பாலின அரசியல் சமகால அரசியல் டெக்னாலஜி ரசனை என பல முகங்கள் கொண்ட கவிதைகள் அணிவகுத்து நிற்கின்றன இந்த புத்தகத்தில்.
என்னை மிகவும் கவர்ந்த ஒரு கவிதையை இங்கே பகிர்கிறேன்,
(2)
இது மட்டுமல்ல,
"யாருமில்லாத இடத்திலும்
யாரும் கைவிடப்படுவதில்லை"
"நெருப்பை விழுங்கத் தெரியாத கவிஞர்களை
நேரம் விழுங்கிவிடுகிறது"
"தம் பிடித்து குளத்தைத் தாண்டும் பாவனையில்
கடலைத் தாண்ட முடியுமா?"
"ஒரு நினைவூட்டலில் வற்றிவிட்ட காதல் நீரூற்றுக்காக"
(3)
"எப்போதும் என் காதலனாக இருக்க வேண்டும்
முழுக்க பரிச்சயமாகிவிடாமல்
முழு கவனத்தை கேட்காமல்"
"எதுவும் எழுதப்படாத
வெற்று சிலேட்டை
என் இதயமென
எடுத்து மாட்டிக்கொள்கிறேன்"
"அவனை பிடித்திருக்கிறது என்று சொன்னால்
வெட்கத்துடன் சிரிக்கிறான்
(4)
அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது"
"அவன் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் இப்படியான சந்தர்ப்பங்களில் வார்த்தைகள் பதிலாகக் கிடைக்கின்றன எனக்குக் கிடைப்பதென்னவோ எமோஜிக்கள் தாம் வட்ட முகங்களோடான மஞ்சள் முக எமோஜிகள்"
(5)
"காதலில் யாருக்குமே
உண்மை பிடிப்பதில்லை ஆனால் காதலிப்பதை நிறுத்திக்கொள்ளும் கணத்தில்
பொய் பேசுவதைப் பற்றி முறையிடுகிறார்கள்"
இந்த வரிகள் எல்லாம் இந்த கவிதை தொகுப்பில் என் கவனத்தை ஈர்த்தவை, இதே போன்று பிடித்தமான வரிகள் இன்னும் பல உள்ளது. இவை சில உதாரணங்கள் மட்டும் தான்.
(6)
ஒரு கவிஞரின் உலகில் பயணிக்க சிறந்த வார்த்தைகளில் திளைப்பதே மிக முக்கியம், அப்படி தேர்ந்தெடுத்த வார்த்தைகளின் கோர்வை இந்த புத்தகம்.
"பெருந்தேவி" அவர்களின் "அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது" கவிதைத் தொகுப்பு.
#BookTwitter #Thread #ReadingCommunity
தமிழில் உங்கள் வாசிப்பை துவங்க வசதியான 100 (+/-) பக்கங்கள் கொண்ட மிக எளிமையான அவசியம் படிக்க வேண்டிய சில தமிழ் புத்தகங்களை கீழே தொகுக்கிறேன். எளிதில் ஒரு புத்தகத்தை படித்து முடித்த திருப்தியுடன் உங்கள் வாசிப்பு பயணம் துவங்கட்டும்.
(1)
புத்தகம் : பெத்தவன் (நெடுங்கதை)
எழுத்தாளர் : இமையம்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கங்கள் : 40
(2)
புத்தகம் : நூறு நாற்காலிகள்
- ஒரு கலெக்டரின் உண்மைக் கதை (சிறுகதை)
வானில் மிதக்கும் மேகங்களில் நமக்கு பிடித்த உருவங்களை பொருத்திப் பார்த்து விளையாடாதவர்கள் யாரும் இருக்க முடியாது. நம்மைப் போல மேகங்களில் மிதந்து வரும் உருவங்களுடன் விளையாடி சிரித்து மகிழும் மென் வண்ணத்துப்பூச்சி இவள்.
(1)
முதுகில் சதை திரண்டு பாரத்தைக் கொடுத்தாலும், நீண்ட நெடிய வாழ்க்கை பயணக் கனவுகளை சுமந்த அவள், அதனுடன் சேர்த்தே ஒவ்வொரு அடியிலும் அந்த பயணத்தில் வர இருந்த வலிகளை தாங்கும் வலிமையையும் சுமந்தாள்.
தன் கனவுகளை மட்டுமல்ல தன்னை சுற்றி இருந்தவர்களையும் சேர்த்தே சுமந்தாள்.
(2)
கணேசன், அலங்காரவேலன், அப்புனு, ஜோதி, தவமணி, தனக்கே தனக்கான ரேவதி என அனைவரையும் சுற்றி இருந்த அவள் கனவுகள் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து நொருங்கிய பின்னும், உற்ற தோழியாக உடன் இருந்த உடன்பிறவா சகோதரி மல்லிகா அக்கா, அவர் மகன் சிவக்குமார் என வாழ்வில் ஏதோ ஒரு பிணைப்புடன் ஓடினாள்.
(3)
உலகப்பொதுமறை திருக்குறள் மனித வாழ்விற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் சொல்கிறது. மூன்று பால்கள் கொண்டு அமைந்த திருக்குறளில், அறத்துப்பால் பொருட்பால் என இவ்விரு பால்களிலும் உள்ள குறள்களை பள்ளியிலும் பல பொது இடங்களிலும் படித்திருப்போம்.
(1)
மனித வாழ்வில் இன்றியமையாத இன்பம் குறித்து பேசும் காமத்துப்பால் வெகுஜன மக்களால் பெரிதாய் பேசப்படுதில்லை, காரணம் காமம் பேசாப்பொருள் என சமூகம் கற்பித்து வைத்துள்ளது தான்.
காமம் இப்படி பேசாப்பொருளாக இருப்பது தான் வாழ்வில் அடிப்படையான பல பிரச்சனைகளுக்கு காரணம்.
(2)
மிக முக்கியமாக எதிர்ப்பாலினம் குறித்து தவறான பார்வையையும் குறுகிய மனநிலையையும் ஏற்படுத்துகிறது. இந்த மாயை விலகி ஆரோக்கியமான மனநிலையுடன் வாழ்வை அணுக முதலில் காமம் குறித்த புரிதலை உள்வாங்க வேண்டும்.
(3)
சாரா ஸ்டீவர்ட் ஜான்சன் (Sarah Stewart Johnson) அவர்கள் அடிப்படையில் ஒரு உயிரியலாளர் (Biologist) ஜியோ கெமிஸ்ட் (Geochemist) வானியலாளர் (astronomer) மற்றும் ப்ளானடரி சயின்டிஸ்ட் (planetary scientist) ஆவார். செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் உள்ளதா
(1)
எனத் தேடும் பணியில் உலக நாடுகள் ஒவ்வொன்றும் என்னென்ன செய்துள்ளது என்பதையும், விண்வெளியில் மனிதர்கள் பதித்த வரலாற்று சிறப்பு மிக்க தடங்களையும் காலவரிசைப்படி அட்டவணையிட்டு மிகவும் சுவாரசியமாக "The Sirens of Mars: Searching for Life on Another World" புத்தகத்தில் சொல்கிறார்.
(2)
செவ்வாய் கிரகத்தில் இது வரை செய்யப்பட்டுள்ள ஆய்வுகள் தொடர்புடைய பல குறிப்பிடத்தக்க நபர்கள் மற்றும் விண்கலங்களின் பங்களிப்புகளை குறித்து இவர் சொல்கையில் ஒரு சுவாரசியமான திரைப்படக் கதை போல அடுத்து என்ன நடந்தது என ஆர்வத்தை தூண்டும் அளவு நேர்த்தியாக விவரிக்கிறார்.
(3)
வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து செய்யும் கட்டிட வேலை, ஹோட்டலில் சர்வர் வேலை போன்ற unskilled வேலைகளை செய்ய, வடமாநில தொழிலாளர்களை எதிர்க்கும் எத்தனை தமிழ் பிள்ளைகள் தயாரா உள்ளீர்கள்.
(1)
தமிழ்நாட்டு இளைஞர்கள் படித்து திறன் சார்ந்த வேலைக்கு நகர்ந்து விட்டனர், இங்கு unskilled வேலைகள் செய்ய ஆட்கள் தேவை படுகிறார்கள். உங்கள் வாதப் படி இங்கு வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டாம் என சொன்னால், பட்டம் படித்த இளைஞர்கள் ஹோட்டலில் சர்வர் வேலை செய்ய தயாரா?
(2)
அல்லது கட்டிட வேலை செய்ய பட்டதாரி இளைஞர்கள் தயாரா?
இல்லையல்லவ, தமிழ்நாட்டில் கூடாரம் போட்டு அமர்ந்து கொண்டு வளத்தை சுரண்டும் வடநாட்டு பார்ப்பன பனியா பெருமுதலாளிகளை எதிர்ப்பதை விட்டு விட்டு, பஞ்சம் பிழைக்க வந்த தினக் கூலிகளை எதிர்ப்பது முட்டாள் தனம்.
(3)
"Gary Wilson" அவர்கள் எழுதிய "Your Brain On Porn: Internet Pornography and the Emerging Science of Addiction" புத்தகம் அதிகப்படியாக ஆபாச படங்கள் பார்ப்பவர்களில் ஏற்படும் உடல்நலம் மற்றும் மனநல மாற்றங்கள் குறித்து விரிவாக பேசியுள்ளது.
(1)
ஆபாச படங்கள் பார்ப்பது சிலருக்கு சாதாரணமான ஒன்று, ஆனால் நாட்கள் செல்ல செல்ல சிலருக்கு இந்த பழக்கம் ஒரு போதைப்பழக்கம் போல மாறி இதற்கு எப்படி அடிமையாகிறார்கள் என்பதையும் விரிவாக பேசுகிறது. இந்த பழக்கத்தால் எப்படி நிஜ உலகில் இருந்து
(2)
மன அளவில் நிழல் உலகத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை சொல்லும் எச்சரிக்கை அடையாளங்கள் குறித்தும் பேசியுள்ளது, முக்கியமாக ஒருவர் இந்த பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறாரா இல்லையா என்பதை பிரித்து அடையாளம் காணுவதற்கான உபாயங்களும் இதில் சொல்லப்படுகிறது.
(3)