அன்பெழில் Profile picture
May 21 8 tweets 2 min read Twitter logo Read on Twitter
#நற்சிந்தனை மகாபாரத யுத்தத்தின் போது, ஜயத்ரதனை, சூரிய அஸ்தமனத்துக்குள் கொன்று விடுவேன் அல்லது தீக்குளிப்பேன் என சபதம் செய்திருந்தான் அர்ஜுனன். அன்று காலையிலிருந்தே மறைவாகவே இருந்தான் ஜயத்ரதன். துரியோதனன், கர்ணன் போன்றோர் அவனுக்கு பாதுகாவலாக இருந்தனர். அர்ஜுனனால் அவனை நெருங்கவும் Image
முடியவில்லை. அவனிருக்கும் இடமும் தெரியவில்லை. மாலை நேரமும் நெருங்கியது. "என்ன கிருஷ்ணா சூரியன் அஸ்தமிக்கும் நேரமாகிறதே, ஜயத்ரதனை எப்படிக் கொல்வது" என்றான் அர்ஜுனன். சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தார் பகவான். இருள் சூழ ஆரம்பித்தது. இதைப் பார்த்த ஜயத்ரதன் குதூகலித்தான். சூரியன்
அஸ்தமித்து விட்டான். இனி அர்ஜுனன் தீக்குளித்து விடுவான் என்ற எண்ணத்தில் தலையை வெளியே நீட்டினான். உடனே அர்ஜுனனைப் பார்த்து, "அதோ ஜயத்ரதன் தலை தெரிகிறது. ஒரே அம்பால் அவன் தலையைக் கொய்து தலை கீழே விழாமல் அருகில் சமந்த பஞ்சகத்திலுள்ள விருத்தட்சரன் என்பவருடைய மடியில் தள்ளு." எனறார்
கிருஷ்ணர். ஜயத்ரதனுடைய தகப்பனார் தான் விருத்தட்சரன். தனது கோரமான தவப் பயனால், ஜயத்ரதனைப் பெற்றார். அவன் பிறக்கும் போது ஒரு அசரீரி ஒலித்தது. "உன் புத்திரன் மகாவீரனாக எல்லோராலும் கொண்டாடப் படுவான். மிக்க கோபமும், பராக்ரமும் உள்ள வீரன் ஒருவனால் அவன் தலை அறுபட்டு மாள்வான்." என்றது.
இதைக் கேட்ட விருத்தட்சரன், தன் தவ வலிமையால் யுத்தகளத்தில் எவன் தன் பிள்ளையின் தலையை கீழே தள்ளுகிறானோ, அவன் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும் எனறு சாபமிட்டிருந்தான். இந்த விபரத்தை அர்ஜுனனுக்கு சொல்லி, "உன்னால் அறுபட்டு இந்தத்தலை கீழே விழுந்தால், உன் தலை வெடித்து விடும். அதனால் அருகில்
உள்ள அவன் தந்தை விருத்தட்சரன் மடியில் அந்தத் தலையைத் தள்ளு" எனறார் கிருஷ்ணன். அர்ஜுனனும் அப்படியே செய்தான். அந்த சமயம் விருத்தட்சரன் பூமியில் அமர்ந்து சந்தியோபாசனம் செய்து கொண்டு இருந்ததால், மடியில் தலை விழுந்ததை கவனிக்கவில்லை. பிறகு அர்க்யம் கொடுப்பதற்காக எழுந்த போது, அவரது
மடியில் ஏதோ கனமாக இருப்பதைக் கண்டு கீழே தள்ளினார். அது பூமியில் விழுந்தது. தன் மகன் தலையைக் கீழே தள்ளுபவனின் தலை நூறு சுக்கலாகி வெடிக்கும் என்ற சாபத்தால், விருத்தட்சரனின் தலை வெடித்துச் சிதறியது. நாம் என்னதான் சூழ்ச்சி செய்தாலும், சாமர்த்தியமாக நடந்து கொண்டாலும் அதன் முடிவைத்
தீர்மானம் செய்வதும், நடத்திவைப்பதும் பகவான் தான். அதனால் எல்லாப் பொறுப்புகளையும் பகவானிடம் ஒப்புவித்துவிட்டு, "பகவானே! உன் சித்தம்! எது நல்லதோ, அதைச் செய் என்று சொல்லி, அவனைச் சரணடைந்தால் போதும். நம்மைக் காப்பாற்ற வேண்டியது அவன் கடமை. அவன் செய்வான்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 23
#MahaPeriyava
There came a lady from Kerala who wanted to have the darshan of Mahaperiyava. When She was pregnant she fell down and got hurt on her head and from that day she often got fits. She lost her eyesight. They consulted their friend who was a Namboodri. He checked her Image
horoscope and gave assurance that she would get back her eyes and as per his advice she was advised to visit temples from guruvayurappan temple till Kumbakonam Thiruvidaimaruthur temple. So as per the advice of the nambudri she started on a pligrimage and reached Vaitheeswaran
Temple. There when the Gurukal showed the Aarti she slowly kept in our eyes and put rupees hundred as dakshina. Gurukkal was surprised and told her that that this was not rs 10 note and it was it was 100 rupee note. They lady said it doesn't matter. Suddenly the Gurukul asked if
Read 8 tweets
May 23
#மயிலை_கற்பகாம்பாள் #மகாபெரியவா
மயிலாப்பூர் கற்பகாம்பாள் மீது பக்தி மிக்கவர் முத்துலட்சுமி பாட்டி. இவர் லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி போன்ற துதிகளை தினமும் அம்பாள் சன்னிதியில் படிப்பது வழக்கம். ஒருநாள் பாட்டியின் கனவில் தங்கக் காசு மாலை அணிந்து அம்பாள் காட்சி தந்தாள். Image
அம்பாள் அருகில் காஞ்சிப்பெரியவர் இருந்தார். பாட்டி அம்பாளிடம், “அம்மா! உனக்கேது தங்க காசுமாலை. காஞ்சி காமாட்சிக்குத் தானே மகாபெரியவர் மாலை பண்ணிப் போட்டார்” என்று கேட்டார். அதற்குப் பெரியவர், “நான் காமாட்சிக்குப் பண்ணினேன். கற்பகாம்பாளுக்கு உன்னைப் பண்ணச் சொல்றேன்” Image
என்று பதிலளித்தார். திகைப்புடன் பாட்டி, “ஏழையான நான் எப்படி காசுமாலை செய்ய முடியும்?” என்று கேட்டார். அதற்குப் பெரியவர், “உன்னால் நிச்சயம் முடியும்” என்று சொன்னார். அத்துடன் கனவு கலைந்து பாட்டி எழுந்தார். கனவில் பெரியவர் இட்ட கட்டளையை தன்னுடன் கோவிலுக்கு வரும் சகபெண்களிடம் பாட்டி
Read 9 tweets
May 23
#ராமநாமமகிமை
1. நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் வெளியேறுதலும் வேண்டும்.
2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச் சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் தண்டனையை ஏற்பதும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் Image
ஒவ்வொரு அடியும் 'ராம் ராம்' என்றே நடக்க வேண்டும்.
3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜபமே'. கிழக்கு நோக்கிச் செல்லச் செல்ல மேற்கிலிருந்து விலகி விடுவோம். அது போல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்திலிருந்து விலகிச் செல்கிறோம்.
4. 'ராம நாம' ஜபத்திற்கு குரு கிடைக்க
வேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது. நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.
5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்ல வேண்டியது 'ராம நாமம்.' எழுந்து கடமைகளை செய்யும் போதும் சொல்ல வேண்டியதும் 'ராம நாமம்.' ஒவ்வொரு
Read 19 tweets
May 23
#MahaPeriyava
Sri Lakshminarayanan, an elderly gentleman 76 years old, living at Maangadu, is blessed to have been staying with Sri Mahaperiyava and performing services to Him for over 40 years. Here is a share of his experience.
Sri Kanchi Maha Periyava was walking along with Image
devotees. Near Luz, Cadres of Dravida Kazhagam were standing with sticks and woods to provoke Him and His devotees. People like T.T.K, Sadasivam were standing tensed and having palpitations thinking about that they would not be able to tolerate if something untoward were to
happen to Sri Maha Periyava.  They requested Sri Maha Periyava not to proceed. Policemen were there for protection. In spite of this, worried about the safety of Him, they pleaded and requested Sri Maha Periyava not to proceed as they feared things might go out of hand. Sri Maha
Read 11 tweets
May 23
#மகாபெரியவா அருள்வாக்கு
நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த பூமியில் பிறப்பெடுத்து விட்டோம். யாராக இருந்தாலும் என்றாவது ஒருநாள் இவ்வுலகை விட்டுப் போய் தான் ஆக வேண்டும். அதுவரை இந்தப் பிறவியால் நம் மனதில் எவ்வளவோ அழுக்கை ஏற்றுக் கொண்டு விடுகிறோம். மனம், வாக்கு, உடம்பு ஆகியவற்றால் Image
எவ்வளவோ பாவங்களைச் செய்துவிட்டோம். அதே உடலைக் கொண்டே பாவங்களுக்குப் பிராயச்சித்தமும் தேடவேண்டும். சாஸ்திர நூல்கள், திருத்தலங்கள், தீர்த்தம் முதலிய நல்ல விஷயங்களில் நம் மனம் ஈடுபட வேண்டும். புண்ணியங்களைச் செய்து பாவங்களைக் கரைத்து விடவேண்டும்.
நம் மனதில் எப்போது ஒழுக்கம்,
கட்டுப்பாடு, மனத்தூய்மை எல்லாம் உண்டாகிறதோ அப்போது தான் உண்மையான பக்தியும், ஞானமும் உண்டாகும். அதுவரை நாம் செய்யும் பூஜை, வழிபாடு எல்லாம் இரண்டாம்பட்சம் தான்.
நல்லதையே சிந்தித்து இறையருளைப் பூரணமாகப் பெற்றவன் ஒருவன் உலகில் இருந்தாலும் போதும். அவன் மூலமாக இந்த தேசம் முழுதும் நன்மை
Read 4 tweets
May 22
#ஆவுடையார்கோவில்_ஸ்ரீஆத்மநாதசுவாமி #மாணிக்கவாசகர்
49 கோடி பொன்னை தன் கருவூலத்தில் இருந்து எடுத்துக் கொடுத்து, கிழக்குக் கடற்கரையில் உள்ள மீமிசல், மணமேற்குடி, கோட்டைப் பட்டினம் ஆகிய துறைமுகங்களுக்குச் சென்று, ஆப்கானிஸ்தான் வழியாகக் கொண்டு வரப்படும் வாகான பரி இலக்கணங்கள் பொருந்திய Image
ஒரு லட்சம் அரபு நாட்டுக் குதிரைகளை வாங்கிவருமாறு தனது அமைச்சர்களில் வயதில் இளையவரான #திருவாதவூரருக்கு உத்தரவிட்டார் #முதலாம்_வரகுணபாண்டியன். பொ.யு 8-ஆம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் முதலாம் வரகுணபாண்டியன். மதுரைக்கு கிழக்கே 30 கிமீ தூரத்தில் உள்ள
சிவத்தலம் #திருவாதவூர். அங்கு அமாத்திய பிராமண குலத்தைச் சேர்ந்த சம்பு ஆசுருதர், சிவக்ஞானரதா என்னும் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் திருவாதவூரர். தனது 8ஆவது வயதிலேயே குரு உபதேசம் பெற்று, திராவிட மொழிகள், வடமொழி, தீட்சா, சிவாகம மந்திரங்கள், நால்வகை வேதங்கள், அர்த்த சாஸ்திரங்கள்,
Read 29 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(