Abdullah_Rawuthar Profile picture
தமிழ்க் குடியில் பிறந்ததாலேயே நான் தமிழன்.

Sep 16, 2020, 13 tweets

இப்பதிவு அண்ணன் சீமானுக்காக மட்டுமே.

எவ்வளவு கடினமானது #தமிழ் தேசியப்பாதை.

நான்கூட மிக எளிதாகத்தான் எண்ணி இருந்தேன்.

தமிழர் நிலத்தில் #தமிழ்தேசியம் கட்டி எழுப்புவது என்ன பெரிய காரியம்? தமிழரை தமிழராக இணைத்தல் கடினமா என்ன? இல்லாத திராவிடத்தை அழிப்பது எளிதுதானே?

நிச்சயம் இல்லை.

இது மிகக் கடினமான, கரடு முரடான, கொடிய மிருகங்களும், விசப் பாம்புகளும் நிரம்பிய பாதை.

ஆம்.

எத்தனை விசமிகள் தான் இங்கே.

தமிழ்தேசியம் பேசிக்கொண்டே சாதி வளர்ப்போர் ஒருபுறம்.(திருமா, வேல்முருகன்)

தமிழும் தமிழ் தேசியமும் என் உயிர் எனக் கூறிக்கொண்டே மதம் போற்றுவோர் ஒருபுறம்.

கடவுள் இருக்கிறார் என்போர் ஒருபுறம்.

கடவுள் இல்லை என்போர் ஒருபுறம்.

இவர்கள் மட்டும் தான் கடவுள் என்போர் ஒருபுறம்.

இது மட்டும் தான் வழிபாடு என்போர் ஒருபுறம்.

இடையே!!

யார் தமிழன் என்போர் மறுபுறம்.

எவ்வளவு கடினமான பாதை இந்தத் #தமிழ்தேசியம்.

உண்மையில், இந்தப்பாதையில் பயணிக்க முடிவெடுத்த #சீமானை பாராட்டியே ஆக வேண்டும்.

எவ்வளவு பேரை சமாளிக்க வேண்டும்.

எல்லாத் தலைவர்களையும் சாதிய அடையாளத்தில் இருந்து மீட்டெடுத்து, தமிழ் தலைவர்கள் என அடையாளப்படுத்த வேண்டும்.

இதில், என் சாதித் தலைவரை விட்டுவிட்டார்.

இவருக்கு விழா எடுக்கவில்லை என எழும் விமர்சனங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டும்.

தமிழன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன்.

தமிழ் என்ற மொழியும், #தமிழன் என்ற இனமும் தோன்றிய போது, #மதம் என்ற ஒன்றே கிடையாது. மொழியால் தமிழனாய் இணைவோம் என இணைக்க வேண்டும்.

இதில், அவர் இந்த மத மக்களுக்கு சாதகமாக இருக்கிறார். இவர் ஒரு பிஜேபி கைக்கூலி,இசுலாமியன், கிருத்துவன் என்கிற பட்டங்களையும் சுமக்கவேண்டும்.

பிரச்சனை ஏற்படும் போதெல்லாம், சில நிமிடங்களில் #சீமான் கண்டனம் தெரிவித்து விடவேண்டும்.

இல்லையேல்,மாற்றுமதத்தின் கைக்கூலி என அழைக்கப்படுவார்.

இல்லாத மாய பிம்பமான திராவிடத்தை வீழ்த்த வேண்டும்.

அந்த மாயையில் இருந்து தமிழர்களை மீட்டெடுக்க வேண்டும்.

சாகும் திராவிடத்தை காக்க, அனைத்து அல்லக்கைகளும் விமர்சிப்பார்கள். கவனிக்காதவாரே கடந்து செல்ல வேண்டும்.

என்றோ பேசிய வீடியோவுக்கெல்லாம் இன்று விளக்கம் சொல்ல வேண்டும்.

கடந்த கால சந்திப்புகள், நினைவுகளுக்கெல்லாம் கூட, சான்று வழங்க வேண்டும். இல்லையேல், பொய்யர் என்ற பட்டத்தையும் வாங்கிக் கொள்ள வேண்டும்.

யார் #தமிழன் என வேறு கேட்பார்கள் விளக்க வேண்டும்.

புரிந்தும் புரியாதது போல், மீண்டும் மீண்டும் கேட்பார்கள். சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.

அரசியல் பலம் கொண்ட ஆரியத்தை எதிர்க்க வேண்டும். அது இந்த மண்ணில் நுழைத்த மனுதர்மத்தை அழித்தொழிக்க வேண்டும்.

மண்ணை நாசமாக்கும் எல்லா திட்டங்களுக்கும் எதிர்நின்று போராட வேண்டும்.

ஒரு நாள் தாமதமாக வந்தாலும், மக்கள் கேள்வி கேட்பார்கள். #தன்னிலை விளக்கம் தர வேண்டும்.

நக்சல், பாசிஸ்ட், பயங்கரவாதி, தமிழ்த் தீவிரவாதி, இனவெறியன் என்ற பட்டங்களையும் சுமக்க வேண்டும்.

வியாபார நிறுவனங்களின் கைகூலியாக மாறிவிட்ட, அரசியல் பின்புலம் கொண்ட, காசுக்கு #சேவகம் பார்க்கும் ஊடகங்களின் கேள்விகளுக்கு முடிந்தவரை கோபப்படாமல் பதில் சொல்லவேண்டும்.

மீறி கோபப்பட்டு விட்டால், அதற்கும் சேர்த்து விளக்கம் சொல்லவேண்டும்.

தன் குடும்பம் பற்றி எல்லாம் கூட அநாகரீக விமர்சனங்கள் வரும். கடந்து போக வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக,

தமிழ் #தேசியப்பாதை பற்றிய முழுத்தெளிவற்ற தம்பிகளுக்கு, அவர்களின் செயல்களால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு,

பொறுப்பேற்று விளக்கம் சொல்ல வேண்டும்.

தம்பிகளை விட்டுத்தரவும் முடியாது. அதேநேரம் அதனை சமாளிப்பதும் கடினமானதாக இருக்கும். ஆனாலும் செய்ததாக வேண்டும்.

எவ்வளவு கடினமானது இந்த தமிழ்த்தேசியப் பாதை.

ஆனாலும்,

எல்லா புறமும் எதிரிகள் சூழ, பயணிப்பதே ஒரு #கெத்து தான்.

நீங்கள் இன்னும் கூட கடுமையாக விமர்சியுங்கள்.

நாங்கள் சரியாகத்தான் பயணிக்கிறோம் என்பதற்கான அளவுகோலே, உங்களின் விமர்சனங்கள் தான்.

சமரசமின்றி இந்தப் பாதையில் பயணிக்க முடிவெடுத்த சீமானை ஆதரிக்கவில்லை நாங்கள்.

கையை வலுப்படுத்துகிறோம்.

நன்றி.
#தாமரைச்செல்வன்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling