NBT Stats 📊 Profile picture
Exploring #India through data. You have reached this far, please hit the follow button 😊

Jun 2, 2023, 5 tweets

அண்ணாவை மறந்த #திமுக (2)

மாநிலங்களவையில் அண்ணாவின் கன்னிப் பேச்சு ஒரு முக்கியமான பதிவு.

‘யதா ராஜா ததா ப்ரஜா என்று சொன்ன அறிஞர்கள் வாழ்ந்த காஞ்சிபுரத்திலிருந்து வருகிறேன்’ என்றார்.

பிரிவினைக் கோரிக்கையை கைவிடாத அந்தக் காலத்திலும், ஸம்ஸ்க்ருத மேற்கோள் காட்ட அவர் தயங்கவில்லை.

ஹிந்தியை எதிர்க்கும் போதுகூட..

‘இதை #ராஜாஜி யிடம் விட்டு விடலாம். காலில் முள்தைத்து விட்டது. இந்த முள்ளை எடுக்க பெரியாரிடம் விட்டால் காலை வெட்டி விடலாம் என்பார். காலுக்கு பாதகமில்லாமல் முள்ளை எடுக்க ராஜாஜிக்குத்தான் தெரியும்’
என்று பொதுக்கூட்ட மேடையில் போட்டுடைத்தவர் #அண்ணா

இதைவிட சுவாரஸ்யமான செய்தி கூட உண்டு…

#திராவிட இயக்கத்தின் நங்கூரமான இடஒதுக்கீடு கொள்கையிலும் மாறுதல் செய்ய விரும்பினார் #அண்ணா

‘முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஏழைகளாக இருந்தால், அவர்களுக்கும் கல்வியில் முன்னுரிமை தர வேண்டும்’ என்று #அண்ணா, சட்டமன்றத்தில் உரையாற்றினார்.

#திராவிட இயக்க வரலாற்றில் #அண்ணா ஏற்படுத்திய ஆரோக்கியமான மாறுதல்களை #கருணாநிதி புறந்தள்ளி விட்டார்.

தன்னுடைய கட்சி தோல்வி அடையும் போதெல்லாம் பிராமணர்கள் மீது கசப்பைக் காட்டும் கருணாநிதிக்கும், பக்குவப்பட்ட முதலமைச்சராக இருந்த அண்ணாவுக்கும் எவ்வளவு வித்தியாசம்!

அண்ணாவின் அணுகுமுறையை கருணாநிதி மறந்து விட்டார்.

இதயத்தைப் பதவியிடமும், பெட்டிச் சாவியை குடும்பத்தாரிடமும் கொடுத்தவரிடம் பெருந்தன்மையை எதிர்பார்ப்பது வீண் வேலை.

#திராவிடமாயை #சுப்பு #கலைஞர்100 #HBDFatherOfCorruption

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling