சீமான் Profile picture
செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி. #Seeman, Chief Coordinator, Naam Tamilar Katchi, Official Handle Managed by @NaamTamilarOrg
19 Nov 19
சிதம்பரம் நடராசர் கோயிலில் வழிபாடு செய்ய வந்த லதா எனும் பெண்மணியை அவதூறாகப் பேசித் தாக்கிய தீட்சிதரின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது. பெண்மணியைத் தாக்கிய தீட்சிதர் வெங்கடேசை கடும் சட்டப்பிரிவின் கீழ் உடனடியாகக் கைதுசெய்து சிறையிலடைக்க வேண்டும். (1/3)
அன்றைக்குத் திருச்சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாட முயன்ற ஐயா ஆறுமுகசாமி சிவனடியாரைத் தாக்கினார்கள் தீட்சிதர்கள். அதன் நீட்சியாக, தற்போது வழிபாடு செய்ய வந்தப் பெண்மணியைத் தாக்கியிருக்கிறார்கள்.
(2/3)
இதுபோன்ற வன்முறைச்செயல்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி, ஐயா ஆறுமுகசாமி சிவனடியார் சட்டப்போராட்டம் நடத்திப் பெற்றுத்தந்த தேவாரம், திருவாசகம் பாடும் உரிமையை சிதம்பரம் நடராசர் கோயிலில் நிலைநாட்ட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

- சீமான் | நாம் தமிழர் கட்சி

(3/3)
Read 3 tweets
9 Aug 18
பெங்களூரில் கைதுசெய்யப்பட்டுள்ள #மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் #திருமுருகன்காந்தி-யை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

– சீமான் | நாம் தமிழர் கட்சி

அறிக்கை: goo.gl/oFR1nd

#ThirumuruganGandhi #ReleaseThirumuruganGandhi #May17Movement #NaamTamilar #Seeman #NTK #Sterlite
ஐ.நா.வினுடைய மனித உரிமை ஆணையத்தின் அமர்வில் பங்கேற்றுவிட்டு ஜெனீவாவிலிருந்து நாடு திரும்பிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தம்பி திருமுருகன் காந்தியைப் பெங்களூர் விமான நிலையத்தில் தேசத் துரோக வழக்கின் கீழ் கைதுசெய்திருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது.

- சீமான் #Sterlite
ஆளும் வர்க்கத்தின் அநீதிக்கெதிராகக் குரலெழுப்பும் சமூகச் செயற்பாட்டாளர்களையும், அரசியல் ஆளுமைகளையும் கொடுஞ்சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையிலடைத்து வரும் அதிமுக அரசின் இச்செயலானது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

- சீமான் #ReleaseThirumuruganGandhi
Read 6 tweets