ganesan_anbu Profile picture
Film Student, Colorist, Traveller, Hedonist, Ajith fan and... human !
Oct 20, 2020 30 tweets 4 min read
#Thread #Dhoni #IPL2020

இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை. அதனால் ப்ளேயிங் லெவனில் இடம் தரவில்லை என்கிறார் மகேந்திர சிங் தோனி.

சி.எஸ்.கே தவிர மற்ற அணிகள் அனைத்தும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, அவர்களை நம்பியே விளையாடியும் வருகிறது. பெங்களூரு அணிக்கு படிக்கல், சைனி, சுந்தர், சிராஜ், தூபே, குர்கிராத் சிங் போன்றோர்.

ஹைதராபாத் அணிக்கு கலீல், நடராஜன், விஜய் ஷங்கர், கர்க், சமத், அபிஷேக் போன்றோர்.

கொல்கத்தா அணிக்கு கில், மாவி, வருண், நாகர்கோட்டி, ப்ரஸித் க்ருஷ்ணா போன்றோர்.
Feb 23, 2020 36 tweets 6 min read
#valimai
அஜித்குமாரும் அவரது ரசிகர்களும் - நிகழ்ந்த அற்புதம்!

அஜித்குமார் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் (நல்ல) சினிமா விரும்பிகள் முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கான விளக்க பதிவு. எங்களைப் பிடிக்காதோர் இதைப் படித்து உங்கள் நிம்மதியைக் கெடுத்து கொள்ளாதீர்கள். #Thread #oldfbpost முழுசா படிக்க பொறுமை இல்லாதவர்களுக்காக... பதிவின் சாராம்சம் இதுதான்:
மிகவும் வெளிப்படையாகவும், தைரியமாகவும் சொல்லிவிட்டே ரசிகர்களுக்காக மட்டுமே படம் நடிக்கிறார் அஜித்குமார். அவருக்காக மட்டுமே அவர் படங்களைப் பார்க்கிறோம் நாங்கள். எங்கள் இருவருக்குமான உணர்வுப்பூர்வமான புரிதல் இது.
Feb 20, 2020 19 tweets 3 min read
ஆனந்த விகடனுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையும் கிடையாது. 10 வயது முதல் 34 வயது வரை தொடர்ந்து விகடனை வாசித்து வந்தவன் நான். சின்ன வயசுல இருந்து எவ்வளவோ நாஸ்டால்ஜியாக்கள் நமக்குள் இருக்கும் அல்லவா... அதுல விகடனும் ஒன்னு. #Thread #ThalaAjith #vikatanpoll அஜித் - விஜய் எனும் இரண்டு நடிகர்களை முன்வைத்து நடக்கும் அல்ப அரசியல் காரணமாக நான் ஏன் விகடனை விமர்சிக்கிறேன் அல்லது வெறுக்கிறேன் ? உண்மை அறிய முழுதாய் வாசியுங்கள்...

2015 ஆம் ஆண்டு " தல தளபதி நெட்டுக்குத்து வரலாறு " என்று ஒரு ஸ்பெஷல் கட்டுரையை வெளியிட்டது விகடன்.