ஆகச்ட்டு இரண்டாவது வாரம் தொடங்கி செப்டம்பர் இரண்டாவது வாரம் முடிய ஒருமாத தனிமைப் பயணம் #AT_HIKE_2020 திட்டமிட்டுள்ளேன். #Covid_19 காலத்தில் மூன்று மாநிலங்களின் காடுகள் வழியே தனிப்பயணம். Planning is challenging than actual hike.
#Mile2Go
I will be sharing my link , you can track me and my progress.
தனிமைப் பயணங்கள் காடுகள் கரடிகள் பாம்புகள் கயோட்டிகள்(coyote)புதிய மனிதர்கள் என்று அது ஒரு தனி உலகம்
நினைத்தாலே ஒருவித வெறுமையும் ,பயமும் மிகிழ்ச்சியும் ஒருசேர வந்துபோகும் திகல்😁
வாழ்த்துங்க பெரண்ட்சு
(பழைய படம்)
Testing the stove and cooking utensils set @ home #AT_HIKE_2020 #Mile2Go
#AT_HIKE_2020
#Mile2Go
ஒரு மாதத்திற்கு தேவையான உணவு முதல் குண்டி துடைக்கும் காகிதம் வரை அனைத்தும் மறக்காமல் எடுத்து, ஒரு வாரத்திற்கு ஒருமுறை இறங்கும் மலையோர ஊர்களில் உள்ள அஞ்சலகம் அல்லது தனியார் விடுதிகளுக்கு முன் கூட்டியே அனுப்பி வைத்து,
அந்த இடத்தை அடைந்தவுடன் backpack ல் restock செய்து கொண்டு நடையைத் தொடரவேண்டும்.
சுமக்கும் மூட்டையில் 5 /6 நாட்களுக்கான உணவே எடுத்துச் செல்ல முடியும்.
படுக்கை டென்ட் உடை முதலுதவி என்று எல்லாமும் இருப்பதால் அதிக சுமை கடினம்.
#Hiking
#Water
#Mile2Go
தண்ணீர் ஒரு நாளைக்கு ஒரு கேலனுக்கு மேல் தேவைப்படும். குடிக்க சமையலுக்கு . அப்பலாச்சியன் மலைப்பகுதி பல அருவிகள்,ஆறுகள,நீரோடைகளைக் கொண்டது.
ஆனால் அப்படியே குடித்துவிடவே முடியாது. குடிக்கவும் கூடாது.
பல நுண்ணுயிர்களும், அழுக்கு,குப்பை,சகதி,இறந்த மிருகங்கள் என்று பல இருக்கலாம் நீரில். அதை வடிகட்டியே பயன்படுத்த வேண்டும்.
குட்டைபோல தேங்கியிருந்தாலும் வடிகட்டிவிட்டால் பயம் இல்லை.
இதற்கு filter உள்ளது. பிரபலமானது #Sawyer brand . பல உள்ளது இது பலரால் பயன்படுத்தப்படுவது.
இந்த filter ஐ அவ்வப்போது reverse side ல் இருந்து backwash செய்து கொள்ளவேண்டும். இது filter நெடுநாள் வரை உழைக்க உதவும். cartridge ஏதும் மாற்றத்தேவை இல்லை.
அவர்களின் மினி வெர்சனே 100,000 gal வரை வேலை செய்யும் என்கிறார்கள்
இது filter மட்டும்தான்.இதை பாட்டில் or நீர்ப்பைகளில் மாட்டி வடிகட்டவேண்டும்
3rd படத்தில் இருப்பது #RattlesnakeBeautyPageant. ஓரமா போகுது😁 இது அவர்கள் காடு நாம்தான் வேண்டா விருந்தாளி.நினைவில் இருக்கவேண்டும் இது😁
#FirstAid
#Mile2Go
#AT_HIKE_2020
காய்ச்சல்,தலைவலி.& வயிற்றுப்போக்கு மாத்திரை முதல், காயம் பட்டால் அறுத்து தைக்க ஊசி , டெண்ட் கிழிந்தால் சரிசெய்ய repair kit, என அனைத்தும் இதில்.
சுமக்கும் பையின் மொத்த எடை 30 to 35 lb வந்துவிடும். முடிந்தளவு எடையைக் குறைப்பது நடையை இலகுவாக்கும்.
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.