அன்பெழில் Profile picture
May 29 31 tweets 7 min read Twitter logo Read on Twitter
#சீர்காழி_சட்டைநாதர்_கோவில
சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கிமீ தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். திருஞானசம்பந்தர் சைவமும், தமிழும் தழைக்கவும், உலகம் உய்யவும் முருகப்பெருமானின் திருவவதாரமாக அவதரித்தவர். சீர்காழித் திருத்தலத்தில் சிவபாத இருதயர்-பகவதி Image
அம்மையாருக்கு மகனாகப் பிறந்த அவர், தன் 3 வயதில் சீர்காழி சட்டைநாதர் ஆலயத்திற்கு தந்தையுடன் சென்றார். தந்தை அங்குள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடிய போது, சம்பந்தருக்கு பசி ஏற்பட்டது. அவர் ஆலயத்தையும், குளத்தில் மூழ்கி நீராடிக் கொண்டிருந்த தந்தையையும் பார்த்தபடியே அழுது கொண்டு Image
இருந்தார். குழந்தையின் அழுகுரலை குளத்தினுள் மூழ்கி நீராடிய தந்தையால் உணர முடியவில்லை. ஆனால், குழந்தையின் அழுகுரலைக் கேட்ட சீர்காழி திருத்தல ஈசன் தோணியப்பர், பார்வதியிடம் குழந்தையின் பசிக்கு பால் கொடுக்குமாறு கூறினார். அவ்வண்ணமே அன்னை உமையவளும் ஞானப்பாலை சம்பந்தருக்கு ஊட்டி, அவர் Image
கண்ணீரைத் துடைத்து விட்டு, சிவபெருமானுடன் தரிசனம் கொடுத்து மறைந்தார். சிறிது நேரத்தில் குளித்து விட்டு வந்த சிவபாத இருதயர், சம்பந்தரின் வாயில் பால் எச்சிலைக் கண்டு ‘யார் தந்த பாலை உண்டாய்? சொல்' எனக் கேட்டு, சம்பந்தரை அடிக்க கையை ஓங்கினார். அப்போது சம்பந்தர், சிவனும்- பார்வதியும் Image
அம்மையப்பனாய் தரிசனம் தந்த திசையைக் காட்டி, ‘தோடுடைய செவியன் விடையேறி' என்று பதிகம் பாடலானார். அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி. மூன்று வயது குழந்தையின் பாடலைக் கேட்டு சொக்கி நின்றது கூட்டம். பிரளய காலத்தில் தோணியில் அம்மையும் அப்பனும் இங்கு வருவதால், இறைவன் தோணியப்பர் என்ற பெயரிலும் Image
அன்னை பெரியநாயகி என்ற பெயரிலும் அருள்கின்றனர். இவர்கள் இருவரும் ஆலய சிறு குன்றின் நடுப்பகுதியில் வீற்றிருக்கிறார்கள். இவர்களே சம்பந்தருக்கு காட்சி தந்து ஆட்கொண்டவர்கள். திருஞான சம்பந்தர் வாழ்ந்த வீடு, சீர்காழியில் திருஞானசம்பந்தர் தெருவில் அமைந்துள்ளது. தற்போது அந்த வீட்டில்
தேவாரப் பாடசாலை நடைபெற்று வருகிறது. சீர்காழியில் மூன்று மூர்த்தங்களாக ஈசன் அருள்பாலித்து வருகிறார். பிரம்மதேவர் வழிபட்ட பிரம்மபுரீஸ்வரர், கிழக்கு பார்த்த வண்ணம் அருள் பாலிக்கிறார். இவர் லிங்க வடிவில் காட்சித் தருகிறார். பிரம்மபுரீஸ்வரரின் வலதுபுறம் தனிச் சன்னிதியில் திருஞான Image
சம்பந்தர் உற்சவராக எழுந்தருளி உள்ளார். பிரம்மபுரீஸ்வரரின் கருவறைக்கு மேல்தளத்தில் கட்டு மலையில் தோணியப்பரும், பெரிய நாயகி அம்மனும் குரு மூர்த்த வடிவில் அருள்புரிகிறார்கள். தோணியப்பர், பெரியநாயகி அம்பாளின் பின்புறம் பிரம்மதேவர், விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமி என அனைவரும் சிவபெருமானை
வணங்கிய வண்ணம் திருக்கயிலைக் காட்சி பெறுகிறார்கள். இதற்கு அடுத்து சில படிகள் ஏறிச் சென்றால் மலையின் உச்சியில் சட்டைநாதர், சங்கம வடிவினராக உள்ளார். இரண்யனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தியின் உக்கிரம் குறையவில்லை. இதையடுத்து சிவபெருமான் நரசிம்மருடன் போரிட்டு, அவரது தோலை உரித்து சட்டையாக
போர்த்திக் கொண்டார். இதனால் இந்த இறைவனுக்கு ‘சட்டை நாதர்’ என்று பெயர். இவர் பைரவர்களின் தலைமையை ஏற்றவர். நின்ற திருக்கோலத்தில் வலது கரம் சின் முத்திரையைக் காட்டுகிறது. இடது திருக்கரம் கதையை பற்றி இருக்கிறது. இந்தத் திருக்கோவில் தேவஸ்தானம் சட்டைநாதர் தேவஸ்தானம் என்றே அழைகப்
படுகிறது. சீர்காழியில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் நிறைவில் #சட்டைநாதர்_உலா நள்ளிரவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டால், நாம் மனதில் நினைத்தவை அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. சீர்காழி சட்டைநாதர் ஆலயத்தில் ஆண்டு தோறும் சித்திரை மாத திருவாதிரை நன்னாள் காலையில்
தருமபுரம் ஆதீனம் குரு மகா சன்னிதானம், இளைய சன்னிதானம் முன்னிலையில், ஆயிரக்கணக்கான அடியவர்கள் சூழ ‘சம்பந்தருக்கு திருமுலைப் பால் ஊட்டிய ஐதீக விழா' நடைபெறுகிறது. அன்று மாலை சம்பந்தர் உற்சவமூர்த்தி, அருகில் உள்ள திருக் கோலக்கா சிவாலயம் சென்று நள்ளிரவில் திருக் கோலக்கா ஈசனிடம்
பொற்றாளமும், அந்த பொற்றாளத்தின் ஓசையை அத்தல ஓசை நாயகி அம்மனிடமும் பெற்று மறுநாள் காலையில் மீண்டும் சீர்காழி சட்டைநாதர் ஆலயம் திரும்புவார்.
சீர்காழிக்கு மேற்கில் சுமார் 2 கிமீ தொலைவில் உள்ளது திருக்கோலக்கா. 3 வயதில் தோடுடைய செவியன் பதிகம் பாடி ஈசனை ஆராதித்த சம்பந்தர், தன் சிவத்தல
யாத்திரையை தொடங்கினார். அப்போது அருகில் உள்ள திருக் கோலக்கா திருத்தலம் சென்றடைந் தார். திருக் கோலக்கா சென்ற சம்பந்தர் அங்கு ஈசன் சன்னிதியில் தனது சின்னஞ்சிறு கைகளைத் தட்டி கைத்தாளம் போட்டுக் கொண்டே, இறைவனை துதித்து பதிகம் பாடினார்.
‘மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக்
கோலக் காவுளான்
சடையும் பிறையுஞ்சாம்பற் பூச்சுங்கீழ்
உடையுங் கொண்ட வுருவ மென் கொலோ’
என்று தொடங்கிய அந்தப் பதிகத்தை சம்பந்தர் பாடிக் கொண்டிருந்த போது, அவரது பிஞ்சுக் கரங்கள், கைதாள மிட்டதன் காரணமாக சிவந்து போயின. பிஞ்சு கரங்கள் சிவக்க.. சிவக்க.. கைத்தாளம் இட்டு, தன் துதிபாடும்
குழந்தையை நினைத்து அகமகிழ்ந்த சிவபெருமான், ‘சம்பந்தரின் கை வலிக்குமே’ என்ற எண்ணத்தில் அவருக்கு உதவ முன்வந்தார்.
திருத்தாளமுடையார், ஓசை கொடுத்த நாயகி அதன்படி ‘நமசிவாய’ என்ற பஞ்சாட்சரம் எழுதப்பெற்ற பொற்றாளத்தை திருஞான சம்பந்தருக்கு, இத்தல ஈசன் கொடுத்து அருளினார். ஆனால் அந்த
பொற்றாளம் ஒலி எழுப்பவில்லை. உடனடியாக இத்தல அம்பிகையான அபீத குசாம்பாள் அந்த பொன் தாளத்திற்கு ஓசை கொடுத்தார். சம்பந்தருக்கு பொற்றாளம் கொடுத்து அருளியதால், அன்றுமுதல் இத்தல ஈசன் #திருத்தாளமுடையார் என்றும், #சப்தபுரீஸ்வரர் என்றும் அழைக்கப் படலானார். அதே போல் பொற்றாளத்திற்கு ஓசை
வழங்கிய அம்பிகை #ஓசைகொடுத்த_நாயகி என்றும் #தொனிபிரதாம்பாள் என்றும் பெயர் பெற்றார். சுந்தரர் இத்தல இறைவனைப் பற்றி பாடும் போது, சம்பந்தர் இங்குள்ள ஈசனிடம் பொற்றாளம் பெற்ற நிகழ்வை பதிந்துள்ளார். ‘நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தனுக்கு, உலகவர்முன் தாளம் ஈந்தவனை,
கோலக்கா வினிற் கண்டு கொண்டேனே' என்று போற்றிப் பாடுகிறார் சுந்தரர். ஓசை கொடுத்த நாயகி அம்மன் சன்னிதி வாசலில் பிள்ளையாரும், பழனி தண்டாயுத பாணியும் இருபுறமும் தனிச் சன்னிதியில் அருள் பாலிப்பது இத்தலத்தின் பெரும் சிறப்பு. சங்கீத மும்மூர்த்தி களான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர்,
சியாம சாஸ்திரிகளும் இத்தலம் வந்து வழி பட்டுள்ளனர். மந்தாகினி என்ற பெண்மணியின் மகனான விஸ்வநாதன் பிறவி ஊமை. அவனை அழைத்துக் கொண்டு இத்தலம் வந்து தீர்த்தத்தில் நீராடி, ஈசன்- அம்பாளை முறைப்படி வழிபாடு செய்து, பின்னர் இத்தல கொன்றை மரத்தையும் சுற்றி வந்து வழி பட்டுச் சென்றாளாம்
மந்தாகினி. சிறிது காலத்தில் மந்தாகினியின் மகன் விஸ்வநாதன் ‘அம்மா' என்றழைத்து பேச ஆரம்பித்தானாம். மகிழ்ந்த மந்தாகினி மீண்டும் இத்தலம் வந்து நன்றிப் பெருக்குடன், 42 கிராமில் தங்கத்தால் தாளம் செய்து அதனை இந்தக் கோவிலுக்கு அளித்துள்ளார். இதே போல் 12 வயதாகியும் பேச்சு வராத ஒரு சிறுவனை
அவனது பெற்றோர் இந்த தலத்திற்கு அழைத்து வந்து வழிபட்டு சென்றனர். பின்னர், இத்தலத்தில் சம்பந்தர் பாடிய, ‘மடையில் வாளை பாய’ என்ற பதிகத்தை வீட்டிற்குச் சென்று தினமும் பாராயணம் செய்து வந்துள்ளனர். இதன் பலனாக அந்தச் சிறுவன் பேசத் தொடங் கினான். அவனின் பெற்றோரும் பொன்னால் ஆன தாளத்தை
செய்து காணிக்கையாக இந்தக் கோவிலுக்கு அளித்துள்ளனர். இவ்வாறு அம்மனின் அருளால் பேச்சு வந்தவர்கள், தங்களின் முழு முகவரி யுடன் அந்த விவரத்தை ஆலய பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவேட்டின்படி பார்க்கும் போது, அம்மன் அருளால் பேச்சு வரப் பெற்றவர்களின் எண்ணிக்கை 600-க்கும் மேல்
என்பது ஓசை நாயகியின் அருளுக்கு சாட்சி. வாய் பேச முடியாத வர்கள், திக்குவாய் உள்ளவர்கள் மற்றும் பிறந்து மூன்று வருடமாகியும் பேச்சு வராத குழந்தை களை இந்தக் கோவிலுக்கு அழைத்து வந்து தாளபுரீஸ் வரருக்கு ‘அஷ்டோத் திரமும்’, ஓசை கொடுத்த நாயகிக்கு ‘வாக்வாதினி அர்ச்சனையும் செய்து, 2 லிட்டர்
தேனை அம்பாளுக்கு நிவேதனம் செய்து, நிவேதனம் செய்யப்பட்ட தேனை வாய் பேச முடியாதவர்களின் நாவில் தேய்த்து, ‘மடையில் வாளை பாய’ என்ற சம்பந்தரின் தேவாரப் பதிகத்தை தினமும் பாடிவர உடனடி பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். கருவறையில் கிழக்கு நோக்கிய சுவாமி யையும், அம்பாளையும் வணங்கி Image
ஆலயப் பிரகார வலம் வந்தால் விநாயகர், மகாலட்சுமி, வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான், சனிபகவான், சூரியன், சந்திரன், நால்வர் சன்னிதி, பைரவர் சன்னிதி களும் உள்ளன. சனிக் கிழமை மற்றும் அஷ்டமி திதி நாட் களின் அந்திப் பொழுதில், இத்தல சனி பகவானையும் பைரவரையும் தொடர்ச்சி யாக 8 முறை
வழிபாடு செய்து வர நவக்கிரக தோஷங்கள் யாவும் அகலும் என்கிறார்கள். திருக் கோலக்கா கோவிலில் ஓசை கொடுத்த நாயகி அம்மனுக்கு இரண்டு விக்ரகங்கள் உள்ளன. இதனை பழைய அம்மன், புதிய அம்மன் என்று அழைக்கிறார்கள். கருவறையில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மன் புதியவராம். கருவறையின் முன் Image
மண்டபத்தில் வடபுறமாய் தனிச் சன்னிதியில் எழுந்தருளி இருக்கும் ஓசை கொடுத்த நாயகி அம்மனை, பழைய அம்மன் என்கிறார்கள். முன்பு பழைய அம்மன் சிலையே கருவறையில் இருந்துள்ளது. ஓசை நாயகி அம்பிகையின் பழைய சிலையில் சிறிது பின்னம் ஏற்பட, ஊரார் தற்போது கருவறையில் உள்ள புதிய சிலையை பிரதிஷ்டை
செய்து விட்டு, பழைய சிலையை அகற்றி விட்டனர். அன்றிரவு ஊராரின் கனவில் வந்த அம்பிகை, ‘உங்கள் வீட்டில் யாருக்கேனும் உடலில் பின்னம் (ஊனம்) ஏற்பட்டால் அகற்றி விடுவீர்களா?’ எனக் கேட்க, தங்கள் தவறை உணர்ந்த ஊரார். பின்னம் ஏற்பட்ட பழைய சிலையையும், மூலஸ்தானத்தின் அருகிலேயே தனி இடத்தில்
வைத்து பூஜிக்கத் தொடங்கி விட்டனர். இத்தல அம்பாளுக்கு புடவை சாற்றுபவர்கள், கண்டிப்பாக இத்தல பழைய அம்மனுக்கும் புடவை சாற்றிட வேண்டும் என்பது ஐதீகம். சிதம்பரம் மற்றும் மயிலாடு துறையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது சீர்காழி சட்டைநாதர் ஆலயம். இங்கிருந்து மேற்கில்
2 கிலோமீட்டர் தொலைவில் திருக் கோலக்கா திருத்தலம் அமைந்து உள்ளது.
சென்று தரிசிப்போம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 31
#மகாபெரியவா
கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் பக்தி

1941-42ல் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுசரிக்க தங்களோட ஊரில் பெரியவா தங்கப்போகிறர் என்று தெரிந்ததும் நாகப்பட்டணத்துக்காரர்களுக்கெல்லாம் பரமானந்தம். காரணம் வறட்சி. பூமி வறண்டு நிலமெல்லாம் Image
வெடித்திருந்தது. குளமெல்லாம் வத்தி மைதானம் மாதிரி ஆகியிருந்தது. பஞ்சமும், வறட்சியும் நிலவின விஷயம் பெரியவாளுக்கு தெரியவந்தாலும் தன் திட்டத்தை மாற்றிக் கொள்ளாமல் அங்கேதான் முகாமிடணும் என்று சொல்லி விட்டார். எங்கேயோ அலைந்து திரிந்து ஸ்நானம் செய்ய தேவையான ஜலத்தில் இருந்து மத்த
தேவைகளுக்குமான தீர்த்தத்தைக் கொண்டு வந்து தர ஏற்பாடு செய்து கொடுத்தனர் ஊர்காரர்கள். ரெண்டு மூணு நாள் கழிந்தது. நாலாவது நாள் காலை நீலாயதாக்ஷி அம்மன் கோவில் சிவாசார்யாரும் நிர்வாகியும் பெரியவாளை தரிசிக்க வந்தனர். அவர்களுடன் ஊர்ப் பெரிய மனிதர்களும் வந்திருந்தனர். எல்லார் முகத்திலும்
Read 13 tweets
May 31
#MahaPeriyava
Author: Prof S.Kalyanaraman, Neurosurgeon, Chennai
Source: Moments of a lifetime

The parents of a mentally retarded child went to Kancheepuram and told Maha Periyaval that the child was in a terrible condition and prayed to Him for some improvement in the child’s Image
condition. A conversation, more or less similar to what I report below ensued.
His Holiness: “Does the child suffer from pain?”
The parents replied “No”

His Holiness: "Does he ask for or refuse food?”

Parents: “No he eats whatever is given to him”

His Holiness: Is he mentally
distressed by his abnormality?”

Parents: “No, he is not even aware that he is different from others.”

His Holiness: “Our sages have done tapas (Meditation) for years to attain the equanimity of mind which your child has, to be free of want, free of pain, free of hunger and free
Read 10 tweets
May 30
#ஜோஸ்யம்_பாதி_ஹேஷ்யம்_மீதி
மகாபாரதத்தில் கௌரவர்கள் விதித்த நிபந்தனைப்படி, சூதாடித் தோற்ற பாண்டவர்கள், 12வருட வனவாசமும், ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் முடித்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி, தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பெற விரும்பினார்கள்.
உறவையும், Image
நட்பையும், அமைதியையும் பெரிதும் விரும்பிய யுதிஷ்டிரன், தங்கள் கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துக் கூறி, தங்கள் ராஜ்ஜிய பாகத்தைப் பெற, பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை ராஜ தூதனாக அனுப்ப விரும்பினான். அவன் அறிவுக்கு எட்டியவரையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர, வேறு எவரும் இதற்குத்
தகுதியுடையவர்களாகப் படவில்லை. ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து தன் கருத்தைச் சொன்னான். ''தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணம் ஆனவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்ஜியம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும்
Read 25 tweets
May 30
#நற்சிந்தனை
மகாபாரதப் போரில் பாண்டவர்கள் பக்கம் சில அரசர்களும் கௌரவர்கள் பக்கம் சில அரசர்களும் தத்தம் படைகளோடு இணைந்து போர் இட்டனர். ஆனால் உடுப்பி அரசர் யார் பக்கமும் சேராமல் இரு படைகளுக்கும் உணவு அளிக்கும் பொறுப்பை ஏற்றார். இரு பக்கப் படைகளுக்கும் உணவு தயாரித்துக் கொடுத்த Image
ஊடுப்பி அரசர் கிருஷ்ணர் சாப்பிடும் போது மட்டும் அருகில் இருந்து கவனிப்பார். தினமும் பாயாசம் வழங்குவார். கிருஷ்ணரோடு யுதிஷ்டிரரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம். போர் வீரர்கள் ஒருவருக்கு கூட சாப்பாடு இல்லாமல் ஒருநாளும் இருந்ததில்லை. எல்லா நாட்களும் உணவு சரியாக இருந்தது.
தினமும் எப்படி சரியாகக் கணித்து சமைக்கிறார் என நினைத்த யுதிஷ்டிரர் சமையல்காரர்களிடம் சென்று தன் சந்தேகத்தைக் கேட்டார். அதற்கு அவர்கள் எத்தனை பேருக்கு சமைக்க வேண்டும் என எங்கள் அரசர் தினமும் சொல்வார். அதன்படிதான் சமைப்போம் என்றனர். உடனே உடுப்பி அரசரிடம் சென்று யுதிஷ்டிரர் கேட்டார்
Read 6 tweets
May 30
#பழமொழியும்_விளக்கமும்
'பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை'
குலசேகரன் என்றால் குலத்தை ரட்சிப்பவன் என்று பொருள். ஸ்ரீ என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்குக் கடன் கொடுத்தவர் குபேரன். ஆக பெருமாளின் குலம் பெருக Image
ரட்சித்த குபேரன் தான் பெருமாளின் குலசேகரன். பெருமாள் மக்களையும் ரட்சித்து குபேரனின் கடனை தீர்க்க ஒரு ஸ்தலம் தேவைப்பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீ வராகப் பெருமாள். அதானால் பன்றியாகிய ஸ்ரீ வராகப் பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின் மீது நின்ற கோலத்தில் அருள் Image
புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேரவேண்டிய பணத்தை கொடுத்து கடனை வென்றாராம் பெருமாள். இது தான் 'பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை' என்ற விடுகதைக்கான விளக்கம்.
'தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்'
தானம்
Read 6 tweets
May 30
#மத்தூரு_உக்ர_நரசிம்மர்_ஆலயம்
கர்நாடக மாநிலத்தில் பல நகரங்கள், கிராமங்களில் நரசிம்ம பெருமானுக்கு பல ஆலயங்கள் உள்ளன. நரசிம்ம பெருமான் அவற்றில் லட்சுமி நரசிம்மர், யோக நரசிம்மர் மற்றும் உக்ர நரசிம்மர் எனும் பெயரில் அவதாரம் எடுத்து அமர்ந்துள்ளார். இப்படியான ஓர் ஆலயம் உகர நரசிம்மர் Image
ஆலயம் எனும் பெயரில் மத்தூரில் வைத்யநாத ஸ்வாமி ஆலயத்தின் அருகில் உள்ளது. இதுவும் மஹாபாரத கதையுடன் இணைந்த கோவில் ஆகும். ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு. துவாபர யுகத்தில் பல மைல் தூர பரப்பளவில் இருந்ததாக கூறப்படும் மத்தூர் அன்று அர்ஜூனாபுரி என்று அழைக்கப்பட்டது. Image
அங்கு மஹாபாரத போரின் இறுதி கட்ட முக்கியமான சண்டை பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களுக்கு இடையே நடைபெற்று வந்த நேரம். அந்த நேரத்தில் இரு தரப்பிலும் பல உயிர்கள் செடிகொடிகள் வெட்டி சாய்ப்பதை போல வீழ்ந்து மரணம் அடைவதைக் கண்ட அர்ஜுனனின் மனம் தளர்ந்து போயிற்று. இறப்பவர்கள் எதிரிகளாக Image
Read 20 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(