#நற்சிந்தனை
ஒரு சாது மரத்தடியில் அமர்ந்திருந்தார். ஒரு பறவை அவரிடம் சென்று, ஐயா! உலகை சுற்றிப் பார்க்க ஆசைப் படுகிறேன். முதலில் ஆயிரம் காத தூரம் கடலில் பறந்து அழகான ஒரு தீவை பார்க்க விரும்புகிறேன் என்றது. பறவையே! உன்னால் அவ்வளவு தூரம் கடலின் மேல் பறக்க முடியுமா? முயற்சி
செய்வதில் தவறில்லை. ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள். பிரயாணத்தின் போது முதல் முறையாக உனக்கு சோர்வு ஏற்படும் போது உடனடியாக புறப்பட்ட இடத்திற்கே திரும்பி விடு என்றார் சாது. தலையசைத்து விட்டு பறந்தது பறவை. பக்கத்தில் இருந்த சீடனிடம், சீடனே! முதல் முறை சோர்வடையும் போது பாதி
பலத்தை இழந்து விட்டோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது திரும்பினால் மட்டுமே பத்திரமாக கரைக்குத் திரும்ப முடியும் என்றார் சாது. ஒரு வாரத்திற்குப் பிறகு பறவை திரும்ப வந்தது. ஐயா! கடலில் இருநூறு காத தூரத்தை அடைந்தவுடன், சோர்வடைந்தேன். நீங்கள் சொன்ன படி உடனே திரும்பி
விட்டேன். பயணத்தை தொடர்ந்து இருந்தால், கடலில் விழுந்திருப்பேன். இருந்தாலும், சில நாட்களுக்குப் பிறகு என் முயற்சியை தொடர விரும்புகிறேன் என்றது பறவை. பறவையே! இம்முறை உன் துணையையும் உடன் அழைத்துச் செல். பறக்கும் போது இரண்டாம் முறையாக சோர்வடைந்தவுடன், திரும்பி வா என்றார் சாது. 15
நாட்கள் ஓடிப்போனது. மீண்டும் பறவைகள் திரும்ப வந்தன. ஐயா! எங்களால் கடலில் 400 காத தூரம் தான் பறக்க முடிந்தது. நீங்கள் சொன்னபடி 2வது முறை சோர்வு அடைந்தவுடன் திரும்ப வந்து விட்டோம். தொடர்ந்து பறந்திருந்தால் கடலில் விழுந்து இறந்திருப்போம். ஆனாலும் எங்கள் முயற்சியை தொடர
விரும்புகிறோம். எங்களுக்கு உதவுங்கள் என்றது பறவை. சாது யோசித்தார். கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து பறவையிடம் கொடுத்தார். பறவைகளே! பயணத்தின் போது இந்தக் குச்சியை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். சோர்வு ஏற்படும் போது, இந்தக் குச்சியை கடல் தண்ணீரின் மீது போடுங்கள். அது மிதக்கும்.
அந்தக் குச்சியின் மீது அமர்ந்து ஓய்வெடுங்கள். களைப்பு தீர்ந்தவுடன் மீண்டும் குச்சியோடு பறந்து செல்லுங்கள் என்றார் சாது.
பறவைகள் நன்றி சொல்லிவிட்டு பறந்தன. 2 மாதங்களுக்குப் பிறகு சாதுவிடம் வந்தன. ஐயா! உங்களின் ஆசியினால், 1000 காத தூரத்திற்கு அப்பால் உள்ள தீவை சுற்றிப் பார்த்தோம்.
குச்சியின் உதவியால் சோர்வடையும் போதெல்லாம் ஓய்வெடுத்தோம் என்றது பறவை. பறவைகளே அருமை! நீங்கள் எடுத்துச் சென்ற குச்சி உங்களுக்கு சுமையாக இல்லையா? என்று கேட்டார் சாது. அதற்குப் பறவை, ஐயா! சில நாட்கள் குச்சியை தனித்தனியே சுமந்து பறந்தோம். சில இடங்களில் சேர்ந்தே சுமந்தோம். அப்போது
எல்லாம் அது எங்களுக்கு சுமையாகவே இருந்தது. ஆனால், கடலில் குச்சியை போட்டு அதில் நாங்கள் ஓய்வெடுக்கும் போதுதான் குச்சியை நாங்கள் சுமக்கவில்லை. குச்சிதான் எங்களை சுமக்கிறது, காப்பாற்றுகிறது என்ற உண்மை புரிந்தது என்று சொல்லி விட்டு பறந்தது பறவை. சாதுவைப் பார்த்தான் சீடன். சீடனே!
பறவை முதலில் தனியாக பறந்த போது எளிதில் சோர்வடைந்தது. துணையோடு பறந்த போது அதிக நேரம் சோர்வு அடையாமல் பறக்க முடிந்தது. அதற்குக் காரணம் துணை. ஸ்க்ய்பெ இல்லறம். ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை. இலக்கை அடைய குச்சி என்ற கருவி அவசியமாகிறது. அந்தக் கருவியின் உதவியால் மட்டுமே இலக்கை அடைய
முடிந்தது. பறவைகளுக்கு குச்சியைப் போல மனிதர்களுக்கு ஆசார்யன் கருவியாகிறது. சம்சார சாகரம் என்ற பிறவிக் கடலை கடக்க, கடலில் குதிக்க வேண்டியதில்லை, நீந்த வேண்டியதில்லை. குரு என்ற குச்சியின் உதவியால் மிதந்தே கடக்கலாம் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது. குச்சியை சுமப்பதாக பறவைகள் ஒரு
தோற்றத்தை ஏற்படுத்தினாலும், குச்சியே பறவைகளை சுமக்கிறது. இதைப் போல, கணவனும், மனைவியும் இல்லறத்தை வழி நடத்துவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாலும் உண்மையில் ஒரு நல்ல ஆசார்யனே அவர்களை வழி நடத்துகிறார். குருமுகமாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் திருவடியை அடைய முடியும். குரு சொல்லும் தர்மத்தை
கடைபிடித்து, நாம் எல்லோரும் ஸ்ரீ கிருஷ்ணன் திருவடியை அடைவோம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#சீர்காழி_சட்டைநாதர்_கோவில
சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிமீ தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். திருஞானசம்பந்தர் சைவமும், தமிழும் தழைக்கவும், உலகம் உய்யவும் முருகப்பெருமானின் திருவவதாரமாக அவதரித்தவர். சீர்காழித் திருத்தலத்தில் சிவபாத இருதயர்-பகவதி
அம்மையாருக்கு மகனாகப் பிறந்த அவர், தன் 3 வயதில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்றார். தந்தை அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடிய போது, சம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. அவர் ஆலயத்தையும், குளத்தில் மூழ்கி நீராடிக் கொண்டிருந்த தந்தையையும் பார்த்தபடியே அழுது கொண்டு
இருந்தார். குழந்தையின் அழுகுரலை குளத்தினுள் மூழ்கி நீராடிய தந்தையால் உணர முடியவில்லை. ஆனால், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட சீர்காழி திருத்தல ஈசன் தோணியப்பர், பார்வதியிடம் குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அவ்வண்ணமே அன்னை உமையவளும் ஞானப்பாலை சம்பந்தருக்கு ஊட்டி, அவர்
#ஸ்ரீசக்ர_நவாவரண_பூஜை
ஸ்ரீசக்ர நவாவரண பூஜையின் பொருள் மிகவும் ஆழமானது மற்றும் இரகசியமானது. தேவி வழிபாட்டின் மிக உயர்ந்த வடிவமாகக் கருதப்படும் ஸ்ரீ சக்ர பூஜையானது ஒரு சிக்கலான வழிபாட்டு முறையை உள்ளடக்கியது, இது மயக்கும் மற்றும் சக்தி வாய்ந்தது. பஞ்சதசாக்ஷரி மந்திரம் என்பது ஒலியில்
அன்னையின் வெளிப்பாடு மற்றும் ஸ்ரீ சக்ர யந்திரம் கோடுகள் மற்றும் வடிவத்தின் மூலம் அவளை உணர்தல் ஆகும். ஸ்ரீசக்ரத்தை தரிசனம் செய்தாலே அனைத்து பாவங்களும் நீங்கி ஐஸ்வர்யம் கிடைக்கும் என்று பல்வேறு வேத நூல்கள் குறிப்பிடுகின்றன. 'நவாவரணம்' என்பது ஸ்ரீசக்ராவைக் கொண்ட ஒன்பது ஆவரணங்கள்
அல்லது அடைப்புகளைக் குறிக்கிறது. பரம அன்னை, ஸ்ரீ லலிதா மஹா திரிபுர சுந்தரி, பிந்து அல்லது ஸ்ரீசக்ராவின் மையப் புள்ளியில் வசிக்கிறார். இந்த பிந்துவில் தான், தேவி சிவபெருமானுடன் இணைகிறார், இது சிவ-சக்தி ஐக்யா என்று போற்றப்படுகிறது. ஸ்ரீசக்ர நவாவரண பூஜையின் செயல்முறை, எளிமையான
#இரட்டை_ஆஞ்சநேயர்
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ளது மேலப்பாதி கிராமம். இங்கு மிகவும் பிரசித்திப் பெற்ற இரட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. முன் காலத்தில் செம்பனார் கோவிலுக்கும், மேலப்பாதிக்கும் இடையே ஓடும் காவிரி ஆற்றில் இறங்கிச் செல்லும் நிலை
இருந்தது. எனவே அப்பகுதி மக்கள் ஆற்றில் மூங்கில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இரண்டு மனிதக் குரங்குகள் உதவி செய்தன. ஒரு நாள் பாலம் கட்டிய சோர்வில் இரண்டு குரங்குகளும் அருகில் இருந்த இலுப்பைக் காட்டு திடலில் ஓய்வு எடுத்தன. சிறிது நேரத்தில் அவை இரண்டும்
அதே இடத்தில் ஐக்கியமாகி விட்டன. ஆஞ்சநேயரே வந்து மக்களுக்கு உதவியதாகக் கருதிய மக்கள் அந்த இடத்தில் இரட்டை ஆஞ்சநேயர் கோயிலை எழுப்பினர். இங்குள்ள ஆஞ்சநேயர்களுக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால், வெண்ணெய் உருகுவது போல இன்னல்கள் தீரும். சனி பகவானின் தாக்கம் குறையும்
#SengolAtNewParliament இதே செங்கோலில் தமிழுக்கு பதில் கன்னடத்தில் எழுதி இருந்தாலோ, கோளறு பதிகத்திற்கு பதில் தெலுங்கில் அன்னமாச்சாரி பாடல்கள் பாடி இருந்தாலோ, ஆதினகர்த்தர்களை போல் ஒடிசா மாநிலத்தில் இருந்து பூரி ஜகந்நாத பாண்டாக்களை அழைத்திருந்தாலோ, என்ன நடந்திருக்கும்?
தமிழன் தாழ்வு மனப்பான்மையில் வயிறு எரிந்து சாபம் விட்டு, தமிழ் தமிழ் என அடி வயிற்றில் குத்தி கதறி அழுதிருப்பான்!
29 மாநிலங்கள் 30க்கும் மேலான மொழிகள் பேசும் மக்கள், இந்த தேசத்தின் ஆட்சி மொழியாக உள்ள ஹிந்தி பேசும் பல கோடி மக்கள், செவ்வியல் மொழி என பறைசாற்றிய திராவிட மொழிகளை
பேசும் பல கோடி மக்கள்! ஒரே ஒருவரிடம் இருந்தும் ஒரு முக்கல் முனகல் இல்லை! அனைவரும் இதை தனது நாட்டின் கலச்சார பெருமையாகவே கருதி மகிழ்கின்றனர். ஒரே ஒரு டீவி விவாதம் கூட இல்லை, ஒரேயோரு தனி நபரோ அந்தந்த மாநில அரசியல்வாதியோ இதைப் பற்றி பேசவில்லை, ஏன் குஜராத்திக்கள் எங்கள் மோடி எங்கே
#மகாபெரியவா காஞ்சி மகாபெரியவா ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் எல்லா பாராயணமும் முடிந்ததும் சொல்லிப் பிரார்த்தித்தால் நற்கதி அடையலாம்.
அனாயாசென் மரணம் வினாதைன்யேன் ஜீவனம்.
தேஹி மே க்ருபயா ஷம்போ த்வயி பக்திம் அச்சலம் ॥
சிவபெருமானே, எனக்கு வலியற்ற அமைதியான மரணத்தையும் (அனாசயேன மரணம்), எனது அடிப்படைத் தேவைகளுக்காக (வினா தைன்யேன ஜீவனம்) எந்த பிரச்சனையும் அல்லது பிறரைச் சார்ந்திருக்காத வாழ்க்கையும் (வின தைன்யேன ஜீவனம்) மற்றும் உல்லாசமான, நிலையான பக்தி (த்வயி பக்தி அச்சஞ்சலம்) நிறைந்த
வாழ்க்கையையும் எனக்கு வழங்குவாயாக. நீங்கள் அன்பான இறைவா.
(அல்லது)
அனாயாசென் மரணம் வினாதைன்யேன் ஜீவனம்.
தேஹாந்தே தவ ஸாந்நித்யம் தேஹி மே பரமேஶ்வரம் ॥
ஓ சிவபெருமானே, எனக்கு வலியற்ற அமைதியான மரணத்தை (அனாசயேன மரணம்), எனது அடிப்படைத் தேவைகளுக்காக (வினா தைன்யேன ஜீவனம்) எந்த
#MahaPeriyava
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Source: Moments of a lifetime
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
This story was related to me by one of my patients from Coimbatore. Sometime in the 1960s when Maha Periyaval visited
Coimbatore, this gentleman offered poornakumbham as Periyaval came along the road. He told the Paramacharya “Periyaval may not remember but on the same road thirty years ago my father too offered poornakumbam to you when you came. Maha Periyaval said “Yes, but were you not living
in the opposite house at that time, and not in the present house?” For such a memory, the word superhuman is an understatement.
Once by accident we overheard a history and geography lesson at Kurnool. We were standing outside one of the huts of the Mutt camp and could faintly