தன்னை வாழ வைத்த "தமிழ் சினிமாவை" வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டுமென #கமல்ஹாசன் அறிமுகம் செய்த பல "டெக்னாலஜிகள்" அதை பற்றிய திரெட்👇 (18 வீடியோக்கள்)
#KamalHaasan
1) #மகாநதி - "Avid Editing"
தமிழ் சினிமாவில் முதன் முதலில் அவிட் எடிட்டிங் டெக்னாலஜி பயன்படுத்திய படம் அதாவது சீனை பார்த்து உடனுக்குடன் எடிட்டிங் செய்வது👏
2) #குணா - "Steadi Camera"
கமல்ஹாசன் பேசி கொண்டே ரூமை சுற்றி நடிக்கப்பட்ட காட்சியை எடுக்க இந்த கேமரா உபயோகிக்கபட்டது அதாவது கேமராமேன் கையில் வைத்துக்கோண்டு சுற்றி சுற்றி காட்சியை பதிவு செய்வார்👏
3) #ஆளவந்தான் - "Motion Control Camera"
இந்திய சினிமாவில் முதல் முறையாக இந்த டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டது, ஒலியை பதிவு செய்வதிலும், படம் மற்றும் ஒலி இரண்டையும் திருத்துவதிலும், சிறப்பு விளைவுகளை உருவாக்குவதிலும், அனிமேஷனை உருவாக்குவதிலும் ஈடுபட்டள்ள தொழில்நுட்பம்👏
#ஆளவந்தான் - "Australia Cutting Edge Graphics"
இந்திய சினிமாவில் முதல் முறையாக இந்த கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது👏
#ஆளவந்தான் - "Animation Cartoon"
இந்த படத்தில் கமல்ஹாசன் பயன்படுத்திய இந்த டெக்னாலஜியை பார்த்து தான் ஹாலிவுட் இயக்குநர் குயேண்டின்தரண்டினோ 'கில் பில்' படத்தின் அனிமேஷன் காட்சிகளை எடுத்தார்👏
4) #குருதிபுனல் - "Dolby Stero Sound"
இந்த சவுண்ட் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய செப்டம்பரில் வர வேண்டிய படத்தை மூன்று மாசம் கழிச்சு ரிலீஸ் பண்ணார்👏
5) #விக்ரம் - "Animation Graphics"
விக்ரம் படத்தில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட அனிமேஷன் கிராபிக்ஸை பார்த்து தான் ராஜா சின்ன ரோஜா போன்ற படங்கள் எடுக்கப்பட்டன, அதை தவிர கம்ப்யூட்டரை முதல் முதலில் திரையில் காட்டியதும் இந்தப்படம் தான் 👏
6) #மருதநாயகம் - "Story Board Scripting"
முதன் முதலில் இந்த டெக்னாலஜியை பயன்படுத்தி படம் எடுக்கும் முன்பே அனைத்து காட்சிகளையும் துல்லியமாக வரைந்து வைக்க உதவும்👏
7) #இந்தியன் - "Prosthetic Makeup"
ஹாலிவுட் #StarTrek திரைப்படத்தில் புகழ்பெற்ற மைக்கேல் வெஸ்ட்மோர் உடன் மேக்கப் டிப்பார்மெண்டில் பணி செய்த கமல்ஹாசன் அந்த பழக்கத்தால் இந்தியன் திரைப்படத்தில் இந்த மேக்கப்பை அறிமுகம் செய்தார்👏
8) #தேவர்மகன் - "Movie Magic Screenwriter"
இந்த தொழில்நுட்பத்தை வைத்து ஏழே நாளில் தேவர்மகன் கதையை எழுதினார் 👏
9) #மைக்கேல்மதனகாமராஜன் - "Face Morphing Technology"
மார்பிங் டெக்னாலஜியை பயன்படுத்திய முதல் திரைப்படம் அதை தவிர லேப்டாப் என்ற ஒன்றை முதன் முதலில் திரையில் காட்டியதும் இந்தப்படம் தான்👏
10) #விருமாண்டி - "Live Recording & Rehersal"
பத்து நிமிஷத்துக்கு முன்னாடி ஸ்பாட்ல வசனம் பேசி நடிக்க சொல்றவங்க மத்தியில் #கமல்ஹாசன் சார் ஒத்திகை பாப்பாரு, முக்கியமா விருமாண்டி'ல டப்பிங் கிடையாது ஃபுல்லா லைவ் ரெக்கார்டிங்👏
11) #மும்பைஎக்ஸ்பிரஸ் - "Digital Camera"
இந்திய சினிமாவில் முதல் முதலில் "டிஜிட்டல் கேமரா"வில் படமெடத்து எங்களை போல சின்ன ஆட்களுக்கு சினிமா கதவை திறந்து வைத்தவர் #கமல்ஹாசன், அது வரைக்கும் டிஜிட்டல் கேமராவில் படமெடுத்தால் சென்சார் கிடையாது"👏
12) #உன்னைபோல்ஒருவன் - "Red One Camera"
20 வருஷம் முன்னாடியே டெலிவிஷன் தான் பெருசா வரும்னு சொன்னாரு, டிஜிட்டல் சினிமா வரும்னு சொன்னாரு, ரெட் எபிக் கேமரா தான் எதிர்காலம்னு சொல்லி முதன் முதலில் பயன்படுத்துனாரு எல்லாத்துக்கும் சிரிச்சாங்க ஆனா இன்னைக்கு👏
13) #விஸ்வரூபம் - "Auro 3D Sound Technology"
இதில் 11+1 சேனல்கள் உண்டு, இவை சரவுண்ட் மட்டும் அல்லாமல் காதுக்கு மேல் கேட்கும் ஒலியையும், கீழ் கேட்கும் ஒலியையும் வித்யாசப்படுத்தவல்லது இதை ஆடியோவில் 3டி என்றே கூறலாம், இந்திய சினிமாவில் விஸ்வரூபம் படம் மூலம் அறிமுகமானது👏
#விஸ்வரூபம் - "DTH"
இது புது வழி, என் சுயநலத்திற்காக நான் எடுத்துக் கொண்ட தனி வழி அல்ல, இது புது வழி நாளை பொது வழி (சூரரைப் போற்று & மாஸ்டர்) ஆகும்👏
14) #ராஜப்பார்வை - "Loop System to Dubbing"
சீன் பை சீன் டப்பிங் பண்ணும் முறையை மாற்றி எந்த சீனை வேண்டுமானலும் எப்போது வேண்டுமானாலும் டப்பிங் செய்யும் முறையை அறிமுகப்படுத்தினார் 👏
15) #ஹேராம் - "Desired Colour Tone"
முதல் முறையாக ஃபிலிம் லேபில் விண்டேஜ் கலர் மாற்றும் முறையை அறிமுகப்படுத்தினார்👏
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.