மாநிலங்களவையில் அண்ணாவின் கன்னிப் பேச்சு ஒரு முக்கியமான பதிவு.
‘யதா ராஜா ததா ப்ரஜா என்று சொன்ன அறிஞர்கள் வாழ்ந்த காஞ்சிபுரத்திலிருந்து வருகிறேன்’ என்றார்.
பிரிவினைக் கோரிக்கையை கைவிடாத அந்தக் காலத்திலும், ஸம்ஸ்க்ருத மேற்கோள் காட்ட அவர் தயங்கவில்லை.
ஹிந்தியை எதிர்க்கும் போதுகூட..
‘இதை #ராஜாஜி யிடம் விட்டு விடலாம். காலில் முள்தைத்து விட்டது. இந்த முள்ளை எடுக்க பெரியாரிடம் விட்டால் காலை வெட்டி விடலாம் என்பார். காலுக்கு பாதகமில்லாமல் முள்ளை எடுக்க ராஜாஜிக்குத்தான் தெரியும்’
என்று பொதுக்கூட்ட மேடையில் போட்டுடைத்தவர் #அண்ணா
இதைவிட சுவாரஸ்யமான செய்தி கூட உண்டு…
#திராவிட இயக்கத்தின் நங்கூரமான இடஒதுக்கீடு கொள்கையிலும் மாறுதல் செய்ய விரும்பினார் #அண்ணா
‘முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழைகளாக இருந்தால், அவர்களுக்கும் கல்வியில் முன்னுரிமை தர வேண்டும்’ என்று #அண்ணா, சட்டமன்றத்தில் உரையாற்றினார்.
#திராவிட இயக்க வரலாற்றில் #அண்ணா ஏற்படுத்திய ஆரோக்கியமான மாறுதல்களை #கருணாநிதி புறந்தள்ளி விட்டார்.
தன்னுடைய கட்சி தோல்வி அடையும் போதெல்லாம் பிராமணர்கள் மீது கசப்பைக் காட்டும் கருணாநிதிக்கும், பக்குவப்பட்ட முதலமைச்சராக இருந்த அண்ணாவுக்கும் எவ்வளவு வித்தியாசம்!
தளபதி அண்ணாதுரை மீதும் தம்பிகள் மீதும் நம்பிக்கை இல்லாத காரணத்தால், மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டார் ஈ.வெ.ரா. அது மட்டுமல்ல, கொள்கைக்கும் சொத்துக்கும் மணியம்மைதான் வாரிசு என்று அறிவித்தார்.
ஈ.வெ.ரா.விடமிருந்து பிரிந்தவர்கள், அண்ணாவின் தலைமையில் ஒன்று கூடி ஆலோசித்தார்கள்.
சொத்துக்காக சண்டை போடுவதில்லை என்றும், புதிய அமைப்பை உருவாக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
புதிய கட்சியின் பெயர் ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ #திமுக என்று தீர்மானிக்கப் பட்டது.
அங்கே இருந்தவர்களால் ‘கட்சியின் பெயரில் ‘ர்’ (திராவிடர்) இல்லையே?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.
தம்பிகளுக்கு விளக்கம் அளித்த அண்ணா, ‘திராவிடர்’ என்பது இனத்தைக் குறிக்கிறது. ‘திராவிட’ என்பது ஒரு பிரதேசத்தைக் குறிக்கிறது என்றார்.
இந்தியர்களின் தொடர்ந்த தோல்விக்கு மேலும் சில காரணங்கள்…
அந்நியப்படை இந்தியாவுக்குள் நுழைய வழி - கைபர் கணவாய் அல்லது கோமால் கணவாயாக இருந்தது.
சீனர்களைப் போல நீள நெடுஞ்சுவர்கூடத் தேவை யில்லை - இந்த இரண்டு கணவாய்களைக் காக்க சிறு கோட்டைகளைக்கூட எழுப்ப வில்லை இந்திய மன்னர்கள்.
‘உங்களைக் காக்க நான் ஏன் கோட்டை எழுப்ப வேண்டும்?’ என்கிற ரீதியில் காழ்ப்பு உணர்ச்சியும் விதண்டாவாதமும் அன்று மலிந்திருந்ததுதான் காரணம். இத்தனைக்கும் வடபுலத்து அரசர்கள் பலர் உறவினர்கள்!
பொதுவாகவே பல இந்திய மன்னர் களுக்குப் போர் என்பது வீரம் கலந்த ஒரு பொழுதுபோக்காகவே இருந்தது.
ஆகவே, தற்காப்புக்காக யுத்தம் செய்வதோடு நிறுத்திக் கொண்டார்கள். ‘வலியச் சென்று தாக்குவதே சிறந்த தற்காப்பு’ என்ற உண்மையை அவர்கள் புரிந்துகொள்ளவே யில்லை.
அண்டை நாட்டுப் படையினரின் கதை வேறு. மலைகளையும் நதிகளையும் கடந்து அவர்கள் இந்தியாவுக்கு வரக் காரணம் -
கால்டுவெல் வகையறாவைப் பற்றி விளங்கிக்கொள்ள அராபியப் பழங்கதை ஒன்றைச் சொல்கிறேன்.
பாலைவனக் குளிரில் சிக்காமல் பாதுகாப்பாகக் கூடாரத்தில் இருந்தான் அந்த அராபியன். தனக்குக் கிடைத்த வசதிக்காக இறைவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டான் அவன். பிறகு தூங்கிப் போனான்.
நடு இரவில் தூக்கம் கலைந்து பார்த்த போது, கூடாரத்திற்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஒட்டகம் உள்ளே மூக்கை நுழைத்திருப்பதை அவன் கண்டான்.
‘அடடா, ஒட்டகத்திற்குக் குளிர் தாங்கவில்லை’ என்று பரிதாபப்பட்டு, தன் கால்களை முடக்கிக் கொண்டு ஒட்டகத்தின் முகம் உள்ளே வருவதற்கு இடம் கொடுத்தான்.
மீண்டும் தூக்கம்.
தூக்கத்தில் அவன் ஆழ்ந்திருந்தபோது, முகத்தில் தொடங்கி, கழுத்து, உடல், கால்கள் என்று எல்லாவற்றையும் உள்ளே கொண்டு வந்துவிட்டது ஒட்டகம். அடிக்கடி புரண்டு படுத்த அராபியன் மெதுவாக வெளியேற்றப்பட்டான்.