M.SivaRajan Profile picture
Jul 15, 2022 6 tweets 4 min read Read on X
#ஓம்_நமசிவாய

#பஞ்சாட்சர_மந்திரம்

#பஞ்சாட்சர_மகிமை

🌹 🌿 ஓம் நமசிவாய என்று ஒரு முறை நீ சொல்லுவாய்
ஓங்கார ஓசை தினம் கேட்கும் என்பது உண்மையே

🌹 🌿 ஓம் நமசிவாய என்று இரு முறை நீ சொல்லுவாய்
இம்மை மறுமை இரண்டுக்கும் இன்பம் கிட்டும் நிச்சயம்
🌹 🌿 ஓம் நமசிவாய என்று மூன்று முறை சொல்லுவாய்
முக்கண்ணன் மனமகிழ்ந்து முக்தி தருவார் திண்ணமே

🌹 🌿 ஓம் நமசிவாய என்று நான்கு முறை சொல்லுவாய்
நான்குவேதம் படித்த பலன் உன்னைச் சேரும் உண்மையே
🌹 🌿 ஓம் நமசிவாய என்று ஐந்து முறை சொல்லுவாய்
ஐங்கரனும் அருகில் வந்து ஆசி கூறிச் செல்லுவார்

🌹 🌿 ஓம் நமசிவாய என்று ஆறு முறை சொல்லுவாய்
அறுமுகனும் திருவருளை தேடி வந்து தந்திடுவார்
🌹 🌿 ஓம் நமசிவாய என்று ஏழு முறை சொல்லுவாய்
ஏழு சுரமும் உன் நாவில் இழையும் என்பது சத்தியம்

🌹 🌿 ஓம் நமசிவாய என்று எட்டு முறை சொல்லுவாய்
எட்டுத் திக்குப் பாலகரும் வாழ்த்தி அருளிச் செல்லுவார்
🌹 🌿 ஓம் நமசிவாய என்று ஒன்பது முறை சொல்லுவாய்
நவகோளும் உன்னைச் சுற்றி நல்லதையே செய்திடும்

🌹 🌿 ஓம் நமசிவாய என்று பத்து முறை சொல்லுவாய்
பத்துப் பத்தாய் புண்ணியங்கள் பற்றி வரும் சத்தியம்
🌹 🌿 ஓம் நமசிவாய என்று அனுதினம் நீ சொல்லுவாய்
உனக்கு நன்மை உயிர்க்கு நன்மை உலகுக்கெல்லாம் நன்மையே

#சிவ_பஞ்சாட்சர_மந்திரம்
#பஞ்சாட்சர_மகிமை
#சிவ_நாம_மகிமை

#சைவசமயம்
#சிவவழிபாடு
#ஓம்நமசிவாய

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

Nov 2
#ஸ்ரீ_சுப்ரமணிய_ஸ்வாமி

மஹா கந்த சஷ்டி திருவிழா சிறப்பு பதிவு :

*ராமபிரான் நிறுவிய சுப்பிரமணியர் ஆலயம்*

நாகதோஷம் போக்கும் ஆலயம்,

பாம்பு தெய்வங்களுக்கு முட்டையைப் படைத்து வழிபடும் தலமாகக் கேரள மாநிலம்,

பேரளச்சேரியில் உள்ள சுப்பிரமணியா கோவில் அமைந்திருக்கிறது. Image
படைப்புக் கடவுளான பிரம்மனுக்குத், தன்னைத் தவிர வேறு எவராலும் படைப்புத் தொழிலைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்கிற கர்வம் ஏற்பட்டது.

இந்நிலையில் அவர், தன்னுடைய படைப்புத் தொழிலின் பெருமைகளைப் பற்றிச் சிவபெருமானிடம் சொல்லி,
அவரது பாராட்டுகளைப் பெற்றுச் செல்லலாம் என நினைத்துக் கயிலாய மலைக்கு வந்தார்.

அவர் வந்த வேளையில், இறைவன் சிவபெருமான் தியானத்தில் இருந்தார்.

அதனால், கயிலாய மலையில் இருந்த விநாயகர், முருகன், நந்தி, சிவகணங்கள், முனிவர்கள் என்று அனைவரும் வெளியில் காத்திருந்தனர்.
Read 27 tweets
Nov 1
#கந்த_புராணம்

முதல் நாள் ( 02 - 11 - 2024 ) பாராயணம் செய்ய வேண்டிய திருப்பாடல்கள் :

2. #உற்பத்தி_காண்டம்.

சோதி சேரும் அத்தூமணி மண்டபத்து ஆதி யான அரியணை உம்பரில் காத லாகும் கவுரியொர் பாங்குற வேத நாயகன் வீற்றிருந் தானரோ. Image
மன்னுயிர் புவனம் ஏனை மற்றுள பொருளுக்கு எல்லாம் அன்னையாய் உதவி நாளும் அவற்றினை வளர்த்து நிற்பாள் தன்னையும் வளர்ப்பார் உண்டோ வளர்ந்தது சழக்கே அந்தக் கன்னிதன் அருளின் நீர்மை காட்டினள் போலும் அன்றே.
"ஈசனே காப்பான் அல்லால் யாரையும் பிறரால் தம்பால் ஆசறப் போற்றல் ஆகாதது அது துணிவு ஆகும் ஈண்டுப் பேசிய திறனும் அன்னோன் பேரருள் மறாதி என்ன நேசமொடு இயைந்திட்டு அன்னை நினைந்த நோன்பு
இயற்றுக' என்றான்.
Read 52 tweets
Nov 1
#கந்த_புராணம்

மஹா கந்த சஷ்டி திருவிழா நாளை முதல் ஆரம்பமாகிறது.

இந்த புனித நாட்களில் கந்த புராணம் படிப்பது மிகச்சிறந்த பலன்களை அளித்திடும்.

ஆனால் 10000 க்கும் மேற்பட்ட பாடல்களை கொண்ட கந்த புராணத்தை பாராயணம் செய்வது கொஞ்சம் சிரமம் தான். Image
ஆகவே அனைவரும் கந்த புராணத்தை பாராயணம் செய்யும் வகையில் கந்த புராண ஞான சபை அமைப்பினர் கந்த புராணத்தில் உள்ள மிக முக்கியமான மந்திர பாடல்களை தொகுத்து உள்ளனர்.

மஹா கந்த சஷ்டி திருவிழா நாட்களில் ஒரு நாளைக்கு 51 பாடல்கள் வீதம் ஏழு நாட்கள் மொத்த கந்த புராணத்தை,
பாராயணம் செய்யும் வகையில் கொடுத்துள்ளனர்.

இந்த சிறப்பு வாய்ந்த கந்த புராணத்தை தினமும் முன்கூட்டியே பதிவு செய்கிறேன்.

உதாரணமாக சனிக்கிழமை முதல் நாள் அன்று பாராயணம் செய்ய வேண்டிய பாடல்களை இன்றே பதிவு செய்து உள்ளேன்.
Read 43 tweets
Nov 1
#மஹா_கந்த_சஷ்டி_விரதம்

மஹா கந்த சஷ்டி திருவிழா சிறப்பு பதிவு :

ஐப்பசி மாதம் அமாவாசை முடிந்து முதல் நாள் துவங்கி ஆறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

ஆறாம் நாள் சூரனுக்கு அருளல்.

கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை முருக பக்தர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். Image
சஷ்டி என்றால் ஆறு ஆகும்.

ஐப்பசி மாதம் சுக்கில பட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு நாட்களும் கந்த சஷ்டி காலமாகும்.

இந்த ஆறு நாளையும் சைவர்கள் விரத நாட்களாக அனுட்டிக்கின்றனர்.

செல்வங்கள், சுகபோகங்கள், நற்புத்திரப்பேறு என்பவற்றை முன்னிட்டு முருகனை குலதெய்வமாகவோ,
இஷ்ட தெய்வமாகவோ வழிபடுவோரும் பிறரும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பர்.

இந்த ஆறு நாட்களும் விரதமிருந்து அதிகாலையில் எழுந்து நீராடி பூரண கும்பம் வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்வர்.

தீவிர முருக பக்தர்கள் இவ்விரதத்தை ஒரு கடுந் தவமாகக் கருதி,

ஆறு தினங்களும் உபவாசம் இருத்தல் வழக்கம்.
Read 76 tweets
Nov 1
#வள்ளி_மலை_முருகன்

மஹா கந்த சஷ்டி திருவிழா சிறப்பு பதிவு :

வள்ளி தாயார் பிறந்த இடமாக கருதப்படுவதும்,

முருகப்பெருமான் வள்ளி தாயாரை மணந்து கொள்ளும் பொருட்டு பல திருவிளையாடல்களை நிகழ்த்திய அற்புத தலமாகவும் கருதப்படும், Image
இன்று நாம் அனைவரும் மிகவும் போற்றி புகழ்ந்து பாராயணம் செய்யும் வேல் மாறல் மகா மந்திரத்தை நமக்கு கொடுத்த,

ஸ்ரீ சச்சிதானந்தம் சுவாமிகள் பல ஆண்டுகளாக வசித்து ஜீவ சமாதி அடைந்த திருத்தலமாக விளங்கும்,

வள்ளி மலை முருகன் திருக்கோவில் பற்றி இந்த பதிவில் காணலாம் வாருங்கள் நண்பர்களே.
வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா நகருக்கு அருகில் உள்ளது.

வள்ளி, தேவயானையுடன் முருகன் கோயில் உள்ளது.

கோயிலுக்குப் பின்புறம் சரவணப் பொய்கை என்ற குலம் உள்ளது.

இக்குளத்தின் அருகே வள்ளி கோயிலும் உள்ளது.

மலையின் உச்சியில் முருகப்பெருமானுக்கு மற்றொரு கோவில் உள்ளது.
Read 20 tweets
Oct 30
#திருச்செந்தூர்_முருகன்_அதிசயம்

மஹா கந்த சஷ்டி திருவிழா சிறப்பு பதிவு :

களவாடப்பட்ட திருச்செந்தூர் முருகன் சிலை திரும்பி வந்த அதிசயக் கதை தெரியுமா❓

கடலில் மூழ்கியிருந்த முருகன் சிலையும்,
நடராஜர் சிலையும் எங்கிருக்கிறது என்பதை தெரியப்படுத்த, Image
முருகப்பெருமானே கனவில் வந்து தெரியப்படுத்திய கதை தெரியுமா❓

சக்தி வாய்ந்த திருச்செந்தூர் முருகப்பெருமான் நிகழ்த்திய திருவிளையாடலைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1648 ல் திருச்செந்தூர் முருகன் கோயில் டச்சுக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.
அச்சமயம் இக்கோயில் திருமலை நாயக்கர் ஆட்சிக்குக் கீழே இருக்கும் பகுதி என்பதால் டச்சுக்காரர்களை அங்கிருந்து அவர் வெளியேறச் சொன்னார்.

ஆனால், டச்சுக்காரர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்து விட்டனர்.

இதனால் திருமலை நாயக்கருக்கும், டச்சுக்காரர்களுக்கும் பெரிய போர் நடைபெற்றது.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(