Dr.Nellai Profile picture
PhD 🎓 | Chemistry | IIT | Research Scientist ⚡Intrests: Einstein Physics Universe⚡ Tweets mostly Science & Health news. Occasionally Politics Movies Cricket

May 5, 2021, 21 tweets

கரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி பற்றி சில சந்தேகங்களும் பதில்களும்.

1) கரோனா வைரஸ் எதனால் ஆபத்தான வைரஸ்?
கரோனா வைரஸ் ஒரு வைரஸ். வைரசுக்கு பொதுவா மருந்து கிடையாது. பேக்டீரியாவுக்கு உண்டு. வைரஸை அழிக்க நம் உடம்பு தயாராக வேண்டும். சண்டை போட வேண்டும். #COVID19 #Covishield #Covaxin 1/n

குளிர் காலத்தில் வரும் சளி, காய்ச்சல் வைரஸ்களால் வரலாம். ஆனா அவை பெரும்பாலும் ஆபத்தானவை அல்ல. பெரிய பாதிப்பு வரும் முன்பு நம் உடம்பு சண்டையிட்டு அழித்து விடும். ஆனா கரோனா வைரஸ் மிக வேகமாக நம் உடம்புக்குள் பரவுவதோடு, நம் நுரையீரலை பாதிக்கும். #COVID19 #Covishield #Covaxin 2/n

உடம்புக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. மூளை முதல் உள்ளங்கால் வரை உறுப்புகள் பாதிக்கப்படலாம். அதனால்தான் கரோனாவில் இருந்து மீண்டு வர அதிக காலம் ஆகும். ஆனா அதிர்ஷ்டவசமாக பலருக்கு நம் உடம்பு நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்து காப்பாற்றி விடும். #COVID19 #Covishield #Covaxin 3/n

வயதானவர்கள், வேறு உடல் குறைபாடு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இவர்கள் எல்லாம் அதிகம் பாதிக்க படுவார்கள். இவர்களை கரோனா வைரஸ் தாக்கினால் மீண்டு வருவது சிரமம். #COVID19 #Covishield #Covaxin 4/n

2) வைரஸ் தடுப்பூசி எப்படி வேலை செய்யும்?
பொதுவாக எல்லா தடுப்பூசியும் என்ன செய்யும் என்றால் நம் உடம்புக்கு வைரஸ் எப்படி இருக்கும் என்று அடையாளம் காண்பிக்கும். பழைய முறையில் "சாகடிக்கப்பட்ட" வைரஸை உடம்புக்குள் செலுத்துவார்கள். #COVID19 #Covishield #Covaxin 5/n

இந்த தடுப்பூசி வைரஸ் உடம்புக்குள் பல்கி பெருக்காது. நம் உடம்பு அதை கண்டு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். அடுத்த முறை நிஜமான வைரஸ் உடம்புக்குள் வரும்போது நம் உடம்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.
#COVID19 #Covishield #Covaxin 6/n

3) கரோனா வைரசுக்கு தடுப்பூசி ஏன் போட வேண்டும்? (முதல் கேள்விக்கான பதிலை படிக்கவும்)
கரோனா வைரஸ் ஆபத்தானது. உடல் தாக்கப்பட்டதும் நேராக நுரையீரலை தாக்கும். அதனால் நம் உடம்பு நுரையீரலை வைரஸ் தாக்கும் முன்பு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டும்.
#COVID19 #Covishield #Covaxin 7/n

அப்படி வேகமாக உருவாக்க முடியாவிட்டால் நாம் இறப்பதை தவிர வேறு வழி இல்லை. அதோடு யார் உடம்பு விரைவில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று தெரியாது. கரோனா வைரஸ் பாதித்த பின்தான் தெரியும்.
#COVID19 #Covishield #Covaxin 8/n

4) கரோனா தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது?
பொதுவாக "சாகடிக்கப்பட்ட" வைரஸை உடம்புக்குள் தடுப்பூசி மூலம் செலுத்துவார்கள். அப்படியான ஒரு தடுப்பூசி கோவாக்சின். (இது எப்படி வேலை செய்யும் - கேள்வி & பதில் 2)
#COVID19 #Covishield #Covaxin 9/n

அப்படி அல்லாமல் கரோனா வைரசின் ஜெனெடிக் கோட் மட்டும் உடம்புக்குள் செலுத்துவது மற்ற வாக்சின்கள் - பைசர், ஜான்சன் & ஜான்சன், கோவிஷீல்டு, மாடெர்னா, அஸ்டரா ஜெனிக்கா எல்லாமே.
#COVID19 #Covishield #Covaxin 10/n

உள்ளே செலுத்தப்படும் ஜெனெடிக் கோட் மூலம் கரோனா வைரஸின் கொக்கி போன்ற பகுதி நம் உடம்புக்குள் இந்த தடுப்பூசியால் உற்பத்தி செய்யப்படும்.
இந்த கொக்கி போன்ற பகுதியை நம் உடம்பு கண்டுகொண்டு அதற்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்யும்.
#COVID19 #Covishield #Covaxin 11/n

5) உருமாறிய வைரசுக்கு இந்த தடுப்பூசிகள் வேலை செய்யுமா?
கோவாக்சின் தடுப்பூசியை "சாகடிக்கப்பட்ட" கரோனா வைரஸ் உள்ளே செலுத்தப்படும். அதனால் முழு கரோனா வைரஸும் மாற்றம் அடைந்தால் மட்டுமே தடுப்பூசி வேலை செய்யாது. ஆனா உருமாற்றம் என்பது ரொம்ப சின்னது #COVID19 #Covishield #Covaxin 11/n

கரோனா வைரஸின் மேற்புறம் உள்ள கொக்கி போன்ற பகுதிக்கு எதிரா நம் உடம்பை இந்த தடுப்பூசி தயார் செய்யும். ஆனா இந்த கொக்கி போன்ற பகுதி உருமாற்றம் அடையவில்லை. அதனால் தடுப்பூசி வேலை செய்யும்
#COVID19 #Covishield #Covaxin 13/n

6) தடுப்பூசி போட்டவர்களுக்கும் கரோனா வருகிறதே?
கரோனா தடுப்பூசி (சில மாதங்கள் கழித்து) உங்கள் உடம்புக்கு கரோனா வருவதை தடுக்காது. மாறாக கரோனா வைரஸ் தாக்கினால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும். #COVID19 #Covishield #Covaxin 13/n

அதனால் கரோனா தடுப்பூசி போட்ட பிறகும் உங்களுக்கு கரோனா வைரஸ் தாக்கலாம். ஆனா உங்கள் உடம்புக்கு என்ன செய்யவேண்டும் என்று தடுப்பூசி சொல்லிக்கொடுத்திருப்பதால் உங்கள் உடம்பு கரோனா வைரசுக்கு எதிராக விரைவில் செயல்பட்டு உங்கள் உடம்பை காப்பாற்றி விடும். #COVID19 #Covishield #Covaxin 14/n

தடுப்பூசி = கராத்தே மாஸ்டர்
எப்படி காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று கற்றுத்தருகிறார். அடுத்த முறை உங்களிடம் ஒருவர் திருட வருகிறார், கராத்தே மாஸ்டரை குறை சொல்ல முடியுமா? அவரிடம் கற்ற வித்தையை உபயோகப்படுத்தி நீங்கள் தப்பித்துக்கொள்வீர்கள்தானே?#COVID19 #Covishield #Covaxin 15/n

8) ரத்தம் உறைகிறது என்கிறார்களே?
உதாரணமா ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியில் ரத்தம் உறைவது கண்டு பிடிக்கபட்டது. எத்தனை பேருக்கு தெரியுமா? 6 பேருக்கு. ஆனா ஊசி போடப்பட்டது 7600000 பேருக்கு (76 லட்சம் பேருக்கு).
#COVID19 #Covishield #Covaxin 16/n
bbc.com/news/world-us-…

இப்படி 6 பேருக்கு நடந்ததுக்கே அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அந்த 6 பேருக்கு எதனால் வந்தது, அவர்களுக்கு ஆபத்தில்லை என்று கண்டு பிடித்து பிறகுதான் தொடர்ந்தார்கள். இதுவே இந்த 76 லட்சம் பெரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தால்?
#COVID19 #Covishield #Covaxin 17/n

எத்தனை பேருக்கு கரோனா தாக்கி இருக்கும்? எத்தனை பேர் இறந்திருப்பார்கள்? இந்த 76 லட்சம் பேர் இன்னும் எத்தனை பேருக்கு கரோணாவை பரப்பி இருப்பார்கள்? அதனால் அறிவியல் மீது சந்தேகம் வேண்டாம். தைரியமா ஊசி போட்டுக் கொள்ளுங்கள். #COVID19 #Covishield #Covaxin 18/n cnn.com/2021/04/23/hea…

Contraindication எதுவும் தடுப்பூசிக்கு இல்லை என்றாலும் வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், மற்ற உடல் குறைபாடுகள் இருப்பவர்கள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள். ஒரு போன் கால் கூட போதும்.
#COVID19 #Covishield #Covaxin

மேலும் விபரம் உங்கள் மருத்வரிடம் + ட்விட்டரில் இருக்கும் மருத்துவர்களிடமும், அறிவியலாளர்களிடமும் சந்தேகங்கள் கேட்கலாம்
You can follow them too. They tweet lot of information about #COVID19
@PSampathkumarMD @VincentRK
@ramalingamdr @thil_sek @antojeyas @Dr_Ezhilan @drloguortho1

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling