அப்படி பல நாடுகள் தங்கள் நாட்டில் பிரிவினை பேசுபவர்களுக்காக சில தன்னாட்சி உரிமைகளை வழங்கும்
இது உங்கள் ஏரியா,இது உங்கள் உரிமை என சிலவற்றை கொடுப்பார்கள்.
தனிநாடு இல்லைதான் ஆனால் தனிநாட்டிற்கான முதல் படி அதுதான்
அது ஸ்பெயினின் கட்டலோனியா விவகாரம்
ஐரோப்பாவில் தனி இனத்திற்கான 100% சுத்தமான நாடு என எதுவுமில்லை.
அது சிறிய பகுதியாயினும் ஸ்பெயினின் பார்சிலோனா போன்ற புகழ்மிக்க பகுதி அங்குதான் இருக்கின்றது ஒலிம்பிக் எல்லாம் அங்குதான் நடக்கும்,அது போக கால்பந்தாட்ட அடையாளம்
தன்னாட்சி பகுதியாக அறிவிக்கபட்டு இருக்கும் அப்பகுதியில் சென்ற வருட அக்டோபர் கடைசியில் தனிநாடு கோஷம் எழுந்தது ஸ்பெயினின் பொருளாதார நெருக்கடி முதல் பல காரணம் என்றன செய்திகள்
கட்டலோனியா அரசு வாக்கெடுப்பெல்லாம் நடத்திற்று, மக்களும் ஆதரித்தனர்.
ஆனாலும் தன்னாட்சி பிரதேசம் தனிநாடு ஆக என்ன தடை? என சில குரல்களும் கேட்டது
கவனியுங்கள்,என்றோ ஸ்பானிய வல்லரசு உலகை மிரட்டும்பொழுது ஸ்பெயின்
ஆனால் தங்கள் அடையாளம் இழக்காவண்ணம் தன்னாட்சி பெற்றார்கள்,உலகெல்லாம் பல இனங்கள் இப்படித்தான் முதல் படி பெற்று அதில் நின்று போராடுகின்றன.
நாங்கள் வீரமும் மானமும் மிக்கவர்கள்,அடைந்தால் நாடு இல்லை சுடுகாடு என
விவேகம் மகா அவசியம்
ஈழத்தில் இப்படியான அடித்தளத்தை அமைத்துகொடுக்கத்தான் இந்தியா விரும்பியது,அப்படி நடந்திருந்தால் பின்னொரு நாளில் ஈழகுரல் மிக வலுவாக அமைய அது மிக்க உதவியாயிருந்திருக்கும்
இனி சில உரிமைகளை பெறவே முடியாத அளவு ஈழம் நாசமாயிற்று
கட்டலோனியா,குர்து,பாலஸ்தீன் விவகாரங்களை எல்லாம் கவனித்தால் அவை எல்லாம் பல உரிமைகளை பெற்று,எல்லைகளை வகுத்து இதுதான் எங்கள் ஏரியா என உலக நாடுகள் ஒப்புகொள்ளும், சொந்த நாடும் ஒப்புகொள்ளும்
ஈழத்தில் அப்படி ஏதுமில்லை,எந்த எல்லையும் வகுக்கபடவில்லை. புலிகளின் மேப்பினை சைமன் ஏற்றுகொள்ளலாம் உலகம் ஒப்புக்கொள்ளாது
ஈழ விடுதலையினை புலிகள் எந்த அளவு நாசமாக்கியிருக்கின்றார்கள் என்பது பல நாடுகளின் இனங்கள் போராடும் பொழுது கவனித்தால் புரியும்.
ஆக ஈழத்தை கெடுத்தது சாட்சாத் புலிகள்,ஆனால் இங்கு சில கும்பல் இன்னும் இந்தியா,காங்கிரஸ்,கலைஞர் என சொல்லிகொண்டே இருப்பான்