Indu Gunasekar ~ இந்து குணசேகர் Profile picture
May 27, 2023 10 tweets 2 min read
📍”எங்கள் பிரிவு அவரால் அழகானது” - ராஜோஷி பருவாவின் பேட்டி

(ஆஷிஷ் வித்யார்த்தியின் முன்னாள் மனைவி )

மொழிபெயப்பு: பாரதி ஆனந்த் ; தி இந்து தமிழ்

ஆசிஷுடனான 22 ஆண்டு கால வாழ்க்கை என் வாழ்நாளின் மிகச் சிறந்த காலக்கட்டம். அவரிடம் கேட்டாலும் நிச்சயம் இதைச் சொல்வார்....

(1/n) ImageImage எங்களுக்குள் நிறைய ஒற்றுமை உண்டு. வேற்றுமையும் உண்டு. ஆனால், நாங்கள் அதன் நிமித்தமாக ஒருபோதும் மோதிக் கொண்டதில்லை. இன்றும் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம்.
Mar 8, 2022 7 tweets 2 min read
''நான் பெண்ணில்லையா...?''

அமெரிக்காவின் ஓஹியாவில் 1851 ஆம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கரான சோஜோர்னர் ட்ரூத் ஆற்றிய உரையை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இம்மாதத்தில் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

#WomensDay ''அங்கிருக்கும் அந்த ஆண் கூறினார்.. பெண்களால் பிறரது உதவி இல்லாமல் கடினமான வேலைகள் எதையும் செய்ய இயலாது..அவர்களுக்கு எப்போதும் சிறந்த இடம் தரப்படுகிறது என்று... என்னைப் பாருங்கள் எனக்குக் கடின வேலைகளில் யாரும் உதவவில்லை. எனக்கான சிறந்த இடத்தை யாரும் தருவதில்லை. நான் பெண்ணில்லையா?
Jun 6, 2021 10 tweets 2 min read
12- ஆம் வகுப்பு முடிந்த பெண், தனக்கு தையல் மிஷின் வழங்கி உதவி புரியுமாறு அமைச்சர் சிவசங்கரிடம் கேட்டபோது, ”தையல் மிஷின் வாங்கி தரன்.. மேலே படிக்கிறதுக்கு உதவி செய்றன்... படிங்க.. நீங்க படித்தால்தான் மற்றவர்களுக்கு வழிகாட்டுவீர்கள்” என்கிறார். ’தையல் மிஷன்’ இதற்கு பின்னால் இருக்கும் குடும்ப அரசியலும், சமூக அரசியலும் ஏராளம்... பள்ளி படிப்பை முடித்து குடும்ப வறுமையால் மேற்படிப்பை தொடர முடியாத பெண்களுக்கு தையல் மிஷின் ஒரு மந்திர கோல்... அவர்களது பல குட்டி கனவுகளை இந்தத் தையல் மிஷின் சொந்தமாக்கி தந்திருக்கிறது.
Jun 4, 2021 4 tweets 2 min read
தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜில், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வார்டில் ( குறிப்பாக வார்ட் 11) அமைந்துள்ள கழிவறைகள் மோசமான பராமரிப்பில் உள்ளன.

இதனால் கரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்களை உடனிருந்து பார்த்து கொள்பவர்களும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். ImageImageImageImage மேலும் ஒரே வார்டில் 40 க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவுக்கு சிகிச்சிசை பெற்று வருகின்றனர்.
அவர்களை காலையில் மட்டும் ஒரு மருந்துவர் மேற்பார்வையிட்டு சென்றுவிடுவதாகவும் மற்ற நேரங்களில் மருந்துவர்கள் இல்லை என்றும் அங்கிருக்கும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

@Subramanian_ma
Feb 15, 2019 13 tweets 3 min read
#Kashmir 20 வருடங்களுக்கு மேலாக காஷ்மீரில் பிரிவினைவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே போர் நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ராணுவ தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. . ஏராளமான பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட கணவன் பல ஆண்டுகள் கடந்தும், வீடு திரும்பாததால் ஏதோ பித்து பிடித்த நிலையில் குழந்தைகளை வளர்க்கும் பெண்கள் காஷ்மீரில் உள்ளனர்.