#நீலகண்டப்_பிள்ளையார்_கோவில் தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் ஏந்தல் நீலகண்டப்பிள்ளையார் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலுக்கு தினமும் பேராவூரணி மட்டுமின்றி அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
பொ.யு.1825-ம் ஆண்டு தஞ்சையை ஆண்டு வந்த
துளசேந்திர மகாராஜாவின் அமைச்சர் நீரழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆதலால் சிகிச்சைக்காக திருப்பெருந்துறை (ஆவுடையார் கோவில்) செல்வதற்காக பேராவூரணி வழியாக தனது அரச பரிவாரங்களுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது இரவு நேரம் ஆகிவிட்டதால் பேராவூரணியில் உள்ள ஒரு அரச மரத்தடியில் தனது
பரிவாரங்களுடன் தங்கினார். அப்போது பேராவூரணி ஏந்தல் நீலகண்டப் பிள்ளையாருக்கு சங்கரன்கள் 2 பேர் பூஜை செய்வதையும், திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதையும் அமைச்சர் பார்த்தார். உடனே கோவிலுக்கு அவரும் சென்றார். பின்னர் தனக்கு உள்ள நோயை பற்றி சங்கரன்களிடம் கூறினார். உடனே அவர்கள்
இன்று இரவு நீங்கள் இங்கு தங்கி விட்டு, மறுநாள் காலையில் கோவிலுக்கு அருகே உள்ள குளத்தில் நீராடி விட்டு, நீலகண்டப் பிள்ளையாரை வணங்கி திருநீறு பூசுங்கள். உங்கள் நோய் உடனே குணமாகும் என்றனர். அவர்கள் கூறிய படி அமைச்சரும் இரவில் தனது பரிவாரங்களுடன் கோவிலில் தங்கினார். மறுநாள் காலையில்
கோவில் குளத்தில் குளித்து விட்டு, நீலகண்டப் பிள்ளையாரை நினைத்து திருநீறு பூசினார். உடனே நீரழிவு நோய் முற்றிலுமாக குணமானதாக தலவரலாற்றில் உள்ளது. பின்னர் இது குறித்து அமைச்சர், துளசேந்திர மகாராஜாவிடம் கூறினார். உடனே மகாராஜா, நீலகண்டப்பிள்ளையார் கோவிலுக்கு அருகே உள்ள நிலத்தை தானமாக
கோவிலுக்கு எழுதி வைத்தார். பின்னர் சிறிது நாட்கள் கழித்து நீலகண்டப் பிள்ளையார், துளசேந்திர மகாராஜாவின் கனவில் தோன்றி தனக்கு பூந்தோட்டம், பழத்தோட்டம் வேண்டும் என கேட்டதாகவும், ஆதலால் பேராவூரணி ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள செங்கொல்லை எனப்படும் நிலத்தினை தானமாக எழுதிக் கொடுத்ததாக
தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சிறிய கூரைக் கொட்டகையில் இருந்த நீலகண்டப் பிள்ளையாருக்கு சிறிய கோவிலையும் அவர் கட்டி கொடுத்தார். துளசேந்திர மகாராஜாவால் சிறிய கோவிலாகக் கட்டப் பட்ட இந்த கோவில் பின்னர் பலரின் முயற்சியால் சிறிது, சிறிதாக திருப்பணிகள் மேற்கொள்ளப்
பட்டு ஒரு விமானம், சிறிய ராஜ கோபுரத்துடன் கட்டப்பட்டு கடந்த 2000-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப் பட்டது. பின்னர் 2014-ம் ஆண்டு உபயதாரர்கள் மூலம் 2 பெரிய முன் மண்டபங்களுடன் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மிகப்பெரிய கோவிலாக அமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. கோவிலுக்கு வடக்கு
புறத்தில் தீர்த்த குளம் உள்ளது. இந்த குளத்தில் நீராடி, நீலகண்டப் பிள்ளையாரை வணங்கினால் தீராத நோய்கள் அனைத்தும் குணமாகும் என்பது ஐதீகம். ஆதலால் இந்த பிள்ளையாருக்கு #தீராத_வினை_தீர்க்கும்_திருநீலகண்ட_பிள்ளையார் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக
மண்டபங்கள் உள்ளன. விநாயகருக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றப்படுகிறது. கோவிலின் பின்புறம் தல விருட்சமாக அரசும், வேம்பும் இணைந்து கம்பீரமாக காட்சி தருகிறது. காரியங்களில் தடை ஏற்பட்டால் இங்கு வழிபாடு செய்யப் படுகிறது. விநாயகருக்கு அமைந்த தனி கோவில்களில் இது முக்கியமானது.
முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்களும் நடக்கின்றன.
பேராவூரணியில் அநேகமாக வீட்டுக்கு ஒரு குழங்தைக்காவது நீலகண்டன், நீலா நீலவேந்தன், நீலவேணி என்று முதல் எழுத்து நீ என பிள்ளையாரை நினைத்து பெயர் சூட்டுவது வழக்கமாக உள்ளது. மேலும், பெண்கள் வெள்ளிக்கிழமை தோறும் கோவில்
மண்டபத்தில் இரவு தங்கியிருந்து காலையில் திருக்குளத்தில் நீராடி நீலகண்ட பிள்ளையாரை வழிபடுகிறார்கள். எந்த விநாயகர் கோயிலிலும் நடைபெறாத தீமிதித் திருவிழா இங்கு நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் நடைபெறுகின்ற காவடித்திருவிழாவின்போது பால் குடம், பால் காவடி, கரும்பு கட்டுதல் போன்றவை
நடைபெறுகின்றன. அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் மார்கழி மாதத்தில் தினமும் காலையில் நந்திக்கு தண்ணீர் எடுத்து ஊற்றி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இந்தக் கோயிலில் இன்னொரு சிறப்பு முகூர்த்த நாட்களில் சுமார் ஐம்பது எழுபதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் இங்கு நடைபெறும். இங்கே அவர்
சந்நிதிக்கு முன்னே திருமணம் செய்து கொண்டால், இல்லறம் செழிக்கும். குடும்பம் தழைக்கும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். சந்ததிகள் சிறக்க சந்தோஷமாக வாழலாம் என்கிறார்கள் பக்தர்கள். கோயில் குளம் கொள்ளை அழகு. வருடந்தோறும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. தூர்வாரப்படுகிறது. இயற்கை
சுண்ணாம்பைக் கொண்டு, குளம் முழுவதும் தூவப்படுகிறது. அதனால்தான் சுற்றியுள்ள எந்த ஊர்க் குளத்தில் தண்ணீர் இல்லை என்றாலும் கூட, இந்தக் கோயில் குளத்தில் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். இந்த மக்களின் உதவியாலும் கோயில் ஊழியர்களின் உழைப்பாலும் இவை அனைத்தும் சாத்தியமாயிற்று என்று
தெரிவிக்கிறார் கோயில் செயல் அலுவலர் கோவிந்த்ராஜ்.
இக்கோவில் பேராவூரணி-அறந்தாங்கி சாலையில் முடப்புளிக்காடு ஏந்தலில் உள்ளது. பேராவூரணியிலிருந்து 1/2 கிமீ தொலைவில் உள்ளது.
ஸ்ரீ கணேசா சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா காஞ்சி மகாபெரியவா ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் எல்லா பாராயணமும் முடிந்ததும் சொல்லிப் பிரார்த்தித்தால் நற்கதி அடையலாம்.
அனாயாசென் மரணம் வினாதைன்யேன் ஜீவனம்.
தேஹி மே க்ருபயா ஷம்போ த்வயி பக்திம் அச்சலம் ॥
சிவபெருமானே, எனக்கு வலியற்ற அமைதியான மரணத்தையும் (அனாசயேன மரணம்), எனது அடிப்படைத் தேவைகளுக்காக (வினா தைன்யேன ஜீவனம்) எந்த பிரச்சனையும் அல்லது பிறரைச் சார்ந்திருக்காத வாழ்க்கையும் (வின தைன்யேன ஜீவனம்) மற்றும் உல்லாசமான, நிலையான பக்தி (த்வயி பக்தி அச்சஞ்சலம்) நிறைந்த
வாழ்க்கையையும் எனக்கு வழங்குவாயாக. நீங்கள் அன்பான இறைவா.
(அல்லது)
அனாயாசென் மரணம் வினாதைன்யேன் ஜீவனம்.
தேஹாந்தே தவ ஸாந்நித்யம் தேஹி மே பரமேஶ்வரம் ॥
ஓ சிவபெருமானே, எனக்கு வலியற்ற அமைதியான மரணத்தை (அனாசயேன மரணம்), எனது அடிப்படைத் தேவைகளுக்காக (வினா தைன்யேன ஜீவனம்) எந்த
#நற்சிந்தனை
ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று, ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப் படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன் என்றது. பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சி
செய்வதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு என்றார் சாது. தலையசைத்து விட்டு பறந்தது பறவை. பக்கத்தில் இருந்த சீடனிடம், சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி
பலத்தை இழந்து விட்டோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும் என்றார் சாது. ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது. ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பி
#MahaPeriyava
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Source: Moments of a lifetime
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
This story was related to me by one of my patients from Coimbatore. Sometime in the 1960s when Maha Periyaval visited
Coimbatore, this gentleman offered poornakumbham as Periyaval came along the road. He told the Paramacharya “Periyaval may not remember but on the same road thirty years ago my father too offered poornakumbam to you when you came. Maha Periyaval said “Yes, but were you not living
in the opposite house at that time, and not in the present house?” For such a memory, the word superhuman is an understatement.
Once by accident we overheard a history and geography lesson at Kurnool. We were standing outside one of the huts of the Mutt camp and could faintly
Pandit Nehru’s Tryst with Destiny midnight speech was preceded by his historic Tryst with Divinity. In a first of its kind event, whose second coming is about to happen in the central hall
of Bharat’s temple of democracy on May 28, 2023, the Sengol (sacred sceptre) was presented to Nehru symbolising the transfer of power to independent India. The new Parliament building inauguration rewinds our minds to August 14/15, 1947, with the image and sound of Indian
#கல்வி_வரம்_அருளும்_ஆலயங்கள்
திருச்சி உத்தமர் கோயிலில் சரஸ்வதி தேவி தனி சந்நதி கொண்டு அருள்கிறாள். இவள் சந்நதியில் தரப்படும் மஞ்சள் காப்பு பிரசாதம் விசேஷமானது. மாணவர்களின் படிப்புக்கு ஊக்கமளிப்பது.
தேனி வேதபுரியில் சனகாதி முனிவர்க்கு அருள் புரியும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்
இவர் கல்விச் செல்வம் அருள்வதில் வல்லவர்.
நாகை மாவட்டம், பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூரில், கம்பருக்கு அருளிய சரஸ்வதி தேவி தனிக் கோயில் கொண்டிருக்கிறாள். படிப்பு வரம் அருள்வதில் நிகரற்ற அன்னை இவள்.
சென்னை செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள செட்டிபுண்ணியம் தலத்திலுள்ள ஹயக்ரீவ
மூர்த்தியை வணங்க, கல்வி வளம் சிறக்கும்.
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலய வாசலில் உள்ள தட்சிணாமூர்த்தி, வடிவுடையம்மனுக்கு உபதேசம் செய்யும் பாவனையில் வீற்றருள்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வலம் வந்து வணங்க வளமான கல்வியைப் பெறலாம்.
#நற்சிந்தனை
பெற்றோரை வணங்குவோம்!
இந்த பூமியை விட பாரமானவள் தாய்.
ஆகாயத்தை விட உயர்ந்தவர் தந்தை.
ஒரு முறை தாய் தந்தையரை வணங்கினால் பசுவை தானம் செய்த பலன் கிட்டும்.
ஸத்யம்_தாய்,
ஞானம்_தந்தை.
பத்து உபாத்யாயர்களை விட ஆசார்யர் சிறந்தவர்.
நூறு ஆசார்யர்களை விட தந்தை சிறந்தவர்.
தந்தையை விட ஆயிரம் மடங்கு சிறந்தவள்
ஜென்மாவை கொடுத்தது தாய்.
அவர்களுக்கு சேவை செய்தால் 6 முறை பூமண்டலத்தை ப்ரதக்ஷிணம் செய்த பலனும், 1000 முறை காசி யாத்திரை செய்த பலனும், 100 முறை ஸமுத்திர ஸ்நானம் செய்த பலனும் கிட்டும்.
எந்த மகன், மகள் மாத்ரு தேவதையை சந்தோஷமாக வைத்திருக்க
மாட்டார்களோ, சேவை செய்ய மாட்டார்களோ அவர்களின் சரீர மாமிசம் நாய் மாமிசத்தை விட ஹீனமானது என்று வேதம் கூறுகிறது.
எப்பேற்பட்ட சாபத்திற்கும் விமோசனம் உண்டு.
பெற்ற தாய் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்தால் அதற்கு ஒரு லட்சம் பசுக்களை தானம் செய்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஸ்வமேத