அதை ஓதுவோர் எவரும் வேதியரே என ஏற்கனவே பல பெரியவர்களும் விளக்கியாகிவிட்ட நிலையில் இங்கு தேவையில்லை.
ஆயினும், குறவர் என்போர்
குருவிக்காரர் எனவும்,பரதவர் என்போர் மீனவர் என புதுவகை சாதியானது போல
தொழிலடிப்படை வர்ணங்கள் சாதிகள் ஆக உருப்பெற்றன..
சாதி பிராமணர்கள் அனேகமாக தர்மமீறல் செய்வது இல்லை - அவர்களுக்கு ஆபத்து வரும் காலங்களில், மீளும் முயற்சியை எடுப்பதில்லை.. நம்மைப் படைத்தவன் காப்பான் என நம்பி இருப்பர்..
வேதம் தந்தது யார்? அது அபௌருஷ்யம் - அதாவது மனிதர் எவராலும் ஏற்படுத்தப்பட்டதல்ல. தானாக ஏற்பட்டது!
அதற்கான விளக்க உரைகளை ரிஷிகள் தந்தனர் - குரு பரம்பரை மூலமே நடையாளுகிறது.
இக்காலத்தில் உள்ள அச்சு சாதனங்கள் அக்காலத்தில் இல்லை.
யாரோ பலர் எழுதிய பல செய்யுள் - கவிதை -கதை
இவை பல்லாயிர வருடம் நிலைக்குமா?
யோசிக்க வேண்டாம்?
நான் இங்கு எழுதுவதை புத்தகமாய்ப் போட்டால் எத்தனை நூறு வருடம் புழக்கத்திலிருக்கும்?
துஷ்பிரசார மடமையைக் கொளுத்துவோம்.