அன்பெழில் Profile picture
May 31 20 tweets 6 min read Twitter logo Read on Twitter
#ஸ்ரீஅழகிய_மணவாளப்_பெருமாள் (#நம்பெருமாள்) #ஸ்ரீரங்கம் திரும்பிய நாள் இன்று! வைகாசி 17 (31.5.23)
652 ஆண்டுகளுக்கு முன்னர், பரீதாபி ஆண்டு(1371) இதே வைகாசி 17ஆம் நாள், ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் 48 ஆண்டுகள் அந்நிய வாசம் முடிந்து, ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளினார்! 1323 ஆம் ஆண்டு, Image
பங்குனி மாதம், ஊலுக்கான் என்னும் முஸ்லீம் மன்னன் (முகமது பின் துக்ளக்) படைகள் ஸ்ரீரங்கத்தை முற்றுகையிட்டன. ஸ்ரீரங்கநாதப் பெருமாள் உற்சவர், அழகிய மணவாளர் பங்குனி உற்சவம், எட்டாம் நாள் புறப்பாடு கண்டருளி, வட திருக் காவேரியில் உள்ள பன்றியாழ்வான் சந்நிதிக்கு எழுந்தருளியிருந்தார்.
அப்போது முஸ்லீம் படைகள் சமயபுரம் அருகே நெருங்கிவிட்டனர் என்று செய்தி வந்தது. உடனே அங்கு எழுந்தருளியிருந்த #ஸ்ரீபிள்ளைலோகாசார்யரும் மற்ற ஆசார்ய புருஷர்களும், பெருமாளுக்கு திரையிடச் செய்து, பெருமாளையும் உபய நாச்சிமார்களையும் பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு தெற்கு நோக்கிப் Image
புறப்பட்டு விட்டனர். அதே சமயம், கோயிலுக்குள் பெரிய பெருமாள் கர்பக்கிரஹத்தை கற்கள் வைத்து சுவர் எழுப்பி மூடிவிட்டனர். ஸ்ரீரங்கநாயகி தாயார் விக்ரஹத்தை, தாயார் சந்நிதி வில்வ மரத்தடியில் பூமிக்குள் மறைத்து வைத்து விட்டுச் சென்றனர். அங்கே பன்றியாழ்வான் சந்நிதி மண்டபத்தில் பெரும்
திரளாகக் கூடியிருந்த 12000 பக்தர்களுக்கு இவை எதுவும் தெரியாது. பெருமாளுக்கு சாத்துப்படி அலங்காரத்திற்க்காக திரையிடப்பட்டு உள்ளது என நினைத்து காத்து இருந்தனர். சிறிது நேரத்தில் முஸ்லீம் படைகள் ஸ்ரீரங்கத்தை நோக்கி அந்த வழியாக வந்தன. கூடியிருந்த பக்தர்கள் அவர்களை உள்ளே விடாமல்
துணிந்து எதிர்த்து நின்றனர். முஸ்லீம் படைகள் ஈவு, இரக்கமின்றி அவர்கள் அனைவரையும் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். அரங்கனைக் காக்க, அடியார்கள் தம் இன்னுயிர் நீத்த இந்த நிகழ்வு, #பன்றியாழ்வான்_சந்நிதியில்_பன்னீராயிரம்_வைஷ்ணவர்கள்_முடிதிருத்திய_கலகம் என்று அறியப்படுகிறது! தெற்கு நோக்கிச்
சென்ற பிள்ளைலோகாசார்யர் கோஷ்டி, மதுரைக்கு அருகே உள்ள ஜோதிஷ்குடி என்னும் இடத்துக்குச் சென்றனர். அழகிய மணவாளனையும்,
உபய நாச்சிமார்களையும், அங்குள்ள ஆனைமலையின் பின்புறம் உள்ள குகையில் எழுந்தருளப்பண்ணி சில ஆண்டுகள் அங்கேயே இருந்தனர். பிள்ளைலோகாசார்யர், அங்கு நித்ய திருவாராதனைகளை
நடத்தி வந்தார். சிறிது காலத்தில் அங்கேயே அவர் பரமபதம் அடைந்தார்.
அவரது சீடர்கள் அழகிய மணவாளனை எடுத்துக் கொண்டு, மேலும் தெற்கே சென்று, மலையாள தேசம் வழியாக, கர்நாடகா (மேல்கோட்டை) சென்று,
அங்கிருந்து, சந்திரகிரி (திருப்பதி) திருமலை சென்றனர். சுமார் பத்து இடங்களில் ஓரிடத்திலிருந்து, Image
மற்றொரு இடமோ/தேசமோ எழுந்தருளி இருந்தார்.(காரணம் ஆங்காங்கே நடைபெற்ற ஆட்சி மாற்றமே) பிள்ளைலோகாசார்யரின் சிஷ்யர்கள் மிகுந்த சிரமப்பட்டு அழகிய மணவாளப்பெருமாளை ஏளப்பள்ளிக் கொண்டு பல இடங்களுக்கும் செல்லும் போது, பலர் உயிரழந்தனர் (மூப்பு/நோய் காரணமாக). திருத்தாழ்வரை தாசர் வம்சத்தார் ல் Image
மூன்று பேர் மட்டுமே உயிரோடு இருந்தனர். குருகூர்தாசர், அவரது மைத்துனர் வில்லிபுத்தூர் தாசர் மற்றும் குருகூர்தாசரின் மகன் ஸ்ரீராமதாசர் என்னும் மூவர் மட்டுமே. இவர்களில் குருகூர்தாசர் பெருமாளுக்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாது, துருக்கியரிடம் இருந்து, பெருமாளைக் காக்கவேண்டி மலை Image
முகட்டில் இருந்து இறங்கும் போது, கீழே சரிந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதனைக் கண்ட வில்லிபுத்தூர் தாசர், மூத்தவர் இறந்ததும் தானும் இறந்தார். ஸ்ரீராமதாசர் என்னும் மூன்றாம் கொடவர் மட்டும் 18 வருடங்கள், தனியே சந்திரகிரி காட்டில் பேசுவதற்கு துணை இல்லாமல், சித்த ப்ரம்மை
பிடித்து அரங்கனோடு மட்டும் பேசிக் கொண்டு, காட்டில் கிடைத்த கனி/கிழங்குகளை அரங்கனுக்கு நைவேத்யம் செய்து, தானும் உயிர் வாழ்ந்து, அரங்கனுக்கு எந்த விதத்திலும் குறை ஏற்படாதவாறு கைங்கர்யம் செய்தார்! இறுதியில் அவர் சந்திரகிரி காட்டில் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு அங்கே சென்று, Image
விஜயநகரப் பேரரசரான கம்பன்னர் அழகிய மணவாளன் திருமலை கொண்டு சேர்த்தார். திருமலையில் த்வஜஸ்தம்பத்துக்கு முன் வலதுபுறம் உள்ள ரங்க மண்டபத்தில் தான் நம்பெருமாள் பல ஆண்டுகள் இருந்தார். செஞ்சியை ஆண்ட கோபண்ண உடையார் திருமலையில் இருந்து, அழகிய மணவாளப் பெருமாளை ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளப்
பண்ணினார். 48 வருடங்கள் கழித்து, 1371-பரிதாபி ஆண்டு, வைகாசி மாதம் 17 ஆம் தேதி நம்பெருமாள் மீண்டும் திருவரங்கம் திரும்பினார். அப்போது 48 வருடங்களுக்கு முன்னர் கோயிலில் பணியாற்றிய அர்ச்சகர்கள்/பணியாளர்கள் யாரும் உயிருடன் இல்லை. ஸ்ரீரங்கத்தில் இருந்த பெரும்பாலான ஸ்ரீவைஷ்ணவர்களும்
இல்லை. இடைக்காலத்தில், வேறோரு உற்சவரைப் பிரதிஷ்டை செய்து, அவரையே அழகிய மணவாளப் பெருமாளாக ஆராதித்துக் கொண்டு இருந்தனர். எனவே 48 ஆண்டுகள் கழித்துத் திரும்பிய பெருமாளை, ஆதிபெருமாள் என்று யாரும் நம்பத் தயாராக இல்லை. திருத்தாழ்வரை தாசரான ராமதாசர் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்தபோது
பார்த்தவர்கள் யாரும் அச்சமயத்தில் இல்லை. எனவே பெருமாளை கோவிலுக்குள் உடனே அனுமதிக்கவில்லை! அது மட்டுமல்லாமல், திருத்தாழ்வரை ஸ்ரீராமதாசரை, குழப்பம் விளைவிக்க வந்தவர் என்று கேவலப்படுத்தினர். ஆர்யபடாள் வாசலுக்கு வெளியே, குலசேகரன் திருச்சுற்றில்உள்ள திருமங்கை ஆழ்வார் மண்டபத்தில்
எழுந்தருளச் செய்தார்கள். பெருமாளுக்கு வஸ்திரம் துவைத்துத் தரும் ஈரங்கொல்லி (வண்ணார்) குடும்பத்தைச் சேர்ந்த, கண் பார்வை இழந்த 93 வயது பெரியவர் ஒருவர் கோயிலுக்கு வந்து பெருமாளின் ஈரவாடைத் தீர்த்தம் மூலம் தாம், வந்துள்ள பெருமாள், ஆதி அழகியமணவாளரா, இல்லையா என்று சொல்ல முடியும்
என்றார். மண்டபத்தில் எழுந்தருளி இருந்த பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து, அர்ச்சகர் ஈரவாடைத் தீர்த்தத்தை அவருக்கு வழங்க அதை ஸ்வீகரித்து, தீர்த்தத்தின் வாசனையை உணர்ந்து,
“இவரே நம் பெருமாள்!”
“நம் பெருமாள்!!”
“நம்பெருமாள்!!!”
என்று உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டாடினார். Image
அந்த ஈரங்கொல்லி கொண்டாடிய #நம்பெருமாள் என்னும் பெயரே அழகிய மணவாளருக்கு இன்று வரை நிலைத்து விட்டது! இடைக்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட உற்சவப் பெருமாள் #திருவரங்க_மாளிகையார் என்னும் திருநாமத்தோடு, நம்பெருமாளுக்கு இடது புறத்தில் சேவை சாதிக்கிறார்!
ரங்கா ரங்கா ரங்கா Image
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 2
#கிருஷ்ண_கமலம்
நாகலிங்க மலரில் எப்படி சிவபெருமான் வாசம் செய்கிறாரோ அதே போல ஸ்ரீ கிருஷ்ணர் வாசம் செய்யக் கூடிய மலர் கிருஷ்ண கமலம். இந்த பூவின் அமைப்பு நடுவில் திரெளபதி, மும்மூர்த்திகள், பஞ்ச பாண்டவர்கள், 100 கெளரவர்கள் என அனைவரும் கிருஷ்ணரோடு சேர்ந்து வாசம் செய்யக் கூடிய மலர். ImageImage
ஸ்ரீ கிருஷ்ணர் கையில் உள்ள சுதர்சன சக்கரத்துக்கு நிகராக இந்த மலரை குறிப்பிடுகிறார்கள். இந்த பூவின் பெயர் கிருஷ்ண கமலம், இதனை மஹாபாரத பூ, பஞ்ச பாண்டவர் பூ என்றும் அழைப்பார்கள். இதன் ஆங்கில பெயர் #PassionFlowet ஸ்ரீ கிருஷ்ணரை இஷ்ட தெய்வமாக கொண்டவர்கள், கிருஷ்ணரை நடு நாயகனாக வைத்து Image
வழிபடுவர்கள் இந்த செடியை கண்டிப்பாக வீட்டில் வளர்க்கவும். வீட்டிற்குள் அதிகப்படியான நேர்மையான ஆற்றலை ஈர்க்கும் (Positive Vibrations) நறுமணமான மலர். இது ஒரு கொடி வகையை சேர்ந்தது. சிறிய தொட்டியில் வைத்தும் வளர்க்கலாம். அதிக இடவசதி, அதிகமாக வெயில் தேவையில்லை. இந்த பூவை கிருஷ்ணருக்கு Image
Read 4 tweets
Jun 2
#அஹோபிலம் #அஹோபலம்
ஆந்திர மாநிலத்தில் உள்ள அஹோபிலம் பெருமாளின் பெருமையை திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.
பக்தன் பிரகலாதனுக்கு அருள்பாலிக்க ஹிரண்யகசிபுவைத் தன் தொடையில் வைத்து வயிற்றைக் கிழித்துக் குடலை உருவி மாலையாகப் போட்டுக் கொண்டவர், நரசிம்மர். பின்னர் கோபம் Image
தணிந்து, கையில் படிந்த ரத்தக் கறையை அருகில் உள்ள ஓடை நீரில் சுத்தம் செய்து கொண்டார். அந்த ஓடையில் அவர் கை வைத்த இடம் என்னும் இடம் சென்னிறமாகக் காணப்படுவதைப் பார்க்க முடிகிறது. அந்த இடத்தினை ஒட்டிக் கொஞ்சம் முன்னும் பின்னும் பார்த்தால் ஒடை நீர் சாதாரணமாக இருக்கும். இந்த அற்புதத்தை
இன்றும் காணலாம். நவ நரசிம்மரின் பெயர்கள்,
பார்க்கவ நரசிம்மர்,
காரஞ்ச நரசிம்மர்,
யோக நரசிம்மர்,
சத்ரவட நரசிம்மர்,
க்ரோடாகார நரசிம்மர்,
மாலோல நரசிம்மர்,
அஹோபில நரசிம்மர்,
பாவன நரசிம்மர்,
ஜ்வாலா நரசிம்மர் ஆகியவை ஆகும். இத்தலத்தில் தாயாருடன் இருக்கும் பெருமாள் மாலோலன். Image
Read 5 tweets
Jun 2
#வில்லுடையான்பட்டு_சிவசுப்ரமணிய_சுவாமி_கோவில்
முருகன் வள்ளி- தெய்வானையுடன் கையில் வில்லும், அம்பும் தரித்த நிலையில் காட்சி அளிக்கிறார். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ள கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. #முருகு என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். முருகன் என்றால் Image
இளமையான அழகன் என்று கூறலாம். முருகு என்பதிலுள்ள மூன்று எழுத்துக்களும் (ம்+உ, ர்+உ, க்+உ - முருகு) உகார எழுத்துக்களாகும். இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியவற்றைக் குறிக்கின்றன. நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஆறு வகை சமயங்களில் ஒன்றான #கௌமாரம் என்பதன் தெய்வமும் Image
முருகனே ஆவார். சிவன் தன் நெற்றிக் கண்ணில் இருந்து வெளிப்படுத்திய நெருப்பு காமனை எரித்த பின்னர், வாயு பகவானால் சரவணப் பொய்கை ஆற்றில் விடப்பட்டது. அந்த நெருப்பு 6 குழந்தைகளாக உருவாகி கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கும் பொழுது, Image
Read 24 tweets
Jun 2
#MahaPeriyava
Narrated by Sri Balu Mama
Source: E-book In the Presence of the Divine Vol II
There was a very poor old lady by the name Parvati. She made her living by selling Kolam (rangoli) books. She had drawn many different kinds of kolam, printed it all in a little book and Image
went from door to door selling it, priced it at fifty paise. She made a rupeeor two every day and managed somehow. She was among those that put up in thatched huts near Periyava’s camp. She did not compromise with her orthodoxy. She would follow the camp. A cluster of huts would
come up near the camp and such devotees would stay on near the camp for Periyava’s darśan. Every day she was given a small quantity of rice grain and along with a brinjal or a handful of green vegetable which she procured, she would cook herself one frugal meal. She came to give
Read 26 tweets
Jun 2
#மகாபெரியவா அருள்வாக்கு

சத்தியம் என்றால் வாக்கும் மனமும் ஒன்று படுவது மட்டுமல்ல. நல்ல மனதில் எழுகின்ற நல்ல எண்ணங்களை மட்டும் வாக்கில் வெளிப்படுத்துவதே சத்தியம். நல்ல விளைவுகளைத் தரும் நல்ல சொற்களைப் பேசுவதே சத்தியம்.

தர்மம், நீதி ஆகிய குணங்களைக் கொண்டவனே பண்புடையவன். எந்த Image
சூழலிலும் தர்மத்தைப் பின்பற்றுபவனே உயர்ந்த மனிதன்.
சமூகசேவை எண்ணம் கொண்டவர்கள் குடும்பத்தையும் கடமையுணர்வோடு பாதுகாக்க வேண்டும்.
இறைவனை எண்ணிச் செய்யும் செயல்கள் எளிதாக நிறைவேறும். வழிபாட்டிற்கான பலன் நிச்சயம் நம்மைத் தேடி வரும். அறியாமல் செய்தாலும் கூட அதற்கான நன்மை நமக்குண்டு.
லாபநஷ்டக் கணக்கு மட்டுமே பார்த்துக் கொண்டு வியாபாரம் நடத்தக் கூடாது. பிறருக்கு உதவியாக வாழ வேண்டும் என்னும் லட்சிய நோக்கமும் வியாபாரத்திற்கு மிகவும் அவசியம்.
எடுத்துச் சொல்வதை விட, எடுத்துக் காட்டாகவே வாழ்வது தான் அதிக சக்தி வாய்ந்ததாகும். உபதேசம் செய்வது எளிதானது. ஆனால், அதன்
Read 4 tweets
Jun 1
#uthiramerur #Modi #NewParliamentBuilding #MahaPeriyava
While performing Bhumi Puja of the New Parliament building, our PM mentioned about a place known as Uthiramerur. There's some very good information about the Democratic Processes in ancient Bharateeya cities and villages! Image
Uthiramerur (TamilNadu) is a model of Democracy! Uthiramerur is situated in Kancheepuram District, about 90 kms from Chennai. It has a 1,250-year old history! There are three important Temples. The three Temples have a large number of inscriptions, notably those from the reigns Image
of Raja Raja Chola (985-1014 CE.) his son Rajendra Chola, and the Vijayanagar Emperor Krishnadeva Raya! During the period of Parantaka Chola [907-955 CE.] the village administration was honed into a perfect system, through elections by the people! In fact, inscriptions on Image
Read 17 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(