அன்பெழில் Profile picture
May 20 20 tweets 6 min read Twitter logo Read on Twitter
#திருப்ரையார்_ராமர்_கோவில்
கேரளாவில் #நாலம்பலம் என்று அழைக்கப்படும் ஶ்ரீராம சகோதரர்களுக்கான நான்கு கோவில்களில், திருப்பிரையார் எனுமிடத்தில் அமைந்திருக்கும் ராமர் கோவிலே முதன்மையானது. இக்கோவிலின் கருவறை சதுரமாகக் கட்டுமானம் செய்யப்பட்டு, அதன் மேற்கூரை கூம்பு வடிவில் உள்ளது. இங்கு Image
இருக்கும் ராமர் சங்கு, சக்கரம், அட்சமாலை, கோதண்டம் ஆகியவற்றுடன் நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். ஒரு கையில் அட்ச மாலையை வைத்திருப்பது இங்கு மட்டுமே காணக்கூடிய காட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவில் இறைவனான ராமர் #திருப்பிரையாறப்பன் என்று அழைக்கப்படுகிறார். இங்கு ராமருக்கு Image
வலப்புறம் ஸ்ரீதேவியும், இடப்புறம் பூதேவியும் இருக்கின்றனர். ராமர் கோவிலில் சீதாதேவி இல்லாமல், ஸ்ரீதேவியும் பூதேவியும் இடம் பெற்றிருப்பது ஏன் என்பதற்கு ஒரு புராணக் கதை உள்ளது. கேரளத்தில் புகழ்பெற்ற #வில்வமங்கலம்_சுவாமிகள் ஒரு சமயம் இக்கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்தார்.
அப்போது
அவர் ராமர் சன்னிதி முன்பாக நின்றிருந்த போது, கோவிலின் மேற்கு வாசல் வழியாக ஸ்ரீதேவியும், பூதேவியும் இங்கு கோவில் கொண்டிருக்கும் ராமரை வழிபடுவதற்காக வந்ததைக் கண்டார். அவர்கள் இருவரும் இங்கேயே இருக்க வேண்டும் என்று நினைத்த அவர், அவர்களிருவரும் திரும்பிச் செல்ல முடியாதபடி முடியாதபடி
கோவிலின் மேற்கு வாசலை மூடித் தாளிட்டு விட்டார். அதன் பின்னர் ராமருக்கு இருபுறமும் ஸ்ரீதேவியையும், பூதேவியையும் இருக்கச் செய்துவிட்டுச் சென்றுள்ளார். இதனை மெய்ப்பிக்கும் விதமாக, இந்த ஆலயத்தின் மேற்கு வாசல் இன்றும் மூடியே கிடக்கிறது. கோவிலின் தென்மேற்கு மூலையில் கணபதி, தெற்கு
வாசலுக்கு அருகில் தட்சிணாமூர்த்தி, வெளிச்சுற்றின் தென்பகுதியில் சாஸ்தா, வடக்குப் பகுதியில் கோசாலை கிருஷ்ணர் ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. கோவிலின் கிழக்குப் பகுதியில் திருப்பிரையாறு எனும் ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்தில் கார்த்திகை மாதத்தில் 21
நாட்கள் நடைபெறும் சிறப்புத் திருவிழா முக்கியமானதாகும். இத்திருவிழா காலத்தில் இக்கோவிலில் #ஆன்கியக்கூத்து எனும் இசை நாடகம் நடத்தப்படுகிறது. கார்த்திகை ஏகாதசிக்கு இரு வாரங்களுக்கு முன்பிருந்தே, தினமும் கோவில் முழுக்க அதிகமான மலர் மாலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. அதனை #நிறைமாலை என்று Image
அழைக்கின்றனர். அவ்வேளையில் கோவிலில் லட்சதீபம் ஏற்றுகிறார்கள். பங்குனி மாதத்தில் ஏழு நாட்கள் கொண்ட திருவிழா ஒன்றும் நடத்தப்படுகிறது. பங்குனி பூரம் நாளில் சிறப்பு ஊர்வலத்துடன் இவ்விழா நிறைவடைகிறது. இது போல் தசமி நாளில் சாஸ்தாவும், ஏகாதசி நாளில் ராமரும் கோவிலில் இருந்து ஊர்வலமாகச்
செல்கின்றனர். இந்த ஊர்வலத்தில் யானைகளின் அணிவகுப்பும் உண்டு. இக்கோவிலில் தினமும் ஐந்து கால பூஜைகள் செய்யப்படுகின்றன. தினமும் மூன்று வேளைகளில், கருவறையில் இருக்கும் மூலவரைப் போன்ற உற்சவர் சிலையை எடுத்துக் கொண்டு கோவிலை வலம் வரும் #சீவேலி ஊர்வலம் நடக்கிறது. நாலம்பலப் புனிதப் Image
பயணத்தின் முதல் வழிபாடாக இக்கோவிலின் அதிகாலை வழிபாடு அமைந்திருப்பதால், அதிகாலை வேளையில் கூட்டம் அதிகமாக இருக்கும். நான்கு கோவில்களையும் ஒரே நாளில் தரிசிப்பது விசேஷம். பரதன் கோவில் இரிஞ்சாலக்குடா என்ற இடத்திலும், லட்சுமணன் ஆலயம் மூழிக்குளம் என்ற பகுதியிலும், சத்துருக்கனன் கோவில்
பாயம்மல் என்னும் இடத்திலும் அமைந்திருக்கின்றன. இவை கிருஷ்ணர் வழிபட்ட விக்கிரங்கள். திருப்பிரையாரில் உள்ள ராமர் கோவிலில் தொடங்கி, பாயம்மலில் உள்ள சத்துருக்கனன் கோவில் வரை ஒரே நாளில் நிறைவடையும் வகையில் புனிதப் பயணமாகச் சென்று வழிபடுவதை மலையாளத்தில் ‘நாலம்பல யாத்திரை’ என்கின்றனர். Image
மலையாள நாட்காட்டியின்படி கர்க்கிடக மாதத்தில் (தமிழ் மாதம் ஆடி) மேற்கொண்டு ராம சகோதரர்களை வழிபடுவது மிகவும் சிறப்பானது. இதனால் குடும்பத்தில் ஒற்றுமையும், செல்வப்பெருக்கும் ஏற்படும் என்பது நம்பிக்கை. கோவிலின் கிழக்கே ஓடும் திருப்பிரையாறு ஆற்றில் அதிக அளவில் மீன்கள் உள்ளன. இந்த
மீன்களுக்கு அவல், செவ்வாழை போன்ற உணவுப் பொருட்களைப் போட்டுப் பக்தர்கள் வழிபடுகின்றனர். இதற்குப் பெயர் #மீனூட்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், கடலில் மிதந்து கொண்டிருந்த ராமர் மற்றும் அவரது சகோதரர்களின் சிலைகளைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்ததை நன்றியுடன் நினைக்கும்
விதமாக, பக்தர்கள் இந்த ‘மீனூட்டு’ நடைமுறையைச் செயல்படுத்த ஆரம்பித்து இருக்கலாம். இக்கோவிலில் ஆஞ்சநேயருக்குத் தனிச் சன்னிதி எதுவும் இல்லை. சீதையைத் தேடி இலங்கை சென்று திரும்பிய ஆஞ்சநேயர், இந்தக் கோவில் இருக்கும் இடத்தில்தான் ‘கண்டேன் சீதையை’ என்று ராமரிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது
இதனால், இக்கோவில் கருவறைக்கு நேர் எதிரில் இருக்கும் வழிபாட்டு மண்டபத்தில் ஆஞ்சநேயர் எப்பொழுதும் இருந்து கொண்டு இருக்கிறார் என்பது நம்பிக்கை. இதனால் இந்த மண்டபத்தை #ஆஞ்சநேயர்_மண்டபம் என்றே அழைக்கின்றனர். இந்த ஆலயத்தின் சிறப்பு வழிபாடுகளில் ஒன்று, வெடி வழிபாடு. சாஸ்தா சன்னிதிக்கு
அருகில் குழாய் ஒன்றில் வெடி மருந்திட்டு, அதை வெடிக்கச் செய்து வழிபடுகின்றனர். ஒரு வெடியில் இருந்து ஆயிரம் வெடி வரை, அவரவர் வேண்டுதலுக்கேற்ப வெடிக்கச் செய்யப்படுகிறது. வெடிகளின் எண்ணிக்கைக்கேற்ப கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்த வெடி வழிபாடு முக்கியத்துவம் பெறுவதற்கு அனுமன் தான்
காரணம். ராமனின் கட்டளைப்படி, சீதாதேவியைச் தேடிச் சென்ற அனுமன், இலங்கையில் ராவணனிடம் சிறைப்பட்டிருக்கும் நிலையைக் கண்டு வந்து, ராமனிடம், ‘கண்டேன் சீதையை’ என்ற இன்பச் செய்தியை அதிர்வெடியைப் போட்டுச் சொன்னது போல் சொல்லி மகிழ்ச்சியை ஏற்படுத்தினாராம். அதன்படி, அந்த மகிழ்ச்சியைத்
தாமும் பெற வேண்டும் என்பதற்காக, பக்தர்களும் அதிர் வெடி போட்டு தங்கள் வேண்டுதலை இறைவனிடம் சொல்கின்றனர். வெடி வழிபாடு செய்பவர்களின் வேண்டுதலைக் கேட்கும் இறைவன், அவர்கள் வேண்டுதலை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு, அதை விரைவில் நிறைவேற்றிக் கொடுப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
ஆலயம் அதிகாலை 3 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை யிலும் திறந்திருக்கும். திருச்சூரில் இருந்து 22 கிமீ தொலைவிலும், குருவாயூரில் இருந்து 25 கிமீ தொலைவிலும், கொடுங்கலூர் மற்றும் குருவாயூருக்கு இடையில் திருப்பிரையார் ராமர் கோவில் அமைந்திருக்கிறது
இக்கோவிலுக்குச் செல்ல திருச்சூர் மற்றும் குருவாயூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 21
#கோவிலின்_பெயரே_ஊர்ப்பெயர் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் சமயக்குரவர் நால்வரால் பாடல் பெற்ற தலம். சேந்தனார் அருள் பெற்றதும், மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், திருநீலகண்டர், திருநாளைப்போவார், கணம்புல்லநாயனார் முக்தி பெற்ற தலமும் ஆகும். பஞ்சபூத தலங்களுள் இது Image
#ஆகாயத்தலம். பஞ்சசபைகளுள் இது #கனகசபை, பொற்சபை, சிற்சபை ஆகும். தேவாரப் பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களில் இத்தலம் முதலாவது சிவதலமாகும். கோயில் என்று பொதுவாக வழங்கினாலே சைவத்தில் சிதம்பரம் நடராசப் பெருமானின் கோயிலைத்தான் குறிக்கும். ஊர்ப்பெயர் தில்லை. கோயிலின் பெயர் சிதம்பரம், Image
இன்று ஊர்ப்பெயர் வழக்கில் மறைந்து, கோயிலின் பெயரே ஊர்ப் பெயராக வழங்கி வருகிறது. தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லைவனம் என்று பெயர் பெற்றது. (இம்மரங்கள் தற்போது சிதம்பரத்தில் இல்லை. ஆனால் இதற்கு அண்மையிலுள்ள பிச்சாவரத்திற்குப் பக்கத்தில் உப்பங்கழியின் கரைகளில் காணப் Image
Read 6 tweets
May 21
#MahaPeriyava
Narrated by Sri Balu Mama
Source: E-book In the Presence of the Divine Vol II
There were two brothers, inheriting their ancestral land, the northern and southern portions, which had to be divided between the two of them. The southern portion was more fertile and Image
yielded more while the northern one was less productive. Both wanted the southern portion and there was a quarrel over the division of the land.
Neither would give in and the quarrel worsened. Both refused to come to any kind of compromise, like drawing lots or something like
that. The younger brother wielded clout locally and so he got a band ready to support his claim over the southern portion. Suddenly one day, Periyava went to that village in the dead of the night and lay down on the pyol of the elder brother’s house. No one was aware of this.
Read 7 tweets
May 21
#நற்சிந்தனை மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதனை, சூரிய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவேன் அல்லது தீக்குளிப்பேன் என சபதம் செய்திருந்தான் அர்ஜுனன். அன்று காலையிலிருந்தே மறைவாகவே இருந்தான் ஜயத்ரதன். துரியோதனன், கர்ணன் போன்றோர் அவனுக்கு பாதுகாவலாக இருந்தனர். அர்ஜுனனால் அவனை நெருங்கவும் Image
முடியவில்லை. அவனிருக்கும் இடமும் தெரியவில்லை. மாலை நேரமும் நெருங்கியது. "என்ன கிருஷ்ணா சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே, ஜயத்ரதனை எப்படிக் கொல்வது" என்றான் அர்ஜுனன். சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் பகவான். இருள் சூழ ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான். சூரியன்
அஸ்தமித்து விட்டான். இனி அர்ஜுனன் தீக்குளித்து விடுவான் என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான். உடனே அர்ஜுனனைப் பார்த்து, "அதோ ஜயத்ரதன் தலை தெரிகிறது. ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து தலை கீழே விழாமல் அருகில் சமந்த பஞ்சகத்திலுள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு." எனறார்
Read 8 tweets
May 21
#அக்னீஸ்வரர்_திருக்கோயில்
தஞ்சாவூர் மாவட்டம் #திருக்காட்டுப்பள்ளி என்னும் திருத்தலத்தில் உள்ளது இக்கோவில். புராணக் காலத்தில் மேலைத் திருக்காட்டுப்பள்ளி என்று அழைக்கப்பட்ட இத்தலம், தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் 9வது தலம். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 72வது Image
தேவாரத் தலம் ஆகும். காவிரியாற்றின் தென்கரையில் இவ்வூர் அமைந்துள்ளது. காவிரியாறு, காவிரி - குடமுருட்டி என்று இரண்டு ஆறுகளாகப் பிரிவது இவ்வூரில்தான்.
மூலவர் : அக்கினீசுவரர், தீயாடியப்பர் அம்மன்/தாயார் : சௌந்தரநாயகி, அழகம்மை தல விருட்சம் : வன்னி, வில்வம், ஊமத்தை, கொன்றை தீர்த்தம் : Image
சூரிய தீர்த்தம், காவிரி, குடமுருட்டி நதி, அக்னி தீர்த்தம் -கிணறு வடிவில் உள்ளது.
இத்தலத்தில் இறைவனை அக்னி பகவான் வழிபட்டதால், கோயிலுக்கு #அக்னீஸ்வரம் என்று பெயர் வந்தது. இங்கு மூலவர் அக்னீஸ்வரர் சுயம்பு லிங்கமாக கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். சிவலிங்கம் உருவில் சிறியது. Image
Read 9 tweets
May 21
#ஸ்ரீரங்கம்_ரங்கநாதர்_வினா_விடை
1. அயோத்தியில் இருந்து ரங்கநாதரைக் கொண்டு வந்தவர் யார்?
விபீஷணன்

2. ஆண்டாளை மணந்ததால் ரங்கநாதரின் பெயர் என்ன?
அழகியமணவாளர்

3. ஸ்ரீரங்கம் ஜீயராக இருந்து நிர்வாகச் சீர்திருத்தம் செய்தவர் யார்?
ஸ்ரீராமானுஜர்

4. ராமானுஜருக்கு ஸ்ரீரங்கத்தால் ஏற்பட்ட Image
சிறப்பு பெயர் என்ன?
திருவரங்கச்செல்வம் முற்றுந்திருத்தி

5. ரங்கநாதர் மீது பாடப்பட்ட திவ்ய பிரபந்த பாசுரங்கள் எத்தனை?
247

6. ஸ்ரீரங்கம் கோவில் மதில் சுவர்களைக் கட்டிய ஆழ்வார் யார்?
திருமங்கையாழ்வார்

7. பூலோகத்துடன் ஒப்பிட்டு ஸ்ரீரங்கத்தை எவ்வாறு அழைப்பர்?
பூலோகவைகுண்டம் என்று Image
அழைப்பர்.

8. ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் இன்னொரு பெயர் என்ன?
பெரியபெருமாள்

9. ஸ்ரீரங்கத்தின் தலவிருட்சம் என்ன?புன்னைமரம்

10. பன்னிரு ஆழ்வார்களில் ஸ்ரீரங்கத்தைப் பாடியவர்கள் எத்தனை பேர்?
11 பேர்கள்

11. எந்த திசை நோக்கி காட்சித் தருகிறார்?
விபீஷணனுக்காக தென்திசை இலங்கை நோக்கி. Image
Read 6 tweets
May 20
#இந்து_சமய_வினா_விடை
1.சிவச் சின்னங்களாக போற்றப்படுபவை எவை?
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம் எது?
ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம் எது?
தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம் எது?
திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம் எது?
பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர் யார்?
திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்
படும் திருத்தலம் எது?
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம், நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவதற்கு என்ன பெயர்?
துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவதுற்குப் பெயர் என்ன?
கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(