#ஸ்ரீசக்ர_நவாவரண_பூஜை
ஸ்ரீசக்ர நவாவரண பூஜையின் பொருள் மிகவும் ஆழமானது மற்றும் இரகசியமானது. தேவி வழிபாட்டின் மிக உயர்ந்த வடிவமாகக் கருதப்படும் ஸ்ரீ சக்ர பூஜையானது ஒரு சிக்கலான வழிபாட்டு முறையை உள்ளடக்கியது, இது மயக்கும் மற்றும் சக்தி வாய்ந்தது. பஞ்சதசாக்ஷரி மந்திரம் என்பது ஒலியில்
அன்னையின் வெளிப்பாடு மற்றும் ஸ்ரீ சக்ர யந்திரம் கோடுகள் மற்றும் வடிவத்தின் மூலம் அவளை உணர்தல் ஆகும். ஸ்ரீசக்ரத்தை தரிசனம் செய்தாலே அனைத்து பாவங்களும் நீங்கி ஐஸ்வர்யம் கிடைக்கும் என்று பல்வேறு வேத நூல்கள் குறிப்பிடுகின்றன. 'நவாவரணம்' என்பது ஸ்ரீசக்ராவைக் கொண்ட ஒன்பது ஆவரணங்கள்
அல்லது அடைப்புகளைக் குறிக்கிறது. பரம அன்னை, ஸ்ரீ லலிதா மஹா திரிபுர சுந்தரி, பிந்து அல்லது ஸ்ரீசக்ராவின் மையப் புள்ளியில் வசிக்கிறார். இந்த பிந்துவில் தான், தேவி சிவபெருமானுடன் இணைகிறார், இது சிவ-சக்தி ஐக்யா என்று போற்றப்படுகிறது. ஸ்ரீசக்ர நவாவரண பூஜையின் செயல்முறை, எளிமையான
வார்த்தைகளில், 9 ஆவரணங்கள் மூலம் கட்டம் கட்டமாக முன்னேறி, இறுதியாக பரம அன்னை வசிக்கும் பிந்துவை அடைகிறது. ஸ்ரீசக்ரா தேவியின் சின்னம் மட்டுமல்ல, பிரபஞ்சம் மற்றும் மனித உடலின் ஒரு சிறிய பிரதிநிதித்துவம். ஸ்ரீசக்ரம் அனைத்து தெய்வங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது மற்றும் ஸ்ரீசக்ரத்தால்
வெளிப்படும் தெய்வீக சக்தியின் அளவு விவரிக்க முடியாதது. காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக, லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள். எனவே
பௌர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சுமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள். அவள்
வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும். காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள்
நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குத் தான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிசக்தி வாய்ந்த இந்த
ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதை, யோகினி தேவதை, பரிவாரம் தரும்
சக்தி தேவதை, மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9சித்தி தேவதைகள் உள்ளனர். பவுர்ணமி தினத்தன்று இந்த நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது
சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும். இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது. நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த
பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி
இருக்கும் போது புனிதமான பௌர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்ல, ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து
அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நாம் பெற்று விட்டால் நாம் பாக்கியசாலி தான். #ஸ்ரீமாத்ரேநமசர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி
1941-42ல் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரிக்க தங்களோட ஊரில் பெரியவா தங்கப்போகிறர் என்று தெரிந்ததும் நாகப்பட்டணத்துக்காரர்களுக்கெல்லாம் பரமானந்தம். காரணம் வறட்சி. பூமி வறண்டு நிலமெல்லாம்
வெடித்திருந்தது. குளமெல்லாம் வத்தி மைதானம் மாதிரி ஆகியிருந்தது. பஞ்சமும், வறட்சியும் நிலவின விஷயம் பெரியவாளுக்கு தெரியவந்தாலும் தன் திட்டத்தை மாற்றிக் கொள்ளாமல் அங்கேதான் முகாமிடணும் என்று சொல்லி விட்டார். எங்கேயோ அலைந்து திரிந்து ஸ்நானம் செய்ய தேவையான ஜலத்தில் இருந்து மத்த
தேவைகளுக்குமான தீர்த்தத்தைக் கொண்டு வந்து தர ஏற்பாடு செய்து கொடுத்தனர் ஊர்காரர்கள். ரெண்டு மூணு நாள் கழிந்தது. நாலாவது நாள் காலை நீலாயதாக்ஷி அம்மன் கோவில் சிவாசார்யாரும் நிர்வாகியும் பெரியவாளை தரிசிக்க வந்தனர். அவர்களுடன் ஊர்ப் பெரிய மனிதர்களும் வந்திருந்தனர். எல்லார் முகத்திலும்
#MahaPeriyava
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Source: Moments of a lifetime
The parents of a mentally retarded child went to Kancheepuram and told Maha Periyaval that the child was in a terrible condition and prayed to Him for some improvement in the child’s
condition. A conversation, more or less similar to what I report below ensued.
His Holiness: “Does the child suffer from pain?”
The parents replied “No”
His Holiness: "Does he ask for or refuse food?”
Parents: “No he eats whatever is given to him”
His Holiness: Is he mentally
distressed by his abnormality?”
Parents: “No, he is not even aware that he is different from others.”
His Holiness: “Our sages have done tapas (Meditation) for years to attain the equanimity of mind which your child has, to be free of want, free of pain, free of hunger and free
#ஜோஸ்யம்_பாதி_ஹேஷ்யம்_மீதி
மகாபாரதத்தில் கௌரவர்கள் விதித்த நிபந்தனைப்படி, சூதாடித் தோற்ற பாண்டவர்கள், 12வருட வனவாசமும், ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் முடித்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி, தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பெற விரும்பினார்கள்.
உறவையும்,
நட்பையும், அமைதியையும் பெரிதும் விரும்பிய யுதிஷ்டிரன், தங்கள் கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துக் கூறி, தங்கள் ராஜ்ஜிய பாகத்தைப் பெற, பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை ராஜ தூதனாக அனுப்ப விரும்பினான். அவன் அறிவுக்கு எட்டியவரையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர, வேறு எவரும் இதற்குத்
தகுதியுடையவர்களாகப் படவில்லை. ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து தன் கருத்தைச் சொன்னான். ''தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணம் ஆனவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்ஜியம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும்
#நற்சிந்தனை
மகாபாரதப் போரில் பாண்டவர்கள் பக்கம் சில அரசர்களும் கௌரவர்கள் பக்கம் சில அரசர்களும் தத்தம் படைகளோடு இணைந்து போர் இட்டனர். ஆனால் உடுப்பி அரசர் யார் பக்கமும் சேராமல் இரு படைகளுக்கும் உணவு அளிக்கும் பொறுப்பை ஏற்றார். இரு பக்கப் படைகளுக்கும் உணவு தயாரித்துக் கொடுத்த
ஊடுப்பி அரசர் கிருஷ்ணர் சாப்பிடும் போது மட்டும் அருகில் இருந்து கவனிப்பார். தினமும் பாயாசம் வழங்குவார். கிருஷ்ணரோடு யுதிஷ்டிரரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம். போர் வீரர்கள் ஒருவருக்கு கூட சாப்பாடு இல்லாமல் ஒருநாளும் இருந்ததில்லை. எல்லா நாட்களும் உணவு சரியாக இருந்தது.
தினமும் எப்படி சரியாகக் கணித்து சமைக்கிறார் என நினைத்த யுதிஷ்டிரர் சமையல்காரர்களிடம் சென்று தன் சந்தேகத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள் எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என எங்கள் அரசர் தினமும் சொல்வார். அதன்படிதான் சமைப்போம் என்றனர். உடனே உடுப்பி அரசரிடம் சென்று யுதிஷ்டிரர் கேட்டார்
#பழமொழியும்_விளக்கமும்
'பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை'
குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்குக் கடன் கொடுத்தவர் குபேரன். ஆக பெருமாளின் குலம் பெருக
ரட்சித்த குபேரன் தான் பெருமாளின் குலசேகரன். பெருமாள் மக்களையும் ரட்சித்து குபேரனின் கடனை தீர்க்க ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீ வராகப் பெருமாள். அதானால் பன்றியாகிய ஸ்ரீ வராகப் பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின் மீது நின்ற கோலத்தில் அருள்
புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள். இது தான் 'பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை' என்ற விடுகதைக்கான விளக்கம்.
'தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்'
தானம்
#மத்தூரு_உக்ர_நரசிம்மர்_ஆலயம்
கர்நாடக மாநிலத்தில் பல நகரங்கள், கிராமங்களில் நரசிம்ம பெருமானுக்கு பல ஆலயங்கள் உள்ளன. நரசிம்ம பெருமான் அவற்றில் லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர் மற்றும் உக்ர நரசிம்மர் எனும் பெயரில் அவதாரம் எடுத்து அமர்ந்துள்ளார். இப்படியான ஓர் ஆலயம் உகர நரசிம்மர்
ஆலயம் எனும் பெயரில் மத்தூரில் வைத்யநாத ஸ்வாமி ஆலயத்தின் அருகில் உள்ளது. இதுவும் மஹாபாரத கதையுடன் இணைந்த கோவில் ஆகும். ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. துவாபர யுகத்தில் பல மைல் தூர பரப்பளவில் இருந்ததாக கூறப்படும் மத்தூர் அன்று அர்ஜூனாபுரி என்று அழைக்கப்பட்டது.
அங்கு மஹாபாரத போரின் இறுதி கட்ட முக்கியமான சண்டை பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடைபெற்று வந்த நேரம். அந்த நேரத்தில் இரு தரப்பிலும் பல உயிர்கள் செடிகொடிகள் வெட்டி சாய்ப்பதை போல வீழ்ந்து மரணம் அடைவதைக் கண்ட அர்ஜுனனின் மனம் தளர்ந்து போயிற்று. இறப்பவர்கள் எதிரிகளாக