Dr.Nellai Profile picture
May 5, 2021 21 tweets 19 min read Read on X
கரோனா வைரஸ் மற்றும் தடுப்பூசி பற்றி சில சந்தேகங்களும் பதில்களும்.

1) கரோனா வைரஸ் எதனால் ஆபத்தான வைரஸ்?
கரோனா வைரஸ் ஒரு வைரஸ். வைரசுக்கு பொதுவா மருந்து கிடையாது. பேக்டீரியாவுக்கு உண்டு. வைரஸை அழிக்க நம் உடம்பு தயாராக வேண்டும். சண்டை போட வேண்டும். #COVID19 #Covishield #Covaxin 1/n
குளிர் காலத்தில் வரும் சளி, காய்ச்சல் வைரஸ்களால் வரலாம். ஆனா அவை பெரும்பாலும் ஆபத்தானவை அல்ல. பெரிய பாதிப்பு வரும் முன்பு நம் உடம்பு சண்டையிட்டு அழித்து விடும். ஆனா கரோனா வைரஸ் மிக வேகமாக நம் உடம்புக்குள் பரவுவதோடு, நம் நுரையீரலை பாதிக்கும். #COVID19 #Covishield #Covaxin 2/n
உடம்புக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காது. மூளை முதல் உள்ளங்கால் வரை உறுப்புகள் பாதிக்கப்படலாம். அதனால்தான் கரோனாவில் இருந்து மீண்டு வர அதிக காலம் ஆகும். ஆனா அதிர்ஷ்டவசமாக பலருக்கு நம் உடம்பு நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்து காப்பாற்றி விடும். #COVID19 #Covishield #Covaxin 3/n
வயதானவர்கள், வேறு உடல் குறைபாடு உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இவர்கள் எல்லாம் அதிகம் பாதிக்க படுவார்கள். இவர்களை கரோனா வைரஸ் தாக்கினால் மீண்டு வருவது சிரமம். #COVID19 #Covishield #Covaxin 4/n
2) வைரஸ் தடுப்பூசி எப்படி வேலை செய்யும்?
பொதுவாக எல்லா தடுப்பூசியும் என்ன செய்யும் என்றால் நம் உடம்புக்கு வைரஸ் எப்படி இருக்கும் என்று அடையாளம் காண்பிக்கும். பழைய முறையில் "சாகடிக்கப்பட்ட" வைரஸை உடம்புக்குள் செலுத்துவார்கள். #COVID19 #Covishield #Covaxin 5/n
இந்த தடுப்பூசி வைரஸ் உடம்புக்குள் பல்கி பெருக்காது. நம் உடம்பு அதை கண்டு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். அடுத்த முறை நிஜமான வைரஸ் உடம்புக்குள் வரும்போது நம் உடம்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்.
#COVID19 #Covishield #Covaxin 6/n
3) கரோனா வைரசுக்கு தடுப்பூசி ஏன் போட வேண்டும்? (முதல் கேள்விக்கான பதிலை படிக்கவும்)
கரோனா வைரஸ் ஆபத்தானது. உடல் தாக்கப்பட்டதும் நேராக நுரையீரலை தாக்கும். அதனால் நம் உடம்பு நுரையீரலை வைரஸ் தாக்கும் முன்பு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டும்.
#COVID19 #Covishield #Covaxin 7/n
அப்படி வேகமாக உருவாக்க முடியாவிட்டால் நாம் இறப்பதை தவிர வேறு வழி இல்லை. அதோடு யார் உடம்பு விரைவில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று தெரியாது. கரோனா வைரஸ் பாதித்த பின்தான் தெரியும்.
#COVID19 #Covishield #Covaxin 8/n
4) கரோனா தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது?
பொதுவாக "சாகடிக்கப்பட்ட" வைரஸை உடம்புக்குள் தடுப்பூசி மூலம் செலுத்துவார்கள். அப்படியான ஒரு தடுப்பூசி கோவாக்சின். (இது எப்படி வேலை செய்யும் - கேள்வி & பதில் 2)
#COVID19 #Covishield #Covaxin 9/n
அப்படி அல்லாமல் கரோனா வைரசின் ஜெனெடிக் கோட் மட்டும் உடம்புக்குள் செலுத்துவது மற்ற வாக்சின்கள் - பைசர், ஜான்சன் & ஜான்சன், கோவிஷீல்டு, மாடெர்னா, அஸ்டரா ஜெனிக்கா எல்லாமே.
#COVID19 #Covishield #Covaxin 10/n
உள்ளே செலுத்தப்படும் ஜெனெடிக் கோட் மூலம் கரோனா வைரஸின் கொக்கி போன்ற பகுதி நம் உடம்புக்குள் இந்த தடுப்பூசியால் உற்பத்தி செய்யப்படும்.
இந்த கொக்கி போன்ற பகுதியை நம் உடம்பு கண்டுகொண்டு அதற்கெதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்யும்.
#COVID19 #Covishield #Covaxin 11/n
5) உருமாறிய வைரசுக்கு இந்த தடுப்பூசிகள் வேலை செய்யுமா?
கோவாக்சின் தடுப்பூசியை "சாகடிக்கப்பட்ட" கரோனா வைரஸ் உள்ளே செலுத்தப்படும். அதனால் முழு கரோனா வைரஸும் மாற்றம் அடைந்தால் மட்டுமே தடுப்பூசி வேலை செய்யாது. ஆனா உருமாற்றம் என்பது ரொம்ப சின்னது #COVID19 #Covishield #Covaxin 11/n
கரோனா வைரஸின் மேற்புறம் உள்ள கொக்கி போன்ற பகுதிக்கு எதிரா நம் உடம்பை இந்த தடுப்பூசி தயார் செய்யும். ஆனா இந்த கொக்கி போன்ற பகுதி உருமாற்றம் அடையவில்லை. அதனால் தடுப்பூசி வேலை செய்யும்
#COVID19 #Covishield #Covaxin 13/n
6) தடுப்பூசி போட்டவர்களுக்கும் கரோனா வருகிறதே?
கரோனா தடுப்பூசி (சில மாதங்கள் கழித்து) உங்கள் உடம்புக்கு கரோனா வருவதை தடுக்காது. மாறாக கரோனா வைரஸ் தாக்கினால் என்ன செய்யவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கும். #COVID19 #Covishield #Covaxin 13/n
அதனால் கரோனா தடுப்பூசி போட்ட பிறகும் உங்களுக்கு கரோனா வைரஸ் தாக்கலாம். ஆனா உங்கள் உடம்புக்கு என்ன செய்யவேண்டும் என்று தடுப்பூசி சொல்லிக்கொடுத்திருப்பதால் உங்கள் உடம்பு கரோனா வைரசுக்கு எதிராக விரைவில் செயல்பட்டு உங்கள் உடம்பை காப்பாற்றி விடும். #COVID19 #Covishield #Covaxin 14/n
தடுப்பூசி = கராத்தே மாஸ்டர்
எப்படி காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று கற்றுத்தருகிறார். அடுத்த முறை உங்களிடம் ஒருவர் திருட வருகிறார், கராத்தே மாஸ்டரை குறை சொல்ல முடியுமா? அவரிடம் கற்ற வித்தையை உபயோகப்படுத்தி நீங்கள் தப்பித்துக்கொள்வீர்கள்தானே?#COVID19 #Covishield #Covaxin 15/n
8) ரத்தம் உறைகிறது என்கிறார்களே?
உதாரணமா ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசியில் ரத்தம் உறைவது கண்டு பிடிக்கபட்டது. எத்தனை பேருக்கு தெரியுமா? 6 பேருக்கு. ஆனா ஊசி போடப்பட்டது 7600000 பேருக்கு (76 லட்சம் பேருக்கு).
#COVID19 #Covishield #Covaxin 16/n
bbc.com/news/world-us-…
இப்படி 6 பேருக்கு நடந்ததுக்கே அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அந்த 6 பேருக்கு எதனால் வந்தது, அவர்களுக்கு ஆபத்தில்லை என்று கண்டு பிடித்து பிறகுதான் தொடர்ந்தார்கள். இதுவே இந்த 76 லட்சம் பெரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தால்?
#COVID19 #Covishield #Covaxin 17/n
எத்தனை பேருக்கு கரோனா தாக்கி இருக்கும்? எத்தனை பேர் இறந்திருப்பார்கள்? இந்த 76 லட்சம் பேர் இன்னும் எத்தனை பேருக்கு கரோணாவை பரப்பி இருப்பார்கள்? அதனால் அறிவியல் மீது சந்தேகம் வேண்டாம். தைரியமா ஊசி போட்டுக் கொள்ளுங்கள். #COVID19 #Covishield #Covaxin 18/n cnn.com/2021/04/23/hea…
Contraindication எதுவும் தடுப்பூசிக்கு இல்லை என்றாலும் வயதானவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், மற்ற உடல் குறைபாடுகள் இருப்பவர்கள் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக்கொள்ளுங்கள். ஒரு போன் கால் கூட போதும்.
#COVID19 #Covishield #Covaxin
மேலும் விபரம் உங்கள் மருத்வரிடம் + ட்விட்டரில் இருக்கும் மருத்துவர்களிடமும், அறிவியலாளர்களிடமும் சந்தேகங்கள் கேட்கலாம்
You can follow them too. They tweet lot of information about #COVID19
@PSampathkumarMD @VincentRK
@ramalingamdr @thil_sek @antojeyas @Dr_Ezhilan @drloguortho1

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr.Nellai

Dr.Nellai Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @nellaiseemai

Sep 8, 2023
ஆண்டுக்கு ஒருமுறை ரத்தத்தில் cholesterol, LDL, HDL, Cholesterol/HDL ratio பார்த்துக்கொள்ளுங்கள்.
Total cholesterol < 200 mg/dL
Triglycerides < 150 mg/dL
HDL > 39 mg/dL
LDL < 130 mg/dL
திடீர் மாரடைப்புக்கு இதுவும் காரணமாய் இருக்கலாம்.

#heart #HealthTips 1/n
ரத்தத்தில் LDL அதிகமாவது பிரச்சினை. அதிகமா இருந்தால் வேறு உடல் பிரச்சினைகள் வராமல் கூட இருக்கலாம். ஆனால் இதய ரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தலாம். குண்டாக இருந்தால்தான் கொழுப்பு அதிகமாய் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒல்லியா இருந்தால் கூட அதிகமா இருக்கலாம்.

#Heart #HealthTips
இதில் LDL ஐ குறைக்க வழி இருக்கு. உணவு, உடற்பயிற்சி. குறையவில்லை எனில், Statin என்னும் மாத்திரை. சுருக்கமாய் சொல்ல வேண்டும் என்றால், நம் உடம்பில் கல்லீரல் கொழுப்பை உற்பத்தி செய்யும் enzyme களை சுரக்கும். அந்த enzyme கல்லீரலில் சுரப்பதை இந்த மருந்துகள் குறைக்கும்
#Heart #HealthTips
Read 10 tweets
Aug 10, 2023
என்னமோ ரஜினி மாஸ்தான். நடிப்பு அல்ல என்று நிறுவ முயற்சிக்கிறார்கள். 1) மாஸ் நடிகரா 40 வருடமா நிலைப்பது ஈஸி அல்ல. விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் எல்லாம் மாஸ் ஹீரோக்கள்தான். புறம் தள்ளப்பட்டார்கள். முழு காமடி, அப்பா பெரியப்பா என்று சைடு ரோலுக்கு மாறி விட்டார்கள்.
#Jailer 1/n
மாஸ் ஹீரோவா ஏற்றுக்கொள்ள வைப்பது எளிது அல்ல. கமல் சொன்ன மாதிரி "திரையில் தோன்றினாலே ரசிகர்கள் ஆர்பரிக்கிறார்கள். ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால் அது பெரிய திறமை". அதை சில ஆண்டுகள் அல்ல 4 தலைமுறைகளாக 45 ஆண்டுகளாக செய்கிறார் ரஜினி. 2/n
#Jailer #Jailerblock
ஆனா மாஸ் மட்டும் அல்ல. ரஜினி இயல்பான திறமையான நடிகர். சாரு நிவேதிதா ஒரு பேட்டியில் சொல்லி இருப்பர். "கமல் நடிப்பில் வெளிநாட்டு நடிகர்களின் சாயல் தெரியும். குறிப்பா மார்லன் பிரண்டோ. ஆனா ரஜினி ஒரு சுயம்பு. அவர் நடிப்பில் யார் சாயலும் தெரியாது" என்று.
#Jailer #JailerBlockbuster 3/n
Read 7 tweets
Jul 18, 2023
#Hukum #HukumTigerKaHukum
#Rajinikanth #Jailer

முதலில் நான் கமல் ரசிகன். இப்போதும் அன்பே சிவம் என்னோட Top 3 ல் இருக்கும்.
கல்லூரிக்காலம் முதல் ரஜினி. ரஜினி படங்கள் கொண்டாட்ட மனநிலைக்கு உங்களை அழைத்து செல்பவை. கொண்டாட்டத்துக்கானவை. 1/n
#Hukum #HukumTigerKaHukum
#Rajinikanth #Jailer

ரஜினி = 45 ஆண்டு கொண்டாட்டம் இது எளிதல்ல. அவர் பாதையில் தொடர முயன்று தோற்றவர்கள் பலர். முழு மாஸ் படத்திலும் சட்டென கண் கலங்க வைப்பார். "நான் நடிக்கிறேன் பார்..நன்றாக பார்..." என்று வலிய திணிக்காத இயல்பான நடிப்பு அவரோடாது. Image
#Hukum #HukumTigerKaHukum
#Rajinikanth #Jailer 3/n
இப்போது வெற்றிபெற்ற சில நடிகர்கள் அவர் பாதையில் பயணிப்பவர்கள்தான். என்னோட கல்லூரிக்காலத்தில் என்னை ஈர்த்தது போல அவர்களையும் ஈர்த்திருப்பார் அல்லவா? அண்ணாமலை தம்பி, பாபா முத்திரை என்று தங்கள் படத்தில் நடித்தவர்கள்தான்.
Read 9 tweets
Jun 1, 2023
டிராவிட் இக்கட்டான நேரங்களில் விளையாடினார். மாற்றுக்கருதில்லை. ஆனா சச்சின் அப்படி விளையாடவில்லை என்ற பொதுப்புத்தி நிறையவே இருக்கிறது. 80 களின் இறுதியில், 90 களின் ஆரம்பத்தில் சச்சின் மட்டுமே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டு மைதானங்களில் விளையாடுவார். 1/n
வேகப்பந்து அச்சுறுத்தும் பெர்த் மைதானத்தில் 20 வயதுக்கும் முன்னரே 100 அடுத்தவர் சச்சின். அந்த 100, ஆஸ்திரேலிய நாட்டில் மிக குறைந்த வயதில் அடிக்கப்பட்ட 100. அந்த ஒரு 100 ஐ பார்த்தே, அப்போதைய ஜாம்பவான்கள் சச்சின் மிகச்சிறந்த வீரராக வருவார் என்று கணித்தார்கள். 2/n
ஆனால் அந்த போட்டியில் இந்தியா தோற்றுத்தான் போகும். வேறு யாரும் விளையாடாமல். இந்த விவரம் தெரியாமல், பார்த்தீர்களா சச்சின் 100 அடித்தால் தோற்றுப்போகும் என்பார்கள். இன்னொரு உதாரணம் கூட. ஷார்ஜா போட்டி. கடைசி லீக் போட்டி. இந்தியா வெற்றிபெற 270க்கும் மேல் அடிக்க வேண்டும். 3/n
Read 5 tweets
Dec 22, 2022
What are gravitational waves?
#Einstein predicted in 1916.
It took almost a century to realize that.
He was "way ahead of his time".
When a gravitational wave passes through objects will elongate and shrink alternatively.

#Gravity #GravitationalWave 1/n

But #GravitationalWaves are tiny so does the elongation and shrinking.

So scientists build an "L" shaped tunnel and sending laser from the middle point to both the edges and back continuously.

The length of the L shaped tunnel is 2.5 miles each side.

#gravity 2/n
The idea is when #gravitationalwaves pass through the L shape tunnel, one side will shrink and the other side will elongate bcoz they are diagonally opposite to each other.

The instrument is so sensitive that it can measure a change in length as small as 1/1000 of a proton. 3/n
Read 6 tweets
Dec 21, 2022
ஒன்னாவது ஒழுங்கா இருக்கா?
1) இந்த வாட்ச் தயாரிப்பை நிறுத்தியது 2016ல். மொத்தமே 500 வாட்ச் என்கிறார். பாஜக ரபேல் ஒப்பந்தம் போட்டது 2016ல்.
அதுவரை அந்த 500 வாட்ச் விற்காமல் இருந்ததா?
2) ரபேல் விமானங்களை பிரான்ஸ் இந்தியா மட்டும் அல்ல, பல நாடுகளுக்கு விற்கிறது.
#rafalewatch 1/n
3) ரபேல் ஒப்பந்ததுக்கு முன்னாடியே வாங்கி இருந்தா அது எப்படி தேசபக்தி இந்தியா பிற்காலத்தில் ஒப்பந்தம் போதும்னு தெரியுமா? இல்ல அதற்காகவே வாட்ச் கொடுக்கப்பட்டதா?
4) நான்தான் வாங்கினேன் என்கிறார் அண்ணாமலை. தேர்தல் பத்திரத்தில் சொல்லி இருக்கிறாரா? 2/n
#rafalewatch
5) தன்னுடைய மனைவி தன்னைப்போல் 7 மடங்கு சம்பளம் வாங்குகிறார் என்கிறார். அவர் Hewlett Packard Enterprise Globalsoft Private Ltd இல் வேலை பார்க்கிறார் (election affidavit). இவரோட சம்பளம், அவரோட சம்பளம் தெரியவில்லை.
#rafalewatch #RafaleScam 3/n
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(