தீ பரவட்டும் Profile picture
நூறு அறிவாளிகளுடன் மோதுவதை விட, ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது - அய்யா பெரியார்.

Sep 16, 2022, 24 tweets

#HBDPeriyar144 #HBDThanthaiPeriyar
#சமூகநீதிநாள் #HBDThanthaiPeriyar
#HBDPeriyar #DravidianModel #SocialJusticeDay

கிழவனுக்கு காலா ஸலாம்.

அவன் எப்படியோ போறான்.
அதை பத்தி நமக்கு என்ன கவலை?
ஏன்னா, அவனுக்கு ஒண்ணுமே தப்பில்லையே?
அவன் சோறு தின்னாலும் சரி!
வேற எதை தின்னாலும் சரி !

தில்லி எலிக்கு வான் பருந்து தெற்குத் திசையின் படை மருந்து கல்லாதோர்க்கு நன் மருந்து கற்றவர்க்கு வண்ணச் சிந்து
பெரியார் குறித்து பாரதிதாசன்.

என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர் உண்மை அஃதன்று;நான் நம்பிக்கை வைக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்பட காணோமே என ஏங்குபவன்

*கடவுள் மறுப்பாளன் என்று என்னை குறிப்பிடாதீர்கள். அதனையும் தேடி அலைந்து அலுத்துக் களைத்து ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னை குறிப்பிடுங்கள். ஏனெனில் நான் கடவுள் வேண்டாம் என்று அது இருக்கக் கூடாது என்று கூறவில்லையே

* வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் மனைவிக்கு வேறு சட்டம் இருக்கிறது

*கணவனிழந்த பெண்ணை எப்படி விதவை என்று கூப்பிடுகிறோமோ அது போலவே மனைவி இழந்த புருசனை விதவன் என்று கூப்பிட வேண்டும்.

*ஆரியமே! நீ என்னை முழ்கடிக்க முயற்சிக்கும் பேரெல்லாம் ஆழிப்பேரலையாய் உயர்ந்து வருவேன்.

*என்னை 'உண்மையாய்' எதிர்க்கத் துவங்குங்கள். அந்த உண்மை ஏன் எதிர்க்கின்றோம் என்ற கேள்வியை மூளைக்குள் எழுப்பும். அந்த கேள்விக்கான தேடல் நீங்கள் மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் இந்தியாவில் எப்படிப்பட்ட அடிமுட்டாளாய் வாழ்கிறீர்கள் எனும் விடையில் கொண்டு சேர்க்கும்

*அச்சத்துக்கும் அறியாமைக்கும் பிறந்த குழந்தையே கடவுள்

*நான்கு ஆண்களும்,ஒரு பெண்ணும் குடும்பத்தில் இருந்தால் முதலில் அந்தப் பெண்ணைத்தான் படிக்க வைக்க வேண்டும்

*அறிவுக்கு ஏற்றது,மக்களுக்கு நன்மை பயப்பது,மக்களின் அறிவை வளர்ச்சியடையச் செய்வது எதுவோ அதைப்பற்றி பேசு

*உன்னை யோசிக்க வைப்பதுதான் என் நோக்கமே தவிர..என்னைப் பின்பற்று,உன்னை மாற்றிக்கொள் என்பது அல்ல..நீ நீயாகவே இரு.!

*முற்போக்கு அறிவும்,அக்கறையும் வளர வளர, புரட்சிகள் ஏற்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.

*மனித வாழ்வில் வெற்றி என்னவென்றால் அவனவன் மனத் திருப்தியோடு வாழ்வதுதான்

*மற்றவர்களிடம் பழகும் விதத்தையும், ஒழுக்கத்தையும் சிறுவயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்வில் பெரிய மனிதனாகிறான்

*மனசாட்சி என்று சொல்லுவதே அகிம்சை என்பதைப் போல கோழைகளுடைய ஆயுதமாகிவிட்டது

*நூறு அறிவாளிகளுடன் மோதுவதை விட, ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது

*ஆத்மாவைப் பற்றி பேச வேண்டுமெனில் அறிவையும், அனுபவத்தையும் தூர வைத்துவிட்டு வெறும் நம்பிக்கை மீதே ஒப்புக்கொண்டு பேச வேண்டியதாய் இருக்கிறது.

*ஆத்மா என்பது ஆகாயத்தில் தளவாடம் இல்லாமல் கட்டப்பட்ட ஒரு கோட்டை

*என் அபிப்ராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு.ஆனால் என் அபிப்ராயத்தை வெளியிட எனக்கு உரிமையுண்டு.

*எதிரியை அடக்கணும், அவனை ஒழிக்கணும் என்றால் நாம் அவனை வெறுக்கணும். கூண்டோடு நம்மை அவன் ஒழித்தாலும் சரி என்று துணிந்து இறங்கினால் தானே அவன் பயப்படுவான்

“இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து” என ஒரு மேடையிலும், “ஒருத்தன் 5மணிக்கு இஸ்லாத்தை ஏத்துக்கிட்டான்னா 5:30க்குலாம் அவனோட சாதி ஒழிஞ்சிறும்”

தீண்டாமையை எதிர்த்ததோடு மட்டுமல்ல அதற்கு மாற்றாக இஸ்லாமை முன்வைத்தார் என்பதே தெளிவான மிக முக்கியமான காரணம்.

*சுயமரியாதை உடையவன் இந்தியை ஆதரிக்க மாட்டான்

*பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவதாகும்

*எந்த மனிதனும் எனக்கு கீழானவன் இல்லை.அதேபோல் எவனும் எனக்கு மேலானவனும் இல்லை

*கல்வியினுடைய குறிக்கோள் என்பது பணம் சம்பாதிப்பது மாத்திரம் என்று நினைக்கக் கூடாது

*முட்டாள்கள் உள்ள வரை அயோக்கியர்கள் ஆட்சி செய்வார்கள். இதுதான் ஜனநாயகம்

*மூட்டை தூக்கும் பொழுது பாரத்தினாலே நான் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, வெட்கத்தினால் ஒரு போதும் கஷ்டப்பட்டதில்லை.

*கோர்ட் மக்கள் சவுகரியத்திற்காகவே தவிர, வக்கீல்கள் சவுகரியத்துக்காக அல்ல

*பக்தி ஆசையிலிருந்தும் அன்னியர் பார்த்து மதிப்பதிலிருந்தும் வளருகிறது

*நமது அறிவிக்கு ஒரு காரியம் சரி என்று பட்டாலும் அனேக விஷயங்களை உணர்ந்தே அதைப் பிரயோகிக்க வேண்டும்

*எனக்கும் கடவுளுக்கும் என்ன முன்விரோதமா?நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை!’

*தொடர்ந்து கற்றுக்கொள்-ஆய்வு செய்

*சேவை என்பது கூலியை உத்தேசித்தோ, தனது சுயநலத்தை உத்தேசித்தோ செய்வதல்ல. மற்றவர்கள் நன்மை அடைவதை பார்த்து மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதற்காகவே செய்யப்படும் காரியம் தான்.

*எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டிததில்லை..எங்கே வழுக்கியது என்று பார்க்க வேண்டும்

*இந்த சமுதாயத்தை மானமும் அறிவுமுள்ளதாக மாற்றவும், மனிதனுக்கு மனிதன் ஜாதிய ஏற்றத்தாழ்வில்லாமல் வாழச் செய்வதே என் லட்சியம்

*என்னைக் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர். நம்பிக்கை வைக்கத்தக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்படக் காணோமே என ஏங்குபவன் நான்

*பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து

*பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும்.

*வெங்காயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் எதுவுமே மிஞ்சாது. ஒன்றும் இல்லாத பூஜ்யப் பேர்வழிகளைத் தாக்கவே அந்த வார்த்தையைப் பயன்படுத்துகிறேன்

*தலைவிதி,முன் சென்மக் கர்மப்பலன் என்பவைகள் மனிதனுடைய முட்டாள்தனத்துக்கும் அயோக்கியத்தனத்துக்கும் பரிகாரமாக்கப்படுகிறது.

*சகுனம் பார்க்கிறோமே! சாப்பிடும் போது சகுனமோ, ராகுகாலமோ பார்க்கிறோமா?நீதி மன்றத்தில் ராகுகாலம் பார்த்தால் என்ன ஆகும்?

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

தெய்வம் தொழாள்(வணங்க்காதவள் ) என்பது சரி.

அதுக்கு இவன்(கணவனை) காலை ஏன் தொட்டு வணங்கனும் ?

கணவன் தொழுதெழுவாள் என்று இருக்கிறதே, மனைவி தொழுதெழுவாள் என்று ஏன் இல்லை என்று தந்தை பெரியார் கேட்டார்.

*நம்மை எவன் இழிவுபடுத்துகிறானோ, அவனை நாம் மதிப்பதில்லை என்று முடிவு கட்டிக்கொள்ள வேண்டும்.

*சாதியை ஒழிப்பது என்பது செங்குத்தான மலையில் தலைகீழாக ஏறுவது போன்றது.

*நானே எழுதி, நானே அச்சுக்கோர்த்து, நானே அச்சடித்து, யாரும் வாங்காவிட்டாலும் நான் ஒருவனே படிப்பேன்

*நாதசுரக்குழாயாய் இருந்தால் ஊதியாக வேண்டும்; தவுலாயிருந்தால் அடிபட்டுத்தானாக வேண்டும் என்பது போல் எனக்குத் தொண்டை, குரல் உள்ள வரை பேசியாக வேண்டும்; பிரசங்கம் செய்தாக வேண்டும்.

*நூறு அறிவாளிகளுடன் மோதுவதை விட, ஒரு மூடனோடு மோதுவது மிகச் சிரமமானது

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

தெய்வம் தொழாள்(வணங்க்காதவள் ) என்பது சரி.

அதுக்கு இவன்(கணவனை) காலை ஏன் தொட்டு வணங்கனும் ?

கணவன் தொழுதெழுவாள் என்று இருக்கிறதே, மனைவி தொழுதெழுவாள் என்று ஏன் இல்லை என்று தந்தை பெரியார் கேட்டார்.

பெரியார் கலை இலக்கியங்களை நேசித்தார். அவை சமூகப் புரட்சிக்குக் கைகொடுத்த போது, பெரியார் சமுதாயத்தைப் பின்னுக்கு இழுத்த கலை இலக்கியங்களைப் புறக்கணித்தார். இதுவே அவரு டைய கலை இலக்கியப் பார்வை என்பதில் முரண்பாடு இல்லை.

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling