அன்பெழில் Profile picture
May 24 10 tweets 3 min read Twitter logo Read on Twitter
#நற்சிந்தனை
கப்பல் ஒன்று கடலில் வழிதவறி செல்லும்போது புயலில் சிக்கி மூழ்கி விடுகிறது. அதில் ஒருவன் மட்டும் எப்படியோ தப்பி விடுகிறான். அருகில் உள்ள தீவில் அவன் கரையேறுகிறான். இறைவா இங்கிருந்து எப்படியாவது என்னை தப்பிக்க வைத்துவிடு. யாருமற்ற இந்த தீவில் எத்தனை நாள் நான் இருப்பது? Image
என் மனைவி மக்களை பார்க்க வேண்டாமா? என்று பிரார்த்திக்கிறான். ஏதாவது ஒரு ரூபத்தில் தனக்கு உதவிக்கரம் நீளும் என்று தினசரி எதிர்பார்த்து ஏமாந்து விடுகிறான். எதுவும் உதவி கிடைத்தபாடில்லை. இப்படியே நாட்கள் ஓடுகின்றன. தன்னை காத்துக் கொள்ள, தீவில் கிடைத்த பொருட்கள், மற்றும் கப்பலின்
உடைந்த பாகங்கள் இவற்றை கொண்டு ஒரு சிறிய குடிசை ஒன்றை கட்டுகிறான். அதில் கரை ஒதுங்கிய கப்பலில் இருந்த தனது பொருட்கள் மற்றும் உடமைகள் சிலவற்றை மட்டும் பத்திரப்படுத்தி, தானும் தங்கி வந்தான்.
இப்படியே சில நாட்கள் ஓடுகின்றன. இவன் பிரார்த்தனையை மட்டும் விடவில்லை. கடவுள் ஏதாவது ஒரு
ரூபத்தில் நமக்கு நிச்சயம் உதவுவார் என்று தன்னை தேற்றிக்கொண்டான்.
ஒரு நாள் இவன் உணவு தேடுவதற்காக வெளியே சென்றுவிட்டு திரும்புகையில் அவன் கண்ட காட்சி அவனை திடுக்கிட வைத்தது. இவன் தங்குவதற்கென்று இருந்த ஒரே குடிசையும் வானுயுற எழும்பிய புகையுடன் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. Image
குடிசைக்குள் இருந்த உடைமைகள் அனைத்தும் தீக்கிரையாகியிருந்தன. எல்லாம் போய்விட்டது. இவனிடம் இருந்த மிச்ச சொச்ச பொருட்களும் போய்விட்டது. இறைவா! என்னை காப்பாற்றும்படி தானே உன்னை மன்றாடினேன். நீ என்னவென்றால் இருப்பவற்றையும் பறித்துக் கொண்டாயே இது தான் உன் நீதியோ என்று கதறி அழுகிறான்.
மறுநாள் காலை ஒரு கப்பலின் சப்தம் இவனை எழுப்பியது. இவன் தீவை நோக்கி அது வந்து கொண்டிருந்தது.
“அப்பாடா நல்ல வேளை ஒரு வழியாக இங்கிருந்து தப்பித்தோம். யாரோ நம்மை காப்பாற்ற வருகிறார்கள்.” என்று உற்சாகத்தில் துள்ளி குதித்தான். கப்பல் சிப்பந்திகள் இவனை, லைஃப் போட்டில் வந்து அழைத்து Image
சென்றார்கள். தான் இங்கே தீவில் மாட்டிக்கொண்டிருப்பது எப்படி தெரியும் என்று அவர்களிடம் கேட்க, தீவில் ஏதோ பற்றி எரிந்து புகை எழும்பியதை பார்த்தோம். யாரோ தீவில் கரை ஒதுங்கி காப்பாற்ற வேண்டி சிக்னல் கொடுக்கிறார்கள் என்று நினைத்தோம் என்கிறார்கள் அவர்கள்.
அப்போது இறைவன் குடிசையை எரித்த
காரணம் இவனுக்கு புரிந்தது. இறைவனுக்கு நன்றி சொன்னான்.
அந்த வழியில் கப்பல்கள் வருவதே மிக மிக அரிதான நிலையில், குடிசை மட்டும் தீப்பிடித்து எரியவில்லை என்றால் தன் நிலை என்னவாகி இருக்கும் என்று அவனுக்கு புரிந்தது. அவசரப்பட்டு இறைவனை நிந்தித்ததை நினைத்து வெட்கினான்.
வாழ்க்கையில் பல
சந்தர்ப்பங்களில் நாம் இப்படித்தான் இறைவனை அவசரப்பட்டு தவறாக நினைக்கிறோம். நம்மை காக்கவே அவன் ஒவ்வொரு கணமும் காத்திருக்கிறான். அவன் தரும் சோதனைகள் அனைத்தும் நம்மை வேறொரு மிகப் பெரிய ஆபத்தில் இருந்து காக்கவே என்று நாம் புரிந்து கொண்டால், எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை
ஆகவே அடுத்த முறை மிகப் பெரிய பிரச்னை ஏதாவது ஒன்றில் சிக்கிக் கொண்டால், சோதனை மேல் சோதனை என்றால், இறைவனின் அருட்பார்வை நம் மீது விழுந்துவிட்டது விரைவில் நல்லது நடக்கும் என்று நம்புவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 26
#மகாபெரியவா
கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
புத்தகம்-பெரியவா பெரியவாதான்.

குழந்தைகள் என்றாலே, மகா பெரியவாளுக்கு ரொம்ப இஷ்டம். அவர்களைத் தன் அருகே காந்தம் போல் இழுத்து, அவர்களுடன் நகைச்சுவையாகப் பேசிக் கவர்ந்து விடுவார். அந்தத் தெய்வத்திடமும் குழந்தைகள் Image
மயங்கிப் போய் விடும். குழந்தைகளுக்குக் கொடுப்பற்கென்று மகா பெரியவாளிடம் எப்போதும் கல்கண்டு இருந்து கொண்டே இருக்கும். ஒரு முறை மகா பெரியவா, காமாட்சி அம்மனை தரிசித்து விட்டு, காஞ்சி ஸ்ரீமடத்துக்குள் நுழைந்து கொண்டிருந்தார். அப்போது, ஸ்ரீமடத்தின் வாசலில், பணக்காரக் குடும்பத்தைச்
சேர்ந்த சிறு குழந்தை (நாலைந்து வயது இருக்கலாம்) ஒன்று, குச்சி ஐஸைக் கையில் வைத்துக் கொண்டு ரசித்து, சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தது. ஸ்ரீமடத்தின் உள்ளே நுழையப் போன மகாபெரியவா, வாசலில் நின்று கொண்டு, இந்தக் குழந்தை குச்சி ஐஸ் சாப்பிடும் அழகைப் பார்த்து, மேலும் நகராமல் அப்படியே
Read 13 tweets
May 26
#ராமநாம_மகிமை
ஸ்ரீ பெரியவா திருப்பணியே தினப்பணி சார்பில் பேட்டி கண்டவர்
ஷங்கர் திருவேதி
#ராமர்_பாதம்_பட்ட_குடிசை
அம்மா! அம்மா!
குழந்தைகளின் அலறல் அந்த தெருவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

ஏன் இப்படி உயிர் போற மாதிரி தெருவில் நின்னு கத்தறீங்க உள்ளே வாங்களேன்.

பாம்பு இருக்குமா Image
பெரிய பாம்பு பயத்தில் குழந்தைகளுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை.

பாம்பு ஏற்கனவே தவளையை முழுங்கி சாப்பிட்டாச்சு. உங்களை ஒன்றும் செய்யாது. வீட்டிற்குள் வந்து கைகால்களை அலம்பி துணியை மாற்றி தோசை சாப்பிடுங்க. பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த அம்மா கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை.
வீடு என்றால் அது ஒரு குடிசை வீடு. பல்லாவரத்தில் பல குடிசைகளுக்கு நடுவில் ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களின் குடும்பம் வசிக்கும் இடம். நட்பு என்ற பெயரில் கூப்பிடாமல் பாம்பு, பூரான், பல்லி, பெருச்சாளி, தேள், என்று பலதும் வீட்டிற்குள் அடிக்கடி எட்டிப்பார்க்கும். காலையில் கண் விழிக்கும்
Read 23 tweets
May 25
#காசியில் இறந்தால் #முக்தி, மோட்சம் என்பது இந்து மதத்தினரின் ஆழ்ந்த நம்பிக்கை. பல வயதானவர்கள் தங்கள் அந்திம காலத்தை அங்கே கழிக்க பெரும் ஆவல் உண்டு. இது போன்ற எண்ணம் உள்ளவர்களுக்கென்றே தங்குவதற்கு காசியில் பல இடங்கள் உண்டு. அதில் ஒன்று #காசி_முக்தி_பவன் அங்கே ஒரு விசித்திரமான விதி Image
உண்டு. 15 நாட்களுக்குதான் தங்க அனுமதிப்பார்கள். அதற்குள் இறப்பு இல்லை என்றால் அறையை காலி செய்து விட வேண்டும். முக்தி பவனின் மேனேஜர் திரு சுக்லா. 44 வருடங்களாக அங்கே பணிபுரிகிறார். சுமார் 12,000 க்கும் மேற்பட்ட இறப்புகளை பார்த்திருக்கிறார். அவர் தன் அனுபவத்தில் சொன்னது, “வாழும் Image
போதே அவ்வப்போது வரும் பிரச்னைகளை சரி செய்து விட வேண்டும். (குடும்பத்துடன், உறவுகளுடன், மற்றவர்களுடன்) அதை விட்டு விட்டு இந்த முக்தி பவன் வரும் வரை (இறுதிக் காலம் வரும் வரை) வாழ்நாள் எல்லாம் அதை சுமந்து கொண்டு மனதளவில் அடிபட்ட காயங்களோடு இங்கு கடைசி நேரத்தில் அடைக்கலம் ஆகிறார்கள்.
Read 8 tweets
May 25
#மகாபெரியவா
கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் லட்சுமணன். வைதீக முறைப்படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். அவருக்கு வேலை தேட வேண்டிய கட்டாயம். திருப்பத்தூரில் வேலைக்கு ஒரு இண்டர்வியூவிற்காக Image
அழைப்பு வந்தது. ஜோலார்பேட்டையில் டிரெயினைப் பிடித்துப் போக வேண்டும். ஸ்டேஷனுக்கு வந்தவர் டிக்கெட்டும் வாங்கி விட்டார். ஸ்டேஷனுக்குள் நுழையும் முன், அவர் கண் எதிரே ஒரு வயதான மனிதர் மயங்கிச் சுருண்டு விழுந்தார். லட்சுமணன் அருகில் போய், அவருக்கு வேண்டிய முதல் உதவிகளைச் செய்து அவரை
கண் விழிக்கச் செய்தார். அதற்குள் ரயில் போய் விட்டது. அடுத்த ரயிலில் போவதற்குள் இண்டர்வியூ நேரம் முடிந்து விடும். அதனால் இனி அங்கே போய் பலன் இல்லை என்று ஊர்த் திரும்ப முடிவு செய்து, ஸ்டேஷனுக்கு வெளியே வந்து நின்றார். எப்போதுமே காஞ்சி மகான் மீது அளவற்ற பக்தியுடைய லட்சுமணன், இதுவும்
Read 10 tweets
May 25
#Foodforthought
If one reads Bruce H. Lipton’s The Biology Of Belief, one will think a dozen times before saying something demoralizing to oneself or to the people around. In this book, Mr. Lipton details the power of conscious & subconscious mind. The subconscious mind is The Image
million times more powerful than the conscious mind & decides most of the things in our lives according to the beliefs it has. Many times we fail to change an unpleasant habit despite our will-power & conscious efforts. It is because the habit gets so strongly programmed in our
subconscious mind that the efforts made by our conscious mind hardly make any difference. Conscious Mind is just a shadow of our Unconscious Mind. The tribals of Solomon Islands curse a tree, actually installing negative & harmful beliefs in the tree’s emotion (yes, trees have
Read 9 tweets
May 25
#குருவாயூர் #ஜனமேஜயன் மகாபாரதப் போருக்குப் பின் நீண்ட காலம் ஆட்சி புரிந்த பரீட்சித்து மன்னன் தட்சகன் என்ற பாம்பால் கடிபட்டு மரணமடைந்தார். அதனால் அவரது மகனான ஜனமேஜயன் சர்ப்பங்கள் அனைத்தின் மீதும் கோபமுற்று சர்ப்ப யாகம் செய்து உலகத்தில் உள்ள அனைத்து நாகமும் யாகத் தீயில் விழுமாறு Image
செய்தான். அதனைக் கண்ட அஸ்தீகம் என்ற முனிவர் ஜனமேஜயனிடம் மன்னா இந்தக் கொடிய யாகத்தை நிறுத்து. ஒரு பாவமும் அறியாத ஆயிரக்கணக்கான சர்ப்பங்களைக் கொல்லாதே என்றார். உடனே முனிவரின் வார்த்தையை மன்னர் ஏற்க யாகம் நிறுத்தப்பட்டது. ஆனால் பாம்புகளைக் கொன்ற பாவத்தால் ஜனமேஜயன் தொழு நோயால்
பீடிக்கப்பட்டான். சில காலம் கழிந்து கேரள தேசத்தில் தமது ஆசிரமத்தில் பரசுராமர் ஜனமேஜயனுடன் உரையாடினார். ஜனமேஜயா உனது இக்கொடிய நோய் விரைவில் குணமடைய ஆசி கூறுகிறேன் என்றார். அந்த சமயத்தில் உத்தவர் கேட்டுக் கொண்டபடி தேவகுரு பிருஹஸ்பதியும் வாயு பகவானும் சேர்ந்து கிருஷ்ணர் விக்ரகத்தை Image
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(