#ராமநாமமகிமை 1. நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் வெளியேறுதலும் வேண்டும். 2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச் சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் தண்டனையை ஏற்பதும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும்
ஒவ்வொரு அடியும் 'ராம் ராம்' என்றே நடக்க வேண்டும். 3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜபமே'. கிழக்கு நோக்கிச் செல்லச் செல்ல மேற்கிலிருந்து விலகி விடுவோம். அது போல ராம நாமாவில் கரைய கரைய துக்கத்திலிருந்து விலகிச் செல்கிறோம். 4. 'ராம நாம' ஜபத்திற்கு குரு கிடைக்க
வேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது. நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம். 5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்ல வேண்டியது 'ராம நாமம்.' எழுந்து கடமைகளை செய்யும் போதும் சொல்ல வேண்டியதும் 'ராம நாமம்.' ஒவ்வொரு
நாளும் நமக்கு 'ராம நாம' நாளாக இருக்க வேண்டும். 6. 'ராம நாம' ஜபத்தில் நாம் இருந்தால், நமது கர்ம வினைப்படி ஏதேனும் துக்கமோ, அவமானமோ நிகழ வேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக
ஏற்கும் பக்குவமும் வரும், 7. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமா' சொல்லலாம். எங்கும் உணவு உண்ணும் முன் 'ராம நாமா' சொல்லி சாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே! 8. 'ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் 'ராம நாமா' சொல்ல மனம்
மட்டும் போதும். இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர். 9. ஒரு வீட்டில் உள்ள பெண் 'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்து
விடும். அதுவே கோவிலாகும். 10. எல்லாவித சாஸ்திர அறிவும் 'ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் 'ராம நாமா' சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு . 11. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'ராம நாம ஜபத்தால் பெற முடியும். 'ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து
நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும். 12. நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ, ரயிலிலோ, பைக்கிலோ செல்லும் போதும் 'ராம நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும். காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது (சப்தரிஷி
பூஜையின் போது) ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள். 13. பெண்களின் மாதாந்திர நாட்களிலும் 'ராம நாமா' சொல்வதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம். 'ராம நாமா' சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால்
மார்க்கமுண்டு. சமைக்கும் பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி அதை உண்பவருக்கு தூய குணங்களையும், உடல் ஆரோக்கியத்தையும் தரும். 14. வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தய ஜன்மங்களில்
வாழ்ந்தவனாக இருந்தால், சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் 'ராம நாமா'வை ஒரு முறை சொல்ல முடியும். 15. 'ராம நாமாவை உரக்க சொல்ல, காற்றில் ராம நாம அதிர்வு பரவி, காற்றில் தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும்
அமைதியை தரும். சுற்றியுள்ள மரம், செடி கொடிகள், பறவைகள், விலங்குகள் எல்லாம் 'ராம நாமா' கேட்டு அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம். இதுவும் சேவையே! நமது முந்தய பிறவிகளில் நாமும் 'ராம நாமா' கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும் ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய், செடியாய்
பறவையாய் விலங்காய் இருந்தோமோ! யார் அறிவர் அவனைத் தவிர! 'ராம நாமா' சொல்லும் பொழுது ஏற்படும் தூய அதிர்வு காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை, தீய சக்திகளை, நோய்க்கிருமிகளை அழித்து விடும். ராம நாம அதிர்வு நமது ரத்தத்தில் உள்ள DNA மற்றும் gene
codingல் உள்ள குணங்களுக்குக் காரணமான கோபம், வெறுப்பு, பொய், பொறாமை, சூது, போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்கு காரணமானவற்றை அழித்து, ராம நாம அதிர்வு சாந்தம், பொறுமை, பணிவு, உண்மை தூய்மைக்குக் காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும். 'யத் பாவோ தத் பவதி' எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்
அனைத்திலும் உள்ளான், அனைத்தும் ராமில் உள்ளன. ராம் ஒருவனே உண்மையான, பேரன்பே வடிவான உணர்வுமய வஸ்து. பிரம்மம் என்பதும் அவனே! எண்ணம் மனம் செயல் உள்ளம் உயிர் அனைத்தும் ராமில் ஒடுங்க வேண்டும். இடைவிடாது ராம நாமத்தை ஜபித்து வந்தால் அழியா இன்பத்தை ராம் அருள்வான் என ஸ்வாமி பப்பா ராமதாஸ்
தமது தந்தையிடம் உபதேசமும் பெற்று ராம நாமத்தில் கரைந்து ராம ரசமாய், அதன் மயமாய் தானே ஆனார். 16. நமது ஒரே அடைக்கலம் 'ராம நாமா'. அதுவே நம்மை சம்சார சாகரத்தில் இருந்து கரையேற்றும். பிறவித்தளையை அறுக்கும் . 17. மற்ற எல்லா தர்மங்களும் ஒன்று பாவத்தை நீக்கும். மற்ற ஒன்று புண்ணியத்தை
தரும். ஆனால் 'ராம நாமா' ஒன்றே பாவத்தை அறுத்து, புண்ணியமும் அர்ப்பணமாகி பாவ, புண்ணியமற்று (நிச்சலதத்வம்-ஜீவன்முக்தி) முக்தி தரும். 18. 'ராம நாமா' மட்டுமே நன்மையே கொண்டு வந்து தரும். மருந்தின் தன்மை தெரியாமல் சாப்பிட்டாலும் அது நோயினை குணப்படுத்தி விடும். அது போல 'ராம நாமா'
சொல்ல சொல்ல பிறவி நோயை, துக்க நோயை, ஆசை என்ற சம்சார நோயை அழித்து விடும்.
இத்தகைய ராம நாமாவில் பைத்தியமாவதே அனைத்தும் ராமனாக ஆன்மாவாக (ஏகாக்கிரக சித்தமாக) அனைத்தும் ஒன்றாக அறிவதே உண்மையான அறிவு. அனைத்தும் ஒன்றாக ராமனாக (ஆத்மா ராமனாக) பார்ப்பதுவே எல்லா எண்ணங்கள் எல்லா செயல்கள்
எல்லா உணர்ச்சிகளிலும் இறை உணர்வை உணர்வதுவே இந்தப் பிறவியின் பயனாகும்.
நன்றி : கிருஷ்ணப்ரேமி அண்ணாவின் 'இறைவனின் நாம மகிமை'
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#குருவாயூர்#ஜனமேஜயன் மகாபாரதப் போருக்குப் பின் நீண்ட காலம் ஆட்சி புரிந்த பரீட்சித்து மன்னன் தட்சகன் என்ற பாம்பால் கடிபட்டு மரணமடைந்தார். அதனால் அவரது மகனான ஜனமேஜயன் சர்ப்பங்கள் அனைத்தின் மீதும் கோபமுற்று சர்ப்ப யாகம் செய்து உலகத்தில் உள்ள அனைத்து நாகமும் யாகத் தீயில் விழுமாறு
செய்தான். அதனைக் கண்ட அஸ்தீகம் என்ற முனிவர் ஜனமேஜயனிடம் மன்னா இந்தக் கொடிய யாகத்தை நிறுத்து. ஒரு பாவமும் அறியாத ஆயிரக்கணக்கான சர்ப்பங்களைக் கொல்லாதே என்றார். உடனே முனிவரின் வார்த்தையை மன்னர் ஏற்க யாகம் நிறுத்தப்பட்டது. ஆனால் பாம்புகளைக் கொன்ற பாவத்தால் ஜனமேஜயன் தொழு நோயால்
பீடிக்கப்பட்டான். சில காலம் கழிந்து கேரள தேசத்தில் தமது ஆசிரமத்தில் பரசுராமர் ஜனமேஜயனுடன் உரையாடினார். ஜனமேஜயா உனது இக்கொடிய நோய் விரைவில் குணமடைய ஆசி கூறுகிறேன் என்றார். அந்த சமயத்தில் உத்தவர் கேட்டுக் கொண்டபடி தேவகுரு பிருஹஸ்பதியும் வாயு பகவானும் சேர்ந்து கிருஷ்ணர் விக்ரகத்தை
#MahaPeriyava
Narrated by Sri Balu Mama
Source: E-book In the Presence of the Divine Vol II
We lived in Mylapore then. Every morning and evening, twice a day, I would go to the Kapāleeśwara temple for Śiva darśan. Periyava would have bouts of pain in his chest. Ramakrishnaiyer,
the homeopath–he was not a doctor - would consult his Homeopathy dictionary and give some small white pills. Periyava would take the pills for two days or so and then would find some relief. That was the time when Ayyappa and Sabarimala were becoming popular. Crowds dressed in
black dhoti would come to the temple. We associate black clothes with DK (Dravida Kazhagam, a political party), so I was puzzled. I made enquiries and one of them said, “Oh, don’t you know! We are going to Sabarimala. Such a powerful diety! Those without children are blessed with
#நற்சிந்தனை
கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கி விடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகில் உள்ள தீவில் அவன் கரையேறுகிறான். இறைவா இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. யாருமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது?
என் மனைவி மக்களை பார்க்க வேண்டாமா? என்று பிரார்த்திக்கிறான். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து ஏமாந்து விடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடுகின்றன. தன்னை காத்துக் கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின்
உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்.
இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு
இந்த சம்பவம் 1962 ஆம் வருடம் நடந்தது. இளையாத்தங்குடியில் முதன் முறையாக வியாச பாரத ஆகம சில்ப சதஸ் நடந்தது. அங்கே மகானும் எழுந்தருளி அனுக்கிரகம் செய்து கொண்டு இருந்த சமயம் அது. ஒரு நாள் சதஸிற்கு வந்திருந்த
ஸ்தபதிகள், தொல் பொருள் இலாகா அதிகாரிகள் எல்லோரையும் மகான் கூப்பிட்டு அனுப்பினார்.நடைபெறும் மகாநாட்டிற்கு உபயோகமான அறிவுரைகளை வழங்கினார்.பின்னர், "தமிழ் நாட்டில் எந்த ஊரில் உள்ள சிற்பங்கள் மிக சிறப்பானவை" என்று அந்த பெரிய மகாநாட்டில் பங்கு பெற்ற மேதாவிகளிடம் மிகவும் அடிப்படையான
சாதாரண கேள்வியாக இதைக் கேட்டார். பதிலளிப்பது மிகவும் எளிதாக இருக்கவே எல்லோரும் ஒருமித்த குரலில், "தமிழ் நாட்டில் பல்லவ ஆட்சி காலத்தில் செதுக்கப்பட்ட மாமல்லபுரத்துச் சிற்பங்களே மிக சிறப்பானவை" என்று உடனே பதில் சொல்லிவிட்டனர்.
"சரி. அந்த சிற்பங்களுக்குள் எது மேன்மையானது? என்று
#ராம_நாம_மகிமை #சத்ரபதி_சிவாஜி மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. ஒரு நாள் நதியில் இறங்கி சிவாஜி கை, கால்களை சுத்தம் செய்து கொண்டிருந்த போது ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார். ஓர் ஓலைச்சுவடியை எடுத்துப் பார்த்த போது, அதில் மஹாராஷ்டிர மொழியில்
எழுதப் பட்டிருந்த அற்புதமான கவிதைகள் இருந்தன. மனம் வியந்த சிவாஜி, ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்று நீர் வந்த திசையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார். அங்கே ஓரிடத்தில் மர நிழலில் ஒரு பாறையின் மீது இருந்தபடி ஒப்பற்ற ஒரு தவ சீலர் இனிய குரலில் இராம நாமத்தைப் பாடிக்கொண்டு
இருந்தார். அவரைச் சுற்றி காட்டில் இருந்த கொடிய விலங்குகள் எல்லாம் அமர்ந்திருந்தன. அந்தக் கொடிய விலங்குகளிடம் பயப்பட வேண்டிய பசுகளும், மான்களும் அவற்றின் அருகிலேயே எந்த விதமான பயமும் இல்லாமல் எல்லாம் ஒரே கூட்டமாக அமர்ந்து கொண்டும் ஒன்றிரண்டு சுற்றியபடியும் இருந்தன. மஹாஞானியின்