Ullangaiyil Maruthuvam Profile picture
1 லட்சம்+ நண்பர்களை கொண்ட யூடியூப் சேனல். மரு. வினோத்குமார் . எலும்புமுறிவு & மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் , CNS மருத்துவமனை, அவினாசி, 7530055886

Dec 17, 2022, 10 tweets

அனைவருக்கும் வணக்கம் , கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த பின்பு பலருக்கும், பல வகையான உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதை Post COVID syndrome/ Long COVID என்று அழைப்போம்.இதற்கு  எலும்பியல் துறை மட்டும் விதிவிலக்கில்லை. *1/10 @DrVinoth_ortho #MedTwitter #COVID19

32 வயது ஆண், வலது இடுப்பில் 9 மாதமாக லேசாக வலி இருந்தது , ஆனால் கடந்த 3 வாரம் வலி மிகவும் அதிகமாக உள்ளது, கால்களை மடக்கி கீழ உட்கார முடியவில்லை என்றார்.

பரிசோதனை செய்தததில் இடுப்பு எலும்பு மூட்டு சிறிது தூரம் தான் அசைக்க முடிந்தது. *2/10

Xray பரிசோதனையில் இடுப்பு எலும்பின் தலை பகுதி அழிந்து, உருளையாக இருக்கும் பகுதி ,வடிவம் மாறியது தெரிய வந்தது.

MRI பரிசோதனையில் இடுப்பு மூட்டு முழுவதும் சிதைந்து இருந்தது. *3/10

அவருக்கு முன்பு போல் வலி இல்லாமல் தன் வேலைகளை தொடர வேண்டும் என்றால் , இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வலி.

சரி இவ்வளவு சின்ன வயதில் (32 ) இப்படி ஏற்பட காரணம் என்ன தெரியுமா ? கொரோனா பாதிப்பு தான் ! *4/10

அவருக்கு புகை பழக்கம் கிடையாது , மதுப்பழக்கம் எப்போதாவது தான் , மற்ற முக்கிய காரணிகளும் கிடையாது, 1.5 வருடம் முன்பு (mild symptoms ) கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ,(oral steroids) ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துள்ளார். அது தான் இந்த பாதிப்பு ஏற்பட காரணம். *5/10

முன்பே இதை பற்றி காணொளி பதிவு செய்துள்ளேன். ஸ்டீராய்டு மருந்துகள் அதிக நாட்கள் எடுக்கும் போது இப்படி எலும்பு மூட்டுகளில் பிரச்சனை ஏற்படலாம். அது மட்டும் இல்லாமல் COVID பாதிப்பும் உடலில் இரத்த கட்டிகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 6/10

இடுப்பு எலும்பின் தலை பகுதிக்கு செல்லும் இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக ,அந்த பகுதி இரத்த ஓட்டம் இன்றி அழிய தொடங்கும். இதை Avascular necrosis / osteonecrosis என்று அழைப்போம்.7/10 #MedTwitter #drvinoth #COVID19

இதில் 4 நிலைகள் (stages ) உள்ளது, முதல் இரண்டு நிலைகளில் கண்டறிந்தால் ,மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவை இல்லை, போதிய ஓய்வு மற்றும், துளையிடும் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.8/10

ஸ்டீராய்டு மட்டும் ஏன் இதற்கு காரணம் ! கொரோனா தடுப்பூசி இதற்கு காரணமாக இருக்க முடியுமா ? 2003 SARS பெருந்தொற்று காலத்தில் , ஸ்டீராய்டு சிகிச்சை பெற்றவர்கள் பலருக்கும் இடுப்பு எலும்பு அழிவு நோய் ஏற்பட்டுள்ளது.*9/10 #COVID19 #CovidVaccines

புகை பழக்கம், மதுபழக்கம் இருப்பவர்கள் கண்டிப்பாக இடுப்பு வலி பிரச்சனையை உதாசீனப் படுத்த வேண்டாம். ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் , மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின்றி முழுமையாக குணப்படுத்த முடியும் .10/10 @DrVinoth_ortho #MedTwitter #orthotwitter

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling