ரஷ்யாவில் தனக்காக உளவு பார்த்தவர்களை எல்லாம் லண்டனில் மிக நன்றாக கவனித்துகொண்டிருந்தது பிரிட்டன்
அவர்கள் எல்லாம் ஒருவர் பின் ஒருவராக பரலோகம் சென்றுகொண்டே இருக்கின்றனர்,உபயம் ரஷ்யா
இப்பொழுது நேற்று புட்டீனை எதிர்த்த ஒருவர்,லண்டனில் இருந்து ரஷ்யாவில் குழப்பம் விளைவித்த
ஒருவரும் கொல்லபட்டிருக்கின்றார்
உலகின் சக்திவாய்ந்த உளவு அமைப்புகளில் ஒன்றான சி.ஐ.ஏ ஸ்தானத்தில் இருக்கும் எம்.ஐ 6 எனும் பிரிட்டனின் உளவு அமைப்பின் கண்காணிப்பினை மீறி அடித்து அசத்துகிறது ரஷ்யா
பொதுவாக எல்லா உளவு அமைப்புகளும் தேவைபட்டால் கொலை செய்யும்,ஆனால் இடைவெளிவிட்டு செய்யும்
ரஷ்யா வாய்ப்பே கொடுக்காமல் போட்டு அடிக்கின்றது,குறிவைத்துவிட்டு மிக வேகமாக போட்டு அடிக்கின்றார்கள்
அவமானத்தில் கண் சிவந்து கையினை பிசைந்து நிற்கின்றது பிரிட்டன்,எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருக்கின்றது ரஷ்யா
ராஜிவ் கொலையில் சம்பந்தபட்ட, இந்தியாவின் உளவாளியாகவும் இருந்து,
அதற்கு சம்பளமும் வாங்கிகொண்டு ஆனால் பிரபாகரனுக்கு விசுவாசியாக இருந்த கிட்டு எனும் இரட்டை உளவாளி இதே லண்டனில்தான் இருந்தான்
ராஜிவ் கொலைதிட்டம் முடிவு செய்யபட்டபின்,ராஜிவுக்கு நாள் குறித்த பின்னும் அவர் கொல்லபடுவதற்கு சில நாட்களுக்கு முன் டெல்லியில் புன்னகை பூக்க சந்தித்தவன் அவன்
ஏன் என்றால் அப்பொழுதுதான் புலிகள் மீது சந்தேகம் வராதாம், ராஜிவும் அந்த சண்டாளனை மதித்து உபசரித்து வீட்டு வாசல்வரை வந்து அடுத்தமுறை நான் பிரதமராகும்பொழுது உங்கள் குரலுக்கு செவிசாய்ப்பேன்,போனமுறை பல குழப்பம் நடந்தது இனி நடக்காது என சொல்லி அனுப்பினார்
அந்த நம்பிக்கையில்தான் நள்ளிரவிலும் தனியாக தமிழகம் வந்தார் ராஜிவ்,ஆனாலும் கொன்றார்கள் சண்டாளர்கள்
கொலை விசாரணையிலும் புலிகள் கொல்லவில்லை என சாதித்தான் கிட்டு,பின் உண்மை வெளிப்பட நாங்கள் அப்படிபட்ட சாகசக்காரர்கள் என லண்டனில் இருந்து சிரித்தான் அவன்.
பரமசிவன் கழுத்து பாம்பாக லண்டனின் அவ்வளவு பாதுகாப்பாக இருந்தான் கிட்டு.
( அவன் என்றல்ல பல நாட்டின் எதிரிகள் இப்படித்தான் அங்கு ஹாயாக இருந்தார்கள்)
பின் இலங்கைக்கு கப்பலில் வர அவனை நடுகடலில் கொன்றது இந்தியா
அவனை எல்லாம் லண்டனிலே தூக்கி இருக்க வேண்டும்.
இந்தியா செய்யாததை,ஏன் ஆனானபட்ட இஸ்ரேலே லண்டனில் செய்ய அஞ்சிய இம்மாதிரி காரியத்தை மிக அசால்ட்டாக செய்துவிட்டு என்ன வந்தாலும் சந்திக்க தயார் என நிற்கும் ரஷ்யா உண்மையில் உலகை மிரட்டத்தான் செய்கின்றது
இனி எந்த நாடாவது எளிதில் ரஷ்யாவில் குழப்பம் செய்பவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும்?
பிரிட்டனின் எம்.ஐ 6க்கே இந்நிலை என்றால் மற்ற நாடுகள் எல்லாம் ரஷ்யாவிற்கு எம்மாத்திரம்?
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் கடந்த 10ம் தேதியன்று அமல்படுத்தபட்டு விட்டதாக இந்திய அரசு அறிவித்துவிட்டது.
யாருடைய எதிர்ப்பையும் , போலி அரசியலையும் அரசு கண்டுகொள்ளவில்லை கொஞ்சமும் தயக்கமின்றி தன் வேலையினை செய்கின்றது
முதல்கட்டமாக சோதனைகள் நடக்க தொடங்கிவிட்டன,
வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அரச பிரநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஈழ அகதிகளை திரும்ப பெற கோரியிருக்கின்றார்
முதல்கட்டமாக தயாராக இருக்கும் 3000 பேர் திருப்பி அனுப்பபடுகின்றார்கள், விரைவில் எஞ்சியோரும் கட்டம் கட்டமாக அனுப்பபடுவர்
தமிழகத்தில் ஒரு அமைதியினை நீங்கள் உணரலாம், அது நாம் தமிழர் தும்பிகளின் அமைதி. அவைகள் ஈழ அகதி வேடத்தில் இலங்கைக்கு ஊடுருவி அப்படியே கொழும்பு சென்று கோத்தபாய குடலை உருவ திட்டம் வைத்திருக்குமோ என்னமோ
இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பபட தொடங்கும் நேரம் தமிழகத்தில் சத்தமில்லை,
ஈரான் 35 ஏவுகனைகளை வீசி ஈராக்கில் இருக்கும் அமெரிக்க விமான தளத்தை தாக்கியிருக்கின்றன
அங்கு அபு அல் அசாத் எனும் இடத்தில் இருந்த அமெரிக்க முகாம் தகர்க்கபட்டிருக்கின்றது, அது விமான படை தளம் என்பதால் விமானங்கள் பலத்த சேதத்துக்கு உட்பட்டிருக்கின்றன
இதை தாமே செய்தோம் என உரிமை கோரிவிட்டது ஈரான்
அமெரிக்க பெண்டகன் தாக்குதலை உறுதி செய்துகொண்டிருக்கும் பொழுதே அடுத்த விமானபடை தளமான எப்ரில் எனுமிடத்தை தாக்கிகொண்டிருக்கின்றது ஈரான்
ஈரானில் இருந்து நேரடியாக ஏவுகனைகள் கிளம்பிவிட்டதால் இனி அமெரிக்கா களத்தில் குதிக்கும்
ஆனால் நாங்கள் தாக்கியது ஈராக்கில் இருக்கும் அமெரிக்க முகாம்களையே, இது ஈராக் ஈரான் சிக்கல் என ஈரான் சொல்லிவிடும் அப்பொழுது காட்சிகள் மாறும்
ஆம் ஈராக்கிய அரசு உள்ளே வந்து எம் நாட்டு பாதுகாப்பு முக்கியம் நீங்கள் கிளம்புங்கள் என சொல்லும்,
ஈரான் தன் கடும் பழிதீர்த்தலை கட்டாயம் செய்யும் என எதிர்பார்க்கும் அமெரிக்கா, சில கணக்குகளை இடுகின்றது
அதாவது அல்கய்தா, ஐஎஸ் போன்றவை உலகெல்லாம் வலைபின்னல் கொண்ட இயக்கம், உலகில் எங்கும் தாக்கும் வண்ணம் அவை கட்டமைக்கபட்டிருக்கின்றன
ஆனால் அவை சன்னி இயக்கம்,
ஷியாவான சுலைமானி கொலைக்கு அவை பழிவாங்க நிச்சயம் கிளம்பாது
இதனால் உலகெல்லாம் அமெரிக்காவுக்கு மிரட்டல் குறைவு என்பதால் ஷியாக்கள் வலுவான அரபு பகுதியில் மட்டும் தனி கவனம் செலுத்துகின்றது
அமெரிக்கர்கள் இஸ்ரேல் மற்றும் ஜோர்டானுக்கு செல்லவேண்டாம் என
சொல்லியிருக்கும் அமெரிக்கா கடும் விழிப்பில் இருக்கின்றது
சந்தடி சாக்கில் உலகம் ஒப்புகொள்ளும் விஷயம் இதுதான்
ஆம் உலக மகா தீவிரவாதிகளில் அதாவது இஸ்லாமிய பெரும் இயக்கங்கள் யாவும் சன்னி வழி இயக்கம் அவைதான் அரேபியா தாண்டி தாக்கும் அவற்றுக்கு பணமும் பொருளும் கொடுப்பவை
அந்த மனிதன் ஆங்கில ஐ.சி.எஸ் அதிகாரி,கலெக்டராகத்தான் இந்தியா வந்தார் அவர் 1850ல் தன் பணியினை உத்திரபிரதேசத்தில் தொடங்கினார்,அவர் செய்த முதல் வேலை நல்ல பள்ளி ஒன்றை அமைத்தது
அவர் கலெக்டராக இருந்த காலத்தில்தான் 1857ல் சிப்பாய் கலகம் ஏற்பட்டது, அதன் முடிவில் கிழக்கிந்திய கம்பெனியின்
இந்தியா, பிரிட்டிஷ் அரசின் கட்டுபாட்டில் வந்தது. பிரிட்டிஷ் இந்தியா ஆனது
பிரிட்டிஷ் அரசு கடுமையான சட்டங்களை கொடுத்தது, 1859ல் இந்தியருக்கு கல்வி கூடாது என்றொரு கட்டளையினை பிறப்பித்தது,விக்டர் ஹியூம் அதனை கடுமையாக எதிர்த்தார், அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்,கல்வி கொடுத்து
மாற்றினால் மட்டுமே பிரிட்டிஷ் அரசோடு ஒத்துழைப்பார்கள் என மல்லுக்கு நின்றார்
ஆங்கில அரசு மதுகடைகளை அன்று பரப்பியது,ஹியூம் அதனை கடுமையாக எதிர்த்தார், இது ஏழைகளை பாதிக்கும் செயல்,ஒரு கலெக்டராக நான் அனுமதிக்கமாட்டேன் என்று போர்கொடி தூக்கினார்