Profile picture
Wolfrik @wolf_twits
, 14 tweets, 3 min read Read on Twitter
முன்குறிப்பு : இந்த பதிவை அதிகம் பேர் படிக்க மாட்டார்கள்.

படித்த சிலருக்கும் இதில் ஆர்வமோ ஈடுபாடோ பெருசா ஒன்னும் இருக்காது என எனக்கு நன்கு தெரிந்தே வேலை மெனக்கெட்டு இதை பதிவிட காரணம்,ஜஸ்ட் என்னுடைய தேசத்தை நேசிக்கும் பிடிவாதம்தான்
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ராணுவத்தில் சிறப்பு அதிரடி படைகள் (special forces) பலவற்றின் அவசியத்தையும் தேவைகளையும் உணர்ந்த பல நாட்டு ராணுவ மூளைகள் பல சிறப்பு படைகளை உருவாக்கின

அவற்றில்

இங்கிலாந்தின் SAS எனப்படும் special air services ,
அமெரிக்காவின் Delta force / Navy Seals / Green Berets / Marines

இஸ்ரேலின் மொசாத் (Mossad)

ஜெர்மனியின் gruppen

போன்ற படைப்பிரிவுகள் உலகப்புகழ் பெற்றவை
அவர்களின் சாகசங்கள் பல அதீதமானவை

அது சரி இந்தியாவில் இது போன்ற சிறப்பு படைபிரிவுகள் இருகிறதா என்றால் ....
அநேகமாக யாரும் கேட்க மாட்டார்கள் தப்பித்தவறி அப்படி
யாராவது கேட்டால் அவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்,நான் அறிந்தவரை அத்தகைய எட்டு சிறப்பு படைப்பிரிவுகள் இந்தியாவில் உண்டு

அவை

(1) MARCOS or Marine Commandos

இவர்கள் எல்லா தளங்களிலும் போரிடும் திறமை பெற்றவர்கள்..
கடல் தளத்தில் போரிடுவதில் சிறப்பானவர்கள

இவர்களுடைய பயிற்சி முறை மிக கடுமையானது,மிக கொடுமையானது கூட இந்த படையில் சேர வருபவர்களில் 80% பேர் முதல் 3 நாட்களிலேயே தகுதி இழந்து விடுவது வழக்கம்

தகுதி பெற்றவருக்கு ஐந்து வார கொடுமையான பயிற்சி அளிக்கப்படும்
இதற்கு நரகத்தின் வாரங்கள் (Hells week) என்று பெயர்

பல வாரங்கள் தூங்காது பல கடுமையான பயிற்சிகளை தாங்கவேண்டும்,பயிற்சி முடித்தவர்கள் நடக்கும் போதும் ஓடும் போதும் தரையில் உருளும் போதும் காற்றில் தாவும் போதும் கூட குறிதவறாது சுடும் பயிற்சி பெற்று இருப்பார்கள்
(2) Para Commandos

இந்திய ராணுவத்தின் மிக சிறப்பான பயிற்சி பெற்றவர்கள்,தினமும் 60 கிலோ எடையை தூக்கிக்கொண்டு 20 கிலோமீட்டர் ஒட கூடிய வல்லமை பெற்றவர்கள்

30 ஆயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து எதிரிகளின் பிரதேசத்திற்குள் ஊடுருவ வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு உண்டு.
ஆழ்கடல் போரிலும் பயிற்சி பெற்றவர்கள்,கார்கில் போரில் இவர்கள் சாகசம் அதீதமானது

(3) Garud Commando Force

இவர்கள் இந்திய விமானப்படையின் கமாண்டோக்கள் ரிக்கன்சன்ஸ் / விமானதளங்களை கைப்பற்றுதல் /ஏர்போர்ன் ஆபரேஷன் / ஏர்அசால்ட் / ஏர்ரெஸ்க்யு போன்றவற்றில் கில்லாடிகள்
(4) Ghatak Force

இந்திய தரைப்படையின் அதிரடிப்படை வீரர்கள் எதிரியின் விமானதளம்,ஆயுத கிடங்கு,
தகவல் மையம் போன்ற கேந்தி்ரங்களை நேரடியாக ஊடுருவ வேண்டும் மிகவும் உடல் உறுதியும் மன உறுதியும் கொண்டவரே கடக் படைக்கு தேர்ந்தெடுக்கபடுவார்கள்
(5) National Security Guard Or Black Cats

1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சிறப்பு படை
இதில் தேர்ந்தெடுக்கப்படுவது மிக மிக கடினம்
விண்ணப்பித்தவர்களில் 80% பேர்கள் தேர்ந்தெடுக்கபடுவதில்லை

பயிற்சி மிக கடுமையானது,ராணுவத்திலும் போலீசிலும் உள்ள மிகசிறந்த வீரர்களை கொண்டு அமைக்கப்பட்டது
மிக நவீன ஆயுதங்களை கையாள தெரிந்தவர்கள்(இவர்களது OP Black tornado பற்றி ஒரு தனி பதிவே எழுதலாம்)

(6) COBRA (Commando Battalion for Resolute Action)

மத்திய CRPF படையின் கமாண்டோ படை,கெரில்லா போர்முறையில் பயிற்சி பெற்றவர்கள்,நக்சல் தீவிரவாதிகளை சமாளிப்பதில் பெரும்பங்கு வகிப்பவர்கள்
(7) Special Frontier Force : (SFF)

1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது,
இந்தியாவின் உளவு நிறுவனமான 'ரா' வுடன் இனைந்து பணியாற்றுபவர்கள்,
மிக நிழலான செயல்பாடு கொண்டவர்கள்,
தேசப்பாதுகாப்பில் மிக முக்கியமானவர்கள்
(இவர்களை பற்றி ஒரு தனி பதிவு எழுத உத்தேசம் உண்டு)
(8) Force One

மும்பை தாக்குதலுக்கு பிறகு மும்பை நகரத்தை பாதுகாக்க மகராஷ்டிரா அரசால் தொடங்கப்பட்டது

இதில் சேர 3000 பேர்கள் விண்ணபித்து இருந்தனர் , 216 பேரை மட்டும் தேர்ந்தெடுத்து இஸ்ரேலின் சிறப்பு படையிடம் பயிற்சி பெற்ற அதிரடி படை பிரிவு
என் பார்வையில் இவர்கள் ஹீரோக்கள் , தமிழ் கூறும் நல்லுலகம் சினிமா ஹீரோக்களை விட்டு இந்த பக்கமும் கொஞ்சம் பார்த்தால் நல்லது.

ஜெய்ஹிந்த் 🇮🇳

வந்தே மாதரம் 🇮🇳

(அஸ்ஸாம் ரைஃபில்ஸ் வீராங்கனைகள் 👇 💪)
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Wolfrik
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member and get exclusive features!

Premium member ($30.00/year)

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!