ஒரு முறை நாரத முனிவர், வைகுண்டம் சென்று லஷ்மி தேவிக்கு பணிவுடன் சேவை செய்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த லஷ்மி தேவி, நாரதருக்கு வேண்டிய வரத்தை தர விழைந்தார். நாரத முனிவர் லட்சுமி தேவியிடம், தான் வேண்டும் வரத்தை கண்டிப்பாக தர வேண்டும் என்று
வாக்குறுதி பெற்றுக்கொண்டார். அவ்வாறே நாரதருக்கு லஷ்மி தேவி வாக்களித்த பிறகு, நாரதர், தனக்கு பகவான் நாராயணருடைய மஹா பிரசாதம் வேண்டுமென்று கேட்டார்.
இதை எதிர்பாராத லஷ்மி தேவி, வருத்தத்துடன் நாரதரிடம், "என் கணவர் என்னிடம் அவருடைய மகா பிரசாதத்தை யாருக்கும் கொடுக்க கூடாது என்று
கூறியுள்ளார். நான் எவ்வாறு என் கணவரின் ஆணையை மீற முடியும்? என்னால் முடியாது" என்று பதிலளித்தார். லஷ்மி தேவியின் வாக்கை நினைவுபடுத்திய நாரதர் தனக்கு எவ்வாறாவது பகவானுடைய மகா பிரசாதம் வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தார். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட லஷ்மி தேவி,
செய்வதறியாது தவித்தார். அன்று மதியம் பகவானுக்கு அன்போடும் கவனத்தோடும் உணவு பரிமாறினார் லஷ்மி தேவி. இருப்பினும் பகவான் நாராயணர், தன் மனைவியின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை என்று அறிந்து அதற்கான காரணத்தை கேட்டார். பகவானின் பாத கமலங்களில் சரணடைந்த படியே, வேதனையுடன் தன்னுடைய சூழ்நிலையை
எடுத்துரைத்தார் லஷ்மி தேவி. மிகவும் பரிவோடு பகவான், தன் மனைவியிடம், "இன்றொரு நாள் என் ஆணையை திரும்ப பெற்றுக்கொள்கிறேன். நான் சாப்பிட்ட தட்டை நீ நாரதருக்கு வழங்கலாம். ஆனால் நான் என் முகத்தை எதிர்திசையில் திருப்பிய உடன், எனக்கு தெரியாமல் நீ தட்டை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று
கூறினார். மிகவும் மகிழ்ச்சி அடைந்த லஷ்மி தேவி, அவ்வாறே செய்தார். நாரத முனிவரிடம் மகா பிரசாதத்தை வழங்கினார். அதை பெற்ற நாரதர் மிகவும் மரியாதையுடன் அதனை உண்டு மகிழ்ந்தார். உடனே மெய் மறந்த நிலையில் பகவானின் நாமங்களை பாடியபடி இடைவிடாது ஆடவும் செய்தார். அவருடைய உணர்ச்சிகளை கட்டுப்
படுத்த முடியாமல் ஒரு பைத்தியக் காரனை போல் அண்டம் முழுவதும் ஒவ்வொரு கிரகமாக ஓடிக் கொண்டு இருந்தார். இறுதியாக சிவ பெருமானின் இருப்பிடமான கையிலாயத்தை வந்தடைந்தார்.
சிவபெருமான் நாரதருடைய நிலை கண்டு ஆச்சரியமடைந்தார். பகவான் விஷ்ணுவின் பக்திக்கடலில் மூழ்கியிருந்த நாரதர், தன்னை
கவனிக்கவில்லை என்பதை உணர்ந்த சிவபெருமான், நாரதரை சமாதானப் படுத்தி அவரிடம் அதற்கான காரணத்தை வினவினார். நாரத முனிவர், பகவானின் மகா பிரசாதம் கிடைத்த கதையை கூறினார். சிவபெருமான் மிகவும் ஆச்சர்யத்துடன் நாரத முனிவரிடம், "நாரத முனிவரே! பகவான் நாராயணருடைய மகா பிரசாதத்தை உண்ணக்கூடிய
பெரும் பாக்கியம் பெற்றவர் நீங்கள். எனக்கு சிறிது மகா பிரசாதத்தை கொண்டு வந்துள்ளீர்களா?" என்று வினவினார். நாரதர், தான் மகா பிரசாதம் ஏதும் எடுத்து வரவில்லை என்று கை கூப்பிய படி தன் வருத்தத்தை சிவபெருமானிடம் தெரிவித்தார். அப்போது தன் கைவிரலின் நகக்கண்ணில் ஒரு சிறுதுளி மகா பிரசாதம்
இருந்ததை பார்த்த நாரதர், மகிழ்ச்சியில் துள்ளியபடி, சிவபெருமானிடம் காண்பித்தார். அதை தன் வாயில் வைத்தவுடன், சிவபெருமான் மிகவும் பக்திக்கடலில் மூழ்கி, பிரளயம் ஏற்படும்போது மட்டும் ஆடும் சிவதாண்டவத்தை ஆடினார். இதனால் அண்டம் முழுவதும் அதிர்ந்தது. தேவர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கினர்.
இது பிரளயத்திற்கான சமயம் இல்லை. பிறகு ஏன் சிவபெருமான் தாண்டவம் ஆடுகின்றார்? என்று குழம்பினர். இருப்பினும் சிவபெருமானை நெருங்க பயந்து, அனைவரும் பார்வதி தேவியை தஞ்சம் அடைந்தனர். சிவபெருமானை சமாதானப்படுத்தாவிடில், பிரளயம் ஏற்படும் என்று கூறினர். பார்வதி தேவியும் சம்மதித்தார்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடிக்கொண்டு இருந்த சிவபெருமானை நெருங்கிய போது, அவர் சுய நினைவிற்கு வந்தார். பார்வதி தேவி, சிவபெருமானிடம், "ஐயனே! தங்களுக்கு என்னவாயிற்று? எதற்காக தாண்டவம் ஆடினீர்கள்?" என்று வினவினார். சிவபெருமான் நடந்ததை விவரித்தார். பார்வதி தேவி மிகவும் ஆச்சரியமடைந்தார்.
அதோடு சிவபெருமானிடம், "எனக்கு மகா பிரசாதம் வைத்துள்ளீர்களா?" என்று வினவினார். சிவபெருமான், "எனக்கே நாரதருடைய நகக்கண்ணில் இருந்த ஒரு துளி மகா பிரசாதம் மட்டும் தான் கிடைத்தது. அதில் நான் எப்படி மீதம் வைக்கமுடியும்?" என்று பதிலளித்தார். இதை கேட்ட பார்வதி தேவி மிகவும் கோபம் கொண்டார்.
அவருடைய கோபத்தினால் எழுந்த அக்னி, அண்டம் முழுவதும் வெட்பத்தை உண்டாக்கியது. பாதாள லோகங்கள் முதல் பிரம்மலோகம் வரை இருக்கும் அனைவராலும் அந்த வெட்பத்தை உணர முடிந்தது. ஏதோ விபரீதம் நடக்கவிருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்தனர். உடனடியாக பிரம்மதேவரின் தலைமையில் அணைத்து தேவர்களும் பகவான்
விஷ்ணுவிடம் இதை தெரிவிப்பதற்காக வைகுந்தம் விரைந்தனர். பகவான் விஷ்ணு, உடனடியாக கருட வாகனத்தில், கயிலாயம் நோக்கி புறப்பட்டார். பகவான் விஷ்ணுவை கண்டவுடன், பார்வதி தேவி, தனது வணக்கங்களை தெரிவித்தார். பார்வதி தேவியை ஆசீர்வதித்து, "உனக்கு எவ்வளவு மகா பிரசாதம் வேண்டுமென்றாலும் நான்
தருகிறேன். தயவு செய்து உன்னுடைய கோபத்தை கைவிடுவாயாக. இல்லை என்றால் அகிலம் முழுவதும் அழிந்து விடும்" என்று கேட்டுக்கொண்டார். ஆனால் பார்வதி தேவி இதற்கு சம்மதிக்கவில்லை. "எனக்கு மட்டும் நீங்கள் மகா பிரசாதம் கொடுத்தால் போதாது. என்னுடைய பிள்ளைகளான அகிலத்து வாசிகள் அனைவருக்கும் நீங்கள்
மகா பிரசாதம் கொடுக்க வேண்டும். உங்களுடைய மஹாபிரசாதம் கிடைக்காமல் நான் தவித்ததுபோல் என்னுடைய பிள்ளைகளும் தவிக்க நான் விரும்பவில்லை" என்று கூறினார். இதை கேட்ட பகவான் விஷ்ணு, "ததாஸ்து (அப்படியே ஆகட்டும்)" என்று கூறினார். மேலும், பார்வதி தேவியிடம், "உன் ஆசையை நிறைவேற்றுவதற்காக நான்
நீலாசால தாமம் என்ற இடத்தில அவதரிப்பேன். என்னுடைய இந்த கோவிலானது பிரசாத விநியோகத்திற்கு என்றே பிரசித்தி பெறும். இங்கு வந்து யார் பிரசாதம் உண்டாலும் அவர்கள் முக்தி அடைவார்கள். என்னுடைய பிரசாதம் அனைத்தும் உனக்கு முதலில் நெய்வேத்தியம் செய்யப்படும். அதன் பிறகே அது மகா பிரசாதம் என்று
ஏற்கப்படும். இந்த மகா பிரசாதம் அனைவருக்கும் விநியோகிக்கப்படும். இதற்காக நீ என்னுடனேயே இருக்க வேண்டும். என்னுடைய கோவிலின் சந்நிதானத்திலேயே உன்னுடைய ஆலயமும் இருக்கும். உன்னுடைய கணவர் உனக்கு மகா பிரசாதம் கொடுக்க தவறியதால் அவருடைய ஆலயம் என்னுடைய சந்நிதானத்திற்கு வெளியே இருக்கும்"
என்று கூறினார். பகவான் விஷ்ணு, பூரியில் ஜெகந்நாதராக அவதரித்தார். பார்வதி தேவி அங்கு #விமலாதேவியாக அவதரித்தார். பகவான் ஜெகந்நாதருக்கு நெய்வேத்தியம் செய்யப்படும் அனைத்தும் விமலா தேவிக்கும் நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. அதன் பின்னரே அது மஹாபிரசாதமாக ஏற்கப்படுகிறது. இந்த மகா
பிரசாதத்தை அனைத்து மக்களும் பாகுபாடின்றி பெற்றுக்கொள்ளலாம். சாஸ்திரங்கள் கூறுவது யாதெனில், "ஒரு நாயின் வாயிலிருந்து கூட ஒரு பிராமணர் மஹாபிரசாதத்தை எடுத்து உண்ணலாம். எந்த வித தீட்டும் கிடையாது. இதுவே பகவான் ஜெகந்நாதருடைய மஹாபிரசாதத்தின் மஹிமை".
ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்.🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா காஞ்சி மகாபெரியவா ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் எல்லா பாராயணமும் முடிந்ததும் சொல்லிப் பிரார்த்தித்தால் நற்கதி அடையலாம்.
அனாயாசென் மரணம் வினாதைன்யேன் ஜீவனம்.
தேஹி மே க்ருபயா ஷம்போ த்வயி பக்திம் அச்சலம் ॥
சிவபெருமானே, எனக்கு வலியற்ற அமைதியான மரணத்தையும் (அனாசயேன மரணம்), எனது அடிப்படைத் தேவைகளுக்காக (வினா தைன்யேன ஜீவனம்) எந்த பிரச்சனையும் அல்லது பிறரைச் சார்ந்திருக்காத வாழ்க்கையும் (வின தைன்யேன ஜீவனம்) மற்றும் உல்லாசமான, நிலையான பக்தி (த்வயி பக்தி அச்சஞ்சலம்) நிறைந்த
வாழ்க்கையையும் எனக்கு வழங்குவாயாக. நீங்கள் அன்பான இறைவா.
(அல்லது)
அனாயாசென் மரணம் வினாதைன்யேன் ஜீவனம்.
தேஹாந்தே தவ ஸாந்நித்யம் தேஹி மே பரமேஶ்வரம் ॥
ஓ சிவபெருமானே, எனக்கு வலியற்ற அமைதியான மரணத்தை (அனாசயேன மரணம்), எனது அடிப்படைத் தேவைகளுக்காக (வினா தைன்யேன ஜீவனம்) எந்த
#நற்சிந்தனை
ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று, ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப் படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன் என்றது. பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சி
செய்வதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு என்றார் சாது. தலையசைத்து விட்டு பறந்தது பறவை. பக்கத்தில் இருந்த சீடனிடம், சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி
பலத்தை இழந்து விட்டோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும் என்றார் சாது. ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது. ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பி
#MahaPeriyava
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Source: Moments of a lifetime
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
This story was related to me by one of my patients from Coimbatore. Sometime in the 1960s when Maha Periyaval visited
Coimbatore, this gentleman offered poornakumbham as Periyaval came along the road. He told the Paramacharya “Periyaval may not remember but on the same road thirty years ago my father too offered poornakumbam to you when you came. Maha Periyaval said “Yes, but were you not living
in the opposite house at that time, and not in the present house?” For such a memory, the word superhuman is an understatement.
Once by accident we overheard a history and geography lesson at Kurnool. We were standing outside one of the huts of the Mutt camp and could faintly
Pandit Nehru’s Tryst with Destiny midnight speech was preceded by his historic Tryst with Divinity. In a first of its kind event, whose second coming is about to happen in the central hall
of Bharat’s temple of democracy on May 28, 2023, the Sengol (sacred sceptre) was presented to Nehru symbolising the transfer of power to independent India. The new Parliament building inauguration rewinds our minds to August 14/15, 1947, with the image and sound of Indian
#கல்வி_வரம்_அருளும்_ஆலயங்கள்
திருச்சி உத்தமர் கோயிலில் சரஸ்வதி தேவி தனி சந்நதி கொண்டு அருள்கிறாள். இவள் சந்நதியில் தரப்படும் மஞ்சள் காப்பு பிரசாதம் விசேஷமானது. மாணவர்களின் படிப்புக்கு ஊக்கமளிப்பது.
தேனி வேதபுரியில் சனகாதி முனிவர்க்கு அருள் புரியும் தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்
இவர் கல்விச் செல்வம் அருள்வதில் வல்லவர்.
நாகை மாவட்டம், பூந்தோட்டம் அருகில் உள்ள கூத்தனூரில், கம்பருக்கு அருளிய சரஸ்வதி தேவி தனிக் கோயில் கொண்டிருக்கிறாள். படிப்பு வரம் அருள்வதில் நிகரற்ற அன்னை இவள்.
சென்னை செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள செட்டிபுண்ணியம் தலத்திலுள்ள ஹயக்ரீவ
மூர்த்தியை வணங்க, கல்வி வளம் சிறக்கும்.
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலய வாசலில் உள்ள தட்சிணாமூர்த்தி, வடிவுடையம்மனுக்கு உபதேசம் செய்யும் பாவனையில் வீற்றருள்கிறார். வியாழக்கிழமைகளில் இவரை வலம் வந்து வணங்க வளமான கல்வியைப் பெறலாம்.
#நற்சிந்தனை
பெற்றோரை வணங்குவோம்!
இந்த பூமியை விட பாரமானவள் தாய்.
ஆகாயத்தை விட உயர்ந்தவர் தந்தை.
ஒரு முறை தாய் தந்தையரை வணங்கினால் பசுவை தானம் செய்த பலன் கிட்டும்.
ஸத்யம்_தாய்,
ஞானம்_தந்தை.
பத்து உபாத்யாயர்களை விட ஆசார்யர் சிறந்தவர்.
நூறு ஆசார்யர்களை விட தந்தை சிறந்தவர்.
தந்தையை விட ஆயிரம் மடங்கு சிறந்தவள்
ஜென்மாவை கொடுத்தது தாய்.
அவர்களுக்கு சேவை செய்தால் 6 முறை பூமண்டலத்தை ப்ரதக்ஷிணம் செய்த பலனும், 1000 முறை காசி யாத்திரை செய்த பலனும், 100 முறை ஸமுத்திர ஸ்நானம் செய்த பலனும் கிட்டும்.
எந்த மகன், மகள் மாத்ரு தேவதையை சந்தோஷமாக வைத்திருக்க
மாட்டார்களோ, சேவை செய்ய மாட்டார்களோ அவர்களின் சரீர மாமிசம் நாய் மாமிசத்தை விட ஹீனமானது என்று வேதம் கூறுகிறது.
எப்பேற்பட்ட சாபத்திற்கும் விமோசனம் உண்டு.
பெற்ற தாய் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்தால் அதற்கு ஒரு லட்சம் பசுக்களை தானம் செய்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஸ்வமேத