கலைஞர் ஆட்சியில் மிக முக்கியமான நல்ல திட்டங்களை சொல்ல முடியுமா?
இந்த சாதனைகளை எனது முகநூல் நண்பர் தொகுத்தது. அதனை அப்படியே சில மாற்றங்களுடன் தருகிறேன்.
மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப்படுத்தினால்.....
ஒவ்வொன்றிலும் திரு கலைஞரின் தடம் இருக்கும்.
காற்று,
தண்ணீர்,
உணவு,
உடை,
உறைவிடம்,
மொழி,
மருத்துவம்,
கல்வி,
பாதுகாப்பு,
சாலைவசதி,
மின்சாரம்,
போக்குவரத்து,
உள்கட்டமைப்பு,
தொழிற்சாலை,
தொலைத்தொடர்பு.
1. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது -கலைஞர்.!
2. காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர்- கலைஞர்!
3. 30க்கும் மேற்பட்ட அணைகள் கட்டியது- கலைஞர்!
4. இந்திய ஒன்றியத்தில் முதன் முறையாக நதிகள் இணைப்பு திட்டம் தந்தது-கலைஞர்.!
5. கரூர் மாவட்டம் மாயனூரில் அணை கட்டி, காவிரி - குண்டாறு நதி இணைப்பு திட்டம் தந்தது-கலைஞர்
6. தாமிரபரணி - கருமேனியாரு - நம்பியாரு நதி இணைப்பு திட்டத்தை தந்தவர்-கலைஞர்
7. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தது-கலைஞர்
8. ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது-கலைஞர்
9. ராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது-கலைஞர்
10. அறந்தாங்கி கூட்டுக் குடிநீர் திட்டம்.
11. திண்டுக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்.
12. எல்லா வருடங்களும் ஏரி மற்றும் குளங்களை தூர் வாரி பராமரிக்க ஆணையிட்டவர் -கலைஞர்!
உணவுமற்றும்விவசாயம்/ Food and Agriculture!
1. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் (TNCSC) அமைத்தது-கலைஞர்!
2. பொது வினியோக முறையை கிராமங்கள் தோறும் கட்டமைத்து, மக்களுக்கு உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் எளிய வகையில் கிடைக்க செய்தவர் -கலைஞர்!
3. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்தின் மூலம், குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கியவர்-கலைஞர்!
4. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்ணெய் மற்றும் வீட்டு பொருட்கள் நியாய விலையில் நியாய விலைக்கடையில் தந்தவர்- கலைஞர்!
5. 10 சமையல் பொருட்களை 50 ரூபாய்க்கு தந்தது-கலைஞர்!
6. நில உச்சவரம்பு சட்டத்தை முறையாக செயல்படுத்தி 2 முதல் 5 ஏக்கர் நில உடமையாளர்களாக, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை உருவாக்கியவர்-கலைஞர்!
7. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தது-கலைஞர்!
8. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது-கலைஞர்!
9. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தவர்- கலைஞர்!
10. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக பயானாளிகளிடம் விற்பனை செய்ய ஏதுவாக, உழவர் சந்தை திட்டம் தந்தது- கலைஞர்!
11. விவசாய கடன் ரூ.7,000 கோடி தள்ளுபடி செய்தது-கலைஞர்!
12. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றது-கலைஞர்!
13. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1,050 ஆக உயர்த்தி தந்தவர் -கலைஞர்!
14. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ. 1,100 ஆக உயர்த்தியவர்-கலைஞர்!
16. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ 2,000 ஆக உயர்த்தியது- கலைஞர்!
உறைவிடம்/ Home!!
1. கிராமங்களில், நத்தம் பொறம்போக்கு இடங்களில் வசித்து வந்த குடியானவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின், அந்த இடங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கி ஏற்பாடு செய்தவர் -கலைஞர்!
2. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்து அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அடையார், கலைஞர் கருணாநிதி நகர் போன்ற இடங்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொடுத்தவர்-கலைஞர்!
3. கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகளை கொடுக்கும் திட்டம் வகுத்தது-கலைஞர்!
4. குடியிருப்பு சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது-கலைஞர்!
5. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தவர்- கலைஞர்!
6. கலைஞர் கனவு வீடு திட்டம் தந்தவர்- கலைஞர்!
மருத்துவம்/ Healthcare
1. 3,000த்திற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 13,000த்திற்கும் மேற்பட்ட Sub Health Centres உருவாக காரணமாக இருந்தவர்-கலைஞர்!
மேலும் மாவட்டங்களையும், தாலுக்காக்களையும் பிரித்ததால் பல மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுக்கா அரசு மருத்துவமனைகள் உருவாக காரணமாக இருந்தவர்-கலைஞர்!
2. ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேர மருத்துவ சேவை நிர்ணயித்தவர்-கலைஞர்!
3. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது-கலைஞர்!
4. வருமுன் காப்போம் திட்டம் தந்தது- கலைஞர்!
5. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தவர் -கலைஞர்!
6. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக்கல்லூரி என்று சட்டம் இயற்றி,
கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர் மருத்துவ கல்லூரிகளை அமைத்தது கலைஞர். மருத்துவ கல்லூரிகளில் பல துறைகள் உருவாக காரணமாக இருந்தவர்-கலைஞர்!
7. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலமாக 2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தவர்-கலைஞர்!
8. இதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய்க்கான "நலமான தமிழகம் திட்டம்" தந்தது-கலைஞர்!
9. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அறிமுகப்படுத்தி தந்தவர்-கலைஞர்!
கல்வி/ Education!
1. 1996 - 2001 காலகட்டத்தில் 7,000 பள்ளிகளை நிறுவியவர்-கலைஞர்!
2. 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக்கியவர்-கலைஞர்!
3. மிகவும் பிற்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது-கலைஞர்!
4. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தவர்-கலைஞர்!
5. பனிரெண்டாம் வகுப்பு வரை இலவச கல்வி உருவாக்கியது- கலைஞர்!
6. பெண்களை படிக்க ஊக்குவிக்க, 8ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவியாக 5,000 வழங்கியது. பிறகு அதனை 10ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவியாக 10,000 என்று உயர்த்தி வழங்கியவர்- கலைஞர்!
7. பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு வழங்கியவர்-கலைஞர்!
8. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளங்கலை பட்டப்படிப்பு வரை தந்தது-கலைஞர்!
9. விவசாய கல்லூரி (கோவை) உருவாக்கியது-கலைஞர்!
10. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தவர்- கலைஞர்
11. MGR மருத்துவ பல்கலைக்கழகம் நிறுவியது-கலைஞர்
12. இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர். அம்பேத்கார் சட்ட கல்லூரி மற்றும் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் நிறுவியவர்-கலைஞர்!
16. உலக தமிழர்களுக்கு உதவ, தமிழ் மெய்நிகர் பல்கலைகழகம் தந்தது- கலைஞர்!
17. முதன்முறையாக விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இட ஒதுக்கீடு அளித்தவர்-கலைஞர்!
18. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கியது-கலைஞர்!
19. உருது அக்காடமி தந்தது-கலைஞர்!
20. பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்தது-கலைஞர்!
21. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருவாரூரில் உருவாக்கியது-கலைஞர்!
22. முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர்-கலைஞர்!
23. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்தது-கலைஞர்!
24. சமச்சீர் கல்வி தந்தவர்- கலைஞர்!
25. மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தது- கலைஞர்!
26. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர்-கலைஞர்!
27. இலவச பஸ் பாஸ் தந்தவர்-கலைஞர்!
28. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தவர்- கலைஞர்!
29. பள்ளிகள், கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கி படிக்க விடுதிகளை நிறுவியவர்-கலைஞர்!
30. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் நிறுவியது -கலைஞர்!
31. உலகதரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு முன்மாதிரி பள்ளி வேண்டும் என்ற திட்டமிட்டு, முதலில் புதுக்கோட்டையில் ஆண்களுக்கு ஒரு பள்ளி (நான் அந்த பள்ளியின் மாணவன்), பெண்களுக்கு சென்னை சைதாப்பேட்டையில் ஒரு பள்ளி என்று ஆரம்பித்தவர்-கலைஞர்!
மொழி/ Language:
1. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியவர்-கலைஞர்!
2. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது- கலைஞர்!
3. திருக்குறளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் 133 அடியில் திருவள்ளுவர் சிலை நிறுவியவர் -கலைஞர்!
4. பாரதிதாசன், அண்ணாவுடன் சேர்ந்து நாம் இன்று ஷ,ஸ,க்ஷ கலக்காமல் எளிய தமிழை வழங்கியவர்-கலைஞர்!
5. திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களால் நிறுவப்பட்ட தமிழ் பல்கலைக்கழகத்தை மேம்படுத்தியவர்-கலைஞர்!
பாதுகாப்பு/ Police
1. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது-கலைஞர்!
2. மகளிர் காவலர்களை நியமித்தவர்-கலைஞர்!
3. சிறைச்சாலை சீர்திருத்தம் செய்தவர்-கலைஞர்!
4. புழல் சிறைச்சாலை கட்டியவர்-கலைஞர்!
சாலைவசதி/ Road and Rail!
1. 1,000 நபர்கள் கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது-கலைஞர்!
2. கிராமங்கள் மற்றும் நகரங்களின் வீதிகள் தோறும் கான்கிரீட் சாலை அமைத்தவர்-கலைஞர்!
Oct 25, 2023 • 10 tweets • 2 min read
எனக்கு திராவிடம் குறித்து தெரியாது...
@EPSTamilNadu
அவர் ஏதோ அப்பாவியாகவோ அல்லது நக்கலாகவோ இப்படி சொன்னதாக நாம் அதை எடுத்துக்கொண்டால் நாம்தான் உண்மையிலேயே அப்பாவி...
ஆம் அவர் ரொம்ப வெவரமாகத்தான் திராவிடம் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது என்கிறார்....
ஆம் அவரை பொறுத்தவரை இதுதான் எதார்த்த உண்மை..
ஏனெனில் எம்.ஜீ.ஆர்,ஜெயலலிதா,ஓபிஎஸ் எடப்பாடி என இவர்கள் யாவருமே ஆரியத்தின் உருவாக்கமே,
இவர்களின் கொள்கையே
திராவிட அப்பாவி சூத்திரர்களின் ரெட்டை இலை மீதான மாயை வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வருவது ஆட்சிக்கு வந்தபின்
Jun 2, 2023 • 5 tweets • 2 min read
#கலைஞர் இல்லம் தேடி சத்ய சாய்பாபா வந்தார்.. உலகமே அசந்தது.. பாபாவை பார்க்க மைக்கேல் ஜாக்சன் அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு கிடைக்காமலே இறந்து போனார்... சச்சின் பல நாள் காத்திருந்து நேரில் சந்தித்தார்..
எவர் வீட்டிற்கும் பாபா பிற்காலத்தில் போனது கிடையாது..
பிரதமரோ, ஜனாதிபதியோ, தேடி வந்துதான் பாபாவைப் பார்க்க வேண்டும்..அப்படிப்பட்ட சத்ய சாய் பாபா, கலைஞரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி, அவரது இல்லத்திற்கே போய், மாடி ஏறி கலைஞரைச் சந்தித்தது கண்டு ஆத்திகர்கள் ஆடிப்போனார்கள்.... சில நாத்திகர்கள் ஆத்திரப்பட்டார்கள்...
Jun 1, 2023 • 4 tweets • 2 min read
நீங்கள் காண்பது கலிபோர்னியா பல்கலைகழகம்.
சுமார் 100 க்கும் மேற்பட்ட நாடுகளை சார்ந்த மாணவர்கள் இங்கு இருக்கிறார்கள்.
ஐரோப்பா, அமெரிக்காவில் நேரு உரையாற்றாத எந்த பல்கலை கழகமும் இல்லை
உலகின் மிகப்பெரிய பல்கலை கழகங்களில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மன்மோகன் சிங் ஆகியோர் உரையாற்றி இருக்கிறார்கள்
காங்கிரஸ் மற்றும் காந்தி குடும்பத்தின் பாரம்பர்யத்தை, @RahulGandhi முன்னெடுத்துச் செல்கிறார்
அதே பல்கலைகழகம்.
டெலிப்ராம்ப்டர் இல்லை எழுதிவைத்தும் பேசவில்லை !
Jun 1, 2023 • 7 tweets • 3 min read
தமிழ்நாட்டில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வது தொடர்பான விவகாரம் குறித்து முதலமைச்சர் @CMOTamilnadu திரு ஸ்டாலின் மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் @AmitShah திரு.அமித்ஷா-க்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.
அதை,,மிகவும் கிண்டலாக கேலியாக @BJP4TamilNadu பிஜேபி தலைவர் திரு அண்ணாமலை @annamalai_k
திரு.அமித்ஷா அவர்களின் கடந்த 9 ஆண்டு கால வரலாற்றில் ஸ்டாலின் அவர்கள் எழுதியதைப்போல தவறான கடிதத்தை யாரும் எழுதி இருக்க மாட்டார்கள் என்று பேசியுள்ளார்..
May 31, 2023 • 4 tweets • 1 min read
சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்று வந்த மல்யுத்த வீராங்கனைகளை தன் வீட்டு மகள்கள் என்றார் மோடி .இன்றைக்கு அவர் வீட்டு மகள்கள் ஒரு கிரிமினலால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு பகிரங்கமாக வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக. அன்று தகப்பன் ஸ்தானத்தில் நின்று பேசிய மோடி இன்று கண் அவிந்து போய்விட்டார் போல் அவர் களைக் கண்டும் காணாமலும் இருக்கிறார். பிரீஜ் பூஜன் சரண் சிங் என்ற பாஜகவைச் சேர்ந்த அந்தக் கிரிமினல் மீது 38 வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் இருக்கின்றன
பாலியல் வன்முறையில்
ஈடுபட்ட பாஜக எம்.பி.மீது
நடவடிக்கை வேண்டுமென
நாட்டிற்குப் பெருமை தேடித்தந்த மல்யுத்த வீராங்கனைகள்
ஒரு மாதத்திற்கும் மேலாகப்
போராடி வருகின்றனர்.
பாலியல் குற்றம் புரிந்த
பாஜக எம்.பி.மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாகப்
போராடும் வீராங்கனைகளை அடித்துத் துவைத்துக் தரதர-
-வென இழுத்துச் சென்று கைது செய்கின்றனர் காவல்துறையினர்
May 31, 2023 • 4 tweets • 5 min read
#BreakingNews
தமிழ்நாடு பாஜக தலைவர் @annamalai_kயின் மிக நெருங்கிய நண்பரும் பாஜக நெசவாளர் பிரிவு மாநில செயலாளருமான மின்ட் ரமேஷ் என்பவர் தனது கூட்டாளியான நாகர்கோவில் மகேஷ் என்பவனுடன் கூட்டு சேர்ந்து கொரட்டூரை சேர்ந்த ஒரு பெண்ணிடமிருந்து ரூபாய் 45 லட்சத்தை பறித்துச் சென்றதை அடுத்து @tnpoliceofflஆல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இதில் அண்ணாமலைக்கு தொடர்பு இருக்கிறதா என்ற வகையிலும் தமிழ்நாடு போலீசார் விசாரணை
May 30, 2023 • 4 tweets • 1 min read
சாதனை, இது 9 ஆண்டுகளில் யாராலும்
செய்ய இயலாத சாதனைகளாம்...!
வேதனை, ஏழை எளிய மக்களுக்கோ,
மிக மிக வேதனை.
சோதனை,கொள்ளிக் கட்டைகளால் தின
வாற்றிக் கொண்டு, வெந்து தவிக்கும்
மக்களுக்கோ மிகப்பெரும் சோதனை.
அரிசி விலை ₹ 30 லிருந்து ₹ 70
சமையல் எண்ணெய் ₹.60 லிருந்து ₹ 210 சமையல் எரிவாயு விலை₹410 லிருந்து
₹1,150 பெட்ரோல் விலை ₹ 68 லிருந்து ₹ 105
டீசல் விலை ₹ 50 லிருந்து₹ 90
வேலையின்மை 50 ஆண்டுகளில் இல்
லாத அளவிற்குத் தலைவிரித்தாட்டம்'.
பூமி புத்ராவின் வெற்றி!
கன்னட வட்டாரத்தில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது 'சோளில்லத சர்தார்'. அதன் பொருள் 'தோல்வியை சந்தித்திராத சர்தார்' என்பதாகும்.
1972ல் இருந்து 9 முறை எம்எல்ஏவாகவும், 2 முறை எம்பியாகவும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருக்கிறார்.
எதிரிகளாலும் துரோகிகளாலும் கூட தோற்கடிக்க முடியவில்லை. கர்நாடகாவில் முதல்வர் பதவியை தவிர எல்லா பெரிய பதவிகளையும் வகித்திருக்கிறார். அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது, முதல்வரை விட பவர்ஃபுல் மனிதராக வலம் வந்தார்.
Mar 5, 2023 • 5 tweets • 2 min read
கஸ்தூரி ட்விட் - திருட்டு ரயில் - கண்ணதாசன்.
கவிஞர் கண்ணதாசன் தன் வாழ்க்கை சுயசரிதையை வனவாசம் என்ற புத்தகமாக எழுதினார். அப்புத்தகத்தில் தன்னை கண்ணதாசன் என்று குறிப்பிடாமல் அவர் தன்னை தானே "அவன்" என்றே தன் வனவாசம் புத்தகம் முழுவதிலும் தன்னை குறிப்பிடுகிறார் 1/5
தான் டிக்கட் எடுக்காமல் ரயிலேறி சென்றதையும் அதற்கான சூழ்நிலையையும் தன் வனவாசம் சுயசரிதையில் தெளிவாக விளக்கியுள்ளார்.
ஆனால் கண்ணதாசன் தான் டிக்கட் எடுக்காமல ரயிலில் பயணம் செய்தது குறித்து எழுதியதை அப்படியே மாற்றி கலைஞர் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததை போலவும் 2/5
Mar 2, 2023 • 4 tweets • 1 min read
"பாசிசம் ஒழிக"என்று விமானத்தில் கோஷமிட்டஆய்வு மாணவி சோபியாவின் மேல் ஆணவத்தினால் புகார் கொடுத்த தமிழிசை பின்னர் ஆளுநரனார்.
பாசிசம் ஒழிக"என்பதற்கு புகார் கொடுத்தால் "பாசிசம் வாழ்க" "என்று சொல்கிறோம் என்பது கூடத் தெரியாத அந்த மனிதாபிமானம் இல்லாத பெண்ணை
1/4
ஆளுநர் பதவிக்கு தேர்வு செய்துள்ளார்களே என்று மக்கள் வேதனைப்பட்டனர்.
இப்போது மனித உரிமை ஆணையம் சோபியா மீது முகாந்திரம் இல்லாமர்ல் புகார் பதிவு செய்ததற்காக 2 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கக் கட்டளையிட்டுள்ளது.
2/4
Jun 11, 2022 • 4 tweets • 1 min read
*"சிதம்பரம் நடராஜர் கோவில்" வழக்கில், அந்த கோவிலுக்கு 2007ஆம் ஆண்டு 37,199/- ரூபாய் வருமானம் வந்ததாகவும், அதில் கோவிலை பராமரித்த வகையில் 37,000/- செலவாகிவிட்டதாகவும் மீதம் 199/- இருப்பதாக 'தீட்சிதர்கள்' நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.*
அந்த கோவில் "முதல்வர் கலைஞரால்" தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பிறகு ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா..?*
*2009ஆம் ஆண்டு அரசின் கட்டுப்பாட்டில் வந்தது.*
*அதன் பிறகு 5 ஆண்டுகளில் கோவில் வருமானம் 3 கோடியே 15 இலட்சம் !!*