to do His daily rituals and an attendant informed Him about it very politely.
Periyava then said, “We must give prasadam to the Judge!”
Everyone was taken aback. ‘What were they to give? He might not accept it’ was the thought in their minds. Periyava
then called an attendant to come close to Him and whispered something in his ears. The attendant went inside and returned with a ‘velli pezhai’ (small silver container). Again everyone thought, “No, that can’t be the prasad. There must be something inside it!” And they were
"Acharya's Call"- invaluable speeches given by His Holiness Sri Sri Sri Chandrasekharendra Saraswathi Mahaswamiji
December 7, 1957
All of us should strive to acquire Jnana. It is only then that we shall be able to endure any kind of suffering. No man can escape
suffering in some form or other. Each of us has his or her share of suffering. We may think that a wealthy person, or a highly placed in life, is free from cares and anxieties, and, so thinking may covet that wealth or that status in the belief that we can thereby get rid of our
worries. But if you ask those persons, they will unburden to you their tale of woes. In fact, every man thinks that his suffering is the greatest, even as he thinks that he is the most handsome or the most wise. No person dares to express the latter two feelings openly; but each