#ஓம்_நமசிவாய
#பஞ்சாட்சர_மந்திரம்
#பஞ்சாட்சர_மகிமை
🌹 🌿 ஓம் நமசிவாய என்று ஒரு முறை நீ சொல்லுவாய்
ஓங்கார ஓசை தினம் கேட்கும் என்பது உண்மையே
🌹 🌿 ஓம் நமசிவாய என்று இரு முறை நீ சொல்லுவாய்
இம்மை மறுமை இரண்டுக்கும் இன்பம் கிட்டும் நிச்சயம்
🌹 🌿 ஓம் நமசிவாய என்று மூன்று முறை சொல்லுவாய்
முக்கண்ணன் மனமகிழ்ந்து முக்தி தருவார் திண்ணமே
🌹 🌿 ஓம் நமசிவாய என்று நான்கு முறை சொல்லுவாய்
நான்குவேதம் படித்த பலன் உன்னைச் சேரும் உண்மையே
🌹 🌿 ஓம் நமசிவாய என்று ஐந்து முறை சொல்லுவாய்
ஐங்கரனும் அருகில் வந்து ஆசி கூறிச் செல்லுவார்
🌹 🌿 ஓம் நமசிவாய என்று ஆறு முறை சொல்லுவாய்
அறுமுகனும் திருவருளை தேடி வந்து தந்திடுவார்
🌹 🌿 ஓம் நமசிவாய என்று ஏழு முறை சொல்லுவாய்
ஏழு சுரமும் உன் நாவில் இழையும் என்பது சத்தியம்
🌹 🌿 ஓம் நமசிவாய என்று எட்டு முறை சொல்லுவாய்
எட்டுத் திக்குப் பாலகரும் வாழ்த்தி அருளிச் செல்லுவார்
🌹 🌿 ஓம் நமசிவாய என்று ஒன்பது முறை சொல்லுவாய்
நவகோளும் உன்னைச் சுற்றி நல்லதையே செய்திடும்
🌹 🌿 ஓம் நமசிவாய என்று பத்து முறை சொல்லுவாய்
பத்துப் பத்தாய் புண்ணியங்கள் பற்றி வரும் சத்தியம்
🌹 🌿 ஓம் நமசிவாய என்று அனுதினம் நீ சொல்லுவாய்
உனக்கு நன்மை உயிர்க்கு நன்மை உலகுக்கெல்லாம் நன்மையே
#சிவ_பஞ்சாட்சர_மந்திரம்
#பஞ்சாட்சர_மகிமை
#சிவ_நாம_மகிமை
#சைவசமயம்
#சிவவழிபாடு
#ஓம்நமசிவாய
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.