#ராமநாம_மகிமை
ஸ்ரீ பெரியவா திருப்பணியே தினப்பணி சார்பில் பேட்டி கண்டவர்
ஷங்கர் திருவேதி #ராமர்_பாதம்_பட்ட_குடிசை
அம்மா! அம்மா!
குழந்தைகளின் அலறல் அந்த தெருவையே திரும்பிப் பார்க்க வைத்தது.
ஏன் இப்படி உயிர் போற மாதிரி தெருவில் நின்னு கத்தறீங்க உள்ளே வாங்களேன்.
பாம்பு இருக்குமா
பெரிய பாம்பு பயத்தில் குழந்தைகளுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை.
பாம்பு ஏற்கனவே தவளையை முழுங்கி சாப்பிட்டாச்சு. உங்களை ஒன்றும் செய்யாது. வீட்டிற்குள் வந்து கைகால்களை அலம்பி துணியை மாற்றி தோசை சாப்பிடுங்க. பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த அம்மா கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை.
வீடு என்றால் அது ஒரு குடிசை வீடு. பல்லாவரத்தில் பல குடிசைகளுக்கு நடுவில் ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களின் குடும்பம் வசிக்கும் இடம். நட்பு என்ற பெயரில் கூப்பிடாமல் பாம்பு, பூரான், பல்லி, பெருச்சாளி, தேள், என்று பலதும் வீட்டிற்குள் அடிக்கடி எட்டிப்பார்க்கும். காலையில் கண் விழிக்கும்
போது குடிசையில் மேலே இருக்கும் குறுக்கு கட்டையில் பாம்பு தொங்கிக் கொண்டு நிற்கும். பயத்தில் அழுவோம். அம்மா அப்போதும் பாம்பு ஒன்றும் செய்யாது கத்தாதே, ராமா ராமா என்று சொல்லு என்பாள். ஸ்ரீனிவாச ஐயங்கார் குழந்தைகளுக்கு ராமநாம பக்தியை நன்கு ஊட்டி வளர்த்தார். ஏகாதசி, சனிக்கிழமை விரதம்
என்று அம்மா அப்பா பட்டினி கிடந்தது எங்களை மூன்று வேளை வயிறார சாப்பாடு கொடுக்கத்தான் என்று இப்போது புரிகிறது. மனதால் அழுகிறோம் என்று மூத்த பெண் விஜயலட்சுமி கண்ணீருடன் நினைவு கூர்கிறார். மதுராந்தகம் #ஏரிகாத்த_ராமர் கோயில் எங்களுடைய தெய்வம். வருடத்தில் ஒரு நாள் கோயில் உற்சவத்தை
பார்த்துவிட்டு வருவோம். அதுதான் குழந்தைகளான எங்களுக்கு வருடத்தில் கிடைக்கும் ஒரே ஒரு சந்தோஷமான நாள். மறுபடியும் அடுத்த வருடம் அந்த ஒரு நாளுக்காக தவம் கிடப்போம். ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு 150 ரூபாய் சம்பளம். அரசாங்க உத்தியோகம். சுத்தமான கை, பக்தி நிறைந்த மனசு, வாங்குகிற சம்பளத்தைவிட
மூன்று மடங்கு உழைத்து விட்டு இரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டிற்கு வருவார். ஒரு வருடம் மதுராந்தகம் கோயில் உற்சவத்திற்கு ஒரு நாள் நிகழ்ச்சிக்கு கஷ்டப்பட்டு பணம் கட்டினார். கோயிலில் இவர்களை முன்னிறுத்தி ஆராதனைகள் நடந்து முதல் மரியாதை செய்து இவர்களுக்கு பிரசாதம் கொடுக்கப்பட்டது.
குழந்தைகளுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அதற்கு அடுத்த வருடம் சீனிவாச ஐயங்கார் தன்னால் முடியாது என்று சொல்லிவிட்டார். குழந்தைகளுக்கு ஏகமான வருத்தம். பெற்றவர்கள் மீதும் அதைவிட அந்த மதுராந்தகம் கோயில் ராமர் மீதும். வருடத்தில் ஒரே ஒரு நாள் தான் வெளியில் சென்று தங்கள் மானசீகமான ராமரை
காண்பது, அதற்கும் இந்த வருடம் வழியில்லை. மனதிற்குள்ளேயே அழுதார்கள். ராமா நாங்கள் கேட்பது உன்னுடைய தரிசனம் தான். எந்த ஒரு பொருளையும் எங்களுக்காக கேட்கவில்லை. உன்னுடைய உற்சவத்தில் கலந்து கொள்ள அப்பாவிடம் இந்த வருடம் பணம் இல்லை. என்ன பாவம் செய்தோம் இந்த நிலைமைக்கு. பள்ளிக்கூடம்
செல்லும் வழியெல்லாம் ராம நாமம் சொல்லிக் கொண்டே செல்வோம். அந்த குழந்தைகளுக்கு ராம நாமம் தவிர வேறு ஒன்றும் தெரியாது. அன்று உற்சவத்திற்கு பணம் கட்ட கடைசி நாள். அப்பாவிடம் மன வருத்தம். காலையிலிருந்து இன்னும் பேசவில்லை. பள்ளிக்கூடத்திற்கு கிளம்பும் நேரம். வேகமாக ஒரு கார் வந்து இவர்கள்
குடிசையின் முன் நின்றது. காரிலிருந்து இறங்கிய இரு வாலிபர்கள் இது சீனிவாச ஐயங்கார் வீடு தானே என்று பவ்யமாக கேட்டார்கள். குடிசையின் அளவை நோட்டம் விட்ட அவர்கள் சுவாதீனமாக உள்ளே வந்து அந்த அழுக்கு தரையில் அமர்ந்து விட்டார்கள். இரு வாலிபர்களும் நல்ல உயரம், தலையை நன்றாக படிய வாரி
விட்டிருந்தார்கள், பெரிய ஊடுருவும் கண்கள் சாந்தமான முகம், நெற்றியில் சந்தனத்தை அழகாக வைத்திருந்தார்கள். வந்தவர்களில் ஒருவர் பேசத் தொடங்கினார். இவர் என் அண்ணா ராமசாமி. நாங்கள் மதுராந்தகம் கோயில் உற்சவத்திற்கு பணம் கட்ட போயிருந்தோம். அந்த குறிப்பிட்ட தேதியை உங்கள் குடும்பத்திற்கு
ஒதுக்கி இருப்பதாக, உங்கள் வரவை அவர்கள் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்தனர். என்னுடைய அண்ணி சீதா தான் கொண்டு வந்த பணத்தை அந்த உத்சவத்திற்கு கட்டிவிட்டு அன்றைக்கு உங்கள் குடும்பத்தையே உற்சவத்தில் கலந்து கொள்ள சொல்லியிருக்கிறார். இதைச் சொல்லிவிட்டு போகத்தான் நாங்கள் வந்தோம் என்று
கிளம்ப எழுந்து விட்டார்கள். பேச்சில் தெளிவு, புன்னகை மாறாமல் பேசியது, கைகூப்பி வேண்டிக் கொண்ட விநயம், ராமசாமி அண்ணா என்பவர் அழகான புன்னகையுடன் கை கூப்பிக் கொண்டு எழுந்து கொண்டார். அய்யங்கார் தம்பதிகளுக்கு கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது, பேச்சே வரவில்லை, மந்திரத்திற்கு
கட்டுண்டவர்கள் போல் கைகூப்பி நின்றிருந்தார்கள். ராமசாமி அண்ணாவாக வந்தவர் குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் நேரம் போலிருக்கிறது, தாங்கள் அவர்களை எங்கள் வண்டியில் இறக்கி விட்டுப் போகிறோம், என்று சொல்லிக்கொண்டே புத்தக பைகளை காரினுள் கொண்டுபோய் வைத்துவிட்டார். பல்லாவரத்தில் இருந்து
தியாகராய நகரில் உள்ள சாரதா வித்யாலயா பள்ளிக்கூடம் வரை சுமார் எட்டு கிமீ தொலைவுக்கு காரில் எதுவும் பேசாமல் அவ்வப்போது திரும்பிப் பார்த்து குழந்தைகள் பக்கம் ஒரு தெய்வீகமான புன்னகையை காட்டுவார். பள்ளிக்கூட வாசலில் குழந்தைகளை இறக்கி விட்டு நன்றாக படியுங்கள் என்று சொல்லி மனதைக்
கவரும் அழகான புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டார்கள். மதுராந்தகம் ராமர் கோயில் உற்சவத்தில் தங்களுக்காக பணம் கட்டியவர்கள் பற்றிய விவரங்கள் அர்ச்சகர்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்து விவரங்கள் கேட்க, அவர்கள் தங்களுக்கு எதுவுமே தெரியாதென்றும் பணம் மட்டும் ஸ்ரீனிவாச ஐயங்கார்
பெயரில் கட்டியிருக்கிறார்கள் என்று சொன்னார்கள். மேலும் அர்ச்சகர்கள் நீங்கள் சொல்லும் ராமசாமி அண்ணாவும் அண்ணி சீதாவும் என்ற பெயர்களைப் பார்த்தால் வந்தவர்கள் சாட்சாத் ராம லட்சுமணன் தான் என்று அடித்துக் கூறி விட்டார்கள். அப்பொழுது தான் சீனிவாச ஐயங்கார் குடும்பத்தாருக்கு உடலில்
மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது, கால்கள் தள்ளாடின, கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது. வந்தவர்கள் எல்லாம் இதை ஏகமனதாக ஆமோதித்தார்கள். வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர் ராமர் படத்தின் முன்பு விளக்கேற்றி ராமா ராமா என்று பக்தியில் உருகினார்கள். சீனிவாச ஐயங்காரின் குடிசை
ராமர் பாதம்பட்ட இடமாயிற்று. குழந்தைகளின் படிப்பு அமோகமாக வளர்ந்தது சீரும் சிறப்புமாக வாழ்க்கை துணைகள் அதே பகுதியில் சொந்த வீடுகள் கட்டிக் கொண்டு இன்றைக்கு பேரன் பேத்திகள் உடன் ராமநாமத்தை விடாமல் சொல்லிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மகாலட்சுமி ஆக விளங்கும் அன்னை சீதா தேவி
கொடுத்த பணம் அட்சயம் ஆக வளர்ந்து கொண்டிருக்கிறது. வருடந்தோறும் இன்றும் குடும்பமாக மதுராந்தகம் ராமர் கோயில் உற்சவத்தில் கலந்து கொண்டு கைங்கரியம் செய்து கொண்டு வருகிறார்கள். ஐயங்காரின் புதல்வியான விஜயலட்சுமி அவர்கள் இதை நம்மிடம் விவரிக்கும்போது அவர்களின் பழைய வாழ்க்கையையும்
மறக்கவில்லை அவர்களின் ராம பக்தியும் சிறிதளவும் குறையவில்லை. இவரிடம் நாம் விடை பெறும்போது சீதா தேவி சமேத ராம லட்சுமணர்கள் உருவம் உயிரோட்டமாக நம் கண் முன்னே விரிகிறது. படத்தில் இருப்பவர்தான் அந்த சீனிவாச ஐயங்காரின் வாரிசான சிறுவயதில் ராம லட்சுமணாளை நேரடியாக தரிசித்த சகுந்தலா பாட்டி
கலியுகத்திலும் ஆத்மார்த்த பக்திக்குப் பரந்தாமன் இறங்கி/இரங்கி வருவான் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்? ராமபக்தை விஜயலட்சுமி 978909 6392
With due credits to Gottumukkala Vinod Kumar Sharma Anna
ராம ராம ஜெய ராஜாராம் ராம ராம் ஜெய சீதா ராம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Pandit Nehru’s Tryst with Destiny midnight speech was preceded by his historic Tryst with Divinity. In a first of its kind event, whose second coming is about to happen in the central hall
of Bharat’s temple of democracy on May 28, 2023, the Sengol (sacred sceptre) was presented to Nehru symbolising the transfer of power to independent India. The new Parliament building inauguration rewinds our minds to August 14/15, 1947, with the image and sound of Indian
#கல்வி_வரம்_அருளும்_ஆலயங்கள்
திருச்சி உத்தமர் கோயிலில் சரஸ்வதி தேவி தனி சந்நதி கொண்டு அருள்கிறாள். இவள் சந்நதியில் தரப்படும் மஞ்சள் காப்பு பிரசாதம் விசேஷமானது. மாணவர்களின் படிப்புக்கு ஊக்கமளிப்பது.
தேனி வேதபுரியில் சனகாதி முனிவர்க்கு அருள் புரியும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்
இவர் கல்விச் செல்வம் அருள்வதில் வல்லவர்.
நாகை மாவட்டம், பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூரில், கம்பருக்கு அருளிய சரஸ்வதி தேவி தனிக் கோயில் கொண்டிருக்கிறாள். படிப்பு வரம் அருள்வதில் நிகரற்ற அன்னை இவள்.
சென்னை செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள செட்டிபுண்ணியம் தலத்திலுள்ள ஹயக்ரீவ
மூர்த்தியை வணங்க, கல்வி வளம் சிறக்கும்.
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலய வாசலில் உள்ள தட்சிணாமூர்த்தி, வடிவுடையம்மனுக்கு உபதேசம் செய்யும் பாவனையில் வீற்றருள்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வலம் வந்து வணங்க வளமான கல்வியைப் பெறலாம்.
#நற்சிந்தனை
பெற்றோரை வணங்குவோம்!
இந்த பூமியை விட பாரமானவள் தாய்.
ஆகாயத்தை விட உயர்ந்தவர் தந்தை.
ஒரு முறை தாய் தந்தையரை வணங்கினால் பசுவை தானம் செய்த பலன் கிட்டும்.
ஸத்யம்_தாய்,
ஞானம்_தந்தை.
பத்து உபாத்யாயர்களை விட ஆசார்யர் சிறந்தவர்.
நூறு ஆசார்யர்களை விட தந்தை சிறந்தவர்.
தந்தையை விட ஆயிரம் மடங்கு சிறந்தவள்
ஜென்மாவை கொடுத்தது தாய்.
அவர்களுக்கு சேவை செய்தால் 6 முறை பூமண்டலத்தை ப்ரதக்ஷிணம் செய்த பலனும், 1000 முறை காசி யாத்திரை செய்த பலனும், 100 முறை ஸமுத்திர ஸ்நானம் செய்த பலனும் கிட்டும்.
எந்த மகன், மகள் மாத்ரு தேவதையை சந்தோஷமாக வைத்திருக்க
மாட்டார்களோ, சேவை செய்ய மாட்டார்களோ அவர்களின் சரீர மாமிசம் நாய் மாமிசத்தை விட ஹீனமானது என்று வேதம் கூறுகிறது.
எப்பேற்பட்ட சாபத்திற்கும் விமோசனம் உண்டு.
பெற்ற தாய் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்தால் அதற்கு ஒரு லட்சம் பசுக்களை தானம் செய்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஸ்வமேத
பழங்குடி இனத்தை சேர்ந்தவர் என்பதால் குடியரசுத் தலைவரைப் புறப்பணிப்பதாக கூறுவோர், அவரை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க வாக்களித்து ஆதரவு தராதது ஏன்?
குடியரசுத் தலைவரோ அல்லது அவரது அலுவலகமோ இதைப் பற்றி கவலைப் படாதபோது எதிர்கட்சிகளுக்கு ஏன் திடீர் அக்கறை ?
இந்திய அளவில் குடியரசு
தலைவர் பதவிக்கு நிகரானது மாநில அளவில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் ஆளுநர். அவரை புறந்தள்ளி விட்டு அரசு நிகழ்ச்சிகளை நடத்திய தெலுங்கானா சத்திஷ்கர் போன்ற மாநிலங்களில் இந்தக் கேள்வி ஏன் எழுப்பப்படவில்லை?
அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக கண்டுகொள்ளப்படாமல் (நேருவின்
தங்கக் கைத்தடி என்று வைக்கப்பட்டு இருந்தது) இருந்த தமிழனின் வரலாற்றுப் பெருமைக்கு மீண்டும் அங்கீகாரம் தர மோடி அரசு தயாராக இருக்கையில் தமிழ் தமிழ் என்று மூச்சுக்கு 3000 முறை ஏலம் விடும் தன்மானமுள்ள தமிழகக் கட்சிகள் பலவும் அதை எதிர்ப்பது தான் திராவிட மாடலா?
ஒரு முறை நாரத முனிவர், வைகுண்டம் சென்று லஷ்மி தேவிக்கு பணிவுடன் சேவை செய்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த லஷ்மி தேவி, நாரதருக்கு வேண்டிய வரத்தை தர விழைந்தார். நாரத முனிவர் லட்சுமி தேவியிடம், தான் வேண்டும் வரத்தை கண்டிப்பாக தர வேண்டும் என்று
வாக்குறுதி பெற்றுக்கொண்டார். அவ்வாறே நாரதருக்கு லஷ்மி தேவி வாக்களித்த பிறகு, நாரதர், தனக்கு பகவான் நாராயணருடைய மஹா பிரசாதம் வேண்டுமென்று கேட்டார்.
இதை எதிர்பாராத லஷ்மி தேவி, வருத்தத்துடன் நாரதரிடம், "என் கணவர் என்னிடம் அவருடைய மகா பிரசாதத்தை யாருக்கும் கொடுக்க கூடாது என்று
கூறியுள்ளார். நான் எவ்வாறு என் கணவரின் ஆணையை மீற முடியும்? என்னால் முடியாது" என்று பதிலளித்தார். லஷ்மி தேவியின் வாக்கை நினைவுபடுத்திய நாரதர் தனக்கு எவ்வாறாவது பகவானுடைய மகா பிரசாதம் வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தார். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட லஷ்மி தேவி,
#நீலகண்டப்_பிள்ளையார்_கோவில் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் ஏந்தல் நீலகண்டப்பிள்ளையார் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலுக்கு தினமும் பேராவூரணி மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
பொ.யு.1825-ம் ஆண்டு தஞ்சையை ஆண்டு வந்த
துளசேந்திர மகாராஜாவின் அமைச்சர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆதலால் சிகிச்சைக்காக திருப்பெருந்துறை (ஆவுடையார் கோவில்) செல்வதற்காக பேராவூரணி வழியாக தனது அரச பரிவாரங்களுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது இரவு நேரம் ஆகிவிட்டதால் பேராவூரணியில் உள்ள ஒரு அரச மரத்தடியில் தனது
பரிவாரங்களுடன் தங்கினார். அப்போது பேராவூரணி ஏந்தல் நீலகண்டப் பிள்ளையாருக்கு சங்கரன்கள் 2 பேர் பூஜை செய்வதையும், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதையும் அமைச்சர் பார்த்தார். உடனே கோவிலுக்கு அவரும் சென்றார். பின்னர் தனக்கு உள்ள நோயை பற்றி சங்கரன்களிடம் கூறினார். உடனே அவர்கள்