இலங்கையிலிருந்து வந்த அகதிகளுக்கு இந்திய குடியுரிமை ஏன் வழங்கக்கூடாது என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. நேற்றைக்கு மாநிலங்களவையில் நிறைவேறிய குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவின் பிண்ணனியில்தான் இது எழுந்துள்ளது. #SriLanka #refugees #CAB #Tamil 1/10
அம்மசோதா மக்களவையில் திங்களன்று நிறைவேறியது. குடியுரிமை வேண்டுமா வேண்டாமா என்பதை இலங்கையிலிருந்து வந்துள்ள அகதிகளிடமும் அவர்களது குழந்தைகளிடமும், அவர்களுடைய விருப்பத்தை, முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகளில் பலர் இங்கேயே பிறந்தவர்கள்.
#SriLanka #refugees #CAB #Tamil 2/10
பெரியவர்களாகி இங்கேயே மணம் புரிந்து அவர்களுக்கு பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்களுக்கு எது நல்லது, எது நல்லதல்ல என்ற முடிவை நாமாக எடுக்கமுடியாது. எடுக்கக்கூடாது. சுய விருப்பத்தினால் திரும்பி செல்லுபவர்களுக்கு என்ன வசதிகளை செய்யமுடியுமோ
#SriLanka #refugees #CAB #Tamil 3/10
அதை செய்ய இந்தியாவும் இலங்கையும் முன்வரவேண்டும். செய்யவேண்டும். ராமேஸ்வரம்-தலைமன்னார் படகு சேவையை மீண்டும் துவக்க உடனடியாக முயற்சிகளை எடுக்கவேண்டும்.
மலையகத் தமிழர்களை இந்தியாவிற்கு வலுக்கட்டயாமாக 1960-களிலும் 1970-களிலும் #SriLanka #refugees #CAB #Tamil 4/10
அனுப்பப்பட்டார்கள். அதைப் போன்ற தவறை மீண்டும் நாம் செய்யக்கூடாது. அவர்கள் இங்கு இருப்பதற்கு விருப்பமில்லை என்றால், அவர்கள் திரும்பி செல்வதற்கு
என்ன உதவிகளை செய்யமுடியுமோ அதை செய்யவேண்டும்.
#SriLanka #refugees #CAB #Tamil 5/10
இலங்கையின் குடியுரிமைச் சட்டத்தில் கடந்த 15 வருடங்களில் செய்யப்பட்ட திருத்தங்களினால், இலங்கையை பூர்விகமாகக் கொண்டவர்களுக்கு குடியுரிமை கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை இருக்கின்றதால்,
#SriLanka #refugees #CAB #Tamil 6/10
தமிழர்களின் மக்கட்தொகை அதிகமானால், தமிழ் பிரதிநிதிகள்தான் அதிகமாவார்கள். இதை புரிந்துகொள்ளவேண்டும். இனப்பிரச்சினை நீண்டகாலமாக இருக்கின்ற ஒரு நாட்டில், தற்பொழுது அங்கு வாழ்கின்ற மக்களுக்கு எதிராக இந்தியாவின் செயல்பாடுகள் இருக்கக்கூடாது.
#SriLanka #refugees #CAB #Tamil 7/10
இலங்கையிலிருந்து வந்துள்ள அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவதினால், அப்படிப்பட்ட சூழல் எக்காலத்திலும் உருவாகக்கூடாது என்றுதான் இந்தியா விரும்பும். இந்தியக் குடியுரிமை பெற வேண்டும் என விரும்புவர்களுக்கு அதற்கேற்ப சட்டத்தில் #SriLanka #refugees #CAB #Tamil 8/10
திருத்தங்களை கொண்டுவரலாம். இலங்கைக்கும் திரும்பமாட்டேன், இந்தியாவிலும் இருக்கமாட்டேன் எனக் கருத்தில் உள்பவர்களுக்கு நீண்ட விவாதங்களுக்குப் பிறகுதான் முடிவு எடுக்கவேண்டும். மேற்கூறியவற்றைப் பற்றி விவாதிக்க, இரண்டு நாட்டின்
#SriLanka #refugees #CAB #Tamil 9/10
அரசு பிரதிநிதிகளைத்தவிர, தமிழ்நாடு அரசு, இலங்கையிலுள்ள தமிழர் தலைவர்கள் மற்றும் அகதிகளின் பிரதிநிதிகளையும் அழைக்கப்படவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அகதிகளின் முகாம்கள் "தொல்பொருள் மையங்களாக" தொடர்வது எந்த நவீன சமுதாயத்திற்கும் அழகல்ல. #SriLanka #refugees #CAB #Tamil 10/10
@Ahmedshabbir20 : please go through the thread. You will get the answer.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
