குழப்பமான நிலையில் இருந்த பிடித்துவிடலாம் என அவர்கள் திட்டமிட்டு கொண்டே இருந்தார்கள்.
நெப்போலியனுக்கோ ஜோசப்பின் கிறுக்கு உச்சத்தில் இருந்தது, கவிதை எழுதினான்
ஒரு கட்டத்தில் பலத்த எதிர்ப்பையும் மீறி திருமணமும் செய்தான்,அதில் அவனுக்கு பல திட்டமும் இருந்தது.
அதாவது அவன் இளையவன் 24 வயது, ஜோசப்பின் 30களில் இருந்தாள். தன்னை விட மூத்தவளை மணந்து தானும்
திருமணம் முடிந்து இரு நாட்கள் ஆகியிருந்தன,வழக்கம் போல காதல் ரசம் கொதிக்கும் கவிதைகளை எழுதி முடித்துவிட்டு, ஏதோ ஒரு ரோஜா தொட்டிக்கு அவன் தண்ணீர் ஊற்றி கொண்டிருந்த பொழுதுதான் அந்த அழைப்பு அரசிலிருந்து வந்தது.
உடனே நெப்போலியனுக்குள் இருந்த ரெமோ வெளியேறி அவனுக்குள் அந்நியன் புகுந்துவிட்டான்.
பிரான்ஸ் அவன் மனமார நேசித்த நாடு, அதற்கொரு ஆபத்தென்றால் துடித்தெழுவது அவன் இயல்பு.
இம்முறை இத்தாலியா,விட கூடாது என முடிவெடுத்தான்.
இத்தாலி போட்டு சாத்த முடியாத நாடல்ல,ஆனால் போப்பாண்டவரின் ரோம் அங்குதான் இருந்தது.
முதலில் ஐரோப்பா எல்லாம் ஆண்ட போப், மார்ட்டில் லுத்தரின் பகுத்தறிவு கிறிஸ்தவத்திற்கு பின் பாதி ஐரோப்பாவினை ரகசியமாக ஆண்டுகொண்டிருந்தார்.
அதனால் இத்தாலி மேல் பாய்வது எல்லோருக்கும் யோசனையான ஒன்று,இது இத்தாலிக்கு கூடுதல் பலம்.
இத்தாலியினை தூண்டிவிட்ட நாடு ஆஸ்திரியா,இன்று மிக அமைதியான நாடாக காணப்படும் ஆஸ்திரியா,
அந்த ஆஸ்திரியாதான் இத்தாலியினை தூண்டிவிட்டது. பிரான்சினை பிடித்தால் வியாபாரம் உட்பட பல அனுகூலங்கள் உண்டு என போடபட்ட கணக்கு அது.
அதாவது பெரும் தாதா, ஆயிரம் ஆண்டுகளாக யாராலும் தோற்படிக்கபட முடியாத நாடு
குழப்பமான நிலையில் இருக்கு பிரான்சினை பிடித்துவிட்டால் கடல் கிடைக்கும்,உலகெல்லாம் வியாபாரம் செய்யலாம், பிரிட்டனை போட்டு அடிக்கலாம், மிக பெரும் வல்லரசாகலாம் எனும் கணக்கு அது.
நெப்போலியன் பிரான்ஸ் படைகளுக்கு தலமையேற்று சென்றான்.
வரலாற்றில் யுத்த வியூகத்திற்கு பெயர் பெற்றவன் அலெக்ஸாண்டர், அவன் வியூகம் வித்தியாசமானது.
அதாவது இரு பிரிவாக படைகளை பிரித்திருப்பான்,ஒரு பிரிவுக்கு அவன் தலைமை தாங்குவான்,
அந்த மூலையில் யுத்தம் நடத்துவது போல பாசாங்கு செய்வான்,அப்பொழுது எதிரி படையின் கவனம் அவன் மீது திரும்பும்,இந்நேரத்தில் இன்னொரு படை பிரிவு எதிரியினை சுற்றி வளைக்கும், போட்டு அடிப்பார்கள்.
நெப்போலியனின் வியூகம் வேறுமாதிரியானது Y வடிவில் படைகளை நிறுத்துவான், இரண்டுமே முன்னேறும்,நடுவில் நின்று போரிடுவான் நெப்போலியன்
ஆனால் எதிரியின் பலவீனமான பக்கங்களை கொஞ்ச நேரத்தில் கண்டு கொண்டு அதிலே ஓங்கி அடிப்பான்,படை சிதறும்
யுத்தத்தில் ஆஸ்திரிய இத்தாலி படைகளை அட்டகாசமாக சமாளித்தான்,முதலில் பின் வாங்கி ஓடியது ஆஸ்திரிய படைகள்.
குழப்பமான பிரான்ஸில் இப்படி ஒரு ராணுவமா? எப்படி எல்லாம் அடிக்கின்றார்கள்? யார் இந்த தளபதி? சரி முதலில் ஓடுவோம் அதன் பின் யோசிக்கலாம்.
ஆஸ்திரிய படைகள் பின்வாங்கிய பின் இத்தாலியினை அடிப்பது நெப்போலியனுக்கு எளிதானது,
அதுவரை ஐரோப்பாவின் அரசராக திகழ்ந்த போப்பாண்டவரின் அதிகாரம், அன்றுதான் ஆட்டம் கண்டது.
ஆனாலும் அவன் கத்தோலிக்கன் என்பதால் போப்பிற்குள்ள மரியாதையினை கொடுத்தான், ஆனால் இத்தாலி பிரான்ஸ் வசமாயிற்று.
இத்தாலியினை பிடித்த வேகத்தில் அவர்களுக்கு துணையாக வந்த ஆஸ்திரியா மீது பாய்ந்தான் பெரும் யுத்தம் மூண்டது
1100 ஆண்டுகள் தோல்வியே காணாத ஆஸ்திரியாவினை பந்தாடினான்,1797 ஜனவரி வியன்னா அவன் காலில் விழுந்தது
ஐரோப்பா உற்று கவனித்தது, என்ன? ஆஸ்திரிய,இத்தாலிய கூட்டுபடையினை பிரான்ஸின் இளம் தளபதி வென்றானா? யார் அவன்? எப்படி இருப்பான்? என்றெல்லாம் அறிய துடித்தன
இத்தாலியில் இருந்து வெற்றி வீரனாக 1,50,0000 வீரர்களை சிறைபிடித்து,
அந்த ஆட்சிகுழு அதிர்ந்து நின்றது, பிரான்ஸ் தங்களின் மாவீரனாக அவனை கண்டது. இனி யுத்தம் தொடர்பாக எல்லா முடிவும் நெப்போலியனே எடுக்க அதிகாரம் கொடுக்கபட்டது.
அங்கிருந்தபடியே மன்மதனும் தோற்கும் கடிதங்களை எழுதினான், எங்கு அழகிய ரோஜா கண்டாலும் அதனை வேரோடு பிடுங்கி கடிதத்தோடு ஜோசபைனுக்கு அனுப்பிகொண்டே இருந்தான்.
ஆனால் அவனுக்கோ அவள்தான் இரண்டாம் பிரான்ஸ்.
ஆம் அவனின் உலகமே பிரான்ஸ்தான்.
பெரும் வரவேற்பு இருந்தாலும் அவன் வந்தவுடன் ஜோசப்பினை பார்க்கத்தான் ஓடினான்,
அது பிரான்ஸின் தேர்தல் நேரம், அவனோ எல்லை பகுதி பாதுகாப்பில் கவனமாக இருந்தான்,புலிகளை அடித்து விரட்டியிருக்கின்றோம் அது மறுபடியும் பாயலாம் எனும் எச்சரிக்கை அவனிடம் நிரம்ப இருந்தது.
இந்நேரம் தேர்தலில் அரச விசுவாசிகளின் கை ஓங்கியது.
அவன் பிரான்சின் கட்டப்பா,ஒரு ராணுவ வீரனாக பிரான்ஸை காப்பது மட்டுமே தன் பணி என சுயதர்மம் ஏற்றுகொண்டவன் அவன்.
ஆனால் ஆளும் வர்க்கம் அஞ்சியது.
இவனை இனி வளரவிட கூடாது, ம்ம் பழி சுமத்தலாம்
இவனை எல்லையினை காக்கத்தான் அனுப்பினோம், அவனோ ரோம் வரை சென்று கொள்ளையடித்திருக்கின்றான்,ஆஸ்திரியாவில் கொள்ளைபடித்திருக்கின்றான் இதனால் பிரான்ஸுக்கு ஆபத்து
இவனை தண்டிக்கின்றோம் என அறிவிப்பு கொடுத்தார்கள்
எல்லையில் நின்ற நெப்போலியனுக்கு புரிந்தது தனக்கு எதிரி வெளிநாட்டில் அல்ல,இங்கேயே இருக்கின்றார்களா?
அவன் முன்பே கணித்து வைத்திருந்தானோ என்னவோ,
நான் ஒருநாளும் பிரான்ஸ் அரியாசனத்திற்கு ஆசைபடவில்லை,எனக்கு தேவை பிரான்சின் நல்வாழ்வு.
அதற்காக பெரும் போர்களை நடத்திய நான் குற்றவாளி என்றால் ஏற்கமாட்டேன், தேர்தலில் அவர்கள் வென்றாலும் நாட்டை தவறான பாதைக்கு திருப்புகின்றார்கள்.
திடீர் புரட்சி நடந்து அரச விசுவாசிகள் காணமல் போய் நெப்போலியன் விசுவாசிகள் பதவிக்கு வந்தனர்
நெப்போலியன் 3 செய்தி தாள்களை நடத்தினார்,நாட்டு மக்களின் நலனுக்காக தன் கருத்தை சொல்லும் விஷயமாக அதனை பயன்படுத்தினான்.
ஆட்சியாளர் கூட்டம் நடந்தது , அதில் நெப்போலியனும் கலந்து கொண்டான்,நாட்டின் நிதி நிலமையினை பெருக்குவது எப்படி என்ற கூட்டம் அது.
அது அட்டகாசமான திட்டம்தான், ஆனால் சாத்தியமா என கேட்டார்கள்
என்ன திட்டம் அது?
(மாவீரன் வருவான் .......)