நாம் இணையத்தில் பகிரும் சாதாரணப் புகைப்படங்களை #AI உதவியுடன் நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றி செக்ஸ்டார்சன் குழுக்கள் மிரட்டிப் பணம் பறிப்பதாக #FBI எச்சரிக்கை விடுத்துள்ளது, திடீரென நமக்கு வீடியோ கால் செய்து ஒரு வினாடி நமது முகத்தை மட்டும் ரெகார்ட் செய்துகொண்டு
அதைப் பார்ன் வீடியோக்களில் செருகி பணம் பறிப்பது தான் நடைமுறை. ஆனால் தற்போது நமது இணையப் புகைப்படங்களை Deep nude AI செயலியில் அப்லோட் செய்தால், நமது முக வடிவம், கண் அளவு, தோல் நிறத்திற்கு ஏற்ப மிகக் கச்சிதமான ஒரு நிர்வாண உடலைத் தயாரித்து, பல்வேறு கோணங்களில்
நம் முகத்தை அதனுடன் இணைத்து விடும். அலுவலக ஓய்வறையில் தான் எடுத்த சாதாரண புகைப்படத்தை, நிர்வாணமாக மாற்றி மோசடியாளர்கள் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறார்கள். பெண் தர மறுக்க, புகைப்படத்தை நண்பர்கள், குடும்பம், அலுவலகத் தலைமை எல்லோருக்கும் அனுப்பி விட, பெரும் மன உளைச்சலுடன்
பெண்ணின் வேலையும் பறிபோனது. காரணம் AI உருவாக்கும் படங்கள் உண்மையை விட அவ்வளவு நம்பகமாய் இருக்கும்.
சரி ! சமூக வலைதளங்களில் புகைப்படம் பகிராமல் இருந்தால் இதிலிருந்து தப்ப முடியுமா ?
நிச்சயமாக இல்லை ! திருட்டு நாய்களுக்கு தேவை எனில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டில் இருந்து கூட
எடுப்பார்கள், நமது புகைப்படமே தேவை இல்லாமல் நம்மை வரையும் தொழில்நுட்பம் இனி வந்து விடும். ஆகவே இந்த AI Deep nude தொழில்நுட்பம் இருப்பதை அறிந்து கொள்வதும், நம் வீட்டில் இருக்கும் பதின் வயது குழந்தைகளிடம் இது குறித்த உரையாடல்களை நிகழ்த்துவதும் தான் இதை எதிர்கொள்ள சிறந்த வழி.
இனி எந்த நிர்வாணப் புகைப்படம் வந்தாலும் அது AI போலி எனக் கடந்து செல்லும் நிலையை உருவாக்குங்கள். அது உண்மையான புகைப்படமாக இருப்பினும், பலர் வாழ்வு காப்பாற்றப்படும்.
#depression மரணம் போல. Inevitable. வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் எல்லோரையும் நிச்சயம் தாக்கும். ஆயிரம் கோடி பிசினஸ் தோல்வி போன்ற பெரும் காரணம் எல்லாம் தேவையில்லை. முடியுதிர்தல், முயன்றும் குறைக்க முடியாத உடல் எடை, வாய் துர்நாற்றம், செக்ஸ் புரிதல் இல்லாத துணை என மிக மிகச் சிறிய
காரணங்கள் கூட இருக்கலாம். டிப்ரஷனின் உயிர் ஓவர் திங்கிங். இப்படி ஆயிட்டா… அப்படி ஆயிட்டா என சதா நேரமும் மூளையைக் குடைந்து அரித்தெடுக்கும்.
நண்பனுக்கு கன்னத்தில் ஒரு பெரிய தழும்பு இருந்தது. அழகானவன், ஆனாலும் தனது காதல் தோல்விகளுக்கு அத்தழும்பு தான் காரணம் என்ற மன அழுத்தம்
வாழ்நாள் முழுவதும் இருந்தது. இருந்தது என்றால் அவன் இப்போது இல்லை என அர்த்தம். ஆகவே அவரவர் இடத்தில் இருந்து பார்த்தால் தான் மன அழுத்தத்தின் கனம் புரியும்.
மன அழுத்தத்துக்கு பெண் ஆண் என பாகுபாடெல்லாம் இல்லை. Infact பெண்ணின் பெரும்பான்மை மன அழுத்தங்களுக்கு ஆணும்,