பணிவான தலைமுடி என பல அடிப்படை விஷயங்கள் வேண்டும்
ஆனால் கருத்த நிறம்,ஒல்லியான உடல்,புதுவித தமிழ்,கலைந்த முடி இவற்றை கொண்டு ஒரு மனிதன் தமிழ் திரையுலகில் ஜெயித்தான் என்றால் அது ஆச்சரியம்
அவரின் வழியில்தான் பின் பல நடிகர்கள் வந்தார்கள்,
விதி அவரை எங்கோ கொண்டு நிறுத்திற்று
அம்மனிதர் மேல் ஆயிரம் சர்ச்சை இருக்கலாம் ஆனால் இன்றைய தமிழகத்தின் சக்தி வாய்ந்த மனிதர் என்பதை மறுக்க முடியாது
தமிழகத்து பட அதிபர்கள் முதல் அரசியல்வாதிகள்,சாமியார்கள் வரை எல்லோரும் வலியதேடும் நபர் அவர்
இந்தியா முழுக்க, மலேசியா, இந்தோனேஷியா,சீனா,ஜப்பான், கொரியா என அவருக்கு எல்லா இனங்களிலும் ரசிகர்கள் உண்டு
நல்ல கலைஞனுக்கு மொழி ஒரு தடையில்லை என ஜாக்கிசானை போல நிரூபித்து நிற்பவர் அவர்
இவ்வளவு பெரும் ரசிகர்கர் படை இருந்தும்,பெரும் செல்வாக்கு இருந்தும் அவர் அரசியலுக்கு வர ஆசைபடவில்லை,இன்றுவரை விரும்பவில்லை,நிச்சயம் வரவும் மாட்டார்
அவர் பலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு இருந்தாலும் வந்து நானே முதல்வர் என நிற்பார்கள்
ஒரு இடத்தை வெல்வது பெரிதல்ல,கையில் கிடைத்துவிட்ட அதிகாரமிக்க ஆசனத்தை விட ஒரு பெரிய மனது வேண்டும்.
அதில் ரஜினி உண்மையில் பாராட்டபட வேண்டியவர்
இன்னொரு விஷயம் அவரின் எளிமை,இந்த ராமசந்திரன் போன்றோர் எல்லாம் மேக் அப் இல்லாமல்,தொப்பி இல்லாமல் எங்கும் சென்றதில்லை,பல்செட் மகா முக்கியம் 😂
நான் இப்படித்தான்,இதுதான் நான் என பகிரங்கமாக சொல்ல ஒரு தைரியம் வேண்டும்
அதுவும் மிக உயரத்தில் இருந்து கொண்டு இப்படி வந்து நிற்க அவருக்கு இருக்கும்
எங்கு சென்றாலும் ஒரே மனநிலை,ஒரேமுகபாவம் அது கலைஞர் அழைத்தாலும் சரி, ஜெயா அழைத்தாலும் சரி,மோடி அழைத்தாலும் சரி,தன் ரசிகனோடு நின்றாலும் சரி
எல்லாவற்றையும் சரிசமமாக ஏற்றுகொள்வது என்பது பக்குவபட்டவாரலே முடியும்
அதுதான் மனபக்குவம்
அவருக்கு எல்லோருமே சமம்தான்,சிறு குழந்தை வந்தால் கூட அது தன்னை பற்றி சொல்வதை கேட்டு மனம் மகிழ்ந்து சிரிப்பவர் அவர்.
அவரை கவனித்தால் ஒன்று புரிகின்றது
சினிமாவில் அவருக்கு போரடித்துவிட்டதும் புரிகின்றது,அவர் மனம் ஆன்மீகத்தையே நாடுகின்றது
உச்சநடிகன் எனும் இடத்தை விட்டு இறங்கி தனிமையில் ஆன்மீகத்தில் இறங்கவே அவர் மனம் துடிக்கின்றது
ரசிகர்களுக்காக சில படங்கள் நடித்துவிடலாம்,உயிர் இருக்கும் வரை நடிக்கலாம் என குழம்பி தவிக்கவும் செய்கின்றார்.
அப்படி ரஜினியினை நடிப்பிற்காக எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள் கோடான கோடி பேர் உண்டு
அரசியலுக்கு அவர் வரவேண்டும் என்பது சம்பாதிக்க நினைக்கும் கருப்பு ஆடுகளின் திட்டம்,ஆனால் அவருக்கு விருப்பமில்லை
இன்னொரு விஷயம் ரஜினி ஒரு படத்தில் நடிக்கின்றார் என்றால் மறைமுகமாக வளம்பெறும் வேலைவாய்ப்பும் சம்பளமும் பெறும் ஆயிரகணக்கான குடும்பங்கள் உண்டு,மறுக்க முடியாதது
மறைமுகமாக எத்தனையோ பேர் பயன்பெறுவர்,இது ரஜினிக்கும் தெரியாதது அல்ல
மனிதர் மீது ஆயிரம் சர்ச்சைகள் இருக்கலாம்,ஆனால் எளிதாக கைக்கு கிடைக்கும் முதல்வர் நாற்காலியினை தொடாமல் ஓரமாக அமைதியாக நடந்து செல்லும் அந்த ஞானி மனநிலைக்கு எழுந்து நின்று கைதட்டியே ஆக வேண்டும்
மாநில அளவில் தன்னை சுருக்கிகொள்ளாமல் தேசியவாதியாக நிற்கும்
நாம் ரஜினி ரசிகர் அல்ல,ஆனால் இந்த உயரிய குணத்திற்காக கைதட்டலாம்,கண்களில் நீர் கோர்க்க கைதட்டலாம்
சராசரி ரசிகனாக ரஜினியிடம் எமக்கு பிடித்ததெல்லாம் அவரின் வில்லன் நடிப்பு😍
நிச்சயம் அந்த ரசனையான நடிப்பில் அவர் மாபெரும் நடிகன்
யாராவது மீட்டெடுக்கட்டும்
கவனித்து பார்த்தால் புரிந்துகொள்ள சிரமான மனிதர் அவர்.
அதில் நான் நடிகன்,என் தொழில் அது,என் நடிப்பினை மட்டும் பாருங்கள் மற்றபடி என் முடிவினை நீங்கள் எடுக்காதீர்கள் என மறைமுகமாக சொல்லியபடி செல்லும் ரஜினி ஆச்சரியமான நபர்
இங்கொரு பேராசிரியர் அறிமுகமானார்,அவர் பெங்களூர்காரர்,ரஜினி போலவே தமிழ் பேசுவார்,வயது முதிர்ந்தவர்
அவரிடம் பேசிகொண்டிருந்தபொழுது பேச்சு ரஜினி பக்கம் திரும்பிற்று,
"இன்னைக்கு சூப்பர் ஸ்டாரா ரஜினிய தெரியும்,ஆனா அவர் எவ்வளவு கஷ்டபட்டிருக்கார்னு தெரியுமா? சில பேருக்குத்தான் தெரியும்
எனக்கு அவர் நெருங்கிய நண்பர் இல்லை,பஸ் பழக்கம்தான் ஆனால் எப்பொழுது சென்றாலும்
பந்தாங்கிறது கொஞ்சமும் அவர்கிட்ட இல்ல
அந்த நல்ல மனசுக்கு அவர் எங்கிருந்தாலும் நல்லா இருப்பார்"
அந்த ரஜினி எங்கிருந்தாலும் வாழட்டும்
உலகம் முழுக்க இருந்து வாழ்த்தி கொண்டிருக்கின்றார்கள்
இவ்வுலகில் ஆசையினை வெறுத்த ஞானிகளுக்கு மட்டுமே அவரின் ஆழ்மனம் புரியும் மற்றவர்கள் அவரை புரிந்து கொள்வது மகா சிரமம்.
அந்த ஞானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உலகத்தாரோடு சேர்ந்து உங்களை வாழ்த்துகின்றோம்
வெறுப்பாளர்கள் உங்கள் டீ.எல்லிலோ அல்லது வேறு எங்கோ சென்று உங்கள் நாராச வார்த்தைகளை உமிழ்ந்து அங்கேயே முட்டிக்கொள்ளவும் . 😂