அன்பெழில் Profile picture
Jun 14 14 tweets 5 min read Twitter logo Read on Twitter
#கீழப்பாவூர்_நரசிம்மர்_கோவில்
இந்தியாவில் உள்ள நரசிம்மர்
கோவில்களில் அபூர்வமானதும்,
வேறெங்கும் காண இயலாத பல்வேறு
சிறப்புகள் நிறைந்த தலமாக கீழப்பாவூர் நரசிம்மர் கோவில். நரசிம்மருக்குத் தன் பக்தர்கள் மீது பிரியம் அதிகம். நம்மை அறியாமலே, அவர் நாமத்தை சொன்னாலே போதும், ஓடோடிவந்து Image
காப்பான் என்று எம்பெருமானின் ஈகைக் குணத்தை எடுத்துக் கூறுகிறார் #பொய்கையாழ்வார். முதன் முதலில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது அகோபிலம் திருத்தலத்தில். மீண்டும் அவதாரம் எடுத்த தலம் கீழப்பாவூர். அகோபிலத்தில் இருந்து வைகுண்டம் திரும்பி விட்டாலும் நரசிம்மரின் மனம் முழுவதும் பக்தர்களைச் Image
சுற்றிச் சுற்றியே வந்ததாம். கலியுகத்தில் கலி புருஷனின் மாயையில் சிக்கி, பக்தர்கள் அல்லலுறுவார்களே, அவர்களை மாயையில் இருந்து விடுவித்துக்
காக்க வேண்டுமெனத் தவித்தார் திருமால். அகோபிலத்தில் வெறும் இரண்டு நாழிகைகள் நீடித்திருந்து பணியை முடித்துவிட்டு அவசர அவசரமாகத் திரும்பிவிட்டார் Image
ஆகவே மீண்டும் பூலோகம் செல்ல வேண்டும் என்று கருதினார் எம்பெருமான். அதே நேரத்தில் இங்கு பூலோகத்தில், சில ரிஷிகளுக்கு அவதார நரசிம்மரின் உக்கிர சொரூபத்தைத் தரிசிக்கும் ஆவல் மேலோங்கியது. தவம் புரிந்து தானே திருமாலை தரிசிக்க முடியும். எனவே, காசியப மகரிஷி, வருண பகவான், சுகோஷ முனிவர் Image
ஆகியோர் கடுந்தவம் புரியத் தொடங்கினர். ரிஷிகளின் தவத்திற்கு மனமிரங்கினார் மாலவன். பொதிகை மலையில் உள்ள மணிமுத்தாறு தீர்த்தத்தில் நீராடி அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் தவத்தை தொடர்ந்தால்
நரசிம்ம தரிசனம் கிட்டும் என அசரீரியாகக்
கூறினாராம் மகா விஷ்ணு. ரிஷிகளும் அவ்வாறே செய்ய, ரிஷிகளின் தவபூமி வைகுண்டமாக மாறியது. காரணம் மகா உக்கிரமூர்த்தியாக 16 திருக்கரங்களுடன் நரசிம்மர், தேவியுடன் காட்சி கொடுத்தார்.
அர்ச்சாவதாரத் திருமேனியில் எழுந்து அருளினார். இரணியனை தன் மடியில் கிடத்தி, வதம் செய்யும் திருக்கோலத்தில் Image
நரசிம்மர் காட்சி கொடுக்கும் கீழப்பாவூரை #தட்சிண_அகோபிலம் என்று போற்றுவர். திருநெல்வேலி தென்காசி சாலையில், சுமார் 37 கி.மீ தொலைவில் உள்ளது பாவூர்சத்திரம். இங்கிருந்து சுரண்டை எனும் ஊருக்குச் செல்லும் பாதையில் சுமார் 2 கி.மீ தொலைவிலுள்ளது கீழப்பாவூர். மன்னர்கள் காலத்தில் இவ்வூர் Image
#க்ஷத்திரிய_சிகாமணி_நல்லூர் என்று அழைக்கப்பட்டுள்ளது. 1,100 ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப்பட்டது இவ்வாலயம். தலபுராண ரீதியாக, நான்கு யுகங்களுள் முதலாவதான கிருதயுகத்தைச் சார்ந்தது என்கிறார்கள். இத்தல பெருமாளுக்கு #முனைஎதிர்_மோகர்_விண்ணகர் என்னும் பெயர் உண்டு. முனைஎதிர் மோகர்’
என்பதற்கு போரில் எதிரிகளை வெல்வதில் விருப்பம் உடையவர் என்பது பொருளாகும். 16 கரங்களுடன் கூடிய கீழப்பாவூர் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சிறந்த வரப்பிரசாதி. வேண்டிய வரங்களை அருள்பவர். செவ்வாய்க் கிழமைகளில் சுவாமியை தரிசித்து, நீராஞ்சன தீபம் ஏற்றிவைத்து வழிபடுவது விசேஷம். அதாவது, தாம்பூலத்
தட்டில் பச்சரிசி பரப்பி வைத்து, அதன் மீது உடைக்கப்பட்ட தேங்காய் மூடிகளில் நெய் நிரப்பி, தீபம் ஏற்றி வைத்து, 16 முறை வலம் வந்து வழிபட்டால் கடன் பிரச்னைகள் நீங்கும். மன்னர்கள் கோயில் எழுப்பி இந்த நரசிம்மரை ஆராதிக்கத் தொடங்கினர். புராணப் பெருமை பெற்ற பூலோக வைகுண்டமாக விளங்கும் இந்த
புண்ணிய ஸ்தலம்தான் தற்போதைய கீழப்பாவூர் ஆகும். இங்கே உக்கிரமாக இருக்கும் நரசிம்மரை சாந்தப் படுத்த, அவரது சன்னதிக்கு எதிரே மகாலட்சுமி அம்சமாகச் சதுர வடிவில் தெப்பக் குளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு கங்கா நர்மதா சம்யுக்த நரசிம்ம புஷ்கரணி என்பது திருநாமம். நரசிம்மர் அவதரித்த
சுவாதி நட்சத்திரத்தன்று ஒவ்வொரு மாதமும் இங்கே விசேஷ பூஜை நடத்தப்படுகிறது. அன்றைய தினம் மாலையில் 16 வகை மூலிகைகளால் நரசிம்மரின் மூல மந்திர ஹோமமும் திருமஞ்சனமும் நடைபெறும். 16 திருக்கரங்களுடன் காட்சி தரும்
நரசிம்மர் கோயில்கள் 3 இடங்களில்
உள்ளன. ராஜஸ்தான் மாநிலம், புதுச்சேரி அருகே
சிங்ககிரி மற்றும் கீழப்பாவூர். இத்தலத்தில் நரசிம்மரின் மார்பில் வீற்றிருக்கும் லட்சுமிதேவியை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது ஐதிகம். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலில் இருந்து சிங்க கர்ஜனை சத்தம் கேட்கும். நரசிம்மருக்கு இளநீர், பால், பானகம் ஆகியவை நைவேத்தியம் செய்து Image
வழிபட வேண்டும். நெய்தீபம் ஏற்றி வழிபட பிரார்த்தனைகள் உடனே நிறைவேறும்.
தரிசன நேரம்
காலை 07.30 - 10.30
மாலை 05.00 - 07.30
கோவில் முகவரி
அருள்மிகு லட்சுமி நரசிம்மர் கோவில், கீழப்பாவூர், திருநெல்வேலி -627806.
+91-9442330643
ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 16
#Guruvayurappan_Temple_trichy
This is a wonderful Guruvayurappan temple constructed 11 kms from Trichy. It is an exact replica of the Guruvayur temple. Construction time took only 15 months. There is a huge hall adjoining the temple for reciting #SriNarayaneeyam. #MahaPeriyava ImageImage
came in the dream of one disciple and told him that there is a Krishna (Guruvayurappan) vigraham under the banyan tree and told him to take it out and construct a temple which is a replica of the one in Guruvayur. The Temple pooja is performed by Namboodiris from Guruvayur and ImageImage
done exactly as it is in Guruvayur. There is a guest house with several rooms for pilgrims to stay. There is a Goshala with more than 100 cows. Free food including breakfast, lunch & dinner served free of cost with a very clean kitchen, dining areas, rest rooms are available. Image
Read 4 tweets
Jun 16
#MahaPeriyava
Author: A.S. Vedanarayanan, Model Colony, Pune
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol 2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya

It was in 1986. The Sri Rama Navami festival was being celebrated in the suburban layout of Khar Road, in Image
Dadar in Mumbai. I had gone there to listen to the spiritual discourse. A short while after the discourse started, I began to feel uneasy. I could not sit. I did not know what had gone wrong all of a sudden. I got into the bus because I thought it would be good to travel with a
number of people. I wrote down my home address and telephone number on a piece of paper and put it into my pocket. I chanted the Vishnu Sahasranamam continuously. When I reached my house, a doctor who lived close by saw me and enquired, “What is it? Are you not well?” He took me
Read 12 tweets
Jun 16
#மகாபெரியவா
கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
புத்தகம்-பெரியவா பெரியவாதான்.

மகா பெரியவாளின் அனுக்ரகத்துக்கு உள்ளான ஒரு பெண்மணி பெயர் சுந்தா சுந்தரம். காஞ்சிப் பெரியவா மீது அப்படி ஒரு பக்தி. காஞ்சி சென்று மகா ஸ்வாமிகளின் தரிசனம் பெற்று, அந்த ஆனந்த Image
வெள்ளத்தில் திளைப்பார். எப்போது காஞ்சி ஸ்ரீ மடத்துக்கு மகா பெரியவாளின் தரிசனத்துக்குச் சென்றாலும், ஒரு கூடை ரோஜா மலர்களைக் கொண்டு செல்வது அவர் வழக்கம். அன்றைய தினம், சுந்தா சுந்தரத்துடன் அவரது குடும்பத்துக்கு நெருக்கமான ஒரு பாட்டியும் சென்றிருந்தார். மகா பெரியவாளைத் தரிசிக்கும்
போது, வெறும் கையுடன் செல்லக் கூடாதே என்பதற்காக, குசேலர் அவல் கொண்டு போன மாதிரி, ஒரு சீதாப்பழத்தை எடுத்து வைத்திருந்தார். மகா பெரியவாளைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் வரிசையில் சென்று கொண்டிருந்தனர். ஆளாளுக்குக் கையில் ஒரு மூங்கில் தட்டில் ஆப்பிள், வாழைப்பழம், மாம்பழம் என்று விதம்
Read 16 tweets
Jun 15
#கிருஷ்ணா_முகுந்தா_முராரே
கம்சனின் கொடுமை காரணமாக கிருஷ்ணருடைய பெற்றோர் சிறையில் வாடநேரிட்டது. தங்கத்தொட்டிலில் இட்டு சீராட்டப்பட வேண்டிய குழந்தை மூங்கில் கூடையில் கிடத்தப்பட்டு கோகுலத்திற்கு எடுத்துச் செல்லப் படுகிறான். இதனால் ஆயர்பாடி புழுதியில் விளையாடும் சிறுவன் ஆகிறான். Image
ஆனால் ராஜலட்சணம் பொருந்திய அவனது முகம் பார்ப்போரையெல்லாம் வசீகரித்தது. அவன் புதுப்புது உத்திகளைக் கையாண்டு சின்னச்சின்ன பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டான். இதனால் கண்ணனை கௌரவிக்க விரும்பினார்கள் ஆயர்பாடி சிறுவர்கள். அங்கே சுற்றித் திரிந்த மயிலைப் பிடித்தார்கள். அதனிடம் இருந்து ஓர் Image
இறகை எடுத்து கிருஷ்ணனின் தலையில் கிரீடம் போல் செருகினார்கள். அன்று முதல் கிருஷ்ணனின் தலைமுடியில் மயிலிறகு நீங்காத இடம் பிடித்தது. “கண்ணனின் தலையில் உள்ள மயில் இறகு சக்தி தத்துவத்தைக் குறிக்கின்றது”
என்கிறார் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர். கண்ணனின் சக்தியே #ராதை ஆவாள். அவளைத் தலை மீது
Read 5 tweets
Jun 15
#MahaPeriyava
Narrated by Chandrasekara Sarma
Writer R. Venkatasami
Typed by Varagur Narayanan
Thanks Kumudham Life

During Maha Periyava’s Kasi Yatra a milkman used to supply milk every day to the camp. He did not know who Maha Periyava was or His greatness to get his blessings Image
as he was a Marathi and not heard about Him. He dutifully supplied milk every day. His wife fell ill and her health deteriorated rapidly. He took her to the doctor and the doctors there diagnosed her as having a type of cancer which cannot be cured as it was in an advanced stage.
He became very sad. Yet he continued to bring milk to the camp everyday. The helpers in the Matham seeing him, knew something was wrong with him, so enquired. He told about his wife’s diagnosis and that the doctors had told him to give any food she desired to eat as her days
Read 9 tweets
Jun 15
#மகாபெரியவா
சொன்னவர்-சந்திரசேகர சர்மா
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு: வரகூரான் நாராயணன்.
நன்றி: குமுதம் லைஃப்

காசி யாத்திரையின் போது மகாபெரியவா தங்கி இருந்த முகாமிற்கு பால்காரர் தினமும் பால் கொண்டு வந்து கொடுத்தார். அந்த மனிதருக்கு பெரியவா யார், அவரை வணங்கி எழ வேண்டும் Image
என்பதெல்லாம் தெரியாது. ஏனெனில் அவர் மராட்டியர். யாருக்கு பால் கொண்டு போய் தருகிறோம் என்று தெரியாமலே கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த சமயத்தில் ஒரு நாள், அந்தப் பால்காரரின் மனைவிக்கு திடீரென்று உடல்நிலை கெட்டுவிட, அடுத்தடுத்த நாட்களில் ஆரோக்கியம் வெகுவாகக் குறையத் தொடங்கியது.
வீட்டில் சகல காரியங்களையும் ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருந்த அந்தப் பெண் ஒரே வாரத்தில் நிற்க முடியாமல், நடக்க முடியாமலும் தடுமாற, உடலின் இயக்கம் சுத்தமாகக் குறைந்து, படுத்த படுக்கையாகிவிட்ட நிலை. பால்காரர் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். டாக்டர்கள் நன்றாகப் பரிசோதித்த
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(