#இரட்டை_ஆஞ்சநேயர்
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ளது மேலப்பாதி கிராமம். இங்கு மிகவும் பிரசித்திப் பெற்ற இரட்டை ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. முன் காலத்தில் செம்பனார் கோவிலுக்கும், மேலப்பாதிக்கும் இடையே ஓடும் காவிரி ஆற்றில் இறங்கிச் செல்லும் நிலை
இருந்தது. எனவே அப்பகுதி மக்கள் ஆற்றில் மூங்கில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு இரண்டு மனிதக் குரங்குகள் உதவி செய்தன. ஒரு நாள் பாலம் கட்டிய சோர்வில் இரண்டு குரங்குகளும் அருகில் இருந்த இலுப்பைக் காட்டு திடலில் ஓய்வு எடுத்தன. சிறிது நேரத்தில் அவை இரண்டும்
அதே இடத்தில் ஐக்கியமாகி விட்டன. ஆஞ்சநேயரே வந்து மக்களுக்கு உதவியதாகக் கருதிய மக்கள் அந்த இடத்தில் இரட்டை ஆஞ்சநேயர் கோயிலை எழுப்பினர். இங்குள்ள ஆஞ்சநேயர்களுக்கு வெண்ணெய் காப்பு சாத்தி வழிபட்டால், வெண்ணெய் உருகுவது போல இன்னல்கள் தீரும். சனி பகவானின் தாக்கம் குறையும்
எடுத்த காரியங்கள் வெற்றியாகும். எப்பேர்பட்ட தோஷங்களையும் விலக்கும் இரட்டை ஆஞ்சநேயர் வழிபாடு. அனைத்து ஆலயத்திலும் ஒரு மூலவர் மற்றும் ஒரு உற்சவர் இருப்பார்கள். ஆனால் ஒரு ஆலயத்தில் ஒரே தெய்வம் இரட்டையராக இருப்பது மிகவும் அரிது. அதனால் இங்கு வந்து
வழிபடுவோருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம், மற்றும் சனி தோஷம், ராகு, கேது, போன்ற தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் அறுவடைப் பணியைத் துவக்குவதற்கு முன் இவ்வாலயத்திற்கு வந்து இரட்டை ஆஞ்சநேயரைக்
வணங்குவார்கள். பிறகு தான் தங்களுடைய பணிகளை ஆரம்பிக்கின்றனர். அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதையொட்டி இரட்டை ஆஞ்சநேயருக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தொடர்ந்து மலர் மாலை, வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை ஆகிய
மாலைகள் அணிவிக்கப்பட்டு அர்ச்சனை, ஆராதனை நடைபெறுகிறது.
சென்று தரிசிப்போம்.
ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஸ்ரீ ராம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி
1941-42ல் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரிக்க தங்களோட ஊரில் பெரியவா தங்கப்போகிறர் என்று தெரிந்ததும் நாகப்பட்டணத்துக்காரர்களுக்கெல்லாம் பரமானந்தம். காரணம் வறட்சி. பூமி வறண்டு நிலமெல்லாம்
வெடித்திருந்தது. குளமெல்லாம் வத்தி மைதானம் மாதிரி ஆகியிருந்தது. பஞ்சமும், வறட்சியும் நிலவின விஷயம் பெரியவாளுக்கு தெரியவந்தாலும் தன் திட்டத்தை மாற்றிக் கொள்ளாமல் அங்கேதான் முகாமிடணும் என்று சொல்லி விட்டார். எங்கேயோ அலைந்து திரிந்து ஸ்நானம் செய்ய தேவையான ஜலத்தில் இருந்து மத்த
தேவைகளுக்குமான தீர்த்தத்தைக் கொண்டு வந்து தர ஏற்பாடு செய்து கொடுத்தனர் ஊர்காரர்கள். ரெண்டு மூணு நாள் கழிந்தது. நாலாவது நாள் காலை நீலாயதாக்ஷி அம்மன் கோவில் சிவாசார்யாரும் நிர்வாகியும் பெரியவாளை தரிசிக்க வந்தனர். அவர்களுடன் ஊர்ப் பெரிய மனிதர்களும் வந்திருந்தனர். எல்லார் முகத்திலும்
#MahaPeriyava
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Source: Moments of a lifetime
The parents of a mentally retarded child went to Kancheepuram and told Maha Periyaval that the child was in a terrible condition and prayed to Him for some improvement in the child’s
condition. A conversation, more or less similar to what I report below ensued.
His Holiness: “Does the child suffer from pain?”
The parents replied “No”
His Holiness: "Does he ask for or refuse food?”
Parents: “No he eats whatever is given to him”
His Holiness: Is he mentally
distressed by his abnormality?”
Parents: “No, he is not even aware that he is different from others.”
His Holiness: “Our sages have done tapas (Meditation) for years to attain the equanimity of mind which your child has, to be free of want, free of pain, free of hunger and free
#ஜோஸ்யம்_பாதி_ஹேஷ்யம்_மீதி
மகாபாரதத்தில் கௌரவர்கள் விதித்த நிபந்தனைப்படி, சூதாடித் தோற்ற பாண்டவர்கள், 12வருட வனவாசமும், ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் முடித்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி, தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பெற விரும்பினார்கள்.
உறவையும்,
நட்பையும், அமைதியையும் பெரிதும் விரும்பிய யுதிஷ்டிரன், தங்கள் கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துக் கூறி, தங்கள் ராஜ்ஜிய பாகத்தைப் பெற, பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை ராஜ தூதனாக அனுப்ப விரும்பினான். அவன் அறிவுக்கு எட்டியவரையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர, வேறு எவரும் இதற்குத்
தகுதியுடையவர்களாகப் படவில்லை. ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து தன் கருத்தைச் சொன்னான். ''தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணம் ஆனவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்ஜியம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும்
#நற்சிந்தனை
மகாபாரதப் போரில் பாண்டவர்கள் பக்கம் சில அரசர்களும் கௌரவர்கள் பக்கம் சில அரசர்களும் தத்தம் படைகளோடு இணைந்து போர் இட்டனர். ஆனால் உடுப்பி அரசர் யார் பக்கமும் சேராமல் இரு படைகளுக்கும் உணவு அளிக்கும் பொறுப்பை ஏற்றார். இரு பக்கப் படைகளுக்கும் உணவு தயாரித்துக் கொடுத்த
ஊடுப்பி அரசர் கிருஷ்ணர் சாப்பிடும் போது மட்டும் அருகில் இருந்து கவனிப்பார். தினமும் பாயாசம் வழங்குவார். கிருஷ்ணரோடு யுதிஷ்டிரரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம். போர் வீரர்கள் ஒருவருக்கு கூட சாப்பாடு இல்லாமல் ஒருநாளும் இருந்ததில்லை. எல்லா நாட்களும் உணவு சரியாக இருந்தது.
தினமும் எப்படி சரியாகக் கணித்து சமைக்கிறார் என நினைத்த யுதிஷ்டிரர் சமையல்காரர்களிடம் சென்று தன் சந்தேகத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள் எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என எங்கள் அரசர் தினமும் சொல்வார். அதன்படிதான் சமைப்போம் என்றனர். உடனே உடுப்பி அரசரிடம் சென்று யுதிஷ்டிரர் கேட்டார்
#பழமொழியும்_விளக்கமும்
'பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை'
குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்குக் கடன் கொடுத்தவர் குபேரன். ஆக பெருமாளின் குலம் பெருக
ரட்சித்த குபேரன் தான் பெருமாளின் குலசேகரன். பெருமாள் மக்களையும் ரட்சித்து குபேரனின் கடனை தீர்க்க ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீ வராகப் பெருமாள். அதானால் பன்றியாகிய ஸ்ரீ வராகப் பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின் மீது நின்ற கோலத்தில் அருள்
புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள். இது தான் 'பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை' என்ற விடுகதைக்கான விளக்கம்.
'தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்'
தானம்
#மத்தூரு_உக்ர_நரசிம்மர்_ஆலயம்
கர்நாடக மாநிலத்தில் பல நகரங்கள், கிராமங்களில் நரசிம்ம பெருமானுக்கு பல ஆலயங்கள் உள்ளன. நரசிம்ம பெருமான் அவற்றில் லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர் மற்றும் உக்ர நரசிம்மர் எனும் பெயரில் அவதாரம் எடுத்து அமர்ந்துள்ளார். இப்படியான ஓர் ஆலயம் உகர நரசிம்மர்
ஆலயம் எனும் பெயரில் மத்தூரில் வைத்யநாத ஸ்வாமி ஆலயத்தின் அருகில் உள்ளது. இதுவும் மஹாபாரத கதையுடன் இணைந்த கோவில் ஆகும். ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. துவாபர யுகத்தில் பல மைல் தூர பரப்பளவில் இருந்ததாக கூறப்படும் மத்தூர் அன்று அர்ஜூனாபுரி என்று அழைக்கப்பட்டது.
அங்கு மஹாபாரத போரின் இறுதி கட்ட முக்கியமான சண்டை பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடைபெற்று வந்த நேரம். அந்த நேரத்தில் இரு தரப்பிலும் பல உயிர்கள் செடிகொடிகள் வெட்டி சாய்ப்பதை போல வீழ்ந்து மரணம் அடைவதைக் கண்ட அர்ஜுனனின் மனம் தளர்ந்து போயிற்று. இறப்பவர்கள் எதிரிகளாக