குமரிக்கிழவனார் Profile picture

Feb 20, 2023, 7 tweets

மண்டைக்காடு அவர்னர்களுக்கு சொந்தமான கோவில் இன்னும் மிக தெளிவாக சொல்வதென்றால் அந்த கோவிலை கட்டிய குடும்பம் நாடார் குடும்பம். தளவாய் வேலு தம்பி ஆக்ராந்தம் பிடித்து திரிந்தபோது அந்த கோவிலை திருவாங்கூர் சமுஸ்தானத்தின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தான்..... (1/7)
#மண்டைக்காடு

சாமுவேல் மற்றீர் தனது குறிப்புகளில் ஐயாயிரம் அவர்னர்கள் ஆடு கோழி பலியிட்டு வழிபட்டதாக எழுதி வைத்திருக்கிறார். அந்த கோவிலுக்குள் இருபதாம் நூற்றாண்டில் தான் ஆகம விதிமுறைகள் நுழைகின்றன. இன்று அங்கே வழிபடும் முறை மண்டைக்காட்டம்மனுக்கு உகந்த வழிமுறையல்ல (2/7)
#மண்டைக்காடு #History

ஆட்டை எப்படி அறுக்க வேண்டும் சேவலை எப்படி பலியிட வேண்டும் என்று கதைப்பாடலே உண்டு. குசராத்தின் பனியா கும்பல் அறிவுரையை ஏற்று சேதுலச்சுமி பாய் தான் திருவாங்கூர் கோவில்களில் ஆடு கோழி பலியிடுவதை 1924 ல் நிறுத்தினார் (3/7)
#மண்டைக்காடு

கோவில் முழுவதுமாக பறிபோன காலத்தில் கோவிலை கட்டிய குடும்பத்தினர் கிறுத்துவம் ஏற்றனர்.கோவில் நுழைவு கலகம் நடந்தபோது தனக்கு சொந்தமான கோவிலுக்குள் நுழைய முற்பட்ட அந்த குடும்பத்து நாடார் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் உண்டு....... (4/7)
#மண்டைக்காடு #history

இராமகோபாலனும் பிரம்மபுரத்து தீவிராவாதிகளும் திருவாங்கூரால் குடியமர்த்தபட்ட பண்ணையார்களும் கோவிலுக்குள் இறங்கிய காலத்தில் தான் கலவரம் வெடிக்கிறது. சொந்த இரத்தங்களை மோதவிட்டு இரத்தம் பார்க்க துடிக்கும் சுயநலவாதிகளை அடக்கியே ஆக வேண்டும் (5/7)
#மண்டைக்காடு

நாடார்கள் கோவிலை கையகபடுத்தி நாடார்களை தங்களுக்குள் மோதவிட்டு குளிர்காய துடிக்கும் தரவாடிகளயும் நரிகளயும் பண்ணையார்களயும் அவர்களிடம் நக்கி பிழைப்பவர்களயும் இனம் கண்டு கொள்ளவேண்டியது இன்றைய நாடார்களின் அதிமுக்கிய கடமை (6/7)

#மண்டைக்காடு

இனி ஒரு கலவரத்தை இந்த நிலம் தாங்காது அப்படி நடத்தியே தீருவேன் என்று எவன் இறங்கினாலும் இயற்கையோடு இணைந்த எம் மூதாதயர்கள் இந்த நிலத்தை காப்பர். இந்த நிலத்திற்காக அவர்கள் சிந்திய ரத்தம் இந்த நிலத்தை கழுவும்........
(7/7)
#மண்டைக்காடு

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling