#ஜோஸ்யம்_பாதி_ஹேஷ்யம்_மீதி
மகாபாரதத்தில் கௌரவர்கள் விதித்த நிபந்தனைப்படி, சூதாடித் தோற்ற பாண்டவர்கள், 12வருட வனவாசமும், ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் முடித்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி, தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பெற விரும்பினார்கள்.
உறவையும்,
நட்பையும், அமைதியையும் பெரிதும் விரும்பிய யுதிஷ்டிரன், தங்கள் கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துக் கூறி, தங்கள் ராஜ்ஜிய பாகத்தைப் பெற, பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை ராஜ தூதனாக அனுப்ப விரும்பினான். அவன் அறிவுக்கு எட்டியவரையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர, வேறு எவரும் இதற்குத்
தகுதியுடையவர்களாகப் படவில்லை. ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து தன் கருத்தைச் சொன்னான். ''தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணம் ஆனவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்ஜியம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும்
அர்ஜுனனும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் நானோ, அமைதியையும் சமாதானத்தையும் தான் விரும்புகிறேன். துரியோதனனிடம் பாண்டவர் தூதுவனாக நீ செல். நிபந்தனைப்படி எங்களுக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தைக் கேள். பாதி ராஜ்ஜியம் தர மறுத்தால், நமக்கென 5 சிறிய நாடுகள் கேள். அதுவும் இல்லையென்றால்
5 ஊர்களைக் கேள். அதையும் அவர்கள் தர மறுத்தால், 5 இல்லங்களையாவது கேள். எப்படியும் அதையாவது கேட்டு வாங்கி, போர் வராமல் தடுத்து, தர்மத்தை நிலைநாட்டு'' என்றான் தர்மன்.
''யுதிஷ்டிரா, நிச்சயம் தர்மத்தை நிலைநாட்ட என்னால் ஆனதைச் செய்கிறேன். உங்களுக்காகத் தூது போய், நீ கூறியபடி, 5
விரும்பவில்லை. சூதாட்ட மண்டபத்தில் தான் செய்த சபதம் நிறைவேற, போர் வந்தே ஆக வேண்டும் என அவன் கர்ஜித்தான். அதே கருத்தை கண்ணனிடம் அடக்கமாகத் தெரிவித்தான் அர்ஜுனன். அதன்பின் திரௌபதியையும் நகுலனையும் சந்தித்தான் கண்ணன். “அண்ணா, நீ தூது போவது தர்மமா? அதுவும் 5 வீடுகள் யாசகமாகக் கேட்கப்
போகிறாயாமே! அதை அவர்கள் தர சம்மதித்து விட்டால், அவிழ்ந்த என் கூந்தல் முடிவது எப்போது? உன் மீது ஆணையாக நாங்கள் செய்த சபதங்கள் என்னாவது?”எனக் கண்ணீர் வடித்தாள் திரௌபதி. நகுலனும் தர்மனின் எண்ணத்துக்கு உடன் படவில்லை. பாஞ்சாலி, நீங்கள் அனைவரும் என் மீது ஆணையிட்டுத் தான் சபதங்கள்
செய்திருக்கிறீர்கள். அதை நிறைவேற்றுவதில் உங்களைவிட என் பொறுப்பு தான் அதிகம். அவை நிச்சயம் நிறைவேறும். எப்படி என்று மட்டும் இப்போது கேட்காதே! நம்பிக்கையோடு பொறுத்திரு. நான் சகாதேவனைக் கண்டுவிட்டு, நாளை ஹஸ்தினாபுரம் புறப்படுகிறேன்.'' எனக் கூறி, சகாதேவன் குடில் நோக்கிப் புறப்பட்டான்
கண்ணன். அங்கே, அமைதியாக ஜோதிடச் சுவடிகளை ஆராய்ந்து கொண்டிருந்த சகாதேவன், கண்ணனைக் கண்டதும் பணிந்து, வரவேற்றான். ''ஸஹதேவா, இந்த உலகில் அமைதியை நிலைநாட்ட, நான் நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன். அதற்காக எல்லா உபாயங்களையும் கையாளப் போகிறேன். நீ சாஸ்திர வல்லுநன்; சிறந்த அறிவாளி. அமைதியை
விரும்புபவன். போரைத் தடுக்க ஏதாவது வழியிருக்கிறதா, சொல். அதையும் முயன்று பார்க்கிறேன்'' என்றான் கண்ணபிரான்.
சகாதேவன் சிரித்தான். ''போர் வராமல் தடுக்கத்தானே உபாயம் தேடுகிறாய்! நல்லதொரு உபாயம் உண்டு. சொல்கிறேன். செய்ய முடியுமா, பார்?'' என்றான். தர்மத்தை நிலைநாட்ட ஒரு குருக்ஷேத்திர
போரை உருவாக்கவே, கண்ணன் தூது செல்கிறான் என்பதை, அவனது ஆரூட சாஸ்திர அறிவால் ஊகிக்க முடிந்தது. அதனால், அவன் வேடிக்கையான வழி ஒன்றைச் சொன்னான். “கண்ணா, பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு,
எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்கு தூது போக முடியாமல் நான் உன்னைக் கட்டிப் போட்டால், போரை நிச்சயம் தடுக்கலாம்” என்றான். கண்ணன் உரக்கச் சிரித்தான். “என்னைக் கட்டுவதா? எப்படி முடியும் ஸஹதேவா?”
“ஏன்முடியாது?” என்று எதிர் சவால் விட்டான் சகாதேவன். அந்தக் கணமே, பல்லாயிரம்
கண்ணனாக வடிவெடுத்து மண்டபம் எங்கும் வியாபித்தான் ஸ்ரீகிருஷ்ணன். பார்த்த பர வெளி எல்லாம் கிருஷ்ணனாகத் தோன்றியது. இத்தனைப் பரிமாணங்களையும் எப்படிக் கட்டுவது? சகாதேவன் கலங்கவில்லை. பத்மாசனத்தில் அமர்ந்தான். கண்களை மூடினான். பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் ரூப, குண, நாமங்களை மனதில் தீவிரமாகத்
தியானித்தான். பக்திப் பரவச நிலையில் கண்ணனின் புகழை, அவன் நா ஒலித்தது. அப்போது பிறந்தது ஸஹதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்.
'ஓம் நமோ விஸ்வரூபாய விஸ்வ சித்யந்த ஹேதவே
விஸ்வேஸ்வராய விஸ்வாய கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய பரமானந்த ரூபினே
கிருஷ்ணாய கோபிநாதாய கோவிந்தாய நமோ நமஹ!
என்பதே அந்த மந்திரம். சகாதேவன் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க, கண்ணன் எடுத்த வடிவங்கள் ஒவ்வொன்றாய்க் கலந்து, ஒன்றோடொன்று இணைந்து ஒரேகண்ணனாகி, அவனும் சகாதேவனின் இதயத்துக்குள்ளே கட்டுண்டான்.
“ஸஹதேவா, நீ வென்றுவிட்டாய்! என் தாய் என்னை உரலில் கட்டினாள். பிருந்தாவன கோபியர்,
கட்டுத்தறியில் கட்டினார்கள். நீயோ இதயத்தில் கட்டிவிட்டாய். பக்தியால் கடவுளையும் கட்ட முடியும் என்று காட்டிவிட்டாய். போதும்! என் கட்டுக்களை அவிழ்த்து, என்னைப் போக விடு!” என்று கூறினான் கண்ணன். இப்போது சகாதேவன் பேரம் பேசினான். “கட்டுக்களை அவிழ்த்து விடுவதானால் எனக்கு ஒரு வரம் கொடு”
என்றான். “கேள், தருகிறேன்” என்றான் கண்ணன்.
“பாரதப் போரில் குந்தி புத்திரர்களான எங்கள் ஐவரையும் காப்பாற்றுவதாக வரம் கொடு” என்றான் சகாதேவன்.
கண்ணன் மீண்டும் உரக்கச் சிரித்தான். “ஸஹ தேவா! சற்று அவகாசம் தருகிறேன். ஏதாவது விட்டுப் போயிருந்தால், அதையும் வரத்தில் சேர்த்துக் கொண்டு
வாசகங்களைச் சரியாக அமைத்து வரத்தை மீண்டும் கேள், தருகிறேன்” என்றான் கண்ணன்.
“இல்லை கிருஷ்ணா! நீ என்னைக் குழப்பப் பார்க்கிறாய். நான் கேட்டது கேட்டதுதான். பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் எங்கள் ஐவரையும் எப்படியாவது காப்பாற்றிவிடு!”என்றான்.
“நல்லது ஸஹதேவா. வரம் மட்டுமல்ல
வாக்கும் அளிக்கிறேன். பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் உங்கள் ஐவரையும் காப்பாற்றுகிறேன். கட்டவிழ்த்து விடு” என்றான் கண்ணன். கண்ணனைக் கட்டவிழ்த்தான். கர்ணனோடு சேர்ந்து குந்திக்கு 6 புதல்வர்கள்என்பதை அறியாமல், குந்தி புத்திரர்கள் ஐவரை மட்டும் காப்பாற்று என வரம் கேட்டு விட்டானே
பாவம், கர்ணனைக் காப்பாற்ற இவனும் தவறிவிட்டானே! விதி யாரை விட்டது!என்று எண்ணியபடி கண்ணன் ஹஸ்தினாபுரம் சென்றான். கண்ணன் சங்கல்பப்படி, குருக்ஷேத்திரப் போர் தொடங்கியது. போரின் கடைசி நாட்களில் கர்ணனின் மரணம் நிகழ்ந்தது. அப்போது அவனுக்குக் கொடுத்த வாக்கின் படி யுத்த பூமியில் வந்து, தன்
மகன் கர்ணனை மடி மீது கிடத்தி, மகனே என்று கதறி அழுதாள் குந்தி. அப்போது தான் பாண்டவர்களுக்கு, கர்ணன் தங்கள் சகோதரன் என்பது தெரிந்தது. அனைவரும் கதறினர். கட்டுண்ட கண்ணனிடம் தான் கேட்ட வரமும், அப்போது அவன் தந்த வாய்ப்பும், தன் அறியாமையால் அந்த வாய்ப்பை இழந்து, ஐவரை மட்டுமே காப்பாற்ற
தான் கேட்ட வரமும், சகாதேவன் நினைவுக்கு வந்தன. தான் கற்ற சாஸ்திர அறிவு தன்னைக் காப்பாற்றவில்லை என்பதை உணர்ந்தான். ஊருக்கெல்லாம் ஜோசியமும் ஆருடமும் சொல்ல உதவிய சாஸ்திரம், எனக்குக் கூடப் பிறந்த சகோதரன் இன்னொருவன் இருக்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டவில்லையே?இதனை நான் கணிக்கத் தவறி
விட்டேனே. இது மாயை. கண்ணன் காட்டும்வழி ஒன்றே மெய். அதுவே உயர்ந்த சாஸ்திரம். இனி எந்தசாஸ்திரமும் வேண்டாம் என்று கோபத்தில் தன் ஜோதிடச் சுவடிகளை எல்லாம் கிழித்தெறிந்தான்.
அவற்றில் பல, போர்க்களத் தீயில் விழுந்து அழிந்தன. எஞ்சியவற்றை சகாதேவனின் சீடர்கள் எடுத்து, பல வருடங்கள் ஆராய்ச்சி
செய்து, விட்டுப் போன பல விஷயங்களை ஊகத்தால் சேர்த்து, ஸஹதேவனின் ஜோதிட சாஸ்திரத்துக்கு மறு உயிர் தந்தார்கள். மறைந்தவை மறைந்தே போயின.
அதனால்தான் இன்றும் ஆரூட ஜோஸ்ய சாஸ்திரத்தில் 'ஜோஸ்யம் பாதி, ஹேஷ்யம் மீதி’ என்றுசொல்கிறார்கள்!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#uthiramerur#Modi#NewParliamentBuilding#MahaPeriyava
While performing Bhumi Puja of the New Parliament building, our PM mentioned about a place known as Uthiramerur. There's some very good information about the Democratic Processes in ancient Bharateeya cities and villages!
Uthiramerur (TamilNadu) is a model of Democracy! Uthiramerur is situated in Kancheepuram District, about 90 kms from Chennai. It has a 1,250-year old history! There are three important Temples. The three Temples have a large number of inscriptions, notably those from the reigns
of Raja Raja Chola (985-1014 CE.) his son Rajendra Chola, and the Vijayanagar Emperor Krishnadeva Raya! During the period of Parantaka Chola [907-955 CE.] the village administration was honed into a perfect system, through elections by the people! In fact, inscriptions on
பல வருடங்களுக்கு முன் ஒருநாள் இரவு கொட்டித் தீர்த்துக் கொண்டு இருந்த மழையில், ஶ்ரீமடத்திலிருந்து ரெண்டு பேர், தொழிலதிபர் ஶ்ரீ A.C முத்தையாவின் வீட்டுக்கு வந்தார்கள்.
அவர்களை தகுந்த முறையில் வரவேற்றார்.
“என்ன விஷயம்? இத்தன மழைல”
“பெரியவா ஆக்ஞை! சிதம்பரத்ல நடராஜருக்கு வைரக்ரீடம் பண்றதுக்காக நிதி தெரட்டச் சொல்லி பெரியவா உத்தரவிட்டிருக்கா! எங்களால ஓரளவுதான் முடிஞ்சுது. இங்க மெட்ராஸ்ல சில பேரைப் பாத்துக் கேக்கலாம்னு இருக்கோம். அதுக்கு நீங்க
தான் ஸஹாயம் பண்ணணும்”
பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர் ஶ்ரீ முத்தையா.
“அதுக்கென்னங்க? பெரியவா உத்தரவிட்டாப் போறுமே! கட்டாயம் எனக்கு தெரிஞ்சவங்ககிட்ட சொல்றேன் எவ்வளவு நிதி தெரட்டி தர முடியுமோ என்னால ஆனதை செய்யறேன் மீதி எவ்வளவு தேவையோ, அத நானே குடுக்கறேன் இது, எங்களோட பாக்யம்”
#MahaPeriyava
Author: SriMatham Balu Mama
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol. 2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
A devotee who had been connected for long with the SriMatham was talking to Periyava. He was complaining about another
man saying, "That man is an utter kaarkotaka (the king of snakes)!"
After a moment’s silence,
Periyava said, "Do you mean he is good?"
The devotee could not understand. "I meant he is a kaarkotaka who has the dreadfully, poisonous venom..."
Periyava asked him: "You know
praatasmarana shloka?
Kaarkotakasya Naagasya Damayanthyaa Nalasya Cha
Rithuparnasya Raajarsheha Keerthanam Kalinaashanam
"Kaarkotaka, Damayanti, Nala, Rituparna just remembering them removes one of their sins. They are such punyavaans (sacred souls)."
#ஸ்ரீஅழகிய_மணவாளப்_பெருமாள் (#நம்பெருமாள்) #ஸ்ரீரங்கம் திரும்பிய நாள் இன்று! வைகாசி 17 (31.5.23)
652 ஆண்டுகளுக்கு முன்னர், பரீதாபி ஆண்டு(1371) இதே வைகாசி 17ஆம் நாள், ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் 48 ஆண்டுகள் அந்நிய வாசம் முடிந்து, ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளினார்! 1323 ஆம் ஆண்டு,
பங்குனி மாதம், ஊலுக்கான் என்னும் முஸ்லீம் மன்னன் (முகமது பின் துக்ளக்) படைகள் ஸ்ரீரங்கத்தை முற்றுகையிட்டன. ஸ்ரீரங்கநாதப் பெருமாள் உற்சவர், அழகிய மணவாளர் பங்குனி உற்சவம், எட்டாம் நாள் புறப்பாடு கண்டருளி, வட திருக் காவேரியில் உள்ள பன்றியாழ்வான் சந்நிதிக்கு எழுந்தருளியிருந்தார்.
அப்போது முஸ்லீம் படைகள் சமயபுரம் அருகே நெருங்கிவிட்டனர் என்று செய்தி வந்தது. உடனே அங்கு எழுந்தருளியிருந்த #ஸ்ரீபிள்ளைலோகாசார்யரும் மற்ற ஆசார்ய புருஷர்களும், பெருமாளுக்கு திரையிடச் செய்து, பெருமாளையும் உபய நாச்சிமார்களையும் பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு தெற்கு நோக்கிப்
#ஸ்ரீமத்வர் மத்வரின் இயற்பெயர், வாசுதேவர். கர்னாடகாவில் உடுப்பிக்கு அருகில் உள்ள பாஜகசேத்திரம் என்ற சிற்றூரில் பிறந்தார். 8 வயதிலேயே துறவியானார். துறவியானதும் அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர் #பூர்ணப்பிரக்ஞர். இவர் மெத்தப்படித்த துறவி என்பது மட்டும் அல்ல, அவர் உடல் பலத்திலும், மந்திர
சக்தியிலும், சூட்சும செய்கைகளிலும் கைதேர்ந்தவர். அநுமன், பீமன் இவர்களுக்கு பிறகு வாயு தேவனின் அவதாரமாக உதித்தவர் மத்வர். அதனால் அவருக்கு முக்கியப் பிராணன் என்றொரு பெயரும் உண்டு. அவரது 37 நூல்களில் இவர் #ஆனந்ததீர்த்தர் என்றே அறியப்படுகிறார். மத்வர் முதலில் அத்வைத வேதாந்தம் படித்து
அதில் மகிழ்ச்சி அடையாமல் தானே இந்துமத நூல்களுக்கு உரைகள் சொல்லலானார். தன்னுடைய முந்தைய பிறவிகளில் கற்றறிந்ததையே சொல்வதாகக் கூறினார். அவருடைய சொல்வன்மையும், பேச்சுத் திறனும், கருத்து சுதந்திரமும் அவரை மாணவர் என்ற நிலையிலிருந்து எங்கு படித்தாரோ அதே மடத்தின் தலைவராகும் அளவுக்கு
#அன்னமாச்சாரியார் ஆந்திரா மாநிலத்தில் தாள்ளபாக்கம் என்ற ஊரில், சூரி - அக்கலாம்பா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். #சுபத்ரா_கல்யாணம் என்ற நூலை இயற்றிய தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவரான #திம்மக்கா அன்னமாச்சாரியாரின் மனைவியாவார்.
அன்னமாச்சாரியார் தென்னிந்திய இசையில்
தோற்றுவித்த மரபுகள் பல, பின்வந்தோரால் வளர்க்கப்பட்டு விருத்தியடைந்தன. கோவில்களில் முதன்முதலில் பஜனை மரபினைத் தொகுத்து வழங்கிய சிறப்பு இவருக்குண்டு. பல்லவி, அநுபல்லவி, சரணம் போன்றவை இவரால் உருவாக்கப்பட்டவை. இவர் 32,000க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை கர்நாடக இசை முறையில் இயற்றி
உள்ளார். இவரது பெரும்பாலான பாடல்கள் செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டு திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலில் உள்ள உண்டிக்கு எதிரில் சிறு அறை ஒன்றில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக மறைத்து வைக்கப் பட்டிருந்தன, பின்னர் 1922ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இவரது பாடல்களில் சுமார் 12,000