அனைவருக்கும் வணக்கம் , கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்த பின்பு பலருக்கும், பல வகையான உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதை Post COVID syndrome/ Long COVID என்று அழைப்போம்.இதற்கு எலும்பியல் துறை மட்டும் விதிவிலக்கில்லை. *1/10 @DrVinoth_ortho#MedTwitter#COVID19
32 வயது ஆண், வலது இடுப்பில் 9 மாதமாக லேசாக வலி இருந்தது , ஆனால் கடந்த 3 வாரம் வலி மிகவும் அதிகமாக உள்ளது, கால்களை மடக்கி கீழ உட்கார முடியவில்லை என்றார்.
பரிசோதனை செய்தததில் இடுப்பு எலும்பு மூட்டு சிறிது தூரம் தான் அசைக்க முடிந்தது. *2/10
Xray பரிசோதனையில் இடுப்பு எலும்பின் தலை பகுதி அழிந்து, உருளையாக இருக்கும் பகுதி ,வடிவம் மாறியது தெரிய வந்தது.
MRI பரிசோதனையில் இடுப்பு மூட்டு முழுவதும் சிதைந்து இருந்தது. *3/10
அவருக்கு முன்பு போல் வலி இல்லாமல் தன் வேலைகளை தொடர வேண்டும் என்றால் , இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான் ஒரே வலி.
சரி இவ்வளவு சின்ன வயதில் (32 ) இப்படி ஏற்பட காரணம் என்ன தெரியுமா ? கொரோனா பாதிப்பு தான் ! *4/10
அவருக்கு புகை பழக்கம் கிடையாது , மதுப்பழக்கம் எப்போதாவது தான் , மற்ற முக்கிய காரணிகளும் கிடையாது, 1.5 வருடம் முன்பு (mild symptoms ) கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ,(oral steroids) ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துள்ளார். அது தான் இந்த பாதிப்பு ஏற்பட காரணம். *5/10
முன்பே இதை பற்றி காணொளி பதிவு செய்துள்ளேன். ஸ்டீராய்டு மருந்துகள் அதிக நாட்கள் எடுக்கும் போது இப்படி எலும்பு மூட்டுகளில் பிரச்சனை ஏற்படலாம். அது மட்டும் இல்லாமல் COVID பாதிப்பும் உடலில் இரத்த கட்டிகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 6/10
இடுப்பு எலும்பின் தலை பகுதிக்கு செல்லும் இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு காரணமாக ,அந்த பகுதி இரத்த ஓட்டம் இன்றி அழிய தொடங்கும். இதை Avascular necrosis / osteonecrosis என்று அழைப்போம்.7/10 #MedTwitter#drvinoth#COVID19
இதில் 4 நிலைகள் (stages ) உள்ளது, முதல் இரண்டு நிலைகளில் கண்டறிந்தால் ,மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவை இல்லை, போதிய ஓய்வு மற்றும், துளையிடும் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும்.8/10
ஸ்டீராய்டு மட்டும் ஏன் இதற்கு காரணம் ! கொரோனா தடுப்பூசி இதற்கு காரணமாக இருக்க முடியுமா ? 2003 SARS பெருந்தொற்று காலத்தில் , ஸ்டீராய்டு சிகிச்சை பெற்றவர்கள் பலருக்கும் இடுப்பு எலும்பு அழிவு நோய் ஏற்பட்டுள்ளது.*9/10 #COVID19#CovidVaccines
புகை பழக்கம், மதுபழக்கம் இருப்பவர்கள் கண்டிப்பாக இடுப்பு வலி பிரச்சனையை உதாசீனப் படுத்த வேண்டாம். ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் , மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின்றி முழுமையாக குணப்படுத்த முடியும் .10/10 @DrVinoth_ortho#MedTwitter#orthotwitter
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அனைவருக்கும் வணக்கம், ஒருவயதிற்கு குறைவாக உள்ள குழந்தைகளுக்கு தொடை பகுதியில் தான் தடுப்பூசிகள் போடப்படும், அப்போது ஒரு சில சமயம் அரிதிலும் அரிதாக எதிர்வினைகள் ஏற்படலாம். @DrVinoth_ortho#orthotwitter#MedTwitter *1/8
கடந்த வாரம், பிறந்து 18 நாட்கள் ஆன குழந்தையை ,அவரது பெற்றோர்கள் 15 நாட்கள் தொடர் காய்ச்சல் மற்றும் இடது தொடையில் ஏற்ப்பட்ட வீக்கம் காரணமாக மருத்துவமனை அழைத்து வந்தனர் .*2/8
குழந்தைக்கு பிறந்தவுடன் HbsAg தடுப்பூசி இடது தொடையில் அருகில் உள்ள மருத்துவமனையில் செலுத்தியுள்ளனர், பின்பு லேசான காய்ச்சல் மற்றும் தொடையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அதன் பின் காய்ச்சல் இல்லை. ஆனால் வீக்கம் குறையவில்லை, மீண்டும் காய்ச்சல் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.*3/8
அனைவருக்கும் வணக்கம், பல பதிவுகளில் ஆதாரமற்ற பாரம்பரிய மருத்துவமுறையினால் ஏற்படும் தீமைகள் பற்றி சொல்லியிருக்கிறேன். கடந்த வாரம் 14 வயது சிறுவன் , காய்ச்சல் மற்றும் வலது தொடை பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனை வந்திருந்தார்.1/7
இரண்டு வாரம் முன்பு கிரிக்கெட் பந்து மூலம் தொடையில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டதால் அருகில் உள்ள பாரம்பரிய வைத்தியரிடம் சென்று எண்ணெய் மஸாஜ் மற்றும் மஞ்சள் பத்து போட்டுக்கொண்டுள்ளார் . அதன் பின்பு 12 நாட்கள் ஆகியும் வீக்கம் குறையவில்லை.2/7
2 நாட்களாக காய்ச்சல் மற்றும் அதிக உடல் சோர்வு ஏற்பட்டதால் , அவரது தந்தை மருத்துவமனை அழைத்து வந்தார், தொடை பகுதியில் வீக்கம் அதிகமாக இருந்தது, தொடை மிகவும் சூடாக இருந்தது (inflammation), இரத்த பரிசோதனையில் வெள்ளை அணுக்கள் 20,000 மேல் இருந்தது.3/7
அனைவருக்கும் வணக்கம் , osteomyelitis - எலும்பில் ஏற்படும் சீழ் பிரச்சனை, எலும்பு மருத்துவர்களின் சிம்ம சொப்பனம் என்று சொன்னால் மிகையாகாது. காரணம் ஒரு முறை சீழ் எலும்புகளுக்கு சென்று விட்டால், வாழ் நாள் முழுக்க எப்போது வேண்டுமானாலும் திரும்ப ஏற்படலாம். 1/9
இதை கட்டுப்படுத்த தான் முடியும் .
6 மாதம் முன்பு நான் பார்த்த ஒரு நோயாளி எலும்பு முறிவு ஏற்பட்டு ,35 cm மேல் தொடையில் வெட்டு காயத்துடன் வந்திருந்தார். பிரச்சனை ஏற்பட்டு வேறொரு மருத்துவமனையில் இருந்து 7 நாட்கள் கழித்து இங்கு refer செய்யப்பட்டார்.2/9
நாங்கள் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம், Debridement செய்து , வெளிப்புற ரோட் (External fixator) பொருத்தினோம் . பிரத்யேகமான antibiotic மருந்துகள் கொடுக்கப்பட்டது. ஒரு வாரம் தொடையில் இருந்து சீழ் வடிந்தது, மீண்டும் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தோம்.3/9