#புராணம்#வினாயகர்_முதல்_வாழைமரம்_வரை
ஒரு சமயம், சிவபெருமான் அசுரனை அழிக்க போருக்குச் சென்றிருந்தார். பார்வதி தேவியார், கணவன் போருக்கு சென்றதை நினைத்து அதே சிந்தனையுடன் முகத்தில் பூசுவதற்கு சிலாக் கல்லில் மஞ்சளை உரசினார். சிலாக் கல்லின் குணம் கொஞ்சம் மஞ்சளை உரசினாலும் அதிகமாக
வரும் தன்மை கொண்டது. பார்வதி தேவி, தனக்குத் தேவையான மஞ்சளை எடுத்துக் கொண்டு, மீதியுள்ள அரைத்த மஞ்சளைக் கொண்டு குழந்தைமேல் உள்ள ஆசையாலும் தன் கணவன் மீது கொண்ட அன்பாலும் ஓர் அழகான 9 வயது ஆண் பதுமையை செய்தார். அது பார்ப்பதற்கு அழகாக இருந்தமையால் அதற்கு ஆடை, ஆபரணங்கள் போட்டு அழகுப்
படுத்தி தாய்மை உணர்வுடன், எடுத்து உச்சி முகர்ந்து முத்தமிட்டாள் அன்னை பார்வதி. அந்த மஞ்சளால் செய்யப்பட்ட பொம்மையானது தேவியின் தாய்மை கொண்ட அரவணைப்பால், கணப்பொழுதில் உயிர் பெற்று, அழகான சிறுவனாக உருவெடுத்தது. கணப்பொழுதில் தோன்றியதால் #கணபதி என பெயர் பெற்றார். தேவியின் விக்னத்தை
நீங்கியதால் #விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது.பார்வதி தேவியார் விநாயகரை காவலுக்கு வைத்துவிட்டு, குளிக்கச் சென்றார். போருக்குச் சென்ற பிரம்மா, விஷ்ணு, சிவன் மற்றும் தேவர்கள் கைலாய வாசலுக்கு வந்தார்கள்.சிவபெருமான் பார்வதியை பார்க்க கைலாயத்திற்கு செல்ல நுழைகையில் விநாயகப்
பெருமான் தன்னை மீறி செல்ல முடியாது எனக் கூறி வழிமறித்தார். சிவபெருமான் தன்னை உள்ளே போக விடுமாறு சொல்லிப் பார்த்தார். விநாயகர் அன்னையின் கட்டளையை மீறி யாராக இருந்தாலும் தான் அனுமதிக்க முடியாது என கூறினார். ஒரு பொடி சிறுவன் என்னை வழிமறிப்பதா என சிவபெருமான் கோபம் கொண்டு
தன்சூலாயுதத்தால் விநாயகர் தலையை கொய்ய முற்பட்டார். சூலாயுதம் கடலையே எரித்து விடும் ஆற்றல் கொண்டது. ஆனால் முதல் தடவையும் இரண்டாம் தடவையும் விட்ட சூலாயுதமானது விநாயகர் தலையை கொய்தது ஆனால் மீண்டும் விநாயகர் உடலுடன் ஒட்டிக் கொண்டது. மூன்றாவது முறையாக சிவபெருமான் அளவுக்கடந்த கோபத்தால்
அவரது நெற்றிக்கண்ணை திறந்து அக்னியின் மூலமாக விநாயகரை எரித்து விட்டார். 'அம்மா' என்ற சத்தத்தைக் கேட்டு, பார்வதி தேவியார் ஓடிவந்து விநாயகர் உடலை மடியில் வைத்து அழுதார். தான் கொன்றது தன் மகனைத் தான் என்று அறிந்து சிவபெருமானும் கவலையுற்றார்.
தேவியார் வடித்த கண்ணீர் எரிந்த
சாம்பலில் பட்டு ஈரமானது. தன் மகன் மீண்டும் வேண்டும் என தேவியார் மன்றாட, சிவபெருமானோ ஒருமுறை எரிந்து விட்டால் அதை மீண்டும் உயிர்ப்பிக்க முடியாது என்று கூறினார்.
பார்வதி தேவியின் பிடிவாதத்தால் பிரம்மா விஷ்ணு சிவன் மூவரும் ஆலோசித்து, வடக்கு பார்த்து கஷ்டப்பட்ட ஒரு வெள்ளை யானையின்
தலையை கொய்து விநாயகருக்கு வைக்க முடிவு எடுத்தனர். காவலாளிகளை அனுப்பி வெள்ளை யானை தலையை கொண்டுவரச் செய்தனர். பின்பு விஸ்வகர்மாவை அழைக்கிறார்கள். எந்த ஒரு விஷயத்தையும் வடிவமைப்பது விஸ்வகர்மாவின் வேலையாகும். வேத மந்திரங்கள் முழங்க வெள்ளை யானை தலையை சிறியதாக்கிய விஸ்வகர்மா அந்த
தலையை விநாயகர் உடலுடன் பொருத்தினார். அனைவருடைய ஆசியுடன் விநாயகர் உயிர் பெற்றதால், முதலில் விநாயகரை வழிபட்ட பிறகே, தம்மை வழிபட வேண்டும் என்று மும்மூர்த்திகளும் ஆசி வழங்கினர். விநாயகப் பெருமான் அவதார நிகழ்ச்சி கோலாகலமாக இவ்வாறு நடந்தது. விநாயக பெருமான் எரிக்கப்பட்ட ஈரச்சாம்பல்,
நாரத முனிவரது காலில் பட்டு பேச ஆரம்பித்தது. அன்னையின் கண்ணீரால் பேசும் சக்தி பெற்றேன். இந்த ஈரம் காய்வதற்குள் நான் உலகத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்றது. ஈரம் காய்ந்தால் உலர்ந்து காற்றோடு பறந்து போய் விடும். அதற்குள் ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டும் என்பது அதன் எண்ணம். நாரதர்
அதன் நல்ல எண்ணத்தை பாராட்டி, “கைலாயத்திலிருந்து பூலோகம் போகும் கங்கை நீரில் சாம்பலான உன்னை நான் கரைத்து விடுகிறேன். விஸ்வகர்மாவை நினைத்து தவம் செய்.அவர் உனக்கு நல்ல வழியை காட்டுவார்” எனக் கூறி, கங்கையில் சாம்பல் பட்ட காலை கழுவினார். நாரதரின் சொல்படி சாம்பலும் விஸ்வகர்மாவை நோக்கி
தவம் செய்யத் தொடங்கியது. விஸ்வகர்மா தோன்றி, சாம்பலிடம், “மறுஜென்மம் கேட்காதே. நீ கங்கையில் கரைக்கப்பட்டதால், இந்த கங்கையில் கரைக்கப்படும் இறந்தவர்களுடைய ஆன்மா முக்தியடையும்" என அருள் புரிந்தார்.
அதனால் தான், நாம் இறந்தவர்கள் சாம்பலை கங்கையில் கரைக்கிறோம். முதல் முதலில் விநாயகர்
சாம்பல் தான் கங்கையில் கரைக்கப்பட்டது. “நான் மீண்டும் பிறந்தால் என்னை தீயினால் அழிக்க முடியாத பொருளாக படைக்க வேண்டும்” என்று எரிக்கப்பட்ட சாம்பல் விஸ்வகர்மாவிடம் கேட்டது. அதன் வேண்டுக்கோளுக்கு இணங்க யாராலும் தீயால் அழிக்க முடியாத வாழை மரமாக உன்னை படைக்கிறேன் என்று விஸ்வகர்மா
வரத்தை தந்தார். கங்கையிலிருந்து விநாயகர் தவம் புரிந்ததால், கங்கையும் மக்கள் பாவங்களை போக்க என்னிடம் வருகிறார்கள், அது போல் உன்னில் இருந்து வரும் வாழைப்பழமானது பூஜைக்கு உரிய பழமாகவும், சுப நிகழ்ச்சிகளில் வைத்து வணங்குவர் என்ற வரத்தை தந்தது. அதனால் தான் நாம் பூஜையில் வாழைப்பழத்தை
வைத்து வணங்குகிறோம். வாழைமரமானது வெட்ட வெட்ட துளிர்க்கக் கூடியது. அதுபோல் மணமக்கள் வாழ்க்கை என்றும் வாழையடி வாழையாக வம்சம் தழைக்க வேண்டும் என்பதால் வாழைமரம் சுபநிகழ்ச்சிகளில் கட்டப்படுகிறது. இவ்வாறு தான் வாழைமரம் தோன்றியது. நமது இறை வழிபாட்டிலும், சுப காரியங்களிலும் வாழை மரம்
முக்கிய இடம் வகிக்கிறது. வாழை மரத்திலிருந்து இலை பூ, காய், கனி, தண்டு போன்றவைகள் அன்றாட வாழ்க்கைக்கு உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. வாழைப் பழம் நெய்வேத்தியமாக இறைவனுக்கு படைக்கப்படுகிறது. நம் முன்னோர்கள் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தனர். அதனால்தான் அவர்களுக்கு மரங்கள், பறவைகள்
கூறும் சமிஞ்சைகளை அறிந்து கொள்ள முடிந்தது. பட்சி சாஸ்திரத்தைப் போல் வாழை மரம் குலை தள்ளுவதை வைத்தும் தங்களுக்கு ஏற்படப் போகும் பலன்களை அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர்.
வடக்கு நோக்கி குலை தள்ளினால் வீடு சிறக்கும்
தெற்கு நோக்கி குலை தள்ளினால் அழிவு உண்டாகும்.
கிழக்கு நோக்கி குலை
தள்ளினாள் பதவி கிடைக்கும்.
மேற்கு நோக்கி குலை தள்ளினால் அரச பயம் உண்டாகும்.
நிலத்துடன் (வயல்வெளியில்) வீடு கட்டி வாழ்பவர்கள் தோட்டத்தில் வாழை எந்தப் பக்கம் குலை தள்ளினாலும் அதனால் அந்த வீட்டுக்கு எந்தக் கெடுதலும் ஏற்படாது. பொதுவாக வாழை மரம் வடதிசை நோக்கி குலை தள்ளுவது நல்லது.
மண்ணின் தன்மை, அந்த வீட்டின் தன்மை ஆகியவற்றை அங்குள்ள செடி, கொடிகள் பிரதிபலிக்கும். அந்த வகையில் வாழையும் குறிப்பிட்ட திசையில் குலை தள்ளி அந்த வீட்டின் தன்மையை உணர்த்துகிறது. கிழக்குப் பக்கம் குலை தள்ளினாலும் பாதிப்பில்லை. குலை தள்ளிய வாழை என்பது பூரண ஆயுள் பெற்றுவிட்ட
வாழைமரத்தின் நிலை. இனிமையற்ற மனம் உடையோரின் வெறுப்பு சூட்டினை தான் ஏற்று நல்ல வாழ்த்துக்களை வாழைமரம் நிலை நிறுத்தச் செய்கிறது. வாழை மரத்தின் உட்பகுதியில் ஆயிரமாயிரம் நுண்ணறைகள் உள்ளது. தீமையை உள்ளிழுத்து வடிகட்டி வாழைத்தண்டு முழுவதும் நல்ல நீரை தீர்த்தமாக சேமித்து வைக்கிறது. வாழை
தண்டு ரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உள்ளது. சிறுநீரக கல்லையே கரைக்கும் அக்னி இதனுள் அடக்கம். நெருப்பையே அணைக்கும் குளுமையும் இதனுள் அடக்கம்.
சிவாம்சமும் விஷ்ணு அம்சமும் ஒரே இடத்தில் இணைந்ததே வாழை மரம். வேறு மரங்களை வெட்டினால் கசடு அல்லது பருவ ரேகைகள் காணப்படும். வாழை மரத்தை
வெட்டினால் வெள்ளை வெளேரென தெய்வாம்சமாக பூரணத்துவமாக பளீரிடுகிறது. வாழை மரம் காற்றில் இறக்கும் துர்நாற்றத்தை போக்கி விடும். மேலும் வாழை பட்டை சாறு விஷத்தை முறிக்கும் தன்மை. உண்டு. தீ புண் ஏற்பட்டால் வாழை பட்டை மற்றும் இலையில் வைத்தே வைத்தியம் புரிவர். எனவே பத்து பேர் ஒன்றாக கூடும்
இடத்தில் அசம்பாவிதம் ஏதும் நடந்தால் உதவுவதற்காகவே வாழை மரத்தை சுப நிகழ்ச்சிகளில் நடக்கும் இடத்தில் கட்டி வைத்தனர். மேலும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் கும்பல் அதிகமாக இருக்கும். அதனால், கரியமில வாயு என்ற அசுத்தமான காற்று உண்டாகி சுகாதார கேடு ஏற்படும். குலை தள்ளிய வாழைமரம்
வெட்டப்பட்ட பிறகும் அதன் ஆயுள் தன்மை நீடிப்பதால் ஒரு கிருமி நாசினியாக செயல்பட்டு அது கரியமில வாயுவை உட்கொண்டு சுத்தமான பிராண வாயுவை மட்டும் வெளியிடுகிறது. சுத்தமான காற்றை சுவாசிப்பதால் மக்களுக்கு தீங்கு ஏற்படாது. அதனாலும் வாழைமரத்தை கட்டுகிறார்கள்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா அருள்வாக்கு
மனம் நிம்மதி பெற நல்லவர்களின் சேர்க்கை அவசியம். நல்லவர்களின் சேர்க்கையால் கடவுளைப் பற்றிய நினைப்பு உண்டாகும். கடவுளை நினைத்தால் கவலை விலகும்.
வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாகச் சொல்லிக் கொண்டு, அன்றாடத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால் தவறான ஆசைகள்
தான், மனதில் வளர்கின்றன. வாழ்க்கைத்தரம் என்பது நற்குணங்கள், இறைபக்தி போன்ற உயர்வான குணங்களைப்பெற்று மனநிறைவோடு வாழ்வதேயாகும்.
நவீன வாழ்க்கை முறையில் தேவையற்ற பொருட்களை அவசியமானவை என்று எண்ணிக் கொண்டு நம்முடைய நிம்மதியை இழக்கப் பழகிவிட்டோம். ஆடம்பர வாழ்க்கையில் யாருடைய மனதிலும்
நிறைவு என்பதே இல்லாமல் போய்விட்டது. கடமையைச் சரிவர செய்து கொண்டு எளிமையாக இருப்பதில் தான் ஆனந்தம் இருக்கிறது.
வெளியில் இருக்கும் பொருள்களில் மட்டுமே மகிழ்ச்சி இருப்பதாக எண்ணிக் கொண்டு, அவற்றை வீணாகத் தேடி அலைகிறோம். உண்மையில், மனதில் இருக்கும் மகிழ்ச்சியே உண்மையானது. -
#திருப்ரையார்_ராமர்_கோவில்
கேரளாவில் #நாலம்பலம் என்று அழைக்கப்படும் ஶ்ரீராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், திருப்பிரையார் எனுமிடத்தில் அமைந்திருக்கும் ராமர் கோவிலே முதன்மையானது. இக்கோவிலின் கருவறை சதுரமாகக் கட்டுமானம் செய்யப்பட்டு, அதன் மேற்கூரை கூம்பு வடிவில் உள்ளது. இங்கு
இருக்கும் ராமர் சங்கு, சக்கரம், அட்சமாலை, கோதண்டம் ஆகியவற்றுடன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். ஒரு கையில் அட்ச மாலையை வைத்திருப்பது இங்கு மட்டுமே காணக்கூடிய காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவில் இறைவனான ராமர் #திருப்பிரையாறப்பன் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ராமருக்கு
வலப்புறம் ஸ்ரீதேவியும், இடப்புறம் பூதேவியும் இருக்கின்றனர். ராமர் கோவிலில் சீதாதேவி இல்லாமல், ஸ்ரீதேவியும் பூதேவியும் இடம் பெற்றிருப்பது ஏன் என்பதற்கு ஒரு புராணக் கதை உள்ளது. கேரளத்தில் புகழ்பெற்ற #வில்வமங்கலம்_சுவாமிகள் ஒரு சமயம் இக்கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்தார்.
அப்போது
Today is #MahaPeriyava date of birth. He was born on 20.05.1894
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Source: Moments of a lifetime
The camp was at Sholapur at that time and one afternoon we arrived there. After lunch I was taken to Maha Periyaval’s presence. I was
told that He was suffering from high fever in addition to His earlier complaint of neck pain. He asked me to go ahead with the examination. I performed Shashtanga Namaskaram to Him first. He asked me why I was performing namaskaram. I replied “Before I examine every patient in my
clinic. I perform namaskaram mentally to you and pray to you that the patient should be cured. When you are yourself my patient now, to whom can I pray except to you and I should be successful in my treatment? His Holiness smiled and said “Go ahead”.
சென்னையைச் சேர்ந்த திருமதி கமலாவிற்கு ஏற்கனவே இரண்டு பெண்கள். இரண்டாவது பெண் பிறந்து, அவளுக்கு எட்டு வயதாகும் போது, கமலா மீண்டும் தாய்மை அடைந்தார். ஏழு மாத கர்ப்பிணியான அவளை
அழைத்துக்கொண்டு, அவரது கணவர் மகானை (பெரியவா) பண்டரிபுரத்தில் தரிசித்தார். உடன் அவர்களின் மாமாவும் சென்றிருந்தார். அவர்தான் மாமாவிடம் கமலாவைப் பற்றிய வேண்டுகோளைச் சொன்னார்.
"இவளுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள். பல வருஷங்களுக்குப் பின்னால் மீண்டும் உண்டாகி இருக்கிறாள். இந்தக்
குழந்தையாவது ஆணாகப் பிறக்க மகா பெரியவாளின் ஆசி வேண்டும்."