Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Jul 30, 2020, 10 tweets

#சீமானின் மீது குற்றச்சாட்டுகள், அவதூறுகள், பாலியல் ரீதியான இழிவான தாக்குதல்கள் நிகழ்த்துவதால் #தமிழ்தேயம் வீழ்ந்து விடும் என கனவு காண்பது அரசியல் குருடர்களின் செயல் .

சீமான் என்கிற பிம்பம் மட்டும் தமிழ் தேசியமல்ல.

அது ஒரு கருத்தியல், ஒரு இனத்தின் அரசியல் #வேட்கை. +

அதை தனிநபர்களை வீழ்த்துவதால் மட்டுமே வீழ்த்தி விட முடியாது.

தமிழ்தேசியத்தின் ஒரு தளத்தில் சீமானும் பயணிக்கிறார். அவ்வளவே.

சீமான் தமிழ்த் தேசிய பாதையில் பயணிக்காவிடில், தொடர்ந்து திராவிட மேடைகளில் வடை சுட்டு இருந்தால் இக்குற்றச்சாட்டுக்கள் வெளிவந்திருக்காது. +

தமிழ் தேசியத்தை வீழ்த்தத்தான் சீமானின் மீது பாய்கிறார்கள்.

உலகின் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு தலைவர்களும், புரட்சியாளர்களும் வீழ்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

ஆனால் அது எந்த விதத்திலும் லட்சியத்தின் போக்கை மாற்றி இருக்கவில்லை.

#விஜயகாந்த் போல சொந்த சினிமா மாயையில், +

ரஜினிகாந்த், கமலஹாசன் போல சினிமா பாப்புலாரிட்டியில் அரசியல் கட்டி..

அல்லது ஸ்டாலின், உதயநிதி போல வாரிசு உரிமை காட்டி உச்சத்தில் அமர்ந்து..

அது எக்ஸ்போஸ் செய்யப்பட்டால் அது வீழ்ந்துவிடும்.

#லட்சியமும், தமிழ் தேசிய #தத்துவமும் எப்படி வீழும்?

ஐம்பதாயிரம் ஆண்டு +

தேசிய இன அடையாளம் சீமானால் வீழ்ந்து விடும் அளவுக்கா மென்மையானதாக இருக்கிறது?

#ஈழம் வீழும் தருவாயில் தலைவர்களை தப்புவிக்க வழங்கப்பட்ட சலுகைகளை அவர்கள் மறுத்ததன் #லாஜிக் தமிழருக்கு பலகாலம் புரியவில்லை.

அது அரசியல் பரிணாமக் கோட்பாடு, உயிர் அரசியலில் வரும் altrusim போன்ற +

சித்தாந்தங்களை எல்லாம் வாசிக்கும்போதுதான் விளங்குகிறது.

வெறும் வன்னிக்காடுகளுக்குள் மட்டும் உறுமிக்கிடந்தவை, இன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் #புலிக்காடாய் மாற்றி இருக்கிறது.

புலிகளை தவிர்த்துவிட்டு உலகில் எங்கும் தேசிய இன அரசியல் பேச இயலாது. +

சோவியத்துகளின் வீழ்ச்சி கம்யூனிசத்தின் தோல்வி அல்ல, அதைவிட சிறந்த #சோசலிசசமூகம் படைப்பதற்கான தொடக்கம் அது.

கியூபாவுக்குள் மட்டும் தெரிந்த சே.. இன்று உலக புரட்சிகளின் ஊற்று.

அப்படித்தான் தத்துவத்தையும், மானுட வரலாற்று வேட்கையையும் வீழ்த்தவே இயலாது. அது முன்னைவிட +

ஆபத்தானதாக வெளிக் கொணரும்.

#தமிழ் தேசியவாதிகளுக்குத்தெரிந்து சீமான் லட்சக்கணக்கான திராவிட கூலிகளுக்கு #மூக்கணாங்கயிறு மாட்டி இருக்கிறார், அவரை வீழ்த்தினால்,

அறுத்துக்கொண்டு கிளம்பும் மதங்கொண்ட காளைகள் என்ன செய்யும் என்பதை #திராவிடம் மற்றும் #இந்தியம் அறியும். +

ஆனால் அதேவேளை, நம்மை நாமே #introspect செய்துகொள்ள வேண்டிய நேரமிது.

இப்படியான அநாகரீக வேலைப்பாடுகளை பலரும் #திராவிட அரசியலில் ஊறிக்கிடந்த போது செய்திருக்கிறார்கள்,

#சட்டை பொத்தான்களை கழட்டிவிட்டு வெற்றுடம்பில் பத்து செயின்களை மாட்டிக் கொண்டு படம் எடுப்பதெல்லாம் அருவருப்பான +

பச்சை #திராவிடத்தனம்.

நல்லவேளை அந்த அசிங்கங்களை கடந்து பயணிக்கிறோம்.

திராவிடத்தை தொலைத்து ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் #சுயபாடங்கள் இவை.

#சீமான் மீது வைக்கப்படும் அவதூறுகளை அவருடைய நலம் விரும்பிகள் தகர்ப்பார்கள்!

#தமிழ்தேசியவாதிகள்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling