M.SivaRajan Profile picture
| ஓம் நமசிவாய 🕉 | | என்றும் பொன்னம்பலத்தாரின் திருவடி நிழலில் அடியேன் 🙏 | | Temple Priest 🕉 ஜோதிடர் 🙏 | #சிவவழிபாடு #ஜோதிடம்அறிவோம்

Jul 14, 2022, 6 tweets

#பைரவர்_வழிபாடு

#ஜோதிட_பரிகாரம்

உங்கள் இராசிக்கு பைரவரை வணங்கும் முறை

கடுமையான கிரக தோஷம் உள்ளவர்கள் பைரவ வழிபாடு செய்தால், கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.

எவராலும் தீர்க்க முடியாத பிரச்சனைகளை பைரவர் தீர்த்து வைப்பார்.

பைரவரை ஒவ்வொரு இராசியினரும் எப்படி வழிபட வேண்டும்? என்பதற்கு வழிமுறை உள்ளது.

இவ்வாறாக இராசிக்கு ஏற்ப பைரவரை வணங்கினால் தோஷங்கள் தீர்ந்து, நல்வாழ்வு பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு இராசியினரும், ஒவ்வொரு அம்சங்களை பார்த்து வழிபடுவது மிகவும் நல்லது.

மேஷ இராசிக்காரர்கள் பைரவருடைய உடலில் சிரசு எனப்படும் தலைப்பகுதியை பார்த்து வணங்குவது தோஷத்தை போக்கும்.

ரிஷப இராசிக்காரர்கள் கழுத்து பகுதியையும்,

மிதுன இராசிக்காரர்கள் தோல் பகுதியையும்,

கடக இராசிக்காரர்கள் மார்பையும்,

சிம்ம இராசிக்காரர்கள் வயிற்றுப் பகுதியையும்,

கன்னி இராசிக்காரர்கள் குறியையும்,

துலாம் இராசிக்காரர்கள் தொடை பகுதியையும்,

விருச்சிக இராசிக்காரர்கள் முட்டியையும்,

தனுசு இராசிக்காரர்கள் மற்றும் மகர இராசிக்காரர்கள் முட்டியின் கீழ்ப்பகுதியையும்,

கும்ப இராசிக்காரர்கள் கணுக்காலையும்,

மீன இராசிக்காரர்கள் பாதம் பார்த்து வழிபட தோஷங்கள் நீங்கும்.

வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேற கால பைரவருக்கு அஷ்டமி திதிகளில் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 8 முறை வலம் வந்து, செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, பைரவர் அஷ்டகம் வாசித்தால் நினைத்ததெல்லாம் நடக்கும்.

சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால், இறுதி வழிபாடு பைரவருக்கு.

அஷ்டமி தினத்தன்று அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும், அதனால் அன்றைய தினம் பைரவரை வணங்குவோர் சகலவிதமான வளங்களையும் பெறுவர்.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling