#சனிபகவான்
மன்னன் மகேந்திரன் தன் நாட்டில் வாழும் பொற்கொல்லர் ஒருவரை அழைத்து, அவரிடம் சில ரத்தினக் கற்களை கொடுத்து, இதற்கு என்ன விலை கொடுக்கலாம், மதிப்பு போட்டுச் சொல்லுங்கள் என்றான். அதைப் பெற்றுகொண்ட பொற்கொல்லர், மன்னா! இவற்றை எடுத்து சென்று சோதித்து, மதிப்பு நிர்ணயித்து நாளை
வந்து சொல்கிறேன் என்று கூறி, ரத்தினங்களுடன் வீட்டுக்கு வந்தார். அப்போது அந்தி சாயும் நேரம். அதனால் தன் வீட்டுச் சுவரிலுள்ள முக்கோண விளக்கு மாடத்தில் எரிந்து கொண்டிருந்த அகல் விளக்கின் வெளிச்சத்தில், தன் கையில் இருந்த ரத்தினக் கற்களைத் திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தார்
விளக்கு மாடச் சுவரின்மேல் ஒரு கொக்கின் படம் வரையப்பட்டிருந்தது. திடீரென அந்த கொக்கு சித்திரத்திற்கு உயிரும் உடலும் வந்தது. அது அவரது கையிலிருந்த ரத்தினங்களைக் கொத்தி விழுங்கிவிட்டு, மீண்டும் முன் போலவே சித்திரமாக மாறிவிட்டது. இதைக் கண்டு அதிர்ச்சியுற்ற அந்த பொற் கொல்லர் உடனே தன்
ஜாதகத்தையும் பஞ்சாங்கத்தையும் எடுத்துப் பார்த்தார். அன்று அவருக்கு ஏழரைஆண்டு சனி ஆரம்பம் என்று தெரிந்தது. நாளை மன்னர் முகத்தில் எப்படி விழிப்ப து? நடந்ததைச் சொன்னால் நம்புவாரா என்று யோசித்து, மிகவும் வருந்தி அன்று இரவே காட்டுக்குச் சென்றுவிட்டார். மறுநாள், பொற்கொல்லர் மன்னர்
கொடுத்த ரத்தினங்களுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டார் என்று நாட்டு மக்கள் பேசிக் கொண்டனர். இச்செய்தி மன்னனுக்கும் எட்டியது. அந்தப் பொற்கொல்லரின் மனைவி, மகளைக் கைது செய்து சிறையில் அடைத்தான் மன்னன். பொற்கொல்லரைப் பிடிக்க அரச காவலாளிகள் காட்டுக்குள் சென்றனர். ஆனாலும் ஏழரை ஆண்டுகளாக அவரை
பிடிக்க முடியவில்லை. ஏழரைச் சனி முடியும் வேளை வந்தது. அவ்வளவு காலமும் பசி பட்டினியுடனும் தாடி மீசையுடனும் காட்டில் திரிந்ததால் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருந்த அந்த பொற்கொல்லர் தன் வீட்டுக்கு வந்தார். குளித்து முடித்து சனி பகவானை தியானித்துவிட்டு சுவரில் வரையப்பட்டிருந்த கொக்கு
சித்திரத்தைப் பார்த்துக் கைநீட்டிய படி, "சித்திரத்துக் கொக்கே, ரத்தினத்தைக் கக்கு'' என்றார். என்ன ஆச்சரியம்! அந்த சித்திரக் கொக்குக்கு உயிர் வந்து, ரத்தினங்களை அவரது கையில் கக்கிவிட்டு மீண்டும் சுவர் சித்திரமாக மாறியது. அப்போது இரவு சோதனைக்காக மாறுவே டத்தில் அங்கு வந்த மன்னன்,
மறைவில் நின்று நடந்தவற்றைப் பார்த்தான். உடனே பொற்கொல்லரை வணங்கி நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டதுடன் அவருக்கு தன் நாட்டின் முதலமைச்சர் பதவியும் கொடுத்தான். அவரது மகளையும் மணந்து கொண்டான். இதைத்தான் "சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை" என்று சொல்லுவார்கள்.
இதுதான் சனீஸ்வர பகவானின் மகத்துவம்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ராகுகாலம் தெரியும். அது போல கேது காலத்துக்கு என்ன பெயர்? அது #எமகண்டம்.
ராகு- கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு நாட்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராகு- கேதுவுக்குக் கிழமைகள் இல்லை. ஆனால் அவை பலமில்லாத கிரகங்கள் என்று பொருளல்ல. நவகிரகங்களில் புதனும் அதை
விடச் செவ்வாயும் அதைவிடச் சனியும் அதைவிட குருவும் அதைவிட சுக்கிரனும் அதைவிட சூரியனும் வரிசைப்படி ஒருவரைவிட மற்றவர் பலம் பெற்ற கிரகங்கள். அந்த சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பலத்தை நிர்ணயம் செய் திருக்கிறார்கள். ராகு-
கேதுவுக்கு தனி நாள், கிழமை ஒதுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணிநேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம். ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லையென்றும் கிரகங்களின் நிழல் என்றும் விண்வெளி
#காலகாலேஸ்வரர்_கோவில் கோயம்புத்தூர். 1,000-2000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் இது. இங்குள்ள குரு பகவான் உலகிலேயே மிக உயரமானது. இந்தத் திருக்கோவில் எமனின் சாபம் நீக்கிய சிறப்பு வாய்ந்த தலம் என்ற சிறப்பு பெற்றது. அபிஷேக பிரியரான சிவனுக்கு, கோவில்களில் வித விதமான அபிஷேகம் செய்து பூஜை
செய்வர். சிவன் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் சில தலங்களில் மூலிகையால் தைலாபிஷேகம் செய்வர். ஆனால், கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் உள்ள காலகாலேஸ்வரர் கோவிலில் சிவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. மார்க்கண்டேயரின் ஆயுளை முடிக்கச் சென்ற எமதர்மன், தவறுதலாக சிவன் மீது பாசக்கயிறை
வீசினான். கோபம் கொண்ட சிவன், பணியை சரியாக செய்யாத எமனின் பதவியை பறித்து சாதாரண மனிதனாக பிறக்கும்படி செய்துவிட்டார். பூலோகம் வந்த எமன் விமோசனம் பெறுவதற்காக பல தலங்களில் சிவனை வழிபட்டு வந்தார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது, சிவ வழிபாடு செய்ய எண்ணினார். ஆனால், இங்கு லிங்க வடிவம்
#நற்சிந்தனை
சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் சந்தேகம். வாலியை வீழ்த்தும் அளவு வலிமை ராமனுக்கு உள்ளதா எனச் சோதிக்க நினைத்தான். அதனால் ராமனுக்கு ஒரு பரீட்சை வைத்தான்.
அருகில் இருந்த வனத்துக்கு அழைத்துச் சென்ற சுக்ரீவன், 'ராமா! வாலி தன் வில்லில் இருந்து பாணம் போட்டால், அது
பெருத்த சால மரத்தையே துளைக்கும். அவ்வாறு உன்னால் பாணம் போட முடியுமா?' என்று கேட்டான். ராமன் புன்னகை செய்தபடி தன் கோதண்டத்தில் பாணத்தைப் பூட்டி எய்தான். அது வரிசையாக ஏழு சால மரங்களைத் துளைத்துக் கொண்டு சென்றது. அதை கண்டபின் தான் சுக்ரீவனுக்கு ராமனின் வீரத்தின் மேல் நம்பிக்கை
உண்டானது. இவ்வாறு பலவிதமான சாகசங்களைப் புரிந்து தன் பக்தர்களுக்குத் தன் மேல் நம்பிக்கையை உண்டாக்கி அதை வளர்ப்பவராகத் இறைவன் திகழ்வதால் #ப்ரத்யய: என்றழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 94-வது திருநாமம். தன்நம்பிக்கையை நாம் இழக்கும் போதெல்லாம் “ப்ரத்யயாய நம:”என்ற திருநாமத்தைச்
#foodforthought
When Akbar saw a Brahmin begging in a pitiable condition, he sarcastically said towards Birbal - 'Birbal! These are your Brahmins! Who is known as Brahmadeva. They are beggars. Birbal did not say anything at that time. But when Akbar went to the palace, Birbal
came back and asked the Brahmin why he begged. Brahmin said - 'I have no money, jewellery, land and I am not much educated either. Hence, begging is my compulsion for the maintenance of the family.
Birbal asked - How much is received in a day by begging?
The Brahmin replied - Six
to eight coins.
Birbal said - If you get some work, will you stop begging?
Brahmin asked - What should I do?
Birbal said - You will have to take bath in Brahmamuhurt and wear clean clothes and chant 101 Gayatri Mantra daily and for this you will get 10 coins daily. The Brahmin
#அழகாபுத்தூர்_படிக்காசுநாதர்_கோவில்
சங்கு சக்கரம் ஏந்திய முருகப் பெருமானின் அபூர்வத் தோற்றம் இங்கு! கும்பகோணம் திருவாரூர் சாலையில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அழகாபுத்தூர். இத்தலத்து இறைவன் திருநாமம் படிக்காசுநாதர். இறைவியின் திருநாமம் அழகம்மை.
முருகப்பெருமான்
இத்தலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார். ஒரு சமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன், அசுரர்களை அழிக்க முருகனை அனுப்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர்.
திருமால் முருகனுக்கு தனது சங்கு,
சக்கரத்தை கொடுத்தார்.
ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார்.
இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக உள்ளது.
இந்திர மயில்
#பூரி_ஸ்ரீஜெகன்நாதர் கோவிலில் குடி கொண்டிருக்கும் விஷ்ணு பகவான், தினமும் காலையில் எழுந்து ராமேஸ்வரம் சென்று விட்டு, மதிய உணவுக்கு மீண்டும் பூரி ஜெகந்நாதர் ஆலயத்துக்கு வந்து விடுவதாக ஓர் ஐதீகம். அதனால் தினந்தோறும் இந்த கோவிலில் இறைவனுக்காக விருந்து மிகவும் தடபுடலாக செய்யப்
படுகிறது. இந்த விருந்து சமைக்கும் முறை சற்று வித்தியாசமானது. கோயிலின் சமையலறை உலகிலேயே மிகப் பெரியது. பாரம்பரியம் மிக்கது. 56 வகையான சைவ உணவுகள் வெங்காயம், பூண்டு இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன. கங்கா மற்றும் யமுனை எனப்படும் சமையலறைக்கு அருகில் உள்ள இரண்டு தீர்த்தக் கிணறுகளில்
இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்தி மண் பானைகளில் மட்டுமே சமையல் செய்யப்படுகிறது. இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு மண் பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும்போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில்