மண்டைக்காடு அவர்னர்களுக்கு சொந்தமான கோவில் இன்னும் மிக தெளிவாக சொல்வதென்றால் அந்த கோவிலை கட்டிய குடும்பம் நாடார் குடும்பம். தளவாய் வேலு தம்பி ஆக்ராந்தம் பிடித்து திரிந்தபோது அந்த கோவிலை திருவாங்கூர் சமுஸ்தானத்தின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தான்..... (1/7) #மண்டைக்காடு
சாமுவேல் மற்றீர் தனது குறிப்புகளில் ஐயாயிரம் அவர்னர்கள் ஆடு கோழி பலியிட்டு வழிபட்டதாக எழுதி வைத்திருக்கிறார். அந்த கோவிலுக்குள் இருபதாம் நூற்றாண்டில் தான் ஆகம விதிமுறைகள் நுழைகின்றன. இன்று அங்கே வழிபடும் முறை மண்டைக்காட்டம்மனுக்கு உகந்த வழிமுறையல்ல (2/7) #மண்டைக்காடு#History
ஆட்டை எப்படி அறுக்க வேண்டும் சேவலை எப்படி பலியிட வேண்டும் என்று கதைப்பாடலே உண்டு. குசராத்தின் பனியா கும்பல் அறிவுரையை ஏற்று சேதுலச்சுமி பாய் தான் திருவாங்கூர் கோவில்களில் ஆடு கோழி பலியிடுவதை 1924 ல் நிறுத்தினார் (3/7) #மண்டைக்காடு
கோவில் முழுவதுமாக பறிபோன காலத்தில் கோவிலை கட்டிய குடும்பத்தினர் கிறுத்துவம் ஏற்றனர்.கோவில் நுழைவு கலகம் நடந்தபோது தனக்கு சொந்தமான கோவிலுக்குள் நுழைய முற்பட்ட அந்த குடும்பத்து நாடார் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் உண்டு....... (4/7) #மண்டைக்காடு#history
இராமகோபாலனும் பிரம்மபுரத்து தீவிராவாதிகளும் திருவாங்கூரால் குடியமர்த்தபட்ட பண்ணையார்களும் கோவிலுக்குள் இறங்கிய காலத்தில் தான் கலவரம் வெடிக்கிறது. சொந்த இரத்தங்களை மோதவிட்டு இரத்தம் பார்க்க துடிக்கும் சுயநலவாதிகளை அடக்கியே ஆக வேண்டும் (5/7) #மண்டைக்காடு
நாடார்கள் கோவிலை கையகபடுத்தி நாடார்களை தங்களுக்குள் மோதவிட்டு குளிர்காய துடிக்கும் தரவாடிகளயும் நரிகளயும் பண்ணையார்களயும் அவர்களிடம் நக்கி பிழைப்பவர்களயும் இனம் கண்டு கொள்ளவேண்டியது இன்றைய நாடார்களின் அதிமுக்கிய கடமை (6/7)
இனி ஒரு கலவரத்தை இந்த நிலம் தாங்காது அப்படி நடத்தியே தீருவேன் என்று எவன் இறங்கினாலும் இயற்கையோடு இணைந்த எம் மூதாதயர்கள் இந்த நிலத்தை காப்பர். இந்த நிலத்திற்காக அவர்கள் சிந்திய ரத்தம் இந்த நிலத்தை கழுவும்........
(7/7) #மண்டைக்காடு
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சீமானின் மீதும் நாம் தமிழர் கட்சியின் மேலும் தனிப்பட்ட முறையில் ஆயிரம் விமர்சனம் உண்டு. வேட்பாளர் அறிவிப்பதற்கை முன்பே கண்டிப்பாக இடைதேர்தலில் கட்டுத்தொகை இழக்கும் என்று நம்பினேன். வேட்பாளர் அறிவித்த பிறகு இன்னும் உறுதியாக நம்பினேன் 1/n
இன்று திமுக மற்றும் தீகொளுத்தி பேரியக்கம் நடத்தும் சில்லறைத்தனமான அரசியலுக்கு சீமானின் அரசியல் எவ்வளவோ மேல். மக்களை கொட்டகையில் அடைத்து அடிமைகளாக நடத்தி அதை வெளி சொல்லும் ஊடகங்களை அடித்து நொறுக்குவது அராஜகத்தின் உச்சம்... 2/n #ErodeEastByPoll #ஈரோடுகிழக்கு
இந்தியாவில் எங்கும் நடக்காத அளவிலான புதிய முறையான தேர்தல் களத்தை உருவாக்குகிறது திமுக. இரண்டு வருட ஆட்சியின் சாதனை என்று பரப்புவது அத்தனையும் பொய் என்று அப்பட்டமாக அம்பலமாகி நிற்கிறது திமுக (3/n)